தமிழ் சினிமாவில் தனித்தொளிரும் துருவ நட்ச்சத்திரம் உலக நாயகன் கமலஹாசனை பற்றி சில...
இவரிடம் யாராவது பொய் பேசினால் மறுபடியும் அவருடன் விரும்பி பேசாதவர். எப்போதுமே மற்றவருடன் பேசும்போது அவரின் கண்களை பார்த்தே பேசுவது வழக்கம்.
சைனீஸ் வகை உணவுகளை விரும்பி உண்பார். வயிறு நிறைய உண்பார். உணவு கட்டுப்பாடு இவரிடம் இல்லை. இவர் உண்ணாத ஜீவராசிகளே இல்லை என்கிறார்கள்.
உருது மொழியையும் கற்றுக்கொண்டு சாதத்ஹசன் மண்டோ படைப்புக்களையும் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் முதல் தர ரசிகர் இவர்.
இவரிடம் போய் யாராவது கஷ்டம் என்று சொல்லக்கூடாது.
கடைசியாக கமல் பார்த்த தமிழ் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. விரும்பி அழைத்தால் போவார்.
தினமும் காலையில் இரண்டு மணி நேரம் யோகா பயிற்சி. எவ்வளவு அவசர வேலை இருந்தாலும் யோகாவை தவற விடமாட்டார்.
அக்காலத்தில் நாகேஷ் நெருக்கமான நண்பர். அவருடன் வயது வித்தியாசம் இல்லாமல் சகலமும் பேசுவார்கள். இன்று பேச்சாளர் கு. ஞானசம்மந்தனுடன் நெருக்கம்.
மும்பையில் இருக்கும் சுருதி அக்ஷ்சரா இரு மகள்களும் அடிக்கடி அப்பாவை பார்க்க மட்டுமே சென்னை வந்து செல்வார்கள். அவர்களுக்கு கமல் கண்டிப்பு அட்வைஸ் எதுவுமே கிடையாது. நல்ல அப்பா.
கமலை அடிக்கடி சினிமா சம்மந்த பட்ட விழாக்களில் பார்க்க முடியாது. சினிமா நண்பர்களுடன் அடிக்கடி தொடர்பும் இருக்காது. ஆனா வியப்பு தரும் வகையில் அத்தனை கிசு கிசு ரகசியங்களும் அறிந்து வைத்திருப்பார்.
இவரின் மையம் வெப்சைட் விரைவில் களம் இறங்கலாம். இதில் சினிமா இலக்கியம் சார்ந்த ரசனைகளுக்கே முதலிடம். இதற்காக பெரும் ஆலோசனையே நடக்கிறது.
கமல் கோவிலுக்கு சென்றார் என்றால் அன்று அங்கே படபிடிப்பாக இருக்கும்.
மங்கையர்யுகம்
No comments:
Post a Comment