அரசு நிர்வாகத்தில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் நஷ்டத்தில் தான் இயங்கும். இது எழுதப்படாத விதி.
ஏன்?
பொதுமக்களுக்கு சேவை செய்வதாலும், மானியம் அளிப்பதாலும் வருகிற நஷ்டமா?
அப்படித்தான் எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறோம். அரசுகளும் அப்படித்தான் சொல்கிறது. ஆனால் கதையே வேறு.
இப்ப ஒரு கதையை தெரிஞ்சுக்கோங்க.
ஏர்இந்தியா தன் ஊழியர்களுக்கு கூட மாதாந்திர சம்பளம் கொடுக்க முடியாமல் திண்டாடுகிறது.
மக்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட் கொடுத்து ஏற்றிக்கொண்டு பறந்ததால் வந்த நஷ்டமா?
இல்லை. ஏர்இந்தியாவிற்கு கடன் பாக்கி வைத்தவர்கள் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதால் தான் இந்த திண்டாட்டம்.
அடப்பாவிகளா... ஏர்இந்தியாவிற்கே பாக்கி வைக்கிற அளவிற்கு வில்லாதி வில்லன் யார்?
குப்பனும் சுப்பனுமா கடன் பாக்கி வைத்தவர்கள். கோடிகளில் கொழிக்கும் தொழில்அதிபர்களும், மத்தியஅரசும்தான் அது.
ஏர்இந்தியா மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும், ஏர்இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை 1000 கோடியை தாண்டுகிறது. இந்த அளவிற்கு பாக்கி வர என்ன காரணம்.
அரசு சார்பில் பயணம் செய்தவர்கள் டிக்கெட் தொகையும், பிரதமர், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள் பயண டிக்கெட் கட்டணம் தான் அது.
அதுமட்டும் அல்ல. தன் விமானங்களில் ஐந்தை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கிறது ஏர்இந்தியா.
ஏன்?
வி.வி.ஐ.பி.களின் பயணங்களுக்காக தமது ஹாங்கர்களில் நிறுத்தி வைத்திருக்கிறது ஏர் இந்தியா. இவை சாதாரண ரூட்களில் பயணிகளுக்காக ரெகுலராக உபயோகப்படுத்தப் படுவதில்லை.
காரணம், இந்த விமானங்களின் உட்புற அமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.
பிரதமர், ஜனாதிபதி மற்றும் வி.வி.ஐ.பி. பயணிகள் பயணம் செய்வதற்கு தனி கேபின்கள், குளியலறை வசதி, கன்பிரன்ஸ் ரூம் என்று இந்த போயிங் விமானங்களின் உட்புறம் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.
அதனால் இதை மற்ற விமானங்கள் போல பயன்படுத்த முடியாது. அந்த உள்கட்டமைப்பு எப்படி இருக்கும் என்று தெரியுமா? இதோ?
பயணம் செய்கிறார்களோ இல்லையோ.. சும்மா தேமேன்னு நிப்பாட்டி வச்சிருந்தாலும் மாதாமாதம் வாடகை கட்ட வேண்டும். அப்படி கட்ட வேண்டிய தொகைதான் 1000 கோடிக்கு மேல் இருக்கிறது.
இப்ப தெரியுதா ஏன் ஏர்இந்தியா நஷ்டத்தில் ஓடுதுன்னு.
No comments:
Post a Comment