சக்தி மசாலா, ஆச்சி மசாலா, தனி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகபொடி, மஞ்சள் பொடி எல்லாத்தையும் ஒரு அண்டாவில போட்டு கலக்கி, சந்தனத்தை சாரி... சந்தானத்தை போட்டு குலுக்கி மசாலா + காமடி படம் எடுக்க முயன்றதுதான் மொக்கை மசாலா அலெக்ஸ்பாண்டியன்.
அமெரிக்காவில் இருந்து ஒரு கப்பல் நிறைய மருந்து ஏத்திகிட்டு வருது வில்லன் கும்பல்.
அந்த மருந்தை தமிழ்நாட்டுக்குள்ள விற்பனை செய்ய முதல்வர் கையழுத்து வேணும். ஆனால் முதல்வரா இருக்கிற விசு, இந்த மருந்து போலி, பக்க விளைவை தரும்னு மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லுது அதனால் அனுமதி தர முடியாதுன்னு சொல்றார்.
விடுமா வில்லன் கும்பல். ஒரு சாமியாரை பிடிச்சி காரியத்தை சாதிக்க பார்க்குது. முடியலை என்றதும் முதல்வர் பொண்ணு அனுக்ஷ்காவை கடத்துறாங்க.
கடத்துறது யாரு தெரியுமா.. நம்ம ஹிரோ கார்த்திக் தான். அப்பறம் தான் பாருங்க படத்திலே பெரிய டேனிங் பாய்ன்ட். ஹீரோயின் ஹீரோ கிட்டே உண்மையை எல்லாம் சொல்லி தன்னை காப்பாத்த சொல்றாங்க . ஹீரோ அவரை எப்படிக்காப்பாத்தறார் என்பதே இந்த கரம் மசாலா படத்தின்கதை .
படத்தோட ஓப்பனிங் தான் சூப்பர். இது மாதிரி ஒரு பவர் மனிதனை பார்த்திருக்கவே முடியாது.
அதாகப்பட்டது..... வில்லன்களால் துரத்தப்படுற அனுஷ்கா ரயில்வே ட்ராக்குல ஓடி ட்ரெயின் ஏற, அப்படியும் அவரைப் பிடிக்கும் வில்லன்களை தன் வீர தீர பராக்கிரமத்தால் நையப்புடைக்கும் கார்த்தி. குறைந்தது 30-40 பேரை அடிக்கிறார்.
துள்ளி துள்ளி.. பாய்ந்து பாய்ந்து..தாவி தாவி உதைக்கிறார். அப்படியும் விடாம குறுக்கால போய் ட்ரெயின புடிக்க ட்ரை பண்றார். மிஸ் ஆயிடுது. அந்த கோவத்திலே மறுபடி ஒரு 20பேர அடிக்கிறார்.
(அதுல ஒரு ஆளு ஏர்ல பாஸாகி சந்திர மண்டலத்திலே போய் விழுந்ததா கேள்வி.)
இப்படி தன் தனி திறமையால் கதாநாயகியை காப்பாத்துறார்.
இதுக்கு அப்பறம் தான் படத்தோட மெய்ன் காட்சிகளே ஆரம்பம். ஹிரோ சந்தானத்தோட வீட்டில் தஞ்சமடைகிறார். சந்தானத்துக்கு மூணு தங்கச்சி.
இந்த மூணு தங்கச்சிகளும் கார்த்தியை பார்த்து லிட்டர் லிட்டரா ஜொள்ளு விடுதுங்க. அடேங்கப்பா.. மாராப்பை விலக்கி போட்டுக்கிட்டு தான் மாமன் கார்த்திக் கிட்டேயே பேசுதுங்க.
நம்மாலும் அப்பா அம்மா விளையாட்டை தவிர மத்த எல்லா விளையாட்டையும் அதுங்க கிட்ட விளையாடுறார். விவரம் கெட்ட தங்கச்சிகளை காப்பாத்த அண்ணன் சந்தானம் படுற பாடுதான் காமடி.
படத்துல பாட்டு எதுவும் எடுபடலை.
சரி காதல் கீதல் எதுவும் இருக்கா?
இருக்கு. கடத்தின வில்லன் கார்த்தி மேலேயே வருது. ரெண்டு டுயட்டும் இருக்கு. ஆனால் அந்த பருப்பும் வேகலை. அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்.
தண்ணிக்குள்ள கட்டிக்கிடக்கிற கார்த்திகை வில்லன்கள் சுமனும், மிலிந்த் சோமனும் புது டெக்கனிக் கண்டுபிடிச்சு, அதன் பிரகாரம் புட்பாலால் உதைத்து டார்ச்செர் செய்கின்றனர்.
அப்ப அனுக்ஷா , நீங்கல்லாம் ஆம்பளையா? முடிஞ்சா அவரை கை கட்டை அவுத்துவிட்டு அடிங்க பார்க்கலாம் என்று.... இது வரை தமிழ் சினிமா வரலாற்றில் வராத ஒரு வசனத்தை பேசுறார்.
அப்பறம் என்ன நடந்ததுன்னு தெரிந்துக்கனும்னா நீங்க கண்டிப்பா தியேட்டர்ல போய் தான் பார்க்கணும். அப்படி ஒரு திருப்பம்.
இந்த படத்தோட நல்ல காலம் விஸ்வருபம் வராததுதான். மத்த படங்கள் வந்த பிறகு... நான் சொல்ல மாட்டேன். நான் சொல்ல மாட்டேன்.
No comments:
Post a Comment