பொண்ணுங்களை டாவடிப்பதிலேயே தங்கள் காலத்தை போக்கும் மூன்று நண்பர்கள் தனித்தனியே ஒரே பெண்ணை காதலிக்க முயல்வதுதான் கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் கதை.
என்ன.. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு என்று நினைக்கிறிர்களா... எஸ்.. பாக்கியராஜின் இன்று போய் நாளை வா! படத்தின் அல்டா உல்டா கதைதான் இது.
அது பாக்கியராஜின் கை வண்ணம். இது சந்தானத்தின் புது வண்ணம். அதில் காட்சிகளில் வலிமை. இதில் சந்தானத்தின் வசனங்களில் வலிமை.
அது யாரு மூன்று நண்பர்கள்?
பவர் ஸ்டார், சந்தானம், சேது இவர்கள் தான் அந்த மூன்று நண்பர்கள். பவர் ஸ்டாரை வைத்து பெரிய கச்சேரியே செய்திருக்கிறார்கள் .தன் பங்குக்குக்கு டைமிங் ஜோக் சொல்லி கலகலப்பை ஏற்றுகிறார் சந்தானம். சேது தான் ஹீரோ. கதாநாயகியை கை பிடிப்பதால். மற்றபடி படத்தில் பெரிய பாத்திரம் இல்லை.
எப்படி?
அதுதான் பவரின் மகிமை.
பத்தாம் வகுப்பு மாணவியை டாவடிக்க முயல்வதும், எங்க அப்பா கல்யாண ஆல்பத்திலே கலர் கலரா சட்டை போட்டுக்கிட்டு நிற்கிறதை பார்த்தேன் என்று பொண்ணு சொல்லும் போது, அடப்பாவி என்பதை விட சிரிப்பலை அடிக்கிறது.
பட்டிமன்ற ராஜாவிற்கும் ஒரு வேடம். பாவம் வழக்கம் போல் வசனம் பேசிவிட்டு போகிறார். ஏன் ராஜா சார்... நீங்க நடிச்சு கலைசேவை செய்துதான் ஆகணுமா? பல படங்களில் பார்த்த அதே முக பாவனை?
கதாநாயகி விஷாகா. ஆள் ஓகே. பிணத்திற்கு முன் போடும் குத்தாட்டம் அடேங்கப்பா ரகம்.
மூன்று நாயகர்களுடன் பாடும் டுயட்டிலும் தன் திறமையை காட்டு காட்டு என்று காட்டுகிறார். இன்னும் சில படங்களில் வலம் வருவார் என்பது உறுதியாகிறது. பழைய நாயகிகளே உஷார்... !
சிம்புவுக்கும் கெளதம் மேனனுக்கும் கவுரவ வேடம். நல்ல வேலையாக கவுரமாக வந்து போகிறார் சிம்பு. தன் பெயரில் மூன்று நான்கு பேஸ்புக் அக்கவுண்ட் இருக்கிறது என்று ஒப்புதல் வாக்கு மூலம் தந்து விட்டு போகிறார்.
பெரிய எதிர் பார்ப்புகள் எதுவும் இல்லாமல் போய், சிரித்து விட்டு வர ஓகே தான் கண்ணா லட்டு திங்க ஆசையா படம்.
No comments:
Post a Comment