உனக்கு வசிக்க ஒரு மாளிகை கிடைத்ததா?
அனுபவி.
கிடைக்கவில்லையா? ஒரு குடிசையாக இருந்தாலும் ஆனந்தமாயிரு. அந்த குடிசையே மாட மாளிகையாகி விடும்.
வேறுபாடு என்பது அதை அனுபவிப்பதில்தான் இருக்கிறது. ஒரு மரத்தடியில் இருக்க நேர்ந்தாலும் நகேயும் ஆனந்தனமாய் இரு.
சூரிய ஒளி, காற்று, பரவிகள், வண்ணமலர்கள், அந்த மரம், சுதந்திரம் அனைத்தையும் அனுபவிக்க தவறிவிடாதே.
மாட மாளிகையில் இருந்தால் அந்த மாளிகையில் இருக்கும் பொருள்களை ரசி. சரவிளக்கையும், சலவைக்கல் தரையையும் கண்டுகளிக்க தவறாதே.
நீ எங்கே இருந்தாலும் அங்கங்கே அதை நீ அனுபவி. எதையும் உடமையாக்கி கொள்ளாதே. எதுவும் நமக்கு சொந்தமில்லை. வெறும் கையேடு இவ்வுலகத்திற்கு வந்தோம். வெறும்கையோடு இந்த உலகை விட்டு போகப்போகிறோம்.
இந்த உலகம் உனக்கு அளிக்கப்பட நன்கொடை. அது இருக்கும் பொழுதே அனுபவித்து விடு. இந்த பிரபஞ்சம் உனக்கு தேவையானவற்றை எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பதை நினைவில் வை.
தன்னைப் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் உள்ளவர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த போதனைகள் எப்போதுமே தேவையில்லை. காரணம் விழிப்புணர்வு பெற்ற மனிதன் தன்னைத் தானே பார்த்துக் கொள்கிறான்.
ஓஷோ இதனை மிக அழகான கதையின் மூலம் விளக்குகிறார்.
ஒரு போலிச்சாமியார் இருந்தார். அவரிடம், உண்மையான தேடலுள்ள சீடன் ஒருவன் வந்தான். “சுவாமி எனக்கு மந்திர உபதேசம் செய்யுங்கள், என்று கேட்டான். என் பெயர்தான் மந்திரம் அதனை உளமார உச்சரித்தாலே நன்மைகள் நடைபெறும்” என்றார் சாமியார்.
கொஞ்சநாள் கழித்து நதிக்கரை பக்கமாகப் போனார் சாமியார். அங்கே ஒரே கூட்டம், ஒருவர் வந்து..... சுவாமி உங்கள் சீடன் தண்ணீர் மீது நடக்கிறான், என்றார். ஓடிப்போய் பார்த்தார் சாமியார்.
சமீபத்தில் வந்த அதே சீடன் தான்! இவருக்கு ஆச்சரியம் தாங்க வில்லை. அவன் கரைக்கு வந்ததும் தனியாக அழைத்துப் போய், அதன் ரகசியம் என்ன? எனக்குக் கற்றுத்தரக் கூடாதா? என்றார் சாமியார்.
சீடன் சொன்னான், உங்கள் பெயரை உச்சரித்துக் கொண்டே நடந்தேன் சுவாமி! வேறேதும் ரகசியமில்லை என்றான்.
அதற்குள் கூடியிருந்தவர்கள், சீடனுக்கே இவ்வளவு சக்தி என்றால், உங்களுக்கு எவ்வளவு சக்தியிருக்கும்! நீங்களும் நதியில் நடந்து செல்லுங்கள் சுவாமி என்று வற்புறுத்தி இழுத்துச் சென்றார்கள். தண்ணீரில் நடக்க முயன்று தொப்என்று விழுந்தார் சாமியார்.
சீடனை அழைத்துச் சொன்னார், ஐயா! நான் ஒரு போலி! இத்தனை காலம் ஊரை ஏமாற்றியிருந்தேன். நீ தண்ணீரில் நடக்கக் காரணம் நானல்ல! உன் நம்பிக்கை” என்றார்.
இதைச் சொல்லிவிட்டு ஓஷோ அடுத்தாற்போல் ஒன்றைத் தெளிவுபடுத்துகிறார். “ஒவ்வொரு மனிதனும் தன்னை முழுமையாக நம்பினால் புத்தனாய் மலர முடியும். மற்றவர்களை நம்புவது என்பது பழக்கத்தின் காரணமாகத்தான். உனக்கு உதவி நீதான் என்கிறார்.
No comments:
Post a Comment