உயர்ந்தவை எல்லாம் தெய்வீகமே. உயர்ந்து நிற்கும் பிரமீடுகள் போல், கோவில் கோபுரங்களும் பிரமீடு தத்துவத்தில் தான் இயங்குகிறது.
எல்லை இல்லாமல் பரவி நிற்கும் பிரபஞ்ச ஆற்றலை ஓரிடத்திற்கு குவித்து தருவதற்கு கோபுரங்கள் பயன்படுகிறது.
அப்படி அமைக்கப்பட்ட கோபுரங்கள் வெறும் சக்தி மையங்களாக மட்டும் இல்லாமல் சமய சின்னங்களையும், அக்காலத்தில் நிலவிய பழக்க வழக்கங்களையும், பாரம்பரியங்களையும், கலாச்சாரங்களையும் சிற்பங்களாக செதுக்கி வருங்கால சந்ததிக்கு வழங்கவும் கோபுரங்கள் பயன்படுத்தப்பட்டது.
அவனன்றி அணுவும் அசையாது என்பார்கள். அணுவுக்குள் அணுவாய் இருந்து அண்டமெல்லாம் ஆட்டி படைக்கும் இறைவனின் இருப்பிடம்தான் ஆலயங்கள்.
அந்த ஆலயத்தை விட உயர்ந்த கட்டிடங்கள் இருக்க கூடாது என்ற நோக்கில் தான் அரண்மனையை விட உயரமான கோபுரங்கள் அமைக்க பட்டதாகவும் சொல்லபடுகிறது.
இந்த கோபுரங்களின் உச்சியில் அமைக்கபட்டிருக்கும் கலசங்கள் ஒரு மின்தாங்கி என்றால் மிகையில்லை.
பிரபஞ்ச சக்தியை கொண்டு வரும் ஒரு தொடுமுனையாக மட்டும் செயல்படாமல், இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து கோபுரங்களையும் கோவில்களையும் பாதுகாக்க கலசங்கள் அமைக்கப்பட்டது.
இந்த கலசங்களின் உள்ளே கம்பு, தினை போன்ற தானியங்கள் நிரப்பப்பட்டன. இந்த தானியங்களுக்கு இயற்கையாகவே மின்சக்தியை கிரகித்து கொள்ளும் ஆற்றல் உண்டு.
அதோடு தானியங்களை அங்கே பாதுகாத்து வைக்கவும் பயன்பட்டது என்றால் மிகையில்லை.
ஒரு வேளை புயல் வெள்ளம் போன்ற இயற்க்கை சீற்றங்களை சந்திக்க நேர்ந்து தண்ணீர் வடியாமல் விதை தானியங்கள் எல்லாம் அழிந்து போனால், மீண்டும் உற்பத்தி செய்ய இந்த தானியங்கள் பயன்படும் என்ற நோக்கிலும் வைக்கப்பட்டது என்று சொல்வார்கள். இது கர்ண பரம்பரை செய்திதான்.
பொதுவாக கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். இந்த கோபுரங்கள் இறைவன் இருக்கும் கருவறையில் மட்டும் அமைக்காமல் நாம் உள் நுழையும் வாயிலேயே அமைத்ததின் காரணம் கோபுரம் வழியாக வரும் மின் காந்த அலைகளை கிரகித்து கொண்டு உள் நுழைய வேண்டும் என்ற காரணத்தால் தான்.
சரி... சில பிரபல ஆலயங்களுக்கு போக முடியாமல் இருக்கலாம். அந்த பாக்கியம் வைக்காதவர்கள் இங்கே காணும் கோபுரத்தையாவது தரிசனம் செய்யுங்கள்.
|
madurai meenachi amman kovil |
|
madurai meenachsi |
|
pazhani temple |
|
pazhani murugan |
|
pazhamuthirsolai |
|
pazhamuthirsoli murugan |
|
srirangam |
|
sriranganathar |
|
pattiswaram durgai |
|
pattiswaran durgai |
|
thiruvannamalai |
|
thiruvannamalai sivan |
|
aalangudi guru temple |
|
suriyanaarkovil temple |
|
suriya pakavan |
|
chandran kovil |
|
chnanran
|
|
vaithiswaran kovil
|
|
sevvai bagavaan |
|
Thiruvenkadu temple
|
|
puthan bakavan |
|
kanjanoor temple |
|
sani temple |
|
sani pakavan |
|
ragu temple |
|
ragu pakavan |
|
kethu temple |
|
kethu pakavan |
No comments:
Post a Comment