அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரங்களை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்த பின்னர், அமெரிக்கா எதையும் சந்தேக கண்ணோட்டத்துடன் அணுகி வருகிறது.
இதனையடுத்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த பல அதிரடி விதிமுறைகளை அமல்படுத்தியது. அதன் அடுத்த கட்டமாக தீவிரவாதிகளை கண்டுபிடிப்பது எப்படி என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.
“தீவிரவாத விழிப்புணர்வும் தடுப்பும்” என்ற தலைப்பில் அமெரிக்க உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை தயாரித்துள்ளது. இதில் தீவிரவாதிகளை பொதுமக்களே கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பது எப்படி என்பது குறித்து சில தகவல்களை வழங்கி உள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு: மற்றவர்களிடம் ஒருவர் பேசும்போது அடிக்கடி கொட்டாவி விடுவது, படபடவென இருப்பது, அடிக்கடி நேரம் பார்ப்பது, பதற்றமாக பேசுவது, பரபரப்பாக நடப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர் தீவிரவாதியாக இருக்கலாம்.
முகம், கழுத்து, அங்க அசைவுகள் மூலமாகவும் அடையாளம் காணலாம். கண்களை அகல திறந்து அடிக்கடி சுற்றுமுற்றும் பார்ப்பவர்கூட தீவிரவாதியாக இருக்க வாய்ப்பு உள்ளது.
அடிக்கடி முகம், காதுகளை தடவுபவர், திடீரென உடல் வியர்ப்பவர், பீதி அடைபவர் ஆகியோர் தீவிரவாதியாக இருக்கலாம். இதுபோன்ற அறிகுறிகளுடன் ஒருவரை பார்த்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
எனினும் இவை எல்லாம் உறுதிப்படுத்தப்பட்டது அல்ல. எனினும் மேற்குறிப்பிட்டவற்றில் பல அறிகுறிகள் ஒருவரிடம் ஒரே நேரத்தில் காணப்பட்டால் அவர் மீது உங்களுக்கு தானாகவே சந்தேகம் எழ வாய்ப்பு உள்ளது. அதுபோன்ற நேரங்களில் தகவல் தெரிவிக்கலாம்.
ஆனால் மதம், இன ரீதியாக வைத்து ஒருவர் மீது சந்தேகப்பட கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இது எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. தேவையில்லாத சர்ச்சையை தான் கிளம்பும் என்று அமெரிக்க வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: நிதர்சனம் நெற்
No comments:
Post a Comment