பெற்றெடுத்தால் மட்டும் பிள்ளை இல்லை. தத்தெடுத்தாலும் பிள்ளை தான். அதனால் தான் சாஸ்த்திரத்தில் அதற்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்க படுகிறது .
ஏன்?
இறப்புக்கு பிறகு புத் என்னும் நரகத்திற்கு போகாமல் இருக்க வேண்டுமானால் புத்திரன் இருக்க வேண்டும். அந்த புத்திரன் கர்ம காரியங்கள் சரிவர செய்ய வேண்டும்.
செய்தால்?
புத் என்னும் நரகத்திற்கு செல்லமாட்டான். அதோடு வைதரணி என்னும் நதியை கடப்பதற்கும் இது உதவும்.
பொதுவாக மனிதர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடைமைகள் மூன்று. இது தேவகடன், பிதிர்கடன் , ரிஷி கடன்.
தேவகடன் என்பது தெய்வ வழிபாடு. ஊழ்வினையின் பொருட்டு கருவாகி உருவாகும் நமக்கு ஊழ்வினையின் பலனை குறைத்து கொள்வதற்கும். இறப்புக்கு பிந்தைய வாழ்வு இனிதாய் அமையவும் இறைவழிபாடு அவசியம்.
அடுத்து ரிஷிகடன்.
குருமார்கள், வயதில் மூத்தவர்கள், வணங்கத்தக்க பெரியோர்களுக்கு உரிய மதிப்பு மரியாதையை தருவது மட்டும் அல்ல, அவர்களுக்கு உரிய பணிவிடைகளை சரிவர செய்யவேண்டும்.
மாறாக குருவை பழித்தவன், குரு நிந்தனை செய்தவன், குரு துரோகம் செய்தவன், வயதில் பெரியோரை வணங்காமல் அவமதித்தவனை பிரம்மக்கத்தி தோஷம் பீடிக்கும் என்கிறது தர்மசாச்த்திரம்.
அதனால் இந்த ரிஷி கடனும் முக்கியமானது.
கடைசியாக வரும் பிதுர்கடன் பெற்றவர்களுக்கு செய்யும் கடன்.
உயிர் கொடுத்த உத்தமர்களுக்கு செய்யும் கடன். இருக்கும் போதும், இறப்புக்கு பிறகும் செய்ய வேண்டிய கடைமையை செய்தால் அவர்கள் நற்கதி அடைவது மட்டும் அல்லாமல், நம்மையும் நம் சந்ததிகளையும் வளமோடு வாழவும் வாழ்த்துவார்கள்.
அதனால் தான் பிதுர்கடன் அவசியம் என்கிறது ஹிந்துமதம்.
அதாவது , நாம் நம்மை பெற்றவர்களுக்கு செய்கிறோம்.
நமக்கு யார் செய்வது?
பெற்ற பிள்ளைகள்தான்.
சிலருக்கு உடற்கூறுகள் ஒத்துழைக்கும். எந்த தடையும் இல்லாமல் குழந்தை பேறு கிடைத்துவிடும். சிலருக்கு கிடைப்பதில்லை.
அதற்க்கு உடற்கூறுகள் மட்டும் காரணம் இல்லை. அந்த உடற்கூறுகளை கையில் வைத்திருக்கும் நவகிரங்களின் கருணை இருக்காது.
காலம் கடந்து பிள்ளை பெரும் பாக்கியம் சிலருக்கு. ஆனால் புத் என்னும் நரகத்திற்கு போகாமல் இருக்க பெற்ற பிள்ளைகள் இல்லா விட்டாலும், சாத்திர ரீதியாக தத்தெடுத்த பிள்ளையாவது கொள்ளி போட வேண்டும். இதைத்தான் சுவிகாரம் என்பார்கள்.
சரி... நமக்குத்தான் பிள்ளை இல்லை. வழியல்லாத ஒருத்தன், வறுமையில் உள்ளவன், பிள்ளையை தர்றேன்னு சொன்னால் எடுத்து வளர்ப்போம் என்று சொன்னால் அது தவறு.
ஏன்?
அதற்கென்று சில வரைமுறைகள் இருக்கிறது. யாருமற்ற அநாதை குழந்தைகளை தத்தெடுக்க சாஸ்த்திரத்தில் எந்த தடையும் இல்லை.யாரும் அற்ற அநாதை குழந்தைகள் தெய்வத்தின் குழந்தைகள்.
அதனால் தெய்வ சாட்சியாக சங்கல்ப்பம் செய்து தத்து எடுக்கலாம்.
ஆனால்?
ஒரு குடும்பத்தில் இருந்து தத்தெடுத்தால் அதற்கென்று சில வரைமுறைகள் இருக்கிறது.
பெண் குழந்தையாக இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் ஆண் குழந்தையாக இருந்தால் மட்டும் கவனிக்க வேண்டும்.
என்ன?
ஒரு குழந்தையை தத்தெடுக்கும் போது தத்து கொடுப்பவர்கள் தம்பதியராய் இருக்க வேண்டும். தம்பதியாராய் இருந்து தான் தாரை வார்த்து கொடுக்க வேண்டும்.
அதிலும் தத்து கொடுக்கப்படும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால், அந்த குடும்பத்தின் மூத்த ஆண் குழந்தையாகவோ, இளைய ஆண் குழந்தையாகவோ இருக்க கூடாது.
ஏன்?
தாய்க்கு தலைமகன். தந்தைக்கு கடைமகன் என்று நம் முன்னோர்கள் வரையருத்தார்களே தெரியுமா?
தாய் இறந்தால் ஈமக்கடன் செய்து கொள்ளி போட வேண்டிய கடமை மூத்த ஆண் குழந்தைக்கும், தந்தை இறந்து போனால் ஈமக்கடன் செய்து கொள்ளி போட வேண்டிய கடமை இளைய ஆண் குழந்தைக்கும் உண்டு.
அதனால் அந்த குழந்தைகளை தத்து எடுக்கவும் கூடாது. தத்து கொடுக்கவும் கூடாது.
அதோடு அந்த குழந்தை பிறந்து ஒரு வயது ஆவதற்குள் தத்தெடுப்பது நல்லது.
அல்லது?
பூணுல் போடும் வயதான ஏழு வயதிற்கு முன்பு தத்தெடுத்து விட வேண்டும்.
சரி... தத்தெடுக்கும் போது சாஸ்த்திர ரீதியாக கடை பிடிக்க வேண்டிய நியதிகள் என்ன? கேள்வி எழுகிறதா? சாமவேதம் தருகிறது இந்த பதில்.
தத்தெடுக்கும் குழந்தையை இந்திரன், அஷ்டதிக்பாலகர்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் சூரியன் சாட்ச்சியாக என் குழந்தையை உனக்கு தருகிறேன் என்று சொல்லி கொடுக்க வேண்டுமாம்.
மேலும்....
தர்ம சந்தான விரித்தியார்த்தம் பித்ரு பிரித்தி கடந்தவ
மம புத்திரம் அபுத்ராயதுப்பயம் சாம்ப்ரதே துவிஜா
அதாவது தர்ம காரியங்களுக்காகவும், பித்துருக்கள் சந்தோசப்படுவர்தாகவும் என்னுடைய புத்திரனை குழந்தை இல்லாத உனக்கு கொடுக்கிறேன் என்று சொல்லி ....
தாஸ்யாமி.... தாஸ்யாமி ....தாஸ்யாமி என குழந்தையை கொடுக்க வேண்டுமாம்.
இப்படி தத்து கொடுக்கும் போது மஞ்சள் நீருடன் அச்சதையை கையில் எடுத்து கொண்டு மறு கையால் குழந்தையை பிடித்து கொள்ள வேண்டும்.
சிவிகாரம் கொடுப்பவரின் மனைவி தீர்த்தம் விட தானம் வாங்கி கொள்ளும் தம்பதியரிடம் குழந்தையை கொடுக்க வேண்டும்.
குழந்தையை பெற்று கொண்டவர்கள் குழந்தையை பெற்ற தம்பதியர்க்கு ஆடை ஆபரணம் கொடுக்க வேண்டும்.
பின் ...
தமர்யுத்வா கிரன்னாமி
அதாவது தர்மத்தின் பொருட்டு குழந்தையை வாங்கி கொள்கிறேன்.
சம்பத்தியைத்வா கிரன்னாமி
சந்ததி விருத்தி அடைவதற்காக குழந்தையை வாங்கி கொள்கிறேன்.
தேவச்யதே சரிதக்குவதே அஸ்வினோ
பாகுப்பியாம் பூஷ்வா அர்தா ஹப்யாம் பிரதி கிரன்னாமி
நான் குழந்தையை சுவிகாரம் செய்து விட்டேன் என்று சொல்லி குழந்தையை மார்போடு அனைத்து உச்சு முகர வேண்டும். இவ்வாறு செய்தால் உறவு வலுபெறும். அத்துடன் சுவிகாரம் பூர்த்தி அடைகிறது.

No comments:
Post a Comment