திருப்பரங்குன்றம் ( முதல் படை வீடு )
தேவர்களுக்கு எப்போதுமே அரக்கர்களிடம் இருந்துதான் துன்பம் வரும். அந்த வகையில் இப்போது துன்பத்தை தந்தது சூரபத்மன்.
தேவர்கள் தங்களை துன்புறுத்திய சூரபத்மனிடமிருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அவர் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார்.
அதிலிருந்து ஆறு முகங்களுடன் முருகப்பெருமான் தோன்றினார். வளர்ந்து வாலிப பருவத்தை எட்டிய முருகன் சூரனுடன் போரிட்டு வென்று, அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார்.
இந்த நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நிகழ்ந்தது. சூரனை வெற்றி கொண்ட வீரன் முருகனுக்கு, இந்திரன் தனது மகளான தெய்வானை திருமணம் செய்து தர சம்மதித்தார்.
அவர்களது திருமணம் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்தது. திருமணத்திற்கு அனைத்து தெய்வங்கள், தேவர்கள், மகரிஷிகள் என அனைவரும் வந்தனர்.
நாரதர் முன்னிலையில் முருகன், தெய்வானை திருமணம் நடந்தது. இதேகோலத்தில் சுவாமி இங்கு எழுந்தருளினார்.
திருச்செந்தூர் (இரண்டாம் படை வீடு )
முன்கதைக்கு முன்னுரையே இதுதான்.
சூரபத்மனை அழிக்க சிவனால் உருவாக்காபெற்ற முருகனை அழைத்த சிவன், கந்தா நீ... சூரபத்மனை அழிக்கும் காலம் நெருங்கி விட்டது.
இப்போதே செல்வாயாக என்று கட்டளை இட்டார். சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார்.
இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார்.
அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை.
பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார்.
அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், செயந்திநாதர் என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் திருச்செந்தூர்' என மருவியது.
பழனி (மூன்றாம் படை வீடு )
ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை சிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார்.
அப்பொழுது அருகிலுருந்த பார்வதி தேவி அந்த பழத்தை தனது குமாரர்களான விநாயகனுக்கும், குமரனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள்.
ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார்.
உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். சிறுவன் குமரன் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார்.
விநாயகனோ இந்த உலகத்தை காத்து ரட்சிக்கும் அம்மை அப்பன் தானே உலகம் என கருதி அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை வென்றார்.
இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினான். அன்றிலிருந்து அவனது இந்த படை வீடு "பழம் நீ " (பழனி) என அழைக்கப்படுகிறது.
சுவாமிமலை ( நான்காம் படைவீடு )
அந்தவகையில் படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது.
விதி யாரை விட்டது?
அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று சிறுவனான முருகப்பெருமான் கேட்கிறார்.
இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை பிரம்மன். பதில் தெரியாமல் தடுமாறினார். அதனால் கோவம் கொண்ட முருகன், பிரம்மாவின் நான்கு தலைகளிலும் குட்டினார்.
அத்தோடு விடிருந்தாலும் பரவாயில்லை. பிரணவ மந்திரத்தின் அர்த்தம் தெரியாத நீங்கள் இந்த தொழிலுக்கு லாயக்கு இல்லை என்று சொல்லி, பிரம்மனை சிறையில் அடைத்தார்.
பின்பு படைப்பு தொழிலை முருகனே செய்தார். பிரம்மன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்திய திருமால் சிவபெருமானிடம் சொல்லி விடுதலை கிடைக்க வேண்டுகிறார்.
சிவபெருமானும் முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று முருகன் விடுதலை செய்தார்.
இதை பார்த்து உளம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, பிரம்மாவுக்கு பிரணவ மந்திரத்தின் அர்த்தம் தெரியவில்லை என்று தானே சிறையில் அடைத்தாய். எங்கே... நீ சொல் பார்க்கலாம் என்று கேட்கிறார்.
முருகனும் எல்லோரும் அறியக் கூறக் கூடாதே என்று சொல்லி சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார்.
இந்நிகழ்ச்சி நடந்த தலமே இந்த சுவாமிமலைத் திருத்தலம் என்று தல வரலாறு கூறுகிறது.
திருத்தணி ( ஐந்தாம் படை வீடு )
திருத்தணிகை மலைப்பகுதியில் வசித்த குறவர்களின் தலைவனாக நம்பிராஜன் விளங்கினான். இவனின் மகள் தான் வள்ளி.
வள்ளி தினைப்புனத்தைக் காவல் காக்கும் பணியைச் செய்து வந்தாள். ஒரு சமயம் வள்ளியை பார்த்தான் முருகன். பார்த்தும் வள்ளி மேல் காதல் கொண்டான்.
முதலில் ஒரு முதியவர் வேடத்தில் வந்தார். வள்ளியோ அவரை யாரென அறியாமல் பயந்தோடினாள்.
அப்போது யானை அவளை வழிமறித்தது. யானையை பார்த்தும் பயத்தில் திரும்ப ஓடிவந்து முதியவர் வேடத்தில் இருந்த முருகனை தழுவினாள்
முருகனின் ஸ்பரிசம் பட்டதுமே காதல் பிறந்தது. அவருடன் ஐக்கியமாகி விட்டாள்.
பாமரர்கள், அவள் இறைவனுடன் ஐக்கியமானதை திருமணமாகக் கருதி, வள்ளி திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். வள்ளியின் திருமணத்தலம் இது.
பழமுதிர்ச்சோலை ( ஆறாவது படை வீடு )
ஒரு முறை அவ்வை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவ்வைமீது thani அன்பு கொண்ட
முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, அவ்வை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார்.
பயண களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார்.
மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் ...... என்ன பாட்டி! மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பை போக்க நாவல் பழங்கள் வேண்டுமா? என்றான்.
சந்தோஷப்பட்ட அவ்வை பாட்டி sari பழங்களை பறித்து போடு என்றார்.
உடனே முருகன்....பாட்டி! தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?''என்றான்.
இதனைக்கேட்டு திகைப்படைந்த தமிழ் முதாட்டி ஏதும் புரியாமல், சிறுவன் அறியாமையில் ஏதோ சொல்கிறான் என்று எண்ணி ....சுட்ட பழத்தையே கொடேன்''என்றார்.
சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது.
அவ்வை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன், பாட்டி! பழம் மிகவும் சுடுகின்றதோ?, ஆறியவுடன் சாப்பிடுங்கள்''என்று கூறி சிரித்தான்.
சிறுவனின் மதிநுட்பத்தை அறிந்த பாட்டி, மரத்தில் இருப்பவன் மானிடச் சிறுவனல்ல என்பதைப் புரிந்து கொண்டார். பின்னர் யாரப்பா நீ என கேட்க முருகன் தன் சுயவடிவில் அவருக்கு அருள்பாலித்து முக்தி தந்தார்.
அந்த இடம்தான் பழமுதிர்சோலை
No comments:
Post a Comment