ads

Thursday, 16 August 2012

சுதர்சன வழிபாடு

முன்னேற்ற தடையா? முயற்ச்சிகளில் தோல்வியா?   நடக்க கூடாத ஏதோ நடந்த மாதிரி, இழக்க கூடாத ஒன்றை இழந்த மாதிரி மனம்  தவிக்கிறதா?   கரையான் புற்றுக்குள் கருநாகம் குடி புகுந்த மாதிரி எந்நேரமும் கவலையா? கடன் கொடுத்த நீங்கள் கடன்  வாங்கும் நிலையா?  கேள்வி கேட்ட நீங்கள் பதில் சொல்லும் சூழலா?   எதுவாக இருந்தாலும் தண்ணீரில் விழுந்த தணல் மாதிரி மறைய சுதர்சன வழிபாடு செய்யுங்கள்.   யாரிந்த சுதர்சனம்?  சுதர்சனம்...!  விஷ்ணு பகவானின் கையில் உள்ள சக்கரம். இவரை சக்கரத்தாழ்வார் என்றும் சொல்லுவார்கள். விஷ்ணு பக்த்தர்களுக்கு வினைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.   பகவான் விஷ்ணுவுக்கு  சங்கு, வாள், வில், கதாயுதம் ஆகியவற்றுடன் சக்கராயுதமும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.  திருமால், ராம அவதாரம் எடுத்து வனவாசம் மேற்கொண்டபோது, ராமர் சார்பாகஅயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது.  சிசுபாலன் என்ற அசுரனின் தாய்க்கு, அவன் செய்யும் நூறு பிழைகளைப்  பொறுத்துக் கொள்வதாக வாக்களித்திருந்தார் கிருஷ்ணர். சிசுபாலன் நூற்றியோரா வது பிழையையும் புரிய, கிருஷ்ணரின் ஆணையின் பேரில் சீறி எழுந்து சிசுபாலனை அழித்தது சுதர்சனச் சக்கரமே!  மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல யாராலும் முடியாத நிலையில், பகவான் கிருஷ்ணன் கரத்திலிருந்த சக்கராயுதம்தான் சூரியனை மறைத்து, குருஷேத்திரத்தையே இருளச் செய்து, ஜயத்ரதன் மரணத்திற்குக் காரணமாகவும்  திகழ்ந்தது.  அர்ஜுனன் காப்பாற்றபட்டான்.  துர்வாசர் கதையை சற்று விரிவாக பார்ப்போம்.   அம்பரீசன்..! இதுதான் அந்த மன்னனின் பெயர். அவன் மன்னனாக இருந்தாலும் பகவான் நாராயணனின் மீது மாறாத பக்தி கொண்டவன்.   பக்தி என்றால் ஏதோ தினம்தோறும் பூஜித்து, பூஜை மந்திரங்கள் செய்து விட்டால் போதும் என்று நினைக்கிற சராசரி பக்தி அல்ல. எந்நேரமும் பகவான் திருநாமம் உச்சரிப்பவர். விரதம் மேற்கொண்டு வருபவர்.   ஒரு மன்னனின் தலையாய கடமை எது?  தன் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். நல்லாச்சி புரிய வேண்டும்.   ஆனால் அம்பரிஷனோ நல்லவனாக இருந்தும் கூட, நல்லச்சி நடத்தும் தகுதி இருந்தும் கூட, அதி விடுத்து பக்தியில் கவனம் செலுத்தினான்.   பார்த்தார் பகவான். அம்பரிசன் என்ன இப்படி இருக்கிறான். மகளுக்கு நல்லாச்சி தரவேண்டும், எதிரிகளிடம் இருந்து நாட்டை காக்க வேண்டும்  என்ற சிந்தனையே இல்லாமல் இருக்கிறான்.   பின் ஏதாவது விபரீதம் நடந்தால், பக்தனை பாதுக்காக்கவில்லை என்று எனக்கு தானே கெட்ட பெயர் வரும் என்று யோசித்த பவான் தன்னை விட்டு நீங்காமல் இருக்கும் சுதர்சனத்தை கொண்டு போய், அவன் அரண்மனையில் வைத்து விட்டாராம்.   பாதுகாப்பிற்கு. இன்று முதல் நீயே அம்பரிசனுக்கும், அவன் நாட்டு மக்களுக்கும் காவல் என்று கட்டளை இட்டார்.    ஒரு சமயம் அம்பரிசனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏகாதசி விரதம் இருந்து துவாதசி பாரணை செய்தால் என்ன என்று.   உடனே யமுனை நதிக்கரைக்கு  சென்றான். ஒரு பந்தலை அமைத்தான். வேத விற்ப்பனர்களை அழைத்தான், தான தர்மங்களை செய்தான், ஏகாதசி விரதம் இருக்க துவங்கி விட்டான்.   இது ஒரு நாளில் முடிகிற விஷயமே  இல்லை. ஒரு வருட கடும் விரதம். இவ்விரதத்தின்  நிறைவு நாளான துவாதசி அன்று அன்னதானம் அளித்து கடைசியாக உணவருந்தினால் விரதம் பூர்த்தியாகும்.  அந்த  நாளும் வந்தது. ஆனால் விதி துர்வாசர்  ரூபத்தில் வந்தது. சரியாக பாரணை செய்யபோகும் நேரத்தில் துர்வாசர் வந்தார்.   அம்பரிசா உன் விரதம் பற்றி கேள்வி பட்டோம். மிக்க மகிழ்ச்சி. இப்போது பாரணை செய்ய வேண்டாம். கொஞ்சம் பொறு... நானும் நீராடிவிட்டு வருகிறேன். நாம் இருவரும் சேர்ந்து பாரணை செய்யலாம்.  அம்பரிசனுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை. இன்னும் அரை நாழிகைதான் இருக்கிறது. அதற்குள் போசனம் செய்யாவிட்டால் வருடம் முழுவதும் இருந்த விரத பலன் வீணாக போய்விடும்.   ஆனால் முனிவரை viduththu உணவருந்தவும் முடியாது. ஆனால் அவரோ... நீராடி விட்டு வருகிறேன் என்று சொல்லி மெல்ல நடை போட்டு போகிறார். எப்போது வருவார் என்றும் தெரியாது.   இந்த நிலையில் சாஸ்த்திரம் அறிந்த பெரியோர்களிடம் ஆலோசனை கேட்கிறான் அம்பரிசன்.   கவலை படாதே. ஒரு உத்தரணி தீர்த்தம் எடுத்து அதில் ஒரு துளசியை போட்டு அருந்தி விடு. அப்படி செய்தால் சாப்பிட்ட மாதிரியும் கணக்கு, சாப்பிடாத மாத்திரம் கணக்கு. .  உடனே அம்பரிசன் பாரணை செய்ய அமர்கிறான். எதிரே  உத்தரணி . அதில் துளசியை போடுவதற்கும், துர்வாசர் வருவதற்கும் சரியாக இருந்தது. வந்ததே கோவம் துர்வாசருக்கு.   அம்பரிசா... என்ன செய்கிறாய்?  சுவாமி... துளசி பாரணை.   என்னோடு சேர்ந்து பாரணை செய்வதாக வாக்களித்தாய் அல்லவா. இப்போது நீ தனியாக செய்கிறாய் என்றால், என்னை அவமரியாதை செய்வதாகதானே அர்த்தம்.   இல்லை சுவாமி...பாரணை செய்ய நேரம் முடிந்து விட போகிறதே என்ற அச்சத்தில் சிறு தவறு செய்துவிட்டேன். நீங்கள் என்னை பொருத்தருள வேண்டும்.   முடியாது. நீ மன்னன் என்கிற ஆணவம். அந்த துணிச்சலில் தான் என்னை அவமரியாதை செய்திருக்கிறாய். உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்றவர் தன் ஜடா முடியில் இருந்து ஒரு முடியை புடுங்கி போட்டார்.  udan அதில் இருந்து ஒரு ராச்ஷச உருவம் வெளிப்பட்டது.   ஏய் பூதமே... என்னை அவமரியாதை செய்த அம்பரிசனை ஒழித்து விட்டு வா என்று பூதத்திற்கு கட்டளை இட்டார்.  பூதம் அம்பரிசனை தாக்க தயாரானது.  அது வரை பொறுமை காத்த சுதர்சனத்திற்கு பொத்துக்கொண்டு வந்தது கோவம். துர்வாசருக்கு என்ன துணிச்சல். நாராயண பக்தனை கொள்ள துணிந்து விட்டாரா? என்று ஆவேசம் கொண்டு பூதத்தின் மேல் பாய்ந்தது.  பூதம் முடிந்தது. பிறகென்ன... திரும்பி துர்வாசரை  பார்த்து.  சுதர்சனத்தின் ஆவேச உருவத்தையும், உறுமலையும் பார்த்த துர்வாசர் தலை தப்பினால் போதும் என்று ஓடினார்... ஓடினார்... ஓடினார்...!  விடவில்லை சுதர்சனம்,  விரட்டியது. கடலுக்குள் போய் ஒளிந்தார்.  நீரை எல்லாம் உருஞ்சியது சுதர்சனம். கடல் வற்றியது. அங்கிருந்து  தப்பி,  மேரு மலைக்குள் புகுந்து கொண்டார். விட்டதா சுதர்சனம். மலையை இரண்டாக பிளந்தது.   அய்யய்யோ இந்த படுபாவி சுதர்சனம் நம்மை பந்தாடாமல் விடாது போலிருக்கிறதே...என்று பிரம்மலோகத்திற்கு ஓடி போய் பிரம்மாவிடம் அபயம் கேட்டார்.   அதற்க்கு பிரம்மா... என்னது சுதர்சனமா? துர்வாசரே... நீர் முதலில் இவ்விடத்தை காலி செய்யுங்கள். இங்கே நுழைந்தால் சத்திய லோகத்தையே உண்டு இல்லை என்று செய்து விடும்.   போங்கள்  என்று அறிவுரை கூறினார் பிரம்மா. பிரம்மாவும் கைவிரித்த நிலையில் அடுத்து கைலாயத்திற்கு ஓடினார்.  தாங்கள்தான் என்னை காக்க வேண்டும்.  முனிவரே... சுதர்சனத்தை பற்றி என்ன நினைத்தீர். நாராயணன் பதர்களுக்கு நாளும் துணை இருப்பது சுதர்சனம். தெரிந்தோ, தெரியாமலோ நாராயண பக்தர்களுக்கு ஒருவர் தீங்கிழைத்தால் சுதர்சனம் சும்மா விடாது.   அதுவும் அம்பரிசன் நாராயண பக்தர்களில் சிறந்தவன். முதன்மையானவன். அவனிடமே நீர் வம்பு செய்திருக்கிறிர்கள். என்னால் ஒன்றும் செய்யமுடியாது.  விஷுவிடமே போங்கள். அவர் தான் உங்களை காக்க வேண்டும்.  கடைசியில் விஷ்ணுவிடம் சரணடைந்தார் துர்வாசர்.   துர்வாசரே.. சுதர்சனம் இப்போது என் கட்டுப்பாட்டில் இல்லை. அம்பரிசனை பாதுகாக்க அவனிடமே விட்டுவிட்டேன். அதனால் அம்பரிசன் சொன்னால் மட்டுமே சுதர்சனம் கேட்கும்.   இறுதியில் அம்பரிசனிடம் ஓடி வருகிறார். அம்பரிஷா என் பிழையை பொருத்தருள். உன் பக்தியின் மகிமை தெரியாமல் உன்னை சோதித்து விட்டேன்.   இந்த சுதர்சனம் ஈரேழு பதினாலு லோகத்திற்கு ஓடியும் விடாமல் துரத்துகிறது. அதை கட்டு படுத்து என்று கெஞ்சுகிறார்.   அம்பரிசன் கண் மூடி சுதர்சனத்தை துதிக்க, கோவம் தணிந்து தன இருப்பிடம் போகிறது சுதர்சனம்.  இது சதர்சனத்தை பற்றிய ஒரு புராண கதை.   ஸ்ரீ சதர்சனத்தை  வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங் களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.  ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும்.  மஹா சுதர்ஸன மஹாமந்திரம்  ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!  மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர  ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக்ஷோபனஹராய  ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா  சுதர்சனம் என்று சொல்லக்கூடிய சக்கரத்தாழ்வாரை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். பில்லி சூனியம் விலகும்.   மன பயம் அகலும், வீண் குழப்பங்கள் தீரும். எதிரிகள், எதிர்ப்புகள் ஒழியும். நீங்களும் சுதர்சனத்தை வழிபாட்டு வளமோடு வாழ வாழ்த்துகிறேன்.


முன்னேற்ற தடையா? முயற்ச்சிகளில் தோல்வியா? 

நடக்க கூடாத ஏதோ நடந்த மாதிரி, இழக்க கூடாத ஒன்றை இழந்த மாதிரி மனம்  தவிக்கிறதா? 

கரையான் புற்றுக்குள் கருநாகம் குடி புகுந்த மாதிரி எந்நேரமும் கவலையா? கடன் கொடுத்த நீங்கள் கடன்  வாங்கும் நிலையா?  கேள்வி கேட்ட நீங்கள் பதில் சொல்லும் சூழலா? 

எதுவாக இருந்தாலும் தண்ணீரில் விழுந்த தணல் மாதிரி மறைய சுதர்சன வழிபாடு செய்யுங்கள். 

யாரிந்த சுதர்சனம்?



சுதர்சனம்...!

விஷ்ணு பகவானின் கையில் உள்ள சக்கரம். இவரை சக்கரத்தாழ்வார் என்றும் சொல்லுவார்கள். விஷ்ணு பக்த்தர்களுக்கு வினைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். 

பகவான் விஷ்ணுவுக்கு  சங்கு, வாள், வில், கதாயுதம் ஆகியவற்றுடன் சக்கராயுதமும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.

திருமால், ராம அவதாரம் எடுத்து வனவாசம் மேற்கொண்டபோது, ராமர் சார்பாகஅயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது.




சிசுபாலன் என்ற அசுரனின் தாய்க்கு, அவன் செய்யும் நூறு பிழைகளைப்  பொறுத்துக் கொள்வதாக வாக்களித்திருந்தார் கிருஷ்ணர். சிசுபாலன் நூற்றியோரா வது பிழையையும் புரிய, கிருஷ்ணரின் ஆணையின் பேரில் சீறி எழுந்து சிசுபாலனை அழித்தது சுதர்சனச் சக்கரமே!




மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல யாராலும் முடியாத நிலையில், பகவான் கிருஷ்ணன் கரத்திலிருந்த சக்கராயுதம்தான் சூரியனை மறைத்து, குருஷேத்திரத்தையே இருளச் செய்து, ஜயத்ரதன் மரணத்திற்குக் காரணமாகவும்  திகழ்ந்தது.  அர்ஜுனன் காப்பாற்றபட்டான்.




துர்வாசர் கதையை சற்று விரிவாக பார்ப்போம். 

அம்பரீசன்..!
இதுதான் அந்த மன்னனின் பெயர். அவன் மன்னனாக இருந்தாலும் பகவான் நாராயணனின் மீது மாறாத பக்தி கொண்டவன். 

பக்தி என்றால் ஏதோ தினம்தோறும் பூஜித்து, பூஜை மந்திரங்கள் செய்து விட்டால் போதும் என்று நினைக்கிற சராசரி பக்தி அல்ல. எந்நேரமும் பகவான் திருநாமம் உச்சரிப்பவர். விரதம் மேற்கொண்டு வருபவர். 

ஒரு மன்னனின் தலையாய கடமை எது?  தன் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். நல்லாச்சி புரிய வேண்டும். 



ஆனால் அம்பரிஷனோ நல்லவனாக இருந்தும் கூட, நல்லச்சி நடத்தும் தகுதி இருந்தும் கூட, அதி விடுத்து பக்தியில் கவனம் செலுத்தினான். 

பார்த்தார் பகவான். அம்பரிசன் என்ன இப்படி இருக்கிறான். மகளுக்கு நல்லாச்சி தரவேண்டும், எதிரிகளிடம் இருந்து நாட்டை காக்க வேண்டும்  என்ற சிந்தனையே இல்லாமல் இருக்கிறான். 

பின் ஏதாவது விபரீதம் நடந்தால், பக்தனை பாதுக்காக்கவில்லை என்று எனக்கு தானே கெட்ட பெயர் வரும் என்று யோசித்த பவான் தன்னை விட்டு நீங்காமல் இருக்கும் சுதர்சனத்தை கொண்டு போய், அவன் அரண்மனையில் வைத்து விட்டாராம்.

 பாதுகாப்பிற்கு. இன்று முதல் நீயே அம்பரிசனுக்கும், அவன் நாட்டு மக்களுக்கும் காவல் என்று கட்டளை இட்டார். 





ஒரு சமயம் அம்பரிசனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏகாதசி விரதம் இருந்து துவாதசி பாரணை செய்தால் என்ன என்று. 

உடனே யமுனை நதிக்கரைக்கு  சென்றான். ஒரு பந்தலை அமைத்தான். வேத விற்ப்பனர்களை அழைத்தான், தான தர்மங்களை செய்தான், ஏகாதசி விரதம் இருக்க துவங்கி விட்டான். 

இது ஒரு நாளில் முடிகிற விஷயமே  இல்லை. ஒரு வருட கடும் விரதம். இவ்விரதத்தின்  நிறைவு நாளான துவாதசி அன்று அன்னதானம் அளித்து கடைசியாக உணவருந்தினால் விரதம் பூர்த்தியாகும்.

அந்த  நாளும் வந்தது. ஆனால் விதி துர்வாசர்  ரூபத்தில் வந்தது. சரியாக பாரணை செய்யபோகும் நேரத்தில் துர்வாசர் வந்தார். 




அம்பரிசா உன் விரதம் பற்றி கேள்வி பட்டோம். மிக்க மகிழ்ச்சி. இப்போது பாரணை செய்ய வேண்டாம். கொஞ்சம் பொறு... நானும் நீராடிவிட்டு வருகிறேன். நாம் இருவரும் சேர்ந்து பாரணை செய்யலாம்.


அம்பரிசனுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை. இன்னும் அரை நாழிகைதான் இருக்கிறது. அதற்குள் போசனம் செய்யாவிட்டால் வருடம் முழுவதும் இருந்த விரத பலன் வீணாக போய்விடும். 

ஆனால் முனிவரை viduththu உணவருந்தவும் முடியாது. ஆனால் அவரோ... நீராடி விட்டு வருகிறேன் என்று சொல்லி மெல்ல நடை போட்டு போகிறார். எப்போது வருவார் என்றும் தெரியாது. 

இந்த நிலையில் சாஸ்த்திரம் அறிந்த பெரியோர்களிடம் ஆலோசனை கேட்கிறான் அம்பரிசன். 


கவலை படாதே. ஒரு உத்தரணி தீர்த்தம் எடுத்து அதில் ஒரு துளசியை போட்டு அருந்தி விடு. அப்படி செய்தால் சாப்பிட்ட மாதிரியும் கணக்கு, சாப்பிடாத மாத்திரம் கணக்கு.

உடனே அம்பரிசன் பாரணை செய்ய அமர்கிறான். எதிரே  உத்தரணி . அதில் துளசியை போடுவதற்கும், துர்வாசர் வருவதற்கும் சரியாக இருந்தது. வந்ததே கோவம் துர்வாசருக்கு. 

அம்பரிசா... என்ன செய்கிறாய்?

சுவாமி... துளசி பாரணை. 

என்னோடு சேர்ந்து பாரணை செய்வதாக வாக்களித்தாய் அல்லவா. இப்போது நீ தனியாக செய்கிறாய் என்றால், என்னை அவமரியாதை செய்வதாகதானே அர்த்தம். 

இல்லை சுவாமி...பாரணை செய்ய நேரம் முடிந்து விட போகிறதே என்ற அச்சத்தில் சிறு தவறு செய்துவிட்டேன். நீங்கள் என்னை பொருத்தருள வேண்டும். 

முடியாது. நீ மன்னன் என்கிற ஆணவம். அந்த துணிச்சலில் தான் என்னை அவமரியாதை செய்திருக்கிறாய். உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்றவர் தன் ஜடா முடியில் இருந்து ஒரு முடியை புடுங்கி போட்டார்.  udan அதில் இருந்து ஒரு ராச்ஷச உருவம் வெளிப்பட்டது. 

ஏய் பூதமே... என்னை அவமரியாதை செய்த அம்பரிசனை ஒழித்து விட்டு வா என்று பூதத்திற்கு கட்டளை இட்டார்.  பூதம் அம்பரிசனை தாக்க தயாரானது.


அது வரை பொறுமை காத்த சுதர்சனத்திற்கு பொத்துக்கொண்டு வந்தது கோவம். துர்வாசருக்கு என்ன துணிச்சல். நாராயண பக்தனை கொள்ள துணிந்து விட்டாரா? என்று ஆவேசம் கொண்டு பூதத்தின் மேல் பாய்ந்தது.  பூதம் முடிந்தது. பிறகென்ன... திரும்பி துர்வாசரை  பார்த்து.

சுதர்சனத்தின் ஆவேச உருவத்தையும், உறுமலையும் பார்த்த துர்வாசர் தலை தப்பினால் போதும் என்று ஓடினார்... ஓடினார்... ஓடினார்...!




விடவில்லை சுதர்சனம்,  விரட்டியது. கடலுக்குள் போய் ஒளிந்தார்.

நீரை எல்லாம் உருஞ்சியது சுதர்சனம். கடல் வற்றியது. அங்கிருந்து  தப்பி,  மேரு மலைக்குள் புகுந்து கொண்டார். விட்டதா சுதர்சனம். மலையை இரண்டாக பிளந்தது. 


அய்யய்யோ இந்த படுபாவி சுதர்சனம் நம்மை பந்தாடாமல் விடாது போலிருக்கிறதே...என்று பிரம்மலோகத்திற்கு ஓடி போய் பிரம்மாவிடம் அபயம் கேட்டார். 

அதற்க்கு பிரம்மா... என்னது சுதர்சனமா? துர்வாசரே... நீர் முதலில் இவ்விடத்தை காலி செய்யுங்கள். இங்கே நுழைந்தால் சத்திய லோகத்தையே உண்டு இல்லை என்று செய்து விடும். 

போங்கள்  என்று அறிவுரை கூறினார் பிரம்மா. பிரம்மாவும் கைவிரித்த நிலையில் அடுத்து கைலாயத்திற்கு ஓடினார்.  தாங்கள்தான் என்னை காக்க வேண்டும்.

முனிவரே... சுதர்சனத்தை பற்றி என்ன நினைத்தீர். நாராயணன் பதர்களுக்கு நாளும் துணை இருப்பது சுதர்சனம். தெரிந்தோ, தெரியாமலோ நாராயண பக்தர்களுக்கு ஒருவர் தீங்கிழைத்தால் சுதர்சனம் சும்மா விடாது. 

அதுவும் அம்பரிசன் நாராயண பக்தர்களில் சிறந்தவன். முதன்மையானவன். அவனிடமே நீர் வம்பு செய்திருக்கிறிர்கள். என்னால் ஒன்றும் செய்யமுடியாது.  விஷுவிடமே போங்கள். அவர் தான் உங்களை காக்க வேண்டும்.

கடைசியில் விஷ்ணுவிடம் சரணடைந்தார் துர்வாசர். 

துர்வாசரே.. சுதர்சனம் இப்போது என் கட்டுப்பாட்டில் இல்லை. அம்பரிசனை பாதுகாக்க அவனிடமே விட்டுவிட்டேன். அதனால் அம்பரிசன் சொன்னால் மட்டுமே சுதர்சனம் கேட்கும். 


இறுதியில் அம்பரிசனிடம் ஓடி வருகிறார். அம்பரிஷா என் பிழையை பொருத்தருள். உன் பக்தியின் மகிமை தெரியாமல் உன்னை சோதித்து விட்டேன். 

இந்த சுதர்சனம் ஈரேழு பதினாலு லோகத்திற்கு ஓடியும் விடாமல் துரத்துகிறது. அதை கட்டு படுத்து என்று கெஞ்சுகிறார். 

அம்பரிசன் கண் மூடி சுதர்சனத்தை துதிக்க, கோவம் தணிந்து தன இருப்பிடம் போகிறது சுதர்சனம்.

இது சதர்சனத்தை பற்றிய ஒரு புராண கதை. 



ஸ்ரீ சதர்சனத்தை  வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங் களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும்.



மஹா சுதர்ஸன மஹாமந்திரம்

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!

மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர

ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக்ஷோபனஹராய 
ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா

சுதர்சனம் என்று சொல்லக்கூடிய சக்கரத்தாழ்வாரை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். பில்லி சூனியம் விலகும். 

மன பயம் அகலும், வீண் குழப்பங்கள் தீரும். எதிரிகள், எதிர்ப்புகள் ஒழியும். நீங்களும் சுதர்சனத்தை வழிபாட்டு வளமோடு வாழ வாழ்த்துகிறேன்.

1 comment:

  1. சிறப்பான பகிர்வுக்கு நன்றி சார்...
    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...