நான் ரொம்ப ஆரோக்கியமா இருக்கேன். சின்ன சின்னதா தலைவலி, ஜலதோஷம் இப்படி வரும். மற்றபடி பெரிய வியாதி எதுவும் இல்லை என்பவர் வரிசையில் இருப்பவரா நீங்கள்.
வாழ்த்துக்கள். நீங்க புண்ணியம் செய்தவர்.
அட ஏங்க..வாரா வாரம் வைத்தியரை சந்திக்க வேண்டி இருக்கு. விருந்துக்கு வச்சு இருந்த பணம் மருந்துக்குத்தான் செலவாகுது. எப்ப பாரு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கிட்டே இருக்கு என்பவரா நீங்கள். அவசியம் இதை படியுங்கள்.
சரி.... மணி, மந்திர ஔஷதம் என்றால் விளக்கம் தெரியுமா?
தெரிந்தால் சந்தோசம். தெரியாவிட்டால் நானே விளக்கம் சொல்றேன்.
அதாவது ஆரோக்கிய குறை என்பது ஒவ்வொரு மனிதனையும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் சந்திக்க நேர்கிறது.
அந்த ஆரோக்கிய குறை என்பது தானும் அழுது, தன்னை சார்ந்தவர்களையும் அழ வைக்காமல் இருந்தால் போதும். விருந்துக்கு போனாலும் மருந்தும் கையில் கொண்டு போகணும் என்ற நிலை இல்லாமல் இருந்தால் கூட போதும். கடவுளுக்கு நன்றி சொல்லலாம்.
ஆனால் சிலருக்கு இங்கேதான் பிரச்சனையே வரும்.
இரண்டாவது நிலையில் இருப்பவர்கள் மட்டும் அல்ல, முதல் நிலையில் இருப்பவர்களுக்கும் இது முக்கியமான கட்டுரை.
அறியாமை இருளில் இந்த உலகமே மூழ்கி கிடந்த போது அறிவின் உச்சத்தில் நின்று யோசித்தது நம் முன்னோர்கள். விஞ்ஞானமா, மெய்ஞானமா, மருத்துவமா, மாந்திரிகமா எதுவாக இருந்தாலும் அதற்க்கு முன்னோடி என்றால் நம் முன்னோர்கள் என்பது வரலாறு.
அவர்கள் தான் மணி மந்திர ஔஷதம் என்றார்கள்.
அது என்ன மணி மந்திர ஔஷதம்?
மணி என்றால் நவமணிகள். அல்லது நவ ரத்தினங்கள். வெள்ளம் வரும் முன் அணை கட்டு என்பார்கள். நல்ல ஆரோக்கியமாக இருக்கும் போதே நவரத்தினகளை அணிந்து கொள்ள வேண்டும்.
ஏன்?
நவரத்தினங்கள் என்பது நம் நரம்பு மண்டலத்தை தூண்டி விடும் ஆற்றல் மிக்கது.
ரத்தை ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளும் திறன் மிக்கது. நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நம் உடலில் இரண்டு வகையான அணுக்கள் இருக்கிறது. ஓன்று ரத்த சிகப்பணு. இது ஒரு நிறமி பொருள். ரத்தம் உறைநிலை அடையாமல் பாதுகாக்கிறது.
அடுத்து ரத்த வெள்ளை அணு. இது ஒரு சிப்பாய் மாதிரி நம் உடலில் செயல் படுகிறது.
நம் உடலில் ஏதாவது நோய் தோற்று வைரஸ் கிருமிகள் நுழைந்து விட்டால் போதும், உடலின் பல பாகத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் உடனே ஒரு இடத்திற்கு வந்து விடும்.
அந்த கணமே செயற்குழு, பொதுக்குழு எல்லாம் கூடும். என்ன நம்ம ஏரியாவில் புதுசா ஒருத்தன் வந்திருக்கானே பாத்திங்களா....என்று ஒருவரை ஒருவர் கேட்டு கொள்ளும்.
சரி... ஆழம் தெரியாம காலை வைத்த அவனை சும்மா விடக்கூடாது தகுந்த பாடம் கற்பிக்கனும் என்று தன்னுடைய பழைய பைல்களை எல்லாம் தேடி பார்க்கும்.
எதற்கு?
இதே மாதிரி நபர் முன்பே வந்திருக்கிறாரா என்பதை கண்டு பிடிக்கத்தான். ஒரு வேலை வந்திருந்தால், அப்போது என்ன மாதிரி உத்தியை கையாண்டு இந்த வைரஸ்களை முறியடித்திருக்கிறது என்று கண்டு பிடித்து அதே பாணியில் எதிர்த்து போராடும்.
வந்தது புது வைரஸ் என்றால் புது உத்திகளை கையாளும். ஒருவேளை வந்த வைரஸ் பலசாலியாக இருந்தால் வெள்ளை அணுக்கள் தோற்று சரணாகதி அடைந்து விடும். அப்போதுதான் நமக்கு நோயின் தாக்கம் தெரிய ஆரம்பிக்கும்.
இரத்தினகல் அணியும் போது இந்த வெள்ளை அணுக்கள் எபோதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதனால் ஆரோக்கியம் பாதுக்காப்படும்.
அடுத்து மனம் தெளிவாக இருக்கும். மற்றபடி அதிஷ்டம் என்பது அவரவர் ஜாதகம் சார்ந்த விஷயம்.
அந்தவகையில் வியாதி வந்தாலும் சரி... வருவதற்கு முன்பும் சரி ரத்தினங்கள் அணிவது நல்லது. அதனால் தான் நவரத்தினகளை அணிந்தார்கள்.
மந்திரம் என்றார்கள்.
அதாவது அதர்வண வேதத்தில் நல்லதும் கெட்டதும்மாக ஆயிரக்கணக்கான மந்திரங்கள் இருக்கிறது.
இதில் தெய்வ வசிய மந்திரங்களை தவிர்த்து, நோய் தீர்க்கும் மந்திரங்கள் அதிகம். அதனால் தான் நம் தாத்தா காலத்தில் எல்லாம் பால் மந்திரிப்பது, விபூதி மந்திரிப்பது என்று நோய்க்கு புது வழியை கண்டு பிடித்தார்கள்.
ஆனால் இப்போது உண்மையான மந்திரங்கள் இல்லை. தெரிந்தவர்களும் அடுத்தவர்களுக்கு சொல்லி தருவதில்லை.
ஒரு சின்ன உதாரணம்.....எங்கள் ஊரில் பூக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு பல் வலி மந்திரம் தெரியும்.
ஒருவருக்கு பல் வலி என்று அவரிடம் போனால், உடனே வெற்றிலை பாக்கு வாங்கி வர சொல்லுவார்.
அந்த வெற்றிலை பாக்கை கையில் பிடித்து கொண்டு ஏதோ மந்திரம் சொல்லுவார். பின் இந்த வெற்றிலை பாக்கை போட்டு துப்புங்கோ என்பார். அவ்வளவுதான் பல் வலி நின்று விடும். மறுபடியும் வராது.
அவர் உண்மையில் வயதானவர். இதுவரை அந்த மந்திரத்தை யாரிடமும் சொல்லி கொடுத்தது இல்லை. நான் அவரிடம் அணுகி அந்த மந்திரம் பற்றி கேட்டேன். அதற்க்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
இது என்னோட போகட்டும். என் பிள்ளைகளுக்கு கூட இதை சொல்லி தரப்போவதில்லை.
இப்படித்தான் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மந்திரமும், வைத்தியமும் மறைந்து விட்டது.
இப்போது அந்த பல் வலி மந்திரம் அவரோடு போக போகிறது. என்ன கொடுமை? சரி போகட்டும். நோய் வந்தால் மந்திரத்தால் நீக்க வேண்டும் என்றார்கள்.
இதிலும் கட்டு பட வில்லையா? கடைசியாகத்தான் ஔஷதம் என்றாகள். அதாவது மருந்து. நவரத்தினக்கல் விலை அதிகமாக இருக்கிறதே, எங்களை போன்ற வருமானம் குறைவானவர்கள் எப்படி வாங்கி அணிவது?
கவலை வேண்டாம். இரத்தினக்கல் அணிய முடியா விட்டாலும், உபஇரத்தினக்கல் அணியலாம்.
உபரத்தினங்கள் என்பது நூற்றுக்கு மேற்பட்டு இருந்தாலும், டைகர்ஸ் ஐ, ஸ்படிகம். சிட்ரின், அமேதிஸ்ட், ரோஸ்குவாட்ஸ், ஒப்பல், முன்ஸ்டோன் என்று முக்கியமான உபரத்தின கற்கள் இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை அணிந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் ஆரம்ப நிலையில் பாதுக்காகபடும்.
படங்கள் கீழே
சிட்ரின் |
மூன்ஸ்டோன் |
ஒப்பல் |
டைகர்ஸ் ஐ |
அம்திஸ்ட் |
No comments:
Post a Comment