Follow by Email

Tuesday, 3 January 2012

NEW YEAR PALANGAL... SIMMAM / நியூ இயர் பலன்கள் - சிம்மம்

NEW YEAR PALANGAL... SIMMAM  / 
நியூ இயர் பலன்கள் - சிம்மம்

நீங்க சிம்ம ராசிக்காரரா.... சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் சூடானவர்கள். வில்லில் இருந்து விடுபடும் அம்பு மாதிரி, உங்கள் சொல்லின் வேகமும் அதிகம். சும்மா சரவெடி கொளித்தின மாதிரி அதிரும்முள்ள.

முன் வைத்த காலை பின் வைப்பதில்லை. முயற்சி என்பது முதல் வினாடி முதல், கடைசி வினாடி வரை தொடரும். எவருக்கும் தலை வணக்காதவர்கள். தலைவானாகும் தகுதி படைத்தவர்கள். 

வெற்றியை தொட என்ன விலை கொடுக்கவும் தயாரானவர்கள். பின் யோகமாம். முன் புத்தி, பின் புத்தி ரெண்டும் உண்டு.  என்றாலும் பெரிய மனிதர் தோரணை, அதிகார வர்கத்தினர் தொடர்பு, தன் காரியத்தை சாதித்து கொள்ள தடைகளை தாண்டும் தைரியம், இதெல்லம் உங்களுக்கே .... உங்களுக்கே சொந்தம்.

முப்பது விழுக்காடு முன்கோபமும், எழுபது விழுக்காடு பின் கோபமும் உண்டு. வலிய வம்புக்கு போறதில்லை, வந்தா விடுறதும் இல்லை.  சிம்ம ராசி அல்லவா. சிம்மம்னா என்ன? சிங்கம்.

வெற்றி ஒன்றே குறிக்கோள். எப்பாடு பட்டாவது, என்ன விலை கொடுத்தாவது எட்ட வேண்டிய இலக்கை, எட்ட முயல்வீர்கள்.

தலைமை பீடம்தான் உங்கள் தங்க கனவு.  சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறுவது உங்களுக்கு கை வந்த கலை.

இந்த வருடம் எப்படி இருக்கும்?

சுள்ளுன்னு புறப்பட்ட சூரிய ஒளி மாதிரி, நல்ல காலம் உங்களை நாடி வந்து கொண்டிருக்கிறது.  நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் வட்டியும் முதலுமாய். பலன் பெறக்கூடிய காலம்.  கசந்த காலம்  போயே போச்சு. வசந்த காலம் வந்து விட்டது.


தொழில் ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடிய காலம்.  தொழிலை இழந்தவர்களும், தொழில் இல்லாதவர்களும், மீண்டும் ஒரு ரவுண்ட்  காத்திருக்கிறது.  உத்தியோகத்திலும் நல்ல மாற்றங்கள் காத்திருக்கிறது.

இனி நீங்கள் திட்டமிட்ட பணிகள் எல்லாம், பட்டு பட்டுன்னு முடியும். உங்கள் பெயரும் செல்வாக்கும் பல மடங்கு உயரும். எதை இழ்ந்தின்களோ, எங்கே இழந்த்தின்களோ அதை அங்கேயே பெற முடியும்.

செய்ய வேண்டிய சீர்திருத்தம், ஆற்ற வேண்டிய கடமைகள் எதுவும் விதிவிலக்கில்லை.  வைரத்தை வைரத்தால் அறுக்கணும் என்பதை தெரிந்து வைத்து இருப்பதால், உங்கள் வாழ்க்கை பாதை சுகமாக இருக்கும்.

குரு பெயர்ச்சி என்பது உங்களுக்கு ஒரு பின்ண்டய்வுதான். வேலையில், தொழிலில் ஒரு நெருக்கடி தோன்றும் என்பதும் உண்மைதான்.  என்றாலும் கர்ம வினை கிரகமான சனி பகவான் நல்ல நிலையில் இருப்பதால், எந்த பாதிப்பும் இருக்காது.

எதிரிகளை பந்தாடி, எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி வீரராக வலம் வர முடியும்.  செய்ய வேண்டிய பணிகள், ஆற்ற வேண்டிய கடமைகள், சீர்திருத்தம்  செய்யவேண்டிய தொழில்த்துறை மேம்பாடு, அந்நிய சத்திகளின் குறுக்கிட்டை குறைக்க துணிவான முயற்சி என எல்ல நிலைகளும் சிறப்பாக இருக்கும்.

இந்த ஆண்டில் குடும்ப சந்தோசம் வழக்கம் போலவே இருக்கும்.  உற்றார் உறவினர் நெருக்கம் அதிகரிக்கும்.  திருமணம், மறுமணம் போன்ற சுப காரியங்கள் தடைஇன்றி நடக்கும்.

சொந்த வீட்டு பாக்கியம் வந்து சேரும். பிள்ளைகளால் பெருமை, பெற்றோருக்கு  செய்யவேண்டிய உதவி முதலியவையை தடையின்றி செய்யல்லாம்.  கடல் கடந்த பயணம் காத்திருக்கிறது. வேற என்ன வேண்டும்.




Post a Comment