- சிவன் கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்து கொடி மரத்திற்கு அருகில் நமஸ்காரம் செய்து விட்டு, பின் ஆலயத்தின் உள்ளே சிறிது நேரம் அமர்ந்துதான் வரவேண்டும்.
- அதனால் நம்மை பின் தொடர்ந்து வரும் சிவகணங்கள் கோவிலில் தங்கி விடும் பிரச்சனை இல்லை.
- விஷ்ணு ஆலயத்திருக்கு இந்த விதி பொருந்தாது. பொதுவாக விஷ்ணு ஆலயத்திற்கு சென்று பிரகாரம் சுற்றும் போது, மகாலட்சுமி நம் கூடவே வருவதாக சொல்வார்கள்.
- அதனால் கொடி மரத்தில் விழுந்து நமஸ்கரித்த உடனே வீட்டிற்கு வந்து விட வேண்டும். இல்லா விட்டால் நம்மோடு வந்த மகாலட்சுமி ஆலயத்திலேயே தங்கி விடுமாம்
- கர்ப்பமான பெண்ணும் சரி, அவள் கணவனும் சரி, எந்த வேண்டுதலாக இருந்தாலும் குழந்தை பிறக்கும் வரை சிதறு தேங்காய் உடைக்க வேண்டாம்.
- மாலையில் பெண்கள் விளக்கேற்றி வைத்த பின் வெளியே செல்லக் கூடாது.
- எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அஷ்டமி, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை ஆகிய திதிகளில் குளிக்க கூடாது.
- உங்கள் ஜாதகத்தில் பாதக திசை நடந்தால், அல்லது ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி நடந்தால் அல்லது குரு 1 , 3 , 4 , 6 , 8 , 10 , 12 ம் இடங்களில் சஞ்சாரம் செய்தால், கிழக்கு நோக்கி தீப முகம் இருந்தால் கிரக தோஷங்களும், சகல பீடைகளும் விலகும்.
- அளவுக்கு அதிகமான கடன் தொல்லையா, வாரம் தோறும் வைத்தியர் வீட்டுக்கு போகிற மாதிரி நோய் தொல்லையா, பங்காளி பகையா எதுவாக இருந்தாலும் மேற்கு நோக்கிதீபம் ஏற்றினால் மாறும்.
- வாலிபம் கடந்தும் வரன் அமைய வில்லையா? வந்ததெல்லாம் கொள்ளும் வங்காள விரிகுடா மாதிரி எவ்வளவு வருமானம் வந்தாலும் சேமிக்க முடிய வில்லையா, வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் விலகும்.
- தெற்கு திசை நோக்கி தீப முகம் இருந்தால் தடைகள், தாமதங்கள், அபசகுனங்கள் , அமங்கலங்கள் ஏற்படும்.
- மனதில் அமைதி இல்லையா, எப்ப பார்த்தாலும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கா, ஏகாதசி விரதம் இருங்கோ சரியாகும்.
- தொட்டது எல்லாம் தோல்வியா? எந்த காரியத்தை தொட்டாலும் இழுபறியா. தடை, தாமதம், தள்ளிவைப்பு, அலைகழிப்பு என்று அல்லல் படுகிறிர்களா. மாத சிவராத்திரி விரதம் இருங்கோ மாறும்.
- எதிர் பாராத விபத்து, எதிரிகளால் ஆபத்து, நோய் தொல்லைகள் இவற்றில் இருந்து விடுபட சங்கடகர சதுர்த்தி விரதம் இருந்தால் சரியாகும்.
- வேலை வாய்ப்பில் பிரச்சசனை, வேலை இல்லாத பிரச்சனை என அன்றாடம் அல்லல் படுகிறவர்கள் சதுர்த்தி விரதம் இருந்தால் விலகும்.
- பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை கோளாறுகள் நீங்கவும், தீராத வியாதிகள் தீரவும் கிருத்திகை விரதம் இருப்பது சிறப்பு.
- வீட்டில் ஆஞ்சநேயர் படம் அல்லது சிலை இருந்தால் பூமாலைகள் பயன்படுத்த வேண்டாம். துளசி மாலை மட்டும் அணிவித்து வழிபட்டால் நல்லது.
- கோவிலின் பிரதான கதவுகள் முடி இருக்கும் போது, வெளியில் நின்று வணங்க கூடாது.
- கோவிலில் அணைந்த விளக்கை ஏற்றலாம், ஏற்றிய விளக்கை அணைக்க கூடாது.
வீட்டில் சிலை வைத்து வழிபடும் பழக்கம் இருந்தால், ஒரே சாமி சிலையை ஒன்றுக்கு மேல் வைத்து வழிபடகூடாது.
No comments:
Post a Comment