நீங்கள் ஆண்கள் சமூகமா?
இளவட்ட பெண்களால் ஒதுக்க பட்டவரா?
பொறுக்கி, பொறம்போக்கு, என்றெல்லாம் பட்டங்கள் வாங்கியவரா?
அவன் கண்ணுல கொள்ளிகட்டையை வைக்க என்று பெண்கள் கரித்து கொட்டுகிறார்களா?
அவங்க மட்டும் கையை தூக்கி என் பக்கம் வாங்க ராசா.
அதா.... பொண்ணுங்க மனசை கடலுக்கு ஒப்பிடுவாங்க. நான் சொல்றேன்... பொண்ணுங்க மனசு கடலும் இல்லை, கத்திரிக்காயும் இல்லை. அது அழகான நந்தவனம்.
உங்க பார்வையில் கண்ணியம் இருந்தால்?
உங்க கிட்டே ஒரு கட்டுப்பாடு இருந்தால்?
எதையும் சீர்தூக்கி பார்க்கிற தொலை நோக்கு பார்வை இருந்தால், முன்னே சொன்ன எந்த பட்டமும், பதக்கமும், கேடையமும் உங்களுக்கு வந்து இருக்காது. சரியா?
உங்களை பார்த்தா.... அட... இப்படியும் ஒரு மனிதனான்னு, வாயை பிளக்கனும்னா, மேல வந்து விழாத குறையா சிரிச்சு சிரிச்சு பேசணும்னா....நான் சொல்லும் வேத மந்திரத்தை உடனே பாராயணம் செய்யுங்கோ. அமுல் படுத்தி பாருங்கோ.
- மந்திரம் 1
பொண்ணு யூத்தா, ஒல்டோ, பிகரு சூப்பரோ, சுமாரோ, அதுங்களுக்கு பிடிக்காத விஷயம் என்ன தெரியுமா?
அருவெருக்கத்தக்க பார்வை.
ஆளை பார்த்ததும் ஆ........ன்னு, பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்த்த மாதிரி பார்கிறததை நிறுத்தனும். அதோட முக்கியமா.... குறிப்பிட்ட இடத்தை குறி வச்சு பார்கிறதை அறவே நிறுத்தனும்.
இப்படியான பார்வையாளர்களை கண்டாலே பெண்களுக்கு அலர்சி தான். அப்பறம் நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட போறக்களையானு ஹைதர் அலி காலத்து வசனம் எல்லாம் வரத்தான் செய்யும்.
ஒரு உண்மையை சொல்லவா.... 16 வயசுல தாவணி போடுற பொண்ணுங்க, 20 வயசுல புடவை கட்டுது. அவங்க எல்லாம் உங்கள மாதிரி ஆளுங்களோட பார்வை பிடிக்காம, சுடிதாருக்கு மாறிட்டாங்களாம். இது ஒரு சர்வே ரிபோர்ட்.
இன்னொரு முக்கியமான விஷயம். ஊசி இடம் கொடுத்தாதான் நுலு நுழையும்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா?
கை இல்லாம ஜாக்கெட் போடுறது, ஜன்னல், கதவு, வராண்டா வச்சு ட்ரெஸ் பண்றது எல்லாம், சபல ஆண்களுக்கு ஒரு வாய்ப்பை தருது. மாத்திகிறது நல்லது. இது பெண்களுக்கு சொல்றது புரியுதுங்களா மேடம்.
- மந்திரம் 2
சந்துல சிந்து பாடுறதுன்னு கேள்வி பட்டதுண்டா?
அதாவது....உரசுறது, தட்டுறது, இடிப்பது போன்ற சில்மிசங்களில் ஈடுபட்டால் பொண்ணுங்களுக்கு பிடிக்காது.
பஸுல, ரயில்ல, தியேட்டர்ல, திருவிழான்னு கூட்ட நெரிசலில, சந்தர்ப்பம் கிடைச்சா சங்கு ஊதுறது.
இது மாறனும், அல்லது மாத்திக்கணும். இல்லேனா கேட்ட பெயரே பட்ட பெயரா மாறிடும். பொம்பளை பொறுக்கின்னு ஒரு பொதுவான பெயர் இருக்கு தெரியுமா?
- மந்திரம் 3
பார்ட்டி... எப்படிங்க.... ரொம்ப ஜாலி டைப்பா. கலகலன்னு சிரிச்சு பேசுமா. அது அவங்க குணமா இருக்கும். அவங்க கிட்டே நைசா நுலு விடுறது தப்பு.
உங்க பக்கத்துக்கு வீட்டு பொண்ணா.... உங்கள் கூட ஒண்ணா வேலை பாக்குதா? எதார்த்தமா தனியா பார்த்தால், கூர்ந்து பார்க்கிறது, அவங்க தற்செயலா திரும்பி பார்த்தால், பக்கத்துல போய் நிக்கிறது, வழிந்து பேசுறது, சிரிப்பது, சிக்னல் கொடுப்பது, பச்சை பச்சையா பேசுறது நல்லதே இல்லை.
அதுக்காக பேசவே கூடாதுன்னு சொல்லவே இல்லை. பேச்சில் ஒரு மரியாதை, பார்வையில் ஒரு கண்ணியம், பழகுவதில் ஒரு பண்பு என்பதெல்லாம் பெண்கள் பீனல் கோர்ட்டுல ஒரு சட்டம். மீறினா அவபெயர்தான்.
- மந்திரம் 4
சிலருக்கு செல் மேனியா நோய் பிடிச்சு இருக்கும். அது என்ன நோய்னு கேட்கிறிங்களா....? பொண்ணுங்க துணி விலகும்போது தூரத்துல நின்னு படம் பிடிக்கிறது.
தெரிந்த பொண்ணுகளிடம் அட.... தப்பா நம்பர் அடிச்சுட்டேன்னு பேச ஆரம்பிச்சு ஜொள்ளு விடுறது. இந்த டைப் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.
இவன் ரொம்ப நல்லவன்னு பொண்ணுங்க நம்பனும். அவங்களா பேசாம பேசாதிங்க. நாகரிகமா பேசுங்க. நல்ல பெயர் எடுங்க. அப்பறம் என்ன...... உங்க காட்டுல மழைதான்.
மந்திரம் 5
உங்க கிட்டே அந்தரங்கமா பேசுற பெண்ணுங்க கிட்டே கவனமா இருங்க. முகத்துக்கு நேரா நல்ல பேசிட்டு, போன பிறகு தப்பா பேசாதிங்க. தெரிஞ்சா உங்க முகத்திலேயே முழிக்காது கவனம்.
No comments:
Post a Comment