Follow by Email

Sunday, 29 January 2012

தாமத திருமணம் ஏன்? LATE MARRIAGE !

புனிதா...

பொண்ணுக்கு பொண்ணு ஆசைபடுற மாதிரின்னு  சொல்வாங்களே.... அந்த மாதிரி அழகு ராச்சசி.  பாரதிராஜா பார்த்தால் படத்தில் நடிக்கிறாயா என்று நிச்சயம் கேட்பார். 

அந்த சிகப்பு நிறமும்,  எடுப்பான நாசியும், பேசும் கண்களும், இடுப்புவரை நீண்ட கூந்தளும், இழுத்து போர்த்திய சேலையுமாய் வீதியில் இறங்கி நடந்தால்,  அடடா.... என்னத்தை சொல்ல,  அந்த மகாலக்ஷ்மியே நடந்து போற மாதிரி இருக்கும்.  

ஆனால் அது ஒரு காலம்.  பத்து வருடங்களுக்கு முந்தைய நிலை.  இப்போது வயது 32 .  அதோ அந்த ஜன்னலின் ஓரம் இன்னொரு கம்பியோ என்று சந்தேகிக்கிற மாதிரி நின்று கொண்டிருகிறாள். 
இப்போதெல்லாம் வெளியே செல்லவே விரும்புவது இல்லை.  காரணம் இது தான்.  பார்பவர்கள் அத்தனை பேருமே கேட்கிறார்கள்.  இன்னும் கல்யாணம் செய்யலையா?

இந்த கேள்வி புனிதாவை மட்டும் அல்ல,  அவள் அப்பா சாம்பசிவத்தையும் புரட்டி போட்டு விட்டது.  

உனக்கென்னப்பா... கிளி மாதிரிஒரு பெண்ணை பெத்து வச்சுருக்கே.  கட்டி கொடுக்கிறேன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதும்,  பத்து காசு செலவில்லாமல் கொத்திகிட்டு போய்டுவாங்க. 

இப்படிதான் புனிதாவை பார்த்தவர்கள் சாம்பசிவத்திடம் சொன்னார்கள்.  ஆனால் அதை நிஜமாக்க முயன்ற பொது தான் நிலவரம் புரிந்தது.  அது அத்தனை எளிதல்ல என்று.

இத்தனைக்கும் சீர்செனத்திருக்கும் குறை வைக்க போறது இல்லை.  வரதச்சணையா 50 பவுன் போட ரெடி.  படிப்பு குறைன்னு சொல்ல வழில்லை பொண்ணு பட்டதாரி.  

பொண்ணு ஒழுக்கம் கெட்டவளா... நாகரிகம் அற்றவளா... அதுவும் இல்லை.  இருந்தும் என்ன குறை.  

அதுதான் விதி. இத்தனை இருந்தும் கல்யாண கதவு மட்டும் திறந்தபாடில்லை.  ஏதாவது அல்ப காரணத்தால் நெருங்கி வந்த திருமணம் நின்று போய்விடும்.   

அவள் சிரிப்பை மறந்தே சில காலம் ஆகிவிட்டது.  சாம்பசிவம் கூட எப்போது தூங்குகிறார், எப்போது விழிக்கிறார் என்று தெரியாது.  

யுர்க்காதா பின்னே.  ஒரே பொண்ணு.  பந்தல் போட்டு பத்திரிகை அடிச்சு ஊர் மெச்ச கல்யாணம் செய்து பார்க்கணும்னு ஆசை.  அதுக்கு நந்தி மாதிரி குறுக்கே நிற்பது,  ஜோதிடர்கள் வார்த்தையில் சொன்னால் தோஷம்.

அன்று காலை சாம்பசிவம் பரபரப்பாக காணப்பட்டார்.  குளித்து முடித்து புத்தாடை தரித்து, வாசலுக்கும் உள்ளேயுமாய் உலாத்தி கொண்டிருக்கும் போதே புனிதாவிற்கு புரிந்து போனது,  இன்று யாரோ வரப்போகிறார்கள்.  இன்னொரு பெண் பார்க்கும் படலமோ.

மனதில் எழும்பிய கேள்வியை சுமந்த படி, அப்பா சாம்பசிவத்தின் அருகில் சென்றாள்.  வாய் திறந்து கேட்க வில்லை என்றாலும், மகளின் மனதை படித்த மாதிரி சொன்னார்.....  அதா....  நாகபட்டினத்துல இருந்து ஒரு ஜோசியர் வர்றார்.

ரொம்ப பேமஸான ஆள்.  உன் ஜாதகத்தை காட்டி பரிகாரம் எதுவும் செய்யணுமான்னு கேட்கத்தான் வர சொன்னேன்.  அவர் சொல்லி முடிக்கும் போதே வாசலில் நிழலாடியது.  ஜோதிடர் நின்று கொண்டிருந்தார்.  

வாங்க... வாங்க... வழிய வரவழைத்து கொண்ட புன்னகையோடு கை கூப்பினார் சாம்பசிவம்.  பதிலுக்கு வணங்கியபடி ஜோதிடர் உள்ளே வந்து அமர்ந்தார்.  இதுதான் நம்ம பாப்பாவா..?  புனிதாவை பார்த்தபடி ஜோதிடர் கேட்டார்.

ம்.... என்பது போல் சாம்பசிவம் தலையாட்ட... புனிதா மொவ்னமாக உள்ளே சென்றாள்.  சாம்பசிவம் ஜாதகத்தை எடுத்து அவர் கையில் கொடுத்தார்.  ஜாதகத்தை பிரித்து கிரக நிலைகலில் பார்வையை ஓட்டியவர் பின் சொன்னார்.

என் வயசுக்கு 1000  கணக்கான ஜாதகம் பார்த்திருக்கேன்.  அந்த அனுபவத்தில் சொல்றேன்... ஒரு சில கிரக நிலைகள் இருந்தாலே காலம் கடந்து தான் திருமணம் நடக்கும்.  எப்படின்னு சொல்லவா.

ஒரு ஜாதகத்தில் லக்னம்  என்று ஓன்று இருக்கும் இல்லையா.... அதை ஓன்று என்று வைத்து கொண்டால் அதில் இருந்து கேந்திரம் என்று சொல்ல கூடிய 4 , 7 , 10 ம் இடங்களிலோ,  அல்லது திரிகோணம் என்று சொல்ல கூடிய 5 , 9 ம் இடங்களிலோ 5 க்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால், அவர்களுக்கு திருமணம் அமைவது இல்லை. 

காலம் முழுவதும் கன்னியாகவோ அல்லது பிரம்மசாரியாகவோ இருந்து விடுகிறார்கள்.

ஏன்... என்ன காரணம்... ? அப்பாவியாக கேட்டார் சாம்பசிவம். 

ஒன்றை கொடுத்து ஒன்றை கெடுக்கும் கிரகங்கள்,  யோகநிலை, சமுதாயத்தில் மதிப்பு, பொருளாதார ஏற்றம் இவைகளை தாரளமாக தரும்.  ஆனால் தாம்பத்திய உறவு நிலைக்கு அந்த ஜாதகரை தயார்படுத்தாது.

ஒரு வேலை திருமணம் நடந்தாலும் முப்பதுக்கு முன்னே என்பது குதிரை கொம்பு. 

சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3 , 7 , 10 ம் இடத்தை பார்பார்.  அந்த வகையில்  லக்னாதிபதியாக வருகிற கிரகத்தையும், சந்திரனையும் சனி பகவான் பார்த்தால்,  அந்த அமைப்பை உடைய ஜாதகருக்கு திருமணம் நடப்பதில்லை. 

ஏன்?

பொதுவாக ஜாதகத்தில் சனி சந்திரன் தொடர்பு ஏற்பட்டாலே புனர்பூ தோசம் என்று பெயர்.   அது வாலிபத்தில் திருமணத்தை நடத்த விடாது.  நெருங்கி வந்த மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு விலகி போய்விடும். 

அடுத்து...

களத்திர பாவம் என்று சொல்லக்கூடிய 7 ம் இடத்தில் சந்திரன்,  சுக்கிரன், சனி, செவ்வாய் இணைந்து இருந்தால் மனபந்தால் ஏறும் அமைப்புக்கு மறுப்பு வந்துவிடும்.

ஒரு ஜாதகத்தில் 5 ம் அதிபதியாக வரக்கூடிய கிரகம்,  ராகு அல்லது கேதுவுடன்  சேர்ந்தால் திருமணம் நடப்பதில்லை,  அல்லது குழந்தைகள் பிறப்பது இல்லை. 

நான்கு கிரகங்கள் பத்தாம் பாவத்தில் இருந்தாலும்,  நாற்பது  வயதுக்கு முன் திருமணம் நடக்காது.   இப்படி பல கிரக நிலைகள் இருக்கிறது.  ஜோதிடர் சொல்லி முடித்து விட்டு சாம்பசிவத்தை ஏறிட்டு பார்த்தார். 

பிரமை பிடித்த மாதிரி இருந்த சாம்பசிவத்தை ஜோதிடரின் குரல் தான் இயல்பு  நிலைக்கு திருப்பியது.

பிள்ளைவாள் ... இந்த பொண்ணோட ஜாதகத்திலே கிரக பாதிப்புகள் இருக்கிறது என்பது உண்மைதான். அதுக்காக கவலை பட வேண்டாம்.  காயம் சின்னதா இருக்கும் போதே மருந்து போடணும் .  நம்மில் பலர்.. காயம் புரை ஓடிய பிறகுதான் அதை பற்றியே கவலை படுறது.

போகட்டும்... நான் பரிகாரம் சொல்றேன்.  செய்யுங்கோ.  எல்லாம் நல்லபடியா நடக்கும்.

என்ன ஜோசியரே செய்யணும்?

பார்வதி சுயம்வர ஹோமம் செய்யணும்.  செய்தால் கல்யாணம் நடக்கும்.  உங்களுக்கு தெரிந்த ஐயரை கேட்டு,  ரொம்ப சுத்தமா, நியதிமாறாமல் ஹோமம் செய்தால் திருமணம் நடக்கும்.  செய்யுங்கோ. 

ஜோதிடர் எழுந்து விடை பெற நன்றியோடு நமஸ்கரித்தார்  சாம்பசிவம்.

இனி கல்யாணம் நடந்துடும் ... நம்புவோம். 

No comments:

Post a Comment