Follow by Email

Wednesday, 4 January 2012

நியூ இயர் கன்னி ராசி பலன்கள் 2012

     

நீங்கள் கன்னி ராசியா? கண்டதை படிக்கிற பண்டிதன் நீங்கள்தான். உங்கள் அறிவும், ஆற்றலும் போற்றுதலுக்கு உரியது.  வெற்று கோஷத்தையும், வீர வசனத்தையும் நம்பாமல் கார்ரியத்தில் கண் வைக்கும் காரியவாதிகள்.

பெண்ணாசையும், பொன்னாசையும்  இருந்தாலும் எதிலும் மாட்டிக் கொள்ளாதவர்கள்.  எல்லாம் தெரிந்தவர்கள். வெறும் பள்ளி படிப்போடு நின்று போனாலும், புள்ளி வைத்து பேச ஆரம்பித்தால் வெல்வது கடினம்.

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் என்ற கண்ணதாசன் வரிகளுக்கு பொருத்தமானவர்கள்.  கலகலன்னு பேசுறதும் நீங்கதான்.  தொட்டால் சிணுங்கி மாதிரி கவுந்தடிச்சு படுத்துகிறதும் நீங்கதான்.

சொந்த முயற்சி அதிகம்.  பழமைகளை விரும்பினாலும் புதுமை வாதிகள்.  கடான உடல் வாகு.  கருப்பாக இருந்ததாலும் கலையான முகம்.  வாலிபம் கடந்தாலும் வயது தெரியாது.  என்றும் 16  மார்கண்டேயன் பரம்பரை.

கொஞ்சம் பொதுநலவாதி.  கொஞ்சம் சுயநலவாதி.  ஆனால் மற்றவர்கள் உங்களை செல்பிஷ் என்று சொல்வதுண்டு.  யாரு என்ன சொன்ன என்ன... கடமையில் கண்ணாக இருப்பீங்க.

சரி... தற்போதைய நிலவரம் என்ன?

விழுந்தவன் எழுந்தால் வெக்கத்துக்கு அஞ்சி சிரிப்பானாம். அந்த கதைதான் போங்க.  தொட்ட காரியம் அனைத்தில்லும் ஒரு தொனதொனப்பு.  முயன்று பார்த்தும் முடியாமல் தோல்வி முகம்.  எத்தனை முயற்ச்சிகள். அத்தனையும் கிணற்றில் போட்ட கல் மாதிரி இருக்கிறது.
நடப்பது என்னவோ நல்லது மாதிரி, நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும் முடிவு என்னவோ கோணல்.  வெற்றி கோட்டை தொடும் முன்பே கிழே விழுந்த மாதிரி இருக்கிறது.

நடக்க கூடாதது எதுவும் நடந்து விடுமோ என்கிற பயம் பதட்டம் ஒரு புறம்,  சங்கடங்கள் அதிகமாகி சந்தி சிரித்து விடுமோ என்கிற பயம் ஒரு புறம்.  கடவுள் வரலைன்னாலும் பரவில்லை, கடவுள் மாதிரி யாராவது நம்மை கை பிடித்து தூக்கிவிட மாட்டார்களா என்று எல்லாம் யோசிக்கிறிங்க.

வாழ்க்கை என்பதே வண்டி சக்கரம் தான். ஏற்றமும் மாற்றமும் மாறி மாறி வரும்.  என்றாலும் ஏழரை சனி காலத்தில் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து விட்டிங்க.

பொதுவா புண்ணியவான் சனி வந்தாலே கண்ணியத்துக்கு வந்து விடு முதல் ஆப்பு.  பேரு பெத்த பேரா, ஊருக்குள்ளே உலாவுற ஆளுக்கு எதிராதான் முதல் கணையை முடுக்கி விடுவார்.

அப்புறம் என்ன?

வில்லங்கம் வீடு தேடி வரும். மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி மனசு அலைபாயும்.  உதவுரண்டா பேர்வழினு யாருக்காவது ஜாமீன் கையெழுத்து போடபோய், தலை குனிவு தேடி வரும்.

குடும்பத்தில் குழப்பம் வரும். கூட இருப்பவர் பகை வரும். கடன் தொல்லை வரும். கண்டவரால் அவமானம் வரும்.  இப்போது அதுதான் நடக்குது.

புது வருடம் எப்படி இருக்கும்?

குரு பெயர்ச்சி வரை குழப்பம் நீடித்தாலும், அதன் பிறகு தடைகள் இல்லை.  எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியலையே,  பெரிய பதவில் இருந்து கொண்டு கடைநிலை உழியரிடம் கடன் வாங்குகிறோமே என்ற மனக்குறை நீங்கி விடும்.

அதிஷ்டத்தை மட்டும் இல்லாமல் ஆனந்தமும் பெற முடியும். உங்கள் மனதின் அடித்தளத்தில் நீங்காத மனக்குறை இருக்கிறதே அதுவும் மறைந்துவிடும்.

தொழில், பதவி, பூர்வீக சொத்துக்கள் முலமாக பணம் வரும். வெட்டி அலைச்சல் வீண் யோசனை என்பது இருக்காது.  குடும்ப குழப்பம் குறைந்து விடும்.  குறைந்து போயிருந்த குடும்ப செல்வாக்கு மறுபடியும் ஏறும்.

வாழ்வதும் வீழ்வதும் ஒரு முறைதான், அது யாருக்காக என்று தெரிந்தால் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து விடும்.

இதுவரை அவரை விதைத்தால் துவரை முளைத்தது.  இனி அவரையே முளைக்கும்.  திருமண முயற்ச்சிகள் கை கொடுக்கும்.  கடல் தாண்டி போகலாம்.

சகோதர சகோதரி ஆதரவு அதிகரிக்கும்.  பிதிர் விழியில் இருந்த பிணக்குகள் மறையும்.  அரசியல் வாதிகளுக்கு அதிஷ்ட காற்று திரும்பி விட்டது.  தலைமை உங்களை தனி கவனத்தோடு திரும்பி பார்க்கும்.  தடாலடி, அதிரடி என்று வேறு மார்க்கம் வேண்டாம்.

புது வீடு பாக்கியம், வாகன யோகம், பிள்ளை இல்லா தம்பதியர்க்கு பிள்ளை பாக்கியம், தன வசதி பெருக்கம் என்று உங்கள் பக்கம் அதிஷ்ட காற்று வந்து விட்டது.

நல்லதே நடக்கும்.
No comments:

Post a Comment