Follow by Email

Friday, 13 January 2012

FACE BOOK DANGER / பேஸ்புக் டேஞ்சர்பேஸ்புக் 

எங்கோ ஒரு நாட்டின் மூளையில் இருந்தவர்களை உலகமெங்கும், உயர்த்தி பிடிக்க வந்த உன்னத சாதனம். நட்பிற்கு இலக்கணமாய் வந்தது. 

நாடு, மொழி, இனம், சாதி, வயது, அந்தஸ்த்து என்கிற அனைத்து நிலைகளையும் கடந்து,  ஒருவரோடு ஒருவர் நட்பை பழக,  தங்கள் கருத்துக்களை வெளியிட,  தங்களுக்கு பிடித்தமான விடியோ, மற்றும் புகைப்படங்களை பரிமாறிக்கொள்ள வசதி செய்து கொடுத்து பேஸ்புக்.

இன்று பல லட்ச்சகணக்கானவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை தங்கள் மனதுக்கு இனியவர்களுடன் பேசி பழகுகிறார்கள் என்பது உண்மையே. 

ஆனால் எந்த ஒரு நல்ல செயல் இருந்தாலும்  அதற்கு பின்னால் சில புல்லுருவிகளும் இருப்பார்கள் என்பதுதான் உண்மை.  அந்த வியாதி பேஸ்புக்கிலும் தொற்றி கொண்டு விட்டது. 

உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும் ஆபாச வக்கிரங்களை அவிழ்த்துவிட சிலர் பேஸ் புக்கை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் என்பதும் உண்மை. 

இதில் புனை பெயர், போலியான போட்டோ, அல்லது முகம் இல்லாத முகவரிகள், பூ, பழம், மிருகம் என்று பல்வேறு படத்தை தங்கள் அடையாளமாக சூட்டிகொண்டவர்கள்,  இன்று பேஸ்புக்கில் தொற்று வியாதி மாதிரி தொடர்ந்து வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. 

எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே இந்த கட்டுரை எழுத தூண்டியது. 

பார்ப்பதற்கு படு சாந்தமான பெண்மணி போட்டோ.  பார்த்த உடனே கை எடுத்து கும்பிட தோணும்னு சொல்வாங்களே,  அந்த மாதிரி ஒரு கலையான முகம்.   

கடந்த வாரம் தான் பேஸ்புக்கில் தன் தன் கணக்கை துவக்கி இருக்கிறார். இந்த பூனையும் பால்  குடிக்குமா என்று போலிருந்த அவரிடம் இருந்து நண்பராக அழைப்பு வந்தது.  நான் உறுதி செய்தேன். 

அடுத்த இரண்டு நாள் நான் லேப்டாப்பை தொட சந்தர்ப்பமே கிடைக்க வில்லை.  வெளியூர் பயணம். வீட்டிற்கு வந்ததும்,  என் பேஸ் புக்கை  திறந்து என் பதிவிற்கு சென்றேன். 

எனக்கு அந்த பெண்மணி ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் விடியோ பதிவை அனுப்பி இருந்தார்.  அதிர்ந்து போனேன்.  எனக்கு பின்னால் ஏன் குழந்தைகள் வேறு நின்று கொண்டிருந்தார்கள்.  அவசரமாய் மூடினேன். 

உண்மையில் யாரும் பக்கத்தில் இருந்தால் திறந்து பார்க்கவே அச்சம் கொள்கிற அளவிற்கு இருக்கிறது நிலைமை. 

இன்னும் சிலர்.. பதிவுகளை ஆராய்ந்து கொண்டிருந்தால்,  HI என்று சாட்டிங் செய்ய அழைப்பு வரும்.  ஆர்வ கோளாறில் அந்த பக்கம் போனால்,  நாகரிகமாக பேச துவங்கியவர்களிடம் இருந்து ஆபாச வர்ணனைகள் வரும்.

இதில் அதிகம் பாதிக்க படுவது பெண்கள்தான். இந்த நோக்கத்திற்காக பதிவுகளில் உலா வருகிறவர்கள் பற்றியோ, அவர்களுக்கு துணை போகிறவர்களை பற்றியோ நமக்கு கவலை இல்லை.  ஆனால் அப்பாவிகள் பாதிக்கபடுவதுதான் அநியாயம். 

சரி... இந்த மாதிரியான அனாமத்து பேர்வழிகளை தவிர்ப்பது எப்படி?  பேஸ் புக்கில் நல்ல நண்பர்களை தேர்ந்து எடுப்பது எப்படி என்று பாப்போம். 

  •   நீங்கள் பேஸ் புக்கில் புது கணக்கு துவங்க போகிறிர்களா.... துவங்கியதும் நண்பர்கள் அழைப்புக்கு,  உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான நண்பர்களிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு விடுக்க சொல்லுங்கள்.  அல்லது உங்கள் நண்பரின் பெயர் மற்றும் ஊரை SEARCH பகுதியில் தேடி அவர்களுக்கு அழைப்பு விடுப்பது.   அப்படி செய்யும் போது அறிமுகமான நண்பர்களே இருப்பார்கள். 

  • ஒருவரை நண்பராக்க முயற்ச்சிக்கும் முன்,  அவரின் கடந்த கால  பதிவுகளை போய் பாருங்கள்.  அதில் என்ன மாதிரியான செய்திகள், படங்கள், விடியோ தொகுப்புகள் வைத்து இருக்கிறார் என்று தெரியும்.   அதை பார்த்தாலே அவரின் குணாதிசயம் என்ன என்பது புரியும்.

  • முகம் காட்டாதவர்கள், பழம், பூ, படம் வைத்து இருப்பவர்கள், அல்லது ஒரு குழந்தையின் படத்தை வைத்து இருப்பவர்களை நண்பராக்க முயற்ச்சிக்க வேண்டாம்.  அழைப்பு விடுத்தாலும் தவிர்த்து விடுங்கள்.   எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும் என்று தெரியாது.  

  • அரை குறை ஆடையுடன் போஸ் கொடுப்பவர்களை நண்பர்களாக்க வேண்டாம்.  ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் பலான படமோ, படுக்கை அறை காட்சிகளோ உங்களுக்கு வரவே செய்யும். 

  • 1000 நண்பர்களை சேர்த்து அபூர்வ சிந்தாமணி என்று பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக கண்ணில் பட்டவர்களை எல்லாம் நண்பர்களாக ADD செய்ய வேண்டாம்.  

  • சரி.... தெரியாத்தனமா ஒருத்தரை நண்பராக்கி விட்டோம். தொடர்ந்து எழவெடுத்த படமா வருது.  எப்படிங்க நிறுத்துறது. 
  • சம்மந்த பட்டவரின் PROFILE படத்தை கிளிக் செய்தால் அவர் பக்கம் திறக்கும். அவர் நண்பர்களின் வரிசைக்கு கிழே REPORT / BLOCK  என்று வரும்.  கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஒப்பன் ஆகும். 

  • அதில் BLOCK  சம்மந்த பட்டவரின் பெயர் அங்கே இருக்கும். அதில் BLOCK   ய்  கிளிக் செய்து CONTINUE என்பதை கிளிக் செய்தால் மற்றொரு பாக்ஸ் ஒப்பன் ஆகும்.  அதை OK செய்தால் போதும்.  உங்களுக்கு அவர் அனுப்பும் எந்த செய்தியும் வராது. 

  • இன்று பேஸ் புக்கில் ரகசியமாக பரிமாறிக்கொள்ளும் ஒரு வார்த்தை FAB . அதாவது பிரண்ட்ஸ் அண்ட் பெனிபிட் என்று அர்த்தம். 

இன்னும் விளக்கமாக சொல்வதானால் அர்த்தம் வேறு விதமாக இருக்கும். 

அதாவது... நீங்கள் யார்... உங்களுக்கு காதலன் இருக்காரா... கல்யாணம் ஆகிவிட்டதா, குழந்தைகள் இருக்கிறார்களா என்பது எனக்கு கவலை இல்லை.  

அதை போல் எனக்கு காதலி இருக்காளா... மனைவி இருக்காளா... அதை பற்றியும் கவலை இல்லை.  

உங்கள் வாழ்க்கையில் நான் குறுக்கிட மாட்டேன்.  அதைபோல் என் வாழ்க்கையில்  நீங்கள் குறிக்கிட கூடாது.   ஆனால் உங்களுக்கு நான் தேவையா சரி வா... சந்தோசத்தை கொடு.  எனக்கு நீ தேவை வா... என்னுடன் சந்தோசமாய் இரு என்று ஜென்டில்மேன் அக்கிரிமென்ட் போட்டு கொள்வதுதான்.

பச்சையாக சொன்னால் செக்ஸ் மட்டும் தான்.

இது போன்ற மேஜெசுகள் வந்தால் எச்சரிக்கையாகி விடுங்கள்.

வாழ்க நல்ல நண்பர்கள்.No comments:

Post a Comment