திருமணம்..........!
ஆயிரம் காலத்து பயிறாம். அது இரண்டு இதயங்கள் ஒன்றிணையும் ஒப்பந்த விழா. இதற்கு பின் தான், இனிய இல்லறம் பிறக்க வேண்டும். தம்பதிகளுக்கு இடையே சந்தோசம் திளைக்க வேண்டும்.
வம்சம் தழைக்க வாரிசுகள் பிறக்க வேண்டும். அது வாழையடி வாழையாக வளர வேண்டும். இன்னார் பையன், இன்னாரது குடும்பம், இன்னாரது பரம்பரை என்றெல்லாம் பெயரெடுக்க, இருமனம் கலக்கும் திருமணம் தான் முதல் படி.
இந்த திருமணத்தை நடத்திக்கொள்ள ஒரு ஆணும், பெண்ணும் அவசியம். அதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை என்பது முற்போக்கு சிந்தனை. காரணம்... கால நேரம் ஒத்துழைக்க வேண்டும்.
ஜாதகத்தில் திருமண திசை நடப்பில் இருக்க வேண்டும். இல்லை என்றால் திருமண யோகம் வராது.
சரிங்க... திருமண திசைதான் நடப்பில் இருக்கிறது. பொண்ணு மாப்பிள்ளை ரெடி. திருமணம் செய்து விடலாமா?
முடியாது.... குருபலம் எப்படி என்பதையும் பார்க்க வேண்டும். அதை பற்றி வேறு ஒரு தலைப்பில் பார்ப்போம். சனி பகவானின் சஞ்சார நிலைகள் எப்படி என்பதுதான் முக்கிய கேள்வி.
பொதுவா.... ஜோதிடர்கள் குத்து மதிப்பா போடுற குண்டு ஒன்னு இருக்கு. தம்பி.... உங்களுக்கு ஏழரைசனி நடக்குது.
ஏழரைசனின்னா என்ன? பெரிய செலவு காத்திருக்கிறது என்று அர்த்தம். கையில மடில இருக்கிறதை வச்சு கல்யாணம் பண்ணு. கடனை உடனை வாங்கி நிலத்தை வாங்கு. வீடு கட்டு.
அப்படி செய்துட்டா.... சனிபகவான் ஒன்னும் செய்யமாட்டார். பொழைச்சு போன்னு விட்டுடுவார். அதை விட்டுட்டு காசை சேர்க்கிறேன் பேர்வழின்னு பேங்குல பணத்தை போட்டா, விருந்துக்கு வச்சு இருக்கிற பணத்தை மருந்துக்கு செலவழிக்க வைப்பார். கண்ட கண்ட செலவுதான் வந்து சேரும் சரியா.
சரிங்க..... இந்த வாதம் சரியா?
சரிதான். ஆனால் எல்லோருக்கும் பொருந்தாது.
எப்படி?
ஏழரைசனி வாழும் காலத்தில மூன்று முறை வரும். நம் தாத்தா காலத்தில நாலு முறை வந்துச்சு. அதனால 100 வயசு தாண்டியும் வாழ்ந்தாங்க. இப்போ நாம சாபிடுற சாப்பாடு, சுற்றுசூழல் சீர்கேடு எல்லாம் சேர்ந்து மூன்று சுற்றோடு முடிவுக்கு வருகிறது ஆயுள்.
முதல் சுற்று மங்கு சனி, இரண்டாவது சுற்று பொங்கு சனி, முன்றாவது சுற்று மரணசனி.
இருக்கட்டும்.... ஏழரைசனி காலத்தில் திருமணம் செய்யலாமா?
எப்போதுமே..... அல்லல் படுத்தி ஆனந்த படுகிற சனி. கேள்வி கேட்டவரை பதில் சொல்ல வைக்கிற சனி. அடுத்தவங்க கல்யாணத்தை பார்த்து ஆனந்த பட வைக்கிற சனி, மாப்பிள்ளையாக மணபந்தளில் அமர வேண்டியவரை, மாப்பிள்ளை தோழனாக நிற்க வைக்கும் சனி, கல்யாண யோகத்தை தருவாரா?
தருவார் என்பது உண்மைதான். அது சுவைக்குமா என்பதுதான் கேள்வி.
ஏழரைசனி என்பது எப்படியும் 20 வயதுக்குள் வந்துவிடும். முதல் சுற்றில் திருமண யோகம் என்பது பெண்களுக்கு சாத்தியமாகலாம். ஏழரை சனி துவக்கமான விரைய சனி நடக்கும் பொது, திருமணம் செய்யக்கூடாது. அடுத்த பெயர்ச்சியான ஜென்ம சனி காலத்தில் திருமணம் செய்யலாம்.
அது மட்டும் அல்ல. எந்த சுற்று சனியாக இருந்தாலும், சனி பகவான் ராசிக்கு 12 இல் விரைய சனியாக இருக்கும் போது, திருமணம் மட்டும் செய்யக்கூடாது.
செய்தால்?
திருமண வாழ்வில் தீராத குழப்பம் வரும். கணவன் மனைவி ஒற்றுமை குறையும். இருவரில் ஒருவருக்கு நோய் பீடித்து கொள்ளும். குழந்தை பாக்கியம் இல்லாமல் போகலாம். மாங்கல்ய பலம் குறையலாம். மொத்தத்தில் திருமண வாழ்க்கையில் சந்தோசம் நீங்கி, சந்தேகம் அதிகரிக்கும்.
அதனால்... விரைய சனி நடக்கும் காலத்தில் திருமணம் செய்யக்கூடாது.
No comments:
Post a Comment