ads

Sunday, 17 March 2013

மாந்தி S / O சனீஸ்வரன்.




மாந்தி S / O சனீஸ்வரன்.

இது ஒரு உபகிரகம்தான். இருந்தாலும் குத்தூசி போடுறதுல பத்து பாவ கிரகத்திற்கு சமம். இவாளும் பாவ கிரக வரிசையில் வருவதால் 3,6,11 ஐ தவிர எங்கிருந்தாலும் இடைஞ்சல், யாரோடு சேர்ந்தாலும் குடைச்சல். 

இது பெரும்பாலும் ஜோதிடர்கள் மத்தியில் பிரபலம் இல்லாத கிரகம். ஆனால் நல்லா போகும் வாழ்க்கையை செல்லாகாசாக்குவதில் கில்லாடி. 

உம்மருக்கு  என்ன கொடுத்து வச்ச மகராஜான்னு பலனை சொல்லிக்கொண்டிருந்தால், ஜாதகம் பார்க்க வந்த அன்பர் தங்கத்தை தவற விட்ட பொண்ணு தரையை பார்த்து நடப்பதுபோல், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பார். 

காரணம் ... முள்ளு மேல உட்கார்ந்த மாதிரி ஆள் சொல்ல முடியாத துயரத்தில் இருக்கும் பொது என்னத்தை சொல்ல.

ஒன்பது கிரகத்திற்கு இருப்பது போல் இதற்கென தசாபுத்திகள் கிடையாது. ஒரு பாவத்திற்கு அதிபதியாக வருகிறமாதிரி ஆட்சி வீடுகள் கிடையாது. ஆனால் இருக்கும் இடத்தை வைத்து, சேரும் கிரகத்தை வைத்து பலனை தரும்.


ஆனால் நடைமுறையில் மாந்திக்கும் ஆட்சிவீடுகள் பற்றிய குறிப்புகள் உண்டு.

என்னவோ?

சொல்றேன். கும்பம் இருக்குல்ல கும்பம் அது ஆட்சி வீடு. தனுசு உச்ச வீடு. மிதுனம் நீச்ச வீடு.

உண்மையாகவா?

அப்பா சொத்துல பிள்ளைக்கு பங்குண்டு என்ற அடிப்படையில் சனியோட பிள்ளைக்கு கும்பம் ஆட்ச்சி வீடா வந்துச்சோ என்னமோ.உறுதிபடுத்த முடியாது.


அதனால் ஆட்சி வீடுகள் உண்டு என்பதை உறுதிபடுத்த முடியாததால் ஆரம்ப நிலையிலேயே இதை தள்ளுபடி செய்கிறேன்.

பழைய கிரந்த்தங்களை தேடி தேடி அலசி பார்த்தால் ஒரு சில இடங்களில் மட்டுமே மாந்தி பற்றிய குறிப்பு தென்படுகிறது. அதுவும் முழுமையாக இல்லை.

யோசித்து பார்த்தால் ஒரு விஷயம் புலனாகிறது. வழிப்பாட்டு தளங்களில் நவகிரங்களுக்கு இடமளித்து வணங்குதலுக்கு உரியதாய் ஏற்றுக் கொண்ட நம் முன்னோர்கள்.  உப கிரகங்களை அந்த வரிசையில் சேர்க்க வில்லை.

ஏன்? பெரிய அளவில் மாற்றம் எதையும் தந்து விடாது என்ற கோணத்திலா?

ஒரு வகையில் உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிலும், கேரளா, ஆந்திரா, இலங்கையிலும் கூட மாந்தியை குறிப்பிடாத ஜாதக குறிப்புகள் இல்லை.


பொதுவாக மாந்தியை கொண்டு அறியப்படும் பலன்கள் பின் வருவன.

திடீர் கண்டங்கள், தீர்க்க முடியாத வியாதிகள், மரணம் இவற்றை அறிய முடியும்.


அம்சத்தில் மாந்தி இருக்கும் ராசியை, பிறப்பு ராசி கட்டத்தில் இருப்பதாக வைத்து கொண்டு, அதற்கு திரிகோண ராசியில் கோச்சார சனி வரும் காலம் ஜாதகருக்கு கண்டங்கள் வரத்துவங்கும்.

அந்த ஜாதகருக்கு எட்டுக்குடையவன் திசை நடந்தால் திடீர் கண்டம், விபத்து, நஷ்டம், திருட்டு, வழிப்பறி, தீ விபத்து, போலிஸ் கேஸ் இதில் ஏதாவது ஓன்று நடப்பில் வரும்.

மாந்தி இருக்கும் ராசிக்கு திரிகோணத்தில் கோச்சார சனி வரும் காலம் ஆறுக்குடையவன் திசை நடப்பில் இருந்தால் தீராத வியாதி, சண்டை, பற்களுக்கு இடையே நாக்கு இருப்பது போல், பிரச்சனைகளுக்கு இடையே வாழும் சூழல், அவமானங்கள் அரங்கேறும்.

மாரக திசை நடப்பில் இருந்தால் மாரகம் செய்யும் கடமை மாந்திக்கே உண்டு.





Saturday, 16 March 2013

பரதேசி திரை விமர்சனம்


வெள்ளையர்கள் ஆட்சியில் நம்மக்கள் விடுதலைக்காக போராடியது பற்றி நமக்கு தெரியும். அந்த காலகட்டத்தில் அன்றாட வாழ்க்கை நடத்தவே போராடிய நம் பாட்டன்கள் பற்றியும், அவர்கள் அறியாமையை, ஏழ்மையை பயன்படுத்தி எப்படி எல்லாம் மனித வள சுரண்டல்கள் நடந்தன என்பதை பற்றியும் கண்ணீர் கலந்த காவியத்தை படம் பிடித்து காட்டிருக்கிறார் பாலா.

1939 ல் சாலூர் என்ற தமிழக கிராமம்தான் கதைகளத்தின் துவக்கம். முன்பகுதியில் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் மனோநிலை, வாழ்க்கை சூழல், கலாச்சாரம், பழக்க வழக்கங்களை பற்றி தெளிந்த நீரோடையாய் பேசுகிறது படம். 

மிக எதார்த்தமான வசனங்கள்.  

அந்த கிராமத்தில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் முரசு அடித்து அறிவிக்கும் பாத்திரம் தான் அதர்வாவுக்கு. நான் தான் ராசா வந்திருக்கேன் என்று  கிராமத்து மக்களிடம் தன்னை அறிமுகபடுத்தி கொண்டாலும், ஓட்டுபொறுக்கி என்றுதான் அதர்வாவை அழைக்கிறது அந்த கிராமமே. 

ஊர் பெண்களிடம் வயது வித்தியாசம் இல்லாமல் முறை வைத்து அழைப்பதும், எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா வேலைகளையும் செய்து கொடுத்து விட்டு அந்த கிராமத்து மக்கள் தரும் அரிசியையும், பழைய சோற்றையும் கூலியாக  பெரும் பரதேசி வேடத்தில் வாழ்ந்திருக்கிறார் அதர்வா.

அதே கிராமத்தில் அங்கம்மாவாக வரும் துடுக்கு பெண் வேடம் வேதிகாவுக்கு.  அதர்வாவுக்கும், வேதியாவுக்கும் இடையில் காதல் வருவதும், வெளியில் தெரிந்து,  வீட்டுக்கு வீடு பொருக்கி திங்கிற நாயிக்கு என் பொண்ணு கேட்குதா என்று வேதிகாவின் அம்மா பஞ்சாயத்து கூட்டுவதும் எதார்த்தத்தின் உச்சம்.

அதர்வாவின் பாட்டியாக வந்திருக்கும் கூன கிழவி என்னமாய் பிரமாதபடுத்துகிறார்.  வேதிகாவுடன் காதல் வந்ததும், கனவு கண்டு புலம்பும் அதர்வாவிடம், ’எனக்கு கூட நீங்க ரெண்டு பேரும் பிச்சை எடுக்குற மாதிரி கனவு வந்தது’ என்று சொல்லுகிற காட்சியில் தியேட்டரே அதிருது. 

தன்ஷிகாவுக்கு நல்ல அழுத்தமான பாத்திரம். ஒரு கை குழந்தைக்கு தாயாக வரும் விதவை பெண் வேடம்.  அடாடா.

ஏழை மக்களின் வாழ்க்கையில் விளையாட விதி கங்காணி உருவத்தில் வருகிறது.

இங்கன கிடந்து கஞ்சிக்கு படாத பாடு படாதிங்க.  வேலைக்கு தக்கன கூலி. தங்குறதுக்கு வீடு, கூதலுக்கு கம்பளி, கறிச்சோறு, ஞாயிற்று கிழமையானா விடுப்பு என்று ஆசை வார்த்தை காட்டுவதும், அதை நம்பி அந்த கிராமத்து அப்பாவி மக்கள் பஞ்சம் பிழைக்க போவதும், அங்கு நடக்கப் போகும் விபரீதத்தை  வைரமுத்து ரத்தத்தால் எழுதியிருக்கிறார். 

செங்காடே ......... என துவங்கும் பாடலில் கங்காணி பேச்ச கேட்டு சனம் போகுதே, நண்டுகளை கூட்டிக்கொண்டு நரி போகுதே என்ற வரிகள் அங்கு நடக்க போகும் விபரீதத்தை சுளீரென்று உணர்த்துகிறது.  

48 நாட்களாய் நடந்து டீ எஸ்டேட்டுக்கு போகும் அந்த பயணம்,  அதனைத் தொடர்ந்து வரும் அடுத்தடுத்த ஒவ்வொரு நிமிடமும் நம்மை உலுக்கும் காட்சிகள்.

சரியான உணவு இல்லாமல், தங்குமிட வசதிகள் இல்லாமல் சங்கு ஊதினா வேலைக்கு புறப்பட்டு போகும் அடிமைகளாக நடத்தப்படும் கொடுமை கல் நெஞ்சையும் கரைய செய்யும்.

ஒரு வருட ஒப்பந்தம் முடிந்துவிட்ட நிலையில், ஊருக்கு போகலாம் என்று அப்பாவி  ஜனங்கள் சம்பளப்பணத்திற்காக கையேந்தி நிற்பதும், சட்டி பானை வாங்கியது,  கம்பளி,  சாப்பாட்டு செலவு, மருத்துவ செலவு, மந்திரவாதி தாயத்து கட்டியது    என பணத்தை எடுத்துக் கொண்டு, மிச்ச  கடனைத் தீர்க்க இன்னும் நீ பல வருஷம் வேலை செய்யணும்’னு அப்பாவி அடிமைகளிடம் கங்காணி செய்கிற சூழ்ச்சி கொடுமையின் உச்ச கட்டம்.

யாருமே எதிர்பாராத கிளைமாக்ஸ்.  சத்தியமா சொல்றேன் எனக்கு அழுகையே வந்துட்டு. 

பாடலில் மட்டும் அல்ல, பின்னணி இசையிலும் மிரட்டுகிறார் ஜி வி பிரகாஷ். 

வெள்ளைக்காரனை தவிர வெள்ளை சட்டை போட்டது கங்காணி தான் படத்தில். 

கிராமத்து பாத்திரங்களாக வரும் அத்தனை முகங்களும் இதுவரை தமிழ் சினிமா அறியாத முகங்கள். ஆனாலும்   வெகுளியான பாத்திரத்தில் வெளுத்து வாங்குகிறார்கள். 

கொத்தடிமைகள் வாழ்வில் விளக்கேற்ற வந்தவர்கள் போல வரும் டாக்டரும் அவர் மனைவியும் எப்படி சத்தமில்லாமல் மதம் மாற்ற முயல்கிறார்கள் என்பதை தெளிவாய் சொல்கிறது படம்.

இந்த படத்தில்  சில குறைகள் இருக்கிறது. ஆனால் அதை பற்றி எழுத மனம் இல்லை. 

வெல்டன் பாலா. தமிழ் சினிமாவை  உலக தரத்திற்கு கொண்டு சென்றதற்கு. விருது நிச்சயம். 

Monday, 11 March 2013

காயத்திரி மந்திர மகிமை!!



விஷ்வாமித்திரர் ஆரம்பத்தில் கௌசிகன் என்னும் பெயருடைய அரசனாக இருந்தார். 

அப்போது வசிட்ட முனிவருடைய தவ வலிமையை கண்டு தானும் அவ்வாறு பிரம்மா ரிஷியாக வேண்டும் என்று மனதில் எண்ணம் கொண்டார். 

தனக்கென்று பெரிய நாடு, அணி, தேர், குதிரை ஆட்பெரும் படை போன்றவைகளை கொண்ட கோமகன் கௌசிகன். 

அத்தகைய மாமன்னன்  கட்டிற்க்குள் காவி கட்டி கமண்டலம் ஏந்தி, ருத்ராச்ச மணிமாலைகள் அணிந்து, அரச போகமும் அரண்மனை வாழ்வும் துறந்து தவம் மேற்கொண்டார் என்பது வரலாறு.

பிரம்ம பலத்தை பெறுவதற்காக கடுமையான தவத்தை மேற்கொண்டார். அதுசமயம் சுரியவம்சத்து அரசனான திரிசங்கு மனித உடலுடன் சொர்க்கலோகம் போக வேண்டும் என்று வசிட்ட முனிவரிடம்  வேண்டினான். 

வசிட்ட முனிவரோ அது முடியாது என்று மறுத்தார். அந்தனை கேள்வியுற்ற விஷ்வாமித்திரர் தனது தவ வலிமையால் திரிசங்குவை தேவலோகம் நோக்கி அனுப்பினார்.

திரிசங்கு மனித உடலுடன் மேலே வருவதை கண்ட இந்திரன் தனது தவ வல்லமையால் திரிசங்குவை கிழே போக செய்தான். கெளசிகருக்கு கோவம் வந்தது.  திரிசங்குவை அந்தரத்தில் நிற்க வைத்தார். 

சிரிசங்குவிற்கு தனியாக சொர்க்கம் அமைத்து கொடுத்தார். அதுதான் திரிசங்கு சொர்க்கமானது.

கௌசிகர் மீண்டும் தவத்தை தொடங்கினார். அவரது உக்கிரமான தவத்தை கண்டு தேவர்களும், அருந்தவசியர்களும், அஞ்சினர். முடிவில் வசிட்டர் விசுவாமித்திரரை அமைதிபடுத்த பிரம்மரிஷி விசுவாமித்திரரே என்று நேருக்கு நேர் அழைத்தார்.

இப்பேற்பட்ட தவவலிமையுள்ள விசுவாமித்திர மகரிஷியால் நமக்கு கிடைத்த ஞான பொக்கிஷம்தான் காயத்திரி மஹா மந்திரம்.


அஸ்திரங்களுக்குள்  வலிமைபெற்றது பிரம்மாஸ்திரம். அந்த பிரம்மாஸ்திரம் என்னும் இணையற்ற அஸ்திரங்களுக்கு காயத்ரி மந்திரமே ஆதாரம். இதனை விஷுவாமித்திரரே பிரம் தேஜோபலம் என்று  வாய் மொழிந்தார்.

இந்த காயத்திரி மந்திரத்தின் அதிதேவதை ஸ்ரீ காயத்திரி தேவி. அவரவர் சக்தி நேரம் இவைகளுக்கு ஏற்றவாறு 1008-108-28 முறை என்ற எண்ணிக்கையில் காயத்ரி மத்திரத்தை ஜெபம் செய்யலாம்.

மனதுக்குலேயே ஒரு நிலை உணர்வோடு மனனம் செய்வது நல்லது.

மனதுக்குள் ஆழ்நிலை தியானத்தில் முணுமுணுத்து ஜெபிப்பது நல்லது.

பிறர் காதில் விழும்படி உயர்ந்த குரலில் உச்சரித்து ஜெபிப்பதும்.

உயர்ந்த குரலில் ஜெபிப்பதை விட முணுமுணுத்து ஜெபிப்பதை விட மனதை ஒரு நிலைப்படுத்தி ஜெபிப்பது ஆயிரம் மடங்கு உயர்ந்தது.


ஓம் பூர்புவஸ்ஸுவ
தத்ஸவதுர்வரெனியம் 
பர்க்கோ தேவஸ்ய தீமஹி 
தியோ யோ ந 
பிரசோதயாத் 

Friday, 8 March 2013

வீரசிங்கம்-நேதாஜி -2


வீரசிங்கம்-நேதாஜி  முதல் பகுதி 

புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஒருவருக்கு மட்டுமே இடம் இருக்கிறது என்று ஜப்பான் அதிகாரிகள் கூறினார்கள். விமானத்தில் போவதா வேண்டாமா என்று ஒரு கணம் நேதாஜி யோசித்தார். 

சைகோன் நகரை எந்த நிமிடமும் பிரிட்டீஷ் அமெரிக்க படைகள் கைப்பற்றலாம்  என்ற நிலை இருந்தது. அந்த படைகளிடம் சிக்கினால் தன்னை கைது செய்வது நிச்சயம். 

போர் கைதியாக பிடிபடுவதை நேதாஜி விரும்பவில்லை. எனவே விமானத்தில் போவதே மேல் என நினைத்தார். விமானத்தில் ஏறி அமர்ந்தார்.

கடைசி நேரத்தில் இன்னொருவர் வரலாம் என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள்.

எனவே ஹபீப் -வுர் - ரகிமான், நேதாஜி அருகில் போய் அமர்ந்தார். விமான நிலையத்தில் கூடி இருந்தவர்களி பார்த்து நேதாஜி ஜெய் ஹிந்த் என்று கூறினார். விமானம் புறப்பட்டது.

அது எந்த இடத்திற்கு போகிறது என்று அறிவிக்க படவில்லை. நேதாஜியின் கடைசி விமான பயணம் அதுவாக இருக்கும் என்றும் யாரும் நினைக்கவில்லை.

ஆகஸ்ட் 19ம் தேதி ஜப்பான் ரேடியோ நேதாஜி இறந்து விட்டார் என்ற திடுக்கிடும் செய்தியை அறிவித்தது.

ஜப்பான் ரேடியோ கூறியதாவது.

சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தின் தலைவராக நேதாஜி 1945 ஆகஸ்ட் 16ம் தேதி ஜப்பானிய அரசுடன் பேச்சு நடத்த விமானத்தில் புறப்பட்டார்.

18ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பார்மோசா தீவில் உள்ள தைஹோக்கு விமான நிலையத்தில் அவர் விமானம் விபத்துக்குள்ளானது.

அதில் அவர் படுகாயம் அடைந்தார். ஜப்பானில் ஒரு மருத்துவ மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமால் அன்று நள்ளிரவில் அவர் மரணம் அடைந்தார்.

அவர்தான் பயணம் செய்த ஜெனரல் சுனாமாசா என்ற ஜப்பானிய அதிகாரி விபத்து ஏற்பட்ட உடனேயே மரணம் அடைந்தார்.

நேதாஜியின்   உதவி தளபதி ஹபீப் வுர் ரகிமானும் மற்றும் நான்கு ஜப்பானிய அதிகாரிகளும் பலத்த காயம் அடைந்தனர் இவ்வாறு ஜப்பனிய ரேடியோ அறிவித்தது.

இந்த செய்தி இந்திய மக்களை நிலை குலைய செய்ததது. நேதாஜி இறந்து விட்டார் என்பதை பலர் நம்பவில்லை.

நேதாஜி இறந்து  விட்டார் என்றால் அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்க வில்லை என்று கேட்டனர்.

ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து படுகாயம் அடைந்த ஹபீப் வுர் ரகிமான் நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன் என்று கூறினார்.

ஆயினும் முத்துராமலிங்க தேவர் உட்பட பல தலைவர்கள் நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்றே கூறி வந்தானர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1956 இல் நேதாஜி பற்றிய உண்மைகளை கண்டறிய மூவர் கொண்ட ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

அந்த கமிட்டி டோக்கியோ, சைகோன், பாங்காக் உட்பட பல இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தியது.

இறுதியில் கமிட்டியின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை. டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவர் அஸ்த்திதான் என்று அறிக்கை கொடுத்தார்.

மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் ( நேதாஜியின் அண்ணன் ) இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். 1967 இல் 350 எம். பி க்கள் கையெழுத்திட்டு நேதாஜி பற்றி மீண்டும் விசாரணை நடத்தும் படி ஜனாதிபதியிடன்  மனு கொடுத்தார்.

அதன் படி ஓய்வு பெற்ற பஞ்சாப் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜி. டி கொசலாவை  கொண்ட ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

அவர் ஜப்பான் தைவான் உட்பட பல நாடுகளுக்கு சென்று விசாரணை நடத்தி விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார்.

Thursday, 7 March 2013

திரைக்கதை எழுதுவது எப்படி?


சினிமா ஒரு கனவு தேசம். சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற வெறி, ஆவல், லட்சியம் கொண்ட ஆண் பெண் கூட்டம் எண்ணில் அடங்காது.

ஒரு பாரதிராஜா வெற்றி பெற்றால் 1000 பாரதிராஜாக்கள், சரியான வாய்ப்புகள் இல்லாமல் போராடுகிறார்கள். அல்லது போராடி பார்த்து விட்டு பின் வாங்கி போகிறார்கள். 

நடிப்பு, தொழில் நுட்பம், இசை, இயக்குனர் என்று எத்தனையோ பிரிவுகளில் இந்த தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

இருப்பினும் இன்று,  முன்பு மாதிரி இல்லை. இப்போது இளம் வயதில் வாய்ப்புகள் பெற்று ஜொலிப்பவர்கள்  ஏராளம்.

உங்கள் திறமைகளை உரசி பார்க்க என்று சொல்லவதை விட, இன்னும் மெருகேற்றி கொள்ள சின்ன சின்ன டிப்ஸ் கொடுக்கலாம் என்ற என்ற எண்ணத்தில் இதை எழுகிறேன். 

திரைக்கதை எழுதுவது எப்படி என்பதுதான் தலைப்பு.

இந்த தலைப்பை நான் தேர்வு செய்த காரணம் உங்களுக்கே புரியும். ஒரு படத்தின் வெற்றி தோல்வி, அதில் நடிக்கும் நடிகர் நடிகையை விட, நல்ல கதையும், உயிரோட்டமுள்ள திரைக்கதையும்தான் காரணம். 

மினிமம் கேரண்டி என்று சொல்லக்கூடிய நடிகர்கள் நடித்த பல படங்கள் தோல்வியை தழுவுகிறது. யார் என்றே தெரியாத புதுமுகங்கள் நடித்த படம் சக்கை போடு போடுகிறது. 

அதுமட்டும் அல்ல,  நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் தெளிவான திரைகதை இல்லாமல் போனால், சொதப்பிட்டான் என்பார்கள். நல்ல நடிகர்கள், பெரிய தொழில் நுட்ப கலைஞர்கள் இருத்தும் இந்நிலை வந்து விடும்.

அதே சமயம் ஒரு வரியில் சொல்லிவிட்டு போகும் ஒரு செய்தியை இரண்டரை மணிநேர சினிமாவாக இருக்கையை விட்டு எழும்ப விடாமல் பார்க்க வைப்பவர்களும் உண்டு. அதற்கு தெளிந்த நீரோடைபோல் அமைந்த திரைக்கதைதான் காரணம்.

ஒரு முழு நீல திரைப்படத்தை எடுப்பதற்குத்தான் திறமை வேண்டும் என்பதல்ல. பத்து வினாடியில் வந்து போகும் சிறு விளம்பரம் படத்திற்கு கூட திறமை வேண்டும்.

சொல்லப்போகும் செய்தி, அதை சொல்லப்போகும் விதம், அதை கண்ணெதிரே காட்சியாக்கும் கதாபாத்திரம்,அந்த கதாபாத்திரம்  பேசும் வசனங்கள், அல்லது வெளிப்படுத்தும் உணர்வுகள், சுற்றுபுறம் எல்லாமே அந்த பத்து வினாடிக்குள் முடிந்து போக வேண்டும்.

அந்த பத்து வினாடிக்குள், அதை காண்போரை சுண்டி இழுக்க வேண்டும், சிந்திக்க வைக்க வேண்டும். அந்த நுகர்வு பொருளை வாங்க தூண்ட வேண்டும்.

அப்படியானால் இதற்கு எவ்வளவு திறமை வேண்டும் என்பதை  சொல்லி தெரிய  வேண்டியதில்லை.

சரி.. நாம் விஷயத்திற்கு வருவோம்.

திரைக்கதை எழுதுவது என்பது ஒரு சினிமாவின் முழு வடிவம். திரைக்கதை சொல்வது என்று ஓன்று இருக்கிறது.

அது எப்படி?

சார்... காலை நேரம்.  முற்றிலும் இருள் விலகவில்லை. கிழ் வானை காட்டுகிறோம், இளம் ஆரஞ்சு நிறத்தில் மேகங்கள் அடர்ந்த வானம் தெரிகிறது. சூரியன் உதயமாகி கொண்டிருக்கிறான்.

அந்த நேரத்தில் கீச் கீச் என்று பறவைகள் சப்தம் கேட்டுகொண்டிருக்கிறது. சாலைகளில் வாகங்கள் இரைச்சலோடு போய் கொண்டிருக்கிறது. கட் பன்றோம்.

ஒரு மிடில் கிளாஸ் பேமலி வீடு. அது ஒரு ஓட்டு வீடு.  வீட்டின் வாசலில் இரண்டு ஹிரோ ஹோண்டா பைக் நிற்குது. அதுக்கு பக்கத்திலே ஒரு சைக்கிள். கொஞ்சம் தட்டு முட்டு பொருட்கள், ஒரு பிளாஸ்டிக் வாலி எல்லாம் அந்த சைக்கிளுக்கு பக்கத்திலே இருக்கு.

மெல்ல வாசலை கடந்து உள்புறம் கேமரா போகுது. பளீர்ன்னு முழு வெளிச்சம் இல்லை. கொஞ்சம் இருள் இருக்கு.

கௌசல்யா சுப்பிரஜா   ராம பூர்வ..... சுப்பிரபாதம் பட்டு சத்தம் மெல்லிசா கேட்குது. அப்ப அந்த வீட்டின் பெட்ரூமை காட்டுறோம். ஒரு பெட்டில் ஒருத்தன் படுத்திருக்கான். அவன்தான் நம்ம கதாநாயகன்.

இப்படி கதையை விவரித்து சொல்வதுதான் திரைக்கதை சொல்வது. கிட்டத்தட்ட திரைக்கதை எழுதுவதும் இப்படித்தான். என்ன... அதை வார்த்தைகளால் சொல்கிறோம். எழுதுவது என்பது பேப்பரில் இருக்கும்.

இப்ப நான் ஒன்னரை நிமிடத்தில் முடியப்போகும் சின்ன கதைக்கு திரைக்கதை எழுதப் போறேன்.

ரெடி டேக்.

லொக்கேஷன் - சென்னை - அவுட்டோர்
பகல் வெளிச்சம்
சம்பவ இடம் மழலையர் பள்ளி.
கதாபாத்திரங்கள் - மூன்று அல்லது நான்கு  வயது இளம்  குழந்தைகள் 30 பேர்.  ஆசிரியர்  தோற்றத்தில் மூன்று நடுத்தர வயது பெண்கள்.


சீன் -1

பரபரப்பு இல்லாத பிரதான சாலை. மரங்கள் அடர்ந்த ஒரு கட்டிடத்தின் லாங்க் ஷாட்.

இப்போது கேமரா ஜுமாகி அந்த கட்டிடத்தின் பிரம்மாண்ட தோற்றத்தை காட்டுகிறது. அதில் ஆதித்தியா மழலையர் பள்ளி என்ற பெயர் பலகை தெரிகிறது.

சீன் -2

வகுப்பறைகள் இருக்கும் நீளமான அந்த பள்ளி வராண்டாவில் கேமரா நகர்கிறது.

வரிசையாக வகுப்பு அறைகள். முதல் வகுப்பு அறையை தாண்டும் போது ஆசிரியை பாடம் சொல்லி கொடுக்கும் குரல் ஒலிக்கிறது.

எ பார் ஆப்பிள், பி பார் பால், சி பார் கேட்.....!!

அடுத்த வகுப்பு அறையை கேமரா  கடக்கும் போது, வேறு ஒரு பெண் ஆசிரியை பாடம் நடத்தும் குரல் கேட்கிறது.


ஒன்

( ஒன் -  குழந்தைகள் கோரஸ் குரல் )

டூ

( டூ - குழந்தைகள் கோரஸ் குரல் )

த்திரி

( த்திரி- குழந்தைகள் கோரஸ் குரல் )

போர்

( போர்- குழந்தைகள் கோரஸ் குரல் )


அந்த நேரம், புடவை கட்டிய  இரு பெண் ஆசிரியைகள் கையில் பாலர் பள்ளி புத்தகம் வைத்து கொண்டு நடந்து வருகிறார்கள். அப்போது இருவரில் ஒரு ஆசிரியை, அருகில் வரும் ஆசிரியையை பார்த்து.....

விஸ்வருபம் பார்த்துட்டிங்களா என்கிறார்.

இம் ...பிரமாதமா இருக்கு... என்ற பதில் குரல் கொஞ்சம் தூரத்தில் கேட்கிறது.

சீன் -3

இடம் - வகுப்பறை, சுவற்றில் மழலையர் பள்ளிகளில் பயன் படுத்தும் போஸ்டர்கள் தொங்குகிறது.

இப்போது ஒரு வகுப்பறை. மாணவ மாணவிகள் தரையில் மேல் போடப்பட்ட பலகையின் மேல் அமர்ந்திருக்கிறார்கள்.

குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயலை செய்து கொண்டிருக்கிறது. ஒரு குழந்தை புத்தகத்தை புரட்டி கொண்டிருக்கிறது, ஒரு குழந்தை படம் வரைந்து கொண்டிருக்கிறது.

சில  குழந்தைகள் ஆசிரியர் திசை நோக்கி இல்லாமல் வேறு வேறு திசைகளை பார்த்தபடி அமர்ந்திருக்கிறது.


அப்போது ஆசிரியை தனக்கு முன்னாள் இருக்கும் மேஜையின் முன்னால் வந்து குழந்தைகளை நோக்கி சொல்கிறார்.

செல்லங்களா... இன்னைக்கு அன்னையர் தினம். அன்னையர் தினம்னா.. அம்மாவுக்கு மதிப்பு அளிக்கும் நாள். 

இப்போ நான் ஒவ்வொருத்தரா   கூப்பிடுவேன். இங்கே வந்து உங்க அம்மாவை பத்தி சொல்லணும் சரியா?

என்று சொன்னவர் சாந்தினி... நீங்க வாங்க முதல்ல.  என்கிறார்.


அந்த குழந்தை எழுந்து ஆசிரியருக்கு முன்னால் வருகிறது. அந்த குழந்தையை தூக்கி மேஜையின் மேல் நிற்க வைக்கிறார்.

அது தன் இரு கைகளால் தன் மினிஸ்கர்ட்டை பிடித்தபடி நிற்கிறது.  விலகி இருந்த குழந்தையின் சட்டையை சரிசெய்த படி ஆசிரியை அந்த குழந்தையிடம் கேட்கிறார்.

உங்க மம்மியை பத்தி சொல்லுங்க.

குழந்தை பதில் சொல்ல தெரியாமல் நிற்கிறது.

மீண்டும் கெஞ்சலான குரலில்... சாந்தினியை அம்மா என்ன சொல்வாங்க? 

அந்த குழந்தை சற்று தயங்கி சொல்கிறது...  தங்கபொண்ணுன்னு சொல்வாங்க.

அப்பறம் என்ன சொல்வாங்க?

செல்லம்ன்னு சொல்வாங்க. 

அப்பறம்...

இம்.. பதில் சொல்லாமல் அந்த குழந்தை நிற்க, தரையில் இறக்கி விடுகிறார். அந்த குழந்தை போய் தன் இடத்தில் போய் அமர்ந்ததும், காவியா... நீங்க வாங்க.


காவியா குழந்தை முன்னால் வந்ததும், மேஜையின் மேல் தூக்கி நிற்க வைக்கிறார். அந்த குழந்தை தன் இரு கைகளையும் கட்டி கொண்டு நிற்கிறது.

ரிலாக்ஸ்... குழந்தையின் கைகளை பிரித்து இயல்பாக விடுகிறார்.

உங்க அம்மாவை பத்தி சொல்லுங்க.

எங்க அம்மா நிறைய சாக்லேட் வாங்கி தருவாங்க.

வேற..

நரி கதை சொல்லுவாங்க. 

அடடா அப்பறம்...

ஸ்கூல் பாடம் எல்லாம் சொல்லி தருவாங்க.


வெரிகுட் 

அந்த குழந்தையை இறக்கி விடுகிறார். அந்த குழந்தை தன் இடத்தில் போய் அமர்கிறது.

சுபா.. நீங்க வாங்க.

சுபா அருகில் வந்ததும்,  சுபாவை மேஜை மேல் தூக்கி நிற்க வைக்கிறார்.

அந்த குழந்தை கன்னத்தை சொரிந்து கொள்கிறது.

அப்போது உங்க அம்மாவை பத்தி சொல்லுங்க என்கிறார் ஆசிரியை.

என் அம்மா என் வயத்துக்குள்ளே  இருக்காங்க. என்று தன் வயிற்றை  காட்டுகிறது.

அச்சச்சோ... சுபா கண்ணு வயத்துக்குள்ளேயா அம்மா இருக்காங்க.

ஆமாம்... நான்... நான்... பிறந்த உடனே எங்க அம்மாவை தூக்கி முழுங்கிட்டேனாம். பாட்டி சொன்னாங்க.

ஆசிரியை கண்கள் கலங்குகிறது.


அவ்வளவுதான் கதை. இது உங்க மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துது. இப்படி உணர்வு பூர்வமா கதைக்களம் நகர்ந்தால் படம் பார்ப்பவரின் மனதை நம் வசப்படுத்தலாம்.

சரி.. இது இத்துடன் இருக்கட்டும். வேறு ஒரு விளக்கத்தோடு பின் சந்திப்போம்.







Wednesday, 6 March 2013

சுப்பிரமணியசாமி அலுவலகம் மீது கல்வீச்சு- ஏன்?



அவ்வப்போது அரசியலில் அதிர்வேட்டு போடும் சுப்பிரமணியசாமியின் மதுரை அலுவலகம் நேற்று தாக்கப்பட்டது தெரியும். 

தினம்தோறும் அரசியல் நிகழ்வுகளை கண்காணிக்கும் பார்வையாளர்களுக்கு ஒரு விஷயம் புரியாமல் இருக்கும். இந்த சுப்பிரமணியசாமி என்ன செய்தார். ஏன் அவர் அலுவலகம் தாக்கப்பட்டது?

விஷயம் இதுதாங்க. 

சுப்பிரமணிம் சுவாமி, கடந்த 28-ம் தேதி கொழும்பு சென்று இறங்கினார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவின் அழைப்பை அடுத்து, அவர் சென்றிருந்தார் என்பது தான் தகவல். 

ஜனாதிபதியின் இல்லமான அலரி மாளிகையில் சந்திப்பு நடந்தது.

என்ன பேசி இருப்பாங்க?

தெற்க்கே இருந்து செய்தி வந்ததா? வடக்கே இருந்து தூது வந்ததான்னு பேசியிருக்க மாட்டாங்க. 

இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழக நிலவரம் பற்றி தான் பேசியதாக தெரிகிறது. 

இந்த சந்திப்பின் போது ராஜபக்ஷேவின் சகோதரர் கோட்டாபய, இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் கருணாதிலக அமுனுகம ஆகியோரும் உடனிருந்தனர்.  

சுப்பிரமணிய சாமியால் தமிழக நெருப்பை அணைக்க முடியும் என்று ராஜபக்ஷே நினைக்கிறாரா? அல்லது அவரை வைத்து ஏதாவது குட்டையை குழப்ப முடியுமா என்று திட்டம் போடுகிறாரா என்று தெரியவில்லை. 

பலரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சுப்பிரமணியசாமிக்கு இது கெட்டகாலமோ என்னவோ? வம்பை விலை கொடுத்து வாங்கி வந்திருக்கிறார். 

அவர் அலுவலகம் தாக்கப் பட்டது தொடர்பாக இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. 

யாருன்னு தெரிஞ்சாதானே பிடிக்கிறதுக்கு? 

வீரசிங்கம் - நேதாஜி


வெற்றி மேல் வெற்றி பெற்று வந்த ஜப்பானுக்கும், ஜெர்மனிக்கும் தோல்விமேல் தோல்வி வந்தது. பர்மாவில் இருந்த ஜப்பான் படைகள் அங்கிருந்து பின் வாங்கின. 

அமெரிக்க தளபதி மக்ஆர்தர் பெரும் படையுடன் ஜப்பானை நெருங்கி கொண்டிருந்தார். ஏப்ரல் 30 ம் தேதி ஜெர்மன் தலைநகரான பெர்லின் நகரை ரஷ்ய படைகள் முற்றுகை இட்டன.

இனி தப்ப வழியில்லை என்பதை அறிந்து கொண்ட ஹிட்லர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். அதை தொடர்ந்து ஜெர்மன் சரண் அடைந்தது. ஜெர்மன் சரணடைந்த பிறகும் ஜப்பான் போரை நிறுத்தவில்லை.

எனவே 1945 ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பான் நகரான ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது.  அப்படியும் ஜப்பான் சரண் அடையாததால், இரண்டாவது அணுகுண்டை ஜப்பானின் இன்னொரு நகரான நாகசாகி மீது வீசியது.


இதை தொடர்ந்து 1945 ஆகஸ்ட் 12ம் தேதி ஜப்பான் தோல்வியை ஒத்துக் கொண்டு சரண் அடைய தீர்மானித்தது. அப்போது நேதாஜி மலேசியாவில் இருந்தார். அவர் உடனே கார் மூலம் சிங்கபூர் திரும்பினார்.

சுதந்திர அரசாங்கத்தின் இதர தலைவர்களுடனும், தளபதிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.  1945 ஆகஸ்ட் 15ம் தேதி ஜப்பான் மன்னர் ரேடியோவில் பேசும்போது, ஜப்பானின் சரணாகதியை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அன்றிரவு நேதாஜி தூங்கவில்லை. விடிய விடிய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று, ராணுவ தளபதிகளுக்கு கட்டளைகள் பிறபித்தார்.

முக்கியமாக ஜான்சிராணிப் படையில் உள்ள பெண்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார். இதற்கிடையே ஜப்பான் அரசிடம் இருந்து நேதாஜிக்கு ஒரு செய்தி வந்தது.

ரஷ்யா பக்கம் இருக்கும்  மஞ்சூரியா பக்கம் உங்களை பத்திரமாக கொண்டு போய் சேர்த்து விடுகிறோம். அதன் பிறகு என்ன செய்வது என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள், என்பது தான் அந்த செய்தி.

அதன் படி அடுத்தநாள் காலை பாங்காக் (தாய்லாந்து) செல்வதென்றும் அங்கிருந்து மஞ்சுரியாவிர்க்கு புறப்படுவது என்றும் நேதாஜி முடிவு செய்தார். 1945 ஆகஸ்ட் 16ம் தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்படும் முன் இரண்டு செய்திகளை வெளியிட்டார்.


முதலாவது செய்தி இந்திய தேசிய ராணுவத்திற்கு.

 ஜப்பான் சரணடைந்து விட்டாலும் டெல்லியை அடைய பல வழிகள் இருக்கின்றன. இதியாவை மீட்பதுதான் நமது லச்சியம் என்பதே அந்த செய்தி.

அடுத்த செய்தி

கிழக்கு ஆசியாவில் வாழும் மக்களுக்கு நமது வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத நெருக்கடியான நேரம் இது. நமது தற்காலிக தோல்வியை கண்டு மனம் தளராதீர்கள்.

இந்தியாவின் விடுதலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வெகு விரைவில் இந்தியா சுதந்திரமடையும்.  ஜெயஹிந்த்.


இந்த செய்தியை வெளியிட்டு விட்டு காலை 10மனி அளவில் பாங்காக் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். பிற்பகலில் பாங்காக் போய் சேர்ந்தார்.

அதன் பின்னர் மின்னல் வேகத்தில் நடைபெற்ற நிகழ்சிகள் பின் வருமாறு.

ஆகஸ்ட் 17 அதிகாலை பாங்காக் நகரில் இருந்து சைகோன் ( தென் வியட்நாம்) நகருக்கு விமானத்தில் புறப்பட்டார்.

துணைத்தளபதி கர்னல் ஹபிப் - வுர்-ரகிமான், கர்னல் குல்ஜாராசிங், கர்னல் பிரிதம்சிங், மேஜர் அபித் ஹசன் ( நேதாஜி நீர்முழ்கி கப்பலில் பயணம் செய்த போது உடன் இருந்தவர் ) ஆலோசகர் தேவநாத் தாஸ் நேதாஜியின் சுதந்திர அரசாங்கத்தில் பிரச்சார இலாக்கா மந்திரியாக  பதவி வகித்த எஸ். எ. ஐயர் ( தமிழர்) ஆகியோர் உடன் சென்றனர்.

ஆகஸ்ட் 18 காலை 10 மணிக்கு விமானம் சைக்கோன் விமான தளத்தில் இறங்கியது. அங்கு ஜப்பானிய போர் விமானம் ஓன்று புறப்பட தயாராக இருந்தது.



நாளை தொடரும்

Tuesday, 5 March 2013

வெளிநாட்டில் விபச்சாரம்!!



பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த, இளம்பெண் ஒருவரை, ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான, ஷார்ஜாவில், வீட்டு வேலையாள் பணிக்கு சேர்த்து விடுவதாகக் கூறி, சிலர் அழைத்துச் சென்றனர். அங்கு உறுதி அளித்தபடி, வேலை தராமல், விபசாரத்தில் தள்ளினர்.

எப்படியோ, விபசார கும்பலிடமிருந்து தப்பி, சொந்த ஊர் திரும்பிய அந்தப் பெண், தன்னைப் போல, துபாய் மற்றும் ஷார்ஜாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அழைத்துச் செல்லப்பட்ட, கேரளாவைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், விபசாரத்தில் தள்ளப்பட்டு, கொடுமை அனுபவிப்பதாக தெரிவித்தார்.

அந்தப் பெண்களை விபசார கும்பலிடம் இருந்து மீட்டு, கேரளாவுக்கு அழைத்து வரும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, கேரள ஐகோர்ட்டில், அந்தப் பெண் மனு தாக்கல் செய்தார். - செய்தி 




வறுமை, குடும்ப நிலவரம், எதிர்கால தேவைகள் இவற்றை கருத்தில் கொண்டு கடல் கடந்து வெளிநாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. 

தங்களுக்காகவும், தங்களை சார்ந்தவர்களுக்காவும் ஒளிமயமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள எந்த வேலையும் செய்ய தயாராக கடல் கடந்து வருகிறார்கள். 

இதில் குறை காண முடியாது.  படித்தவர்கள், முறையான குடியுரிமை அனுமதி பெற்று நல்ல வேலையில் அமர்ந்து விடுகிறார்கள். படிக்காதவர்கள்  நிலைதான்  கேள்விக் குறியாகி விடுகிறது. 

நல்ல வேலை கிடைக்காமல், 14 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்ய வேண்டிய நிலையிலும், பலருக்கு அந்த சம்பளமும் உரிய நேரத்தில் கிடைக்காமல் போவதும், அல்லது ஏமாற்றப் படுவதும் ஒரு தொடர்கதை.

இது ஆண்கள் நிலை. பெண்கள்? 

படிப்பறிவு இல்லாமல் வீட்டு வேலைக்காக வரும் பெண்கள் பற்றிய கட்டுரை தான் இது.

நான் மலேசியாவில் ஒரு நிறுவனத்தில் ஜோதிடராகவும், ஜோதிட மாத   இதழில் பொறுப்பாசிரியாராகவும்  பணி புரிகிறேன்.  என்னை சந்திக்க இருபெண்கள் வந்தார்கள்.

சந்திப்பின்  காரணம் ஜாதகம் பார்க்க.

ஒருவருக்கு வயது 40, மற்றவருக்கு வயது 26. இவர்கள் இருவரும் மயிலாடுதுறையை சேர்ந்தவர்கள்.

நாற்பது வயது பெண் ஹிந்து. இருபத்து ஆறு வயது பெண் முஸ்லிம்.  நான் ஜாதக பலனை சொல்லும் முன்பே நாற்ப்பது வயது பெண் பேச தொடங்கினார். 

நான் பத்து வருஷத்திற்கு முந்தி ஊர்ல ஒருத்தர்கிட்டே ஜாதகம் பார்த்தேன். அப்பவே சொன்னார். நீ பலா பழம். உன்னை சுத்தி  ஈ   மொய்க்கிற       மாதிரி ஆம்பளைங்க மொய்ப்பாங்க அப்படின்னு.

இந்தாளு லூசு ஏதோ உளர்ரான்னு நினைச்சேன். அவரும் செத்து  தெய்வமா போய்ட்டார். அவர் சொன்னது தான் இப்ப  நடக்குது.  நீங்களும் ஜாதகம் பார்த்தா கண்டுபிடிச்சுடுவீங்க.

இது உங்களுக்கு பிடிச்சிருக்கா?

பிடிக்கலைதான் என்ன செய்ய? குடும்பத்தை காப்பத்தனுமே.

ஊர்லேயும் இதேதானா?

சீ சீ... ஊர்ல எந்த தப்பும் செய்ய மாட்டேன். இங்கே வந்தாதான்.

இது நான் மலேசியா வர்றது மூனாவது முறை. முதல் முறை வந்தப்ப ஒரு ஹோட்டலில் வேலை செய்தேன். 600 வெள்ளி சம்பளம். பெரிசா ஒன்னும் சம்பாதிக்க முடியலை. ரெண்டு வருஷத்திலே ஊருக்கு போயிட்டேன்.

மறுபடி ஒரு வருஷம் கழிச்சு வந்தேன். அப்பத்தான் இந்த தொழிலுக்கு வந்தேன்.  நாலு வருஷம் இருந்தேன். என் ரெண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். பெரிய வீடு கட்டினேன்.

இப்ப இது மூனாவது முறை. தொழில் நல்லாத்தான் போய்கிட்டு இருந்திச்சு. அரியலூர் காரி ஒருத்தி வந்தா. இங்கே இருக்கிற ரௌடி ரெண்டு பேரை கையில் வச்சுகிட்டு, நாங்க தொழிலுக்கு போற இடத்திற்கு போலிசை வரவச்சுடுரா.  அதனால வெளியே போக முடியாம பயந்து சாகுறோம்.

இப்ப போலிஸ் கிட்டே மாட்டிக்குவோமா? நேரம் காலம் எப்படி இருக்கு?

ஜாதக பலன் சொல்வது ஒருபுறம் இருக்க, நம் ஊர் பெண்கள் இப்படி நாடு கடந்து வந்து நாசமாக போகிறார்களே என்று மனது வலித்தது.  புத்திமதிகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை.

அடுத்து .....அவர்கள் சொல்லிய தகவல் தான் அதிர்ச்சியின் உச்சகட்டம்.

தமிழ் நாட்டில் இருந்தும், அதை விட அதிகமாக கேரளாவில் இருந்தும் தான், வீட்டு பணிப்பெண் என்ற போர்வையில் வந்து,  வீடு எடுத்து தங்கி கொண்டு இந்த அவமான தொழிலை செய்கிறார்கள்.

( அவர்கள் தங்கி இருக்கும் பகுதியில் எந்த தப்பும் செய்ய மாட்டார்களாம். ஏதோ ஆபிஸ் வேலைக்கு போவது மாதிரி தொலை தூரத்திர்க்கு  சென்றுதான் தங்கள் தொழிலை நடத்துவதாக சொல்கிறார்கள்)

அரசாங்கம் இதில் கவனிக்க வேண்டிய விஷயமே இதுதான். வெளி நாடுகளுக்கு செல்லும் பெண்கள் விசா நடைமுறை கடுமையாக்க பட வேண்டும்.

அதிலும்  படிப்பறிவில்லாத  இளம் பெண்கள் வீட்டு பணிப் பெண் வேலைக்காக செல்லும்  நடைமுறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

அப்படி வரும் பெண்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் நாட்டின் மானத்தை நடுத்தெருவில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிலர் சந்தர்ப்ப வசத்தால் ஏஜண்டுகளால் ஏமாற்றப் பட்டு இந்த இழி நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதயும் மறுப்பதற்கில்லை.

அரசு உடனடியாக இதை தடுப்பதற்கு போர்க்கால அடிபடையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எடுக்குமா?

Monday, 4 March 2013

துவாரகை - ஓர் ஆய்வு



ராமர் கட்டிய பாலம் பல லச்சம் ஆண்டுகளாக ராமேஸ்வரம் கடலில் முழ்கி இருப்பது போல், மகாபாரத காலத்தில் கிருஷ்ணர் ஆட்சி புரிந்த துவாரகையும் 5200 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியது. 

தொல்லியல் ஆராச்சியில் புதைந்த பகுதிகளை காண முடிந்ததால், துவாரகை இருந்தது உண்மை என்பது நிருபணம் ஆகி உள்ளது.

இந்திய தேசிய கடல் ஆராட்சி கழகம், துவாரகை கடல் பகுதியில் 1983 முதல் 1990 வரை 18 ஆராட்சிகளை மேற்கொண்டது.


குஜராத் மாநிலம் லோத்தல் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் S .R .ராவ் தலைமையில் ஆய்வு நடந்தது. பழமையான நகரமான துவாரகை கடலுக்குள்  இருப்பதை கண்டுபிடித்தனர்.

ஆய்வின் போது துவாரகையின் ஒரு பகுதியான பேட் துவாரகையில் கி மூ 1528 ஆம் அண்டை சேர்ந்த மன்பாண்டத்தையும், கடற்கரையில் 500 மீட்டர் சுவர் ஒன்றையும் கண்டனர்.  கிருஷ்ணர் ஆண்ட துவாரகை என முடிவு செய்தனர்.

இந்த முடிவுகளை ராவ் தி லாஸ்ட் சிட்டி ஆப் துவாராக என்னும் நூலாக ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.


இந்த ஆய்வின் மூலம் மகாபாரதம் உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்பது உறுதியானது.

மகாபாரத முடிவில் வந்த கலியுகம் தொடக்கி 5113 ஆண்டுகள் ஆகிறது.  அதற்கு 87 ஆண்டுகளுக்கு முன்பே துவாரகை மூழ்கியதால் இந்நகரம் முழ்கி 5200 ஆண்டுகளாகின்றன என்பது உறுதிப்படுத்தபடுகிறது.

கோமதி நதிக்கரையில் அமைந்த துவாரகைக்கு துவாரமதி, துவாரவதி, குசஸ்தலை என்ற பெயர்களும் உண்டு. துவாரகைக்கு அருகில் உள்ள பேட்  துவாரகையிலும் கிருஷ்ணர் வாழ்ந்தற்கான  ஆதாரங்கள் உள்ளன.


அங்கு 18 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கு ஓன்று தொடர்புடைய குடியிருப்புகள், மூன்று பிரமாண்ட கட்டிட தொகுப்புகள் தென் படுகின்றன. சுவரை கட்ட பயன்படுத்திய கற்கள் 5600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்ததாக உள்ளன.

பேட் துவாரகை ஒரு தீவு பகுதியாகும். இங்குதான் கிருஷ்ணர், சத்தியபாமா, ஜாம்பவதி ஆகியோர் பொழுது போக்க வந்துள்ளனர்.

ஆங்காங்கே பூந்தோட்டம் ஏரிகளும் உள்ளன. கடலில் மூழ்கிய துவாரகையில் அடிப்படை வசதி உள்ள குடியிருப்பு, வியாபார இடங்கள்,அகன்ற இடங்கள், அழகான துறைமுகம் இருந்துள்ளன.



தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் இழைக்க பட்ட கட்டிடங்களும் இங்கு பிரசித்தமாக விளங்கி உள்ளன.

குருஷேத்திர யுத்தம் முடிந்து 36 ஆண்டுகளுக்கு பின் துவாரகை கடலுக்குள் முழ்கி உள்ளது. இதனை முன்கூட்டியே  அறிந்த கிருஷ்ணர் யாதவர்களை பிரபாஸ் என்ற உயரமான மலை பகுதிக்கு அழைத்து சென்று பாதுகாத்தார்.

தற்போது இப்பகுதி சோம்நாத் எனப்படுகிறது. அழிந்த துவாரகையை நீர்முழ்கி கப்பலில் சென்று பக்தர்கள் பார்ப்பதற்கு இந்திய கடல் அகழ்வாராட்சி கழகம் ஏற்பாடு செய்கிறது.

தேவலோக தச்சன் விஸ்வகர்மா இந்நகரத்தை கட்டியதாக புராணங்கள் சொல்கின்றன. துவாரகை அழிந்த பிறகு அங்கு மூன்று முறை கோவில் கட்டபட்டிருக்கிறது.

எல்லாமே கடலில் முழ்கி இருக்கலாம். அல்லது பிற சமயத்தால் அழிக்கபட்டிருக்கலாம். தற்போது உள்ள கோவிலில் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.  இதற்கு தற்போது  துவாராகநாத்தி  மந்திர் என்று பெயர்.

நன்றி மக்கள் ஓசை 


விஸ்வருபம் படத்திற்கு 100 கோடி பட்ஜெட்-பொய்



கமல்ஹாசனின் விஸ்வருபம்  பல தடைகளை தாண்டி  வெற்றி பெற்று விட்டது. இதே விஸ்வருபம் படம் சிக்கலில் மாட்டி தவித்தபோது, கமலஹாசன் பேட்டி அளித்தார். 

இந்த படத்திற்காக என் சொத்துக்களை அடமானம் வைத்து,  நிறைய முதலீடு செய்திருக்கிறேன். படம் வெளி வராமல் போனால் என் வீடு கூட எனக்கு சொந்தமில்லாமல்  போய்விடும் என்றார். 

உடன் அவர் நலன் விரும்பிகள் 100 கோடிக்கு  மேல் செலவு செய்துள்ளார் என்று செய்தியை வெளியிட்டார்கள். கமல் இதை மறுக்க வில்லை. 

ஆனால் உண்மை நிலவரம் வேறு. 

விஸ்வருபத்தின் அனைத்து பணிகளும் கடந்த மே மாதமே முடிந்து விட்டதாக கமல் முன்பு தெரிவித்திருந்தார். 

அதே மாதத்தில் நடந்த கேன்ஸ்  பட விழாவிற்கு கூட அனுப்பியதாக கூறினார்கள். ஆனால் அதன் பிறகு ஆறு மாத காலம் கமல் செய்த வேலை விஸ்வருபம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்ததுதான். 

ஆக 100 கோடி பட்ஜெட் என்பது விஸ்வருபத்தின் மொத்த பட்ஜெட் அல்ல. இரண்டாம் பாகத்திற்கும் சேர்த்து செய்த செலவுதான் அது. 

இப்போது விஸ்வருபத்தின் இரண்டாம் பாகம் வெளிவரப் போகிறது. இதன் படபிடிப்புகள் நடந்து வருதாக சொல்லப்படுகிறது. 

விஸ்வருபத்தின் இரண்டாம் பாகத்தை மூ என்ற பெயரில் வெளியிட போவதாக செய்திகள் வருகிறது.

முதல் பாகத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பை தொடர்ந்து சில காட்சிகளை மாற்றி எடுப்பதற்காக இன்னும் ஒன்றிரண்டு வார படபிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

விஸ்வருபம் இரண்டாம் பாகமான மூ படத்தில் மூன்று வேடங்களில் கமல் நடிக்கிறாராம்.

விஸ்வருபம் படத்தில் முல்லா உமர் அமெரிக்காவில் இருந்து தப்புவது போல் காட்சி அமைக்க பட்டிருந்தது.

இரண்டாம் பாகத்தில் முல்லா உமர் இந்தியாவில் நாச வேலையில் ஈடுபட திட்டமிடுவது போலவும், அதை கமல் முறியடிப்பது போலவும் திரைக்கதை உருவாக்கி உள்ளது. இதுதான் இப்போதைய நிலவரம்.


குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...