ads

Friday 22 June 2012

பூட்டுகளின் வரலாறு / lock


மனிதன் ஆதி காலத்தில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தான். ஆனாலும் வெயில், மழை. பனி போன்ற இயற்க்கை சக்திகளிடம் இருந்து தற்காத்து கொள்ள மறைவிடங்கள் தேவை பட்டது. 

மர பொந்துகளையும், மலை குகைகளையும் தேடி போனான்.  காலங்கள் கடந்தது. அவனுக்கென மனைவி,  குழந்தைகள் வந்தது. அதோடு அவன் பயன் படுத்தும் பொருள்கள் சேர்ந்தது. 

இவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியம் வந்தது. அதோடு நாகரிகம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. 

செடிகளையும் கொடிகளையும், காட்டு மரங்களையும் பயன்படுத்தி வீடு கட்டினான். அவன் வசித்த பகுதி காடாக இருந்ததால் வனவிலங்குகளின் தொல்லை அதிகமானது. 

அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தான். அடர்த்தியான ஓலைகளை வைத்து கதவு செய்தான். 

பின்னர் அதை பாதுகாக்க கொடிகளை கண்டு பிடித்து கதவை கட்டி வைத்தான். அப்படி வளர்ச்சி பெற்ற பூட்டின் வரலாறு என்ன என்பதை பார்ப்போம்.

சற்றேறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்பு அல்ஜீரியாவில்தான் முதன் முதலில் பூட்டுக்கள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஆனாலும் அதற்க்கு பிந்தைய காலத்தில் எகிப்த்தியர்கள் மரத்திலான பூட்டுக்களை உருவாக்கினார்கள். அதை திறப்பதற்கு சாவிகளும் செய்தார்கள்.  

முதன் முதலில் செய்த பூட்டுக்கள் எப்படி இருந்தது என்பதற்கு இக்கட்டுரையின் முதலில் உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்.

பின்னர் இந்த முறையை பின்பற்றி காப்புரிமை எதையும் தராமல்  ரோமானியர்களும் பூட்டு தயாரிப்பில் இறங்கினார்கள்.

ரோமானியர்கள் தான் முதன் முதலில் உலோகத்திலான போட்டுக்களையும் பேட்லாக்குகளையும் உருவாக்கினார்கலாம்.

இப்படி மெல்ல மெல்ல வளர்ந்த பூட்டு 1788 இல் உருளை வடிவிலான பூட்டை கண்டுபிடித்தார்கள். இந்த பெருமை இங்கிலாந்தை சேரும். அந்த கண்டுபிடிப்பாளர் ராபர்ட் பாரோன்.

இதற்கு அடுத்த படியாக இங்கிலாந்தை சேர்ந்த ஜோசப் ப்ரமாஹ் அடுத்த தலைமுறை பூட்டு என்று சொல்கிற மாதிரி மிக மிக பாதுகாப்பான பூட்டை கண்டுபித்தார்.

1857 இல் ஜேம்ஸ் என்ற அமரிக்கர் கண்டுபிடித்த பூட்டுக்கள் அர்மரிக்க வங்கிகளில் சோதனை முறையில் பயன்படுத்தபட்டது.

இருப்பினும் 1861 இல் லினஸ் யேல் ஜூனியர் என்ற அமெரிக்கர்தான் பூட்டு தயாரிப்புகளுக்கு காப்புரிமை பெற்றார்.

இப்படி பரவிய பூட்டு இன்று உலகமெங்கும் பல்வேறு வடிவங்களில் விற்பனை ஆகிறது. இந்தியாவில் திண்டுக்கல் பூட்டு தயாரிப்பில் முதன்மை பெறுகிறது.

1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...