அதா..இந்த அழகு அழகுன்னு சொல்றாங்களே அதை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
அழகுன்னா இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும் என்று ஏதாவது ஒரு வரைமுறை இருக்கா?
ஒரு புலடங்காயும் இல்லை. காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்கிற மாதிரி அவரவர் கோணத்தில் அழகை பற்றிய மதிப்பீடு மாறுகிறது.
இந்த அழகை பற்றி அதிகம் யோசிக்கிற பருவம் எதுன்னு பார்த்திங்கனா டீனேஷ் பருவம்தான்.
பளிச்சுன்னு ஒரு புள்ளியை பார்த்தால் போதும் உள்ளே நடக்கிற ஒலிசேர்க்கை இருக்கே....அதுக்கு ஒரு எல்லை கோடும் கிடையாது.
ரிக்டர் அளவுகோலை வைத்து அளந்தால் அதிர்வு பத்தை தாண்டி பதிவாயிருக்கும். அவ்வளவுதான் புள்ளையாண்டான் பரபரப்பா மாறிடுவான்.
சீப்பே இல்லாம பரட்டு பரட்டுன்னு சீவுறது என்ன? அப்படியே அந்த கர்சீப்பை எடுத்து மயிலிறகால் கோதிவிடுகிற மாதிரி முகத்துக்கு டச்சப் போடுறது என்ன?....அடடா.. அந்த அபூர்வ காட்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
பிகர் எதிர்த்த பஸ்டாப்பிலே நிற்கும். அது தன்னை பார்க்குதான்னு ஓரக்கண்ணாலே ஒரு பார்வை பார்த்துட்டு, பத்தடி துரத்திலே இருக்கிற பெட்டிக்கடிக்கு நடந்து போவார் பாருங்க.... என்னத்தை சொல்ல.
ராஜாஜிராஜ..... ராஜமார்த்தாண்ட..... ராஜகம்பீர ....ராஜகுல திலக் காதல் இளவரசன் பராக் பராக் பராக் என்று கோரஸ் கேட்காத குறையா....ராஜ நடை போடுறது இருக்கே...அடபோங்க.
இதைவிட இன்னொரு கூத்து இருக்கு. ரோட்டிலே, தியேடர்லே, பஸ்சுல எங்கே பார்த்தாலும் அழகு பொண்ணுங்க அணிவகுத்து நிற்கும்.
அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகி கூட்டமாவே இருக்கும். பார்க்கிற இடத்திலேயே பரிசம் போடலாமான்னு கேட்கிற மாதிரி அத்தனை பொண்ணுங்களும் அழகு ரம்பைதான்.
இதில் சிலர் விதிவிலக்காய் இருப்பாங்க. நாயா பேயா ரோட்டிலே அலையாம,முறையா பொண்ணு பார்த்து கல்யாணம் செய்யணுன்னு நினைக்கிற குருப்.
அங்கே அலைஞ்சு இங்கே அலைஞ்சு ஜாதகம் வாங்கி, ஜாதகம் பார்க்கிற ஜோசியர் குழப்பத்துக்கெல்லாம் ஈடு கொடுத்து, பொறுமை காத்து, சரி பொருத்தமெல்லாம் ஓகே...செய்முறை சீர்வரிசையும் நாம எதிர் பார்க்கிற மாதிரி இருக்கு என்ற தகவலையும் உறுதி படுத்திக்கொண்டு, பொண்ணு பார்த்துட்டு வந்துட்டா கெட்டி மேளம் கொட்டிடலாம்ன்னு முடிவு பண்ணி, ஒரு போர்நாட்சவனை பிடிச்சு ஊரையே கூட்டிகிட்டு போனா...
அங்கே பொன்னம்பலத்துக்கு பொம்பளை வேஷம் போட்டமாதிரி இருக்கும். மனுஷன் விக்கித்து போய் வருவார்
ஐயா.. நான் கல்யாணம் காட்சி இல்லாம மாப்பிள்ளை வினாயகராவே இருந்துடுறேன்னு முடிவே செய்துடுவார்.
சரி ...
அழகு
எது அழகு?
அழகு என்பது அங்கத்திற்கு சொல்லப்படும்
அடையாளமா?
அல்லது
பிடித்தமான என்ற சொல்லுக்கு
உடுத்தி பார்க்கிற உபசொல்லா?
அழகு
கர்ப்பம் சுமக்கிற மாதிரி
கர்ப்பை சுமக்கிற பெண்கள் அழகு
ராவண தேசத்தில்
ராமனாக இருப்பவன் அழகு
ஆட்சி பீட அதிகாரத்தில்
நேர்மையின் சாட்சியாக
இருப்பவன் அழகு.
உதவி செய்வதில்
கர்ணனாக இருப்பதை விட
மனித நேய மனிதனாக
இருப்பவன் அழகு.
அழகு இன்னும் இருக்கிறது

அழகு - அருமை ! பகிர்வுக்கு நன்றி !
ReplyDeleteஅழகு நிலையற்றது
ReplyDeleteகணத்திற்கு கணம்
மாறிக்கொண்டிருக்கும்
மனதின் தன்மையைப் பொறுத்தது
இந்த உலகம் அழுகும் பொருளை
அழகு என்று நம்பி மோசம் போய்க்கொண்டிருக்கிறது.
இதைதான் பச்சையாகச் சொன்னார்
ஒரு பாட்டில் "பட்டினத்தார்"
வட்ட முலை என்று வற்றும் தோலை
மனிதர்கள் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்று
அழகிய மலர் ,வாசம் வீசும் மலர்
உலர்ந்து மண்ணில் விழுந்து மண்ணாகிவிடும்
அதுவே சேற்றில் விழுந்தால் அழுகி நாற்றமடிக்கும்
நம்முளே இருக்கும் அழியாப் பொருள்
என்றும் அழுகாத பொருள்
நம்முடைய ஆன்மா
நம் உடல் மறைவதற்குள்
அதை அறிந்துகொள்ளவேண்டும் .