ads

Friday, 1 June 2012

சாமி ஆடுறாங்களே உண்மையா?


எங்கள் ஊரில் நடந்த ஒரு உண்மை சம்பவம். 

ஒரு பிரிவினரின் குலதெய்வ பூஜை. 

குலசாமி எது..? 

மதுரை வீரன். அந்த பிரிவினரின் பங்காளி வகையாறாக்கள் ஓன்று கூடி சித்திரை மாதத்தில் விழா எடுப்பார்கள். 

இது ஒண்ணும் ஊரையே கூட்டி காட்டுகிற விழா அல்ல. அவர்கள் குடும்ப சகிதம் ஓன்று கூடுவார்கள், தங்களுக்கு வேண்ட பட்டவர்களை அழைப்பார்கள். வேண்டுதல் இருந்தால் ஆட்டு கிடா வெட்டுவார்கள். 

குலதெய்வ பூஜை என்றால் பூசாரியின் சாமியாட்டம் இல்லாமல் இருக்குமா. சாமி வந்துதானே கிடாவெட்ட வேண்டும்.

கடந்த சித்திரையில் வந்தது பூஜை.  மூன்று கிடா வெட்டுவதாய் வேண்டுதல். 

ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சாமியாட்டத்திற்கு முன்பு மதுரை வீரன் கதையை உடுக்கை அடி பாடகர் சொல்வார். அது கிராமிய கலை நிகழ்ச்சி போல் கேட்க சுவாரிசயமாக இருக்கும்.

பூஜை ஏற்பாடுகள் தடபுடலாய் நடந்து கொண்டிருக்க, உடுக்கையடி பாடகர் கிடாவெட்ட சாமியை அழைக்க பாடுகிறார். 

யார் மேல் சாமி வருமோ அவர் தயாராக நிற்க, அவர் முகத்திற்கு முன்பு, ஒரு மண் சட்டியில் நெருப்பு வளர்ந்து அதில் சாம்பிராணி புகையை போட்டு, அந்த புகையை சாமியாட  தயாரக நிற்றவரின் முகத்தில் பிடிக்கிறார்கள். 

ஆனால் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. அதாவது சாமி வரவில்லை. முயற்ச்சி தொடர்கிறது. 

எவ்வவளவு நேரம்? 

இரண்டு மணிநேரம் கடந்து விட்டது. அந்த ஆசாமி மீது சாமி வரவில்லை. 

இது ஏதோ சாமி குத்தம், அதான் சாமி வரலை என்று வயதான பெரியோர்கள் முனுமுனுக்க தொடங்கி விட்டார்கள். 

இந்த இடத்தில தான் ஒரு சுவாரசியமான விஷயம் இருக்கு. அவர் பெயர் தர்மலிங்கம். தி.மு. கவில் முக்கிய புள்ளி. 

அவரும் அந்த பூஜைக்கு முக்கிய அழைப்பாளர். கறிசோறு என்றதும் குவாட்டர் சகிதம் வைத்துவிட்டார். 

கட்டிங்கை போட்டு கரி சாப்பாடுன்னா நல்லாதானே இருக்கும். ஆனால்.... நேரம் தான் ஆகி கொண்டிருக்கிறதே தவிர, கிடா வெட்டியபாடு இல்லை.

அதான் சாமியே வரலையே?

உடுக்கையடி பாடகர் பாடி பாடி களைத்தும் போய் விட்டார். ஒரு கட்டத்தில் அடித்த அடியில் உடுக்கையும் கிழிந்து விட்டது.

இப்போது வீரன் கதையை நிறுத்தி விட்டு தன் சொந்த கதையை பாட தொடங்க்கி விட்டார். 

உடுக்கை யல்லோ கிழிந்து போச்சு..

ஆமாம் ஆமாம் (இது பின் குரல் கொடுப்பவர் )

சாமி இன்னும் வல்லை.... வல்லை..

ஆமாம் ..ஆமாம்...

பார்த்தார் தர்மலிங்கம். இப்படியே போனால் கரி சாப்பாடு கிடைக்காது என்று யோசித்தவர் உடன் காரியத்தில் இறங்கினார்.

ஏய்..என்று சாமி வந்தது போலவே சத்தமிட்டு எழுந்தார். ரெண்டு குதி குதித்தார், அப்படியே ஓடிபோய் கிடா வெட்டும் கத்தியை எடுத்தார்.

 சாமியாட நின்றவர் கையில் கொண்டு போய் கொடுத்து விட்டு.... மீண்டும் ஏய்...என்று பெரிய சவுன்ட் கொடுத்து விட்டு போய் சாய்ந்து விட்டார். அதாவது சாமி மலை ஏறிடுச்சாம்.

அப்பறம் என்ன சாமி உத்தரவு கிடைத்து விட்டது என்று கிடா வெட்ட பட்டு சமையல் தொடக்கி விட்டது.  

அடுத்து....சாமியே வராதவருக்கு இப்போது அருள் வந்து விட்டது. அவர் குறி சொல்ல தொடங்கி விட்டார்.

ஏலே...முத்துசாமி...உன் பெரியகாளைக்கு ஆபத்துடா.

ஐயா.. சாமி.. என்ன சொல்றே? கறிவேப்பில்லை கொத்து மாதிரி ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு வைச்ருக்கேன். நீதான் சாமி காப்பாததணும். 

ஏய்.. அவன் என் குஞ்சுடா..நான் பாத்துகிறேன். எனக்கு என்ன செய்வே.

 சாமி என்ன சொன்னாலும் செய்றேன்.

ஒரு திங்களுக்குள்ளே பறவையில பத்தும், உருளையில 108 ம் தருவாயாடா...

தர்றேன் சாமி.

போடா நான் பாத்துகிறேன் உன் பெரிய காளையை.

அந்த சாமியாடி மிஸ்டர் பொதுசனத்துக்கிட்டே பேசிய வசனம் தான் இது.

இப்ப சொல்லுங்க இந்த சாமி உண்மையா?


இந்த சாமியை விடுங்க. பொதுவா சாமியாடுவது என்பது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. மற்றும் நம்பிக்கை. இப்படி குறி சொல்லுபவர்களும், சாமியாடுபவர்களும் ஊருக்கு ஊர் பல்வேறு கெட்டப்பில் இருக்கிறார்கள். நம் ஆராட்சி அதுவல்ல. இது உண்மையா?

இது சுத்த கம்பக்...என்கிறார் பாரதிமோகன்.

kurumoorthi 

அதெல்லாம் சும்மா. ஏமாற்று வேலை- குருமூர்த்தியின் கருத்து.

balamurugan

மூடநம்பிக்கை - இது பாலமுருகனின் அபிப்பிராயம்.

aanadhanarayanan

ஏமாற்றுவேலை - ஆனந்நாராயணனனின் பதில்.

kavi
சரியாய் தெரியலை - கவியின் கருத்து
kavviya
மனுஷன் மேல வர சாமிக்கு கிறுக்கா- காவியா

இப்படி எல்லோருமே அரைகுறை நம்பிக்கையில் தான் இருக்கிறார்கள். இருந்தும் இந்த மூடநம்பிக்கை முற்றிலும் மாறவில்லை.

பொதுவா சாமியடுறது என்பது பாதி பொய். மீதி பாதி என்பது ஒரு விதமான மன நோய் என்கிறார் மனநல மருத்துவர்.

மனம் அதீதமான ஒரு நம்பிக்கைக்கு உள்ளாகும் போது, தன்னை அறியாமல் ஒரு உணர்வில் உந்த படுகிறான். அதன் வெளிபாடுதான் ஆட்டம்.

ஆனால் அந்த உணர்வு ஒன்றிரண்டு நொடிகளில் மாறி விடும். அப்படி மாறாமல் இருந்தால் ஓன்று மன நோயாக இருக்க வேண்டும். அல்லது போலியாக நடிக்க வேண்டும். என்று அடித்து சொல்கிறார்.

ஆக அருள் என்பதும், சாமி விளங்குது என்பதும் போலியாக சித்தரிக்க படும் செய்தி. மிகைபடுத்தபடும் கற்பனை. அதில் உண்மை இல்லை என்பதுதான் உண்மை.



1 comment:

  1. சாமிகள் ஆடுவது கிடையாது

    சாமி அனைத்தையும் ஆட்டிவைக்கும் சக்தி

    ஆசாமிகள்தான் ஆமாம் சாமிகளை சுற்றி வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள்.

    இது தீர்க்க முடியாத தொற்றுநோய்.

    எனக்கேன் வம்பு .ஏதாவது சொன்னா தெய்வக் குற்றம் என்று நம்மை மன நோயாளிகளாக்கிவிடுவார்கள்

    நம் அறிவை மழுங்க செய்துவிடும் அவர்கள் போடும் கூச்சலால் நமக்கும் சாமி வந்து அவர்களுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்துவிடுவோம்.

    பாடுவோர் பாடினால் பாடத் தோன்றும்
    ஆடுவோர் ஆடினால் ஆடத் தோன்றும் அதுபோல்தான் இந்த நிகழ்வுகளும்

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...