Follow by Email

Friday, 8 June 2012

இறைவன் எங்கிருக்கிறான்?

புராணங்கள் பதினெட்டு என்பர். அந்தந்த தெய்வங்களின் பெருமையை நிலை நாட்டுவதற்காக புராணங்களில் பல கதைகள் கூறப்பட்டுள்ளன.  

அக்கதையில் கூறப்பட்டுள்ள மையக் கருத்துகளில் பல உண்மைகள் பொதிந்துள்ளன. நாம் ஒரே ஒரு கதையை மட்டும் ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம். உலகையும் உலக உயிர்களையும் இயக்குகிற மூர்த்திகள் மூவர்.

ஒரு சமயம் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் தானே பெரியவன் என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. யார் பெரியவன் என்ற போட்டியில் இருவரும் சிவனிடம் சென்று தங்கள் தரப்பு வாதத்தை வைக்கிறார்கள்.

நீதிக்கரசர் சிவன் இருவருக்கும் சோதனை வைக்கிறார். தனது அடியையும், முடியையும் யார் கண்டு பிடிக்கிறார்களோ அவர்களே சிறந்தவர் என்பது தான் போட்டி.

திருமால் பன்றி உருவம் எடுத்து பூமியை துளைத்து கொண்டு போகிறார். பிரம்மனோ அன்னம் வடிவெடுத்து மேலே போகிறார்.

திருமால் பாதாளம் வரை போயும் திருவடியை காணாமல் வந்து தந்து தோல்வியை ஒப்பு கொள்கிறார்.

மேலே சென்ற பிரம்மாவோ சிவனின் முடியை காணாமல் தாழம் பூவை துணைக்கழைத்து பொய் சாட்சி சொல்ல வைத்து, சிவனின் முடியை பார்த்ததாக பொய் கூறி அதற்கான தண்டனையை பெறுகிறார். இது கதை.


நமது ஹிந்து மதத்தின் தோற்றத்திற்கு காரணமாக இருந்தவர்கள் சிலர். பொய்யையும் புனை கதைகளையும் பரப்பி, தம்மையும் தன் இனத்தையும் வளர்த்து கொண்டவர்கள் சிலர்.

அனல்வாதம் புனல்வாதம் செய்து பொது தொண்டையே தம் வாழ்க்கையாக மாற்றி ஹிந்து மதத்தின் பெருமையை நிலை நாட்டி கொண்டவர்கள் பலர்.

மிக மிக அதிகமாக படித்து விட்டு வேதாந்தம், சித்தாந்தம், தத்துவம் பேசி தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி, குழப்பிய குட்டையில் மீன் பிடித்தவர்கள் சிலர்.

பதினெண்சித்தர்கள், இராமலிங்க சுவாமிகள் போன்று உலக மக்களுக்கு உண்மையை உணர்த்தி அவர்களை நல வழிப்படுத்த வந்தோர் சிலர்.

இப்படி ஏராளமான பிரிவினரை நம் இந்து மதத்தில் காணலாம். இவர்கள் அத்தனை பேருமே இறைவனை பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை பாப்போம்.


இறைவன் எல்ல இடத்திலேயும் ஒளிவெள்ளமாக நிறைந்திருக்கிறான் என்கிறார் தாயுமானவர்.

அவன் ஆகாயமாகவும், பூமியாகவும், காற்றாகவும், ஒளியாகவும், நம் உடம்பாகவும், உடம்பினுள் உறைந்திருக்கிற உயிராகவும் அனைத்துமாய் இருக்கின்றான் என்றார் மாணிக்கவாசகர் பெருமான்

எல்லா உலகங்களையும் படைத்தும் நடத்தியும் அழித்தும் ஆகிய முத்தொழில்களை விளையாட்டுபோல் செய்கிறவனே இறைவன் என்கிறார் கவிசக்கரவர்த்தி கம்பன்.

ஆதியும் நடுவும், முடிவுமாய் நின்றவன் என்கிறது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வாரின் பாரதம்.

ஆதிசங்கரரின் அத்வைத கொள்கையும் இதைத்தான் வலிவுருத்துகிறது.


இதைதான் சித்தர்களும் கடுவெளிக்கு முடியில்லை. அடியும் இல்லை என்றார்கள்.

அப்படியானால் இறைவன் என்பது யார்?

ஒரு வேலை பிரபஞ்சமாக இருக்குமோ.

இனி பிரபஞ்சத்தை பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். இந்த பிரபஞ்சம் முழுவதும் ஹைட்ரஜன் வாயு நிறைந்திருக்கிறது.

அதன் அணுக்கரு மாற்றம் அடைந்து அது பல வாயுக்களாக பெருகி பின்னர் விரிவடைந்து பின்னால் இறுகி திடீர்ரென்று பெரிய வெடிப்பாக வெடித்து இப்பிரபஞ்சம் உருவாயிற்று என்கின்றனர்.

இதை BIG BANK THEROY என்பார்கள். இந்த பிரபஞ்சத்தில் ஆயிரகணக்கான அண்டங்களை தன் தொலைநோக்கியால் கண்டறிந்தவர் ஹப்பின் என்ற விஞ்ஞானியாவார்.

அவர் இந்த பிரபஞ்சத்திற்கு தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை அது ஆதி அந்தமற்றது.

பிரபஞ்சம் தோன்றுகிறது வளர்கிறது பின் மறைகிறது. இப்பிரபஞ்சம் நிரந்தரமானது, அது எல்லையில்லாதது என்கிறார் விஞ்ஞானி  ஹாய்ஸ்.

இப்பிரபஞ்சம் எப்போது தோன்ற்யது?.

எப்போது முடியும்?

இப்பிரபஞ்சத்தின் எல்லைஎது ?

எங்கே ஆரம்பம்?

எங்கே முடிவு?

இதுவரை எந்த விஞ்ஞானமும் சரியான தீர்வை சொல்லவில்லை. விஞ்ஞானிகள் சொல்கின்ற கருத்துகள் அனைத்தும் உத்தேசமானதே அன்றி அவை உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகள் அல்ல.

அடிமுடி கதைக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கடவுளுக்கும் ஒரு தொடர்பு உண்டு..

நாம் அனுபவத்தில் ஒரு நாளில் பாதியை பகலாகும்.  மீதிப் பாதியை இரவாகவும் காண்கிறோம்.

தமிழ்நாட்டில் எல்லா பஞ்சாங்கங்களிலும் சூரியன் உதயம் சூரியன் மறைவு என போட்டிருப்பார்கள். ஆனால் உண்மையில் சூரியன் தோன்றுவதும் இல்லை. மறைவதும் இல்லை. இதுதான் நிரந்தரமான உண்மை.

அப்படியானால் சூரியன் தோற்றமும் மறைவும் பொய்யா? இல்லை. அதுவும் உண்மை எப்படி

1 .சூரியன் தோற்றம் மறைவு -ஒரு தற்காலிக உண்மை.

2 .சூரியன் என்றைக்கும் தோன்றுவதும் இல்லை, மறைவதும் இல்லை. இது நிரந்தர உண்மை.

இதைப்போல் இப்பிரபஞ்சம்தான் கடவுள், கடவுள்தான் பிரபஞ்சம் என்பது தான் நிலையான உண்மை. இதுதான் ஆன்மிகத்தில் முதல் நிலை.

அப்படியானால் நமது மும்முர்த்திகள்?

இப்பிரபஞ்சத்திற்கு நம் முன்னோர்களாலும், ரிஷிகளாலும், ஞானிகளாலும்  கொடுக்கப்பட்ட ஒரு குறியிடு அல்லது உருவம்.

இந்த உண்மையை நீங்கள் உணரும் போது பெருமாளின் தரிசனம் கிட்டும். முப்பத்து முக்கோடி தேவர்களின் தரிசனம் கிட்டும்.

இல்லை எனில் நீங்களும் உங்களது ஜீவனும் பக்குவ நிலையை அடைய இன்னும் சில காலம் ஆகும் என்பதுதான் உண்மை.

PKS


1 comment: