இது 14 நூற்றாண்டின் கதை.
மகாசூரி என்பது அவள் பெயர். மன்னர் குலத்துமரிகொழுந்து. பேரழகி. எந்த மன்னர் குலம்?
மலேயா என்று அழைக்கப்பட்ட மலேசியாவின் கெடா மாநில மன்னரின் மகள். அந்த காலத்திலேயே அழகி போட்டி நடந்திருந்தால் மகாசூரியும் கலந்து கொண்டிருந்தால் நிச்சயம் பரிசை வென்றிருப்பாள்.
அப்பேற்பட்ட பேரழகி. இளவரசியாக இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே. அவளுக்கும் ஒரு மனசு உண்டுதானே. குமரிபெண்ணின் உள்ளத்திலே குடி இருக்க நான் வரவா என்று கேட்டானோ என்னவோ.. ஒருவன் குடி வந்தான் காதல் என்ற பெயரால்.
வந்தவன் எந்த நாட்டு இளவரசன் என்றதானே நினைக்கிறீங்க. அதான் இல்லை.
சாதாரண போர் வீரன். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உத்தரவு இளவரசி என்று கை கட்டி வாய் பொத்தி நிற்க வேண்டியவன்.
காதல் தான் குலம் கோத்திரம் எல்லாம் பார்பதில்லையே. காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்தது. காதலர் இருவருக்கும் இடையே வளர்ந்த அன்பு ஒரு கட்டத்தில் எல்லை தாண்டியது.
எஸ்....நீங்கள் யோசிப்பது புரிகிறது. காதலர்கள் கட்டிலை பகிர்ந்து கொள்கிற அளவிற்கு போய் விட்டார்கள். விளைவு...... மகாசூரி கர்ப்பமுற்றாள்.
காதலை வெளியே தெரியாமல் காத்தவளுக்கு கர்ப்பத்தை காக்க முடியவில்லை.
இந்த செய்தியை அறிந்த மன்னருக்கு கோவம் கண்மண் தெரியாமல் வந்தது.
தகுதி இல்லாமல் வந்த காதலுக்கு தண்டனை தர வேண்டாமா? அது மகளாக இருந்தால் என்ன? மக்களாக இருந்தால் என்ன? இரண்டும் மன்னரை பொறுத்தவரை ஓன்று தான்.
குற்றவாளிகளாக கூனி குறுகி நின்றார்கள் காதலர்கள். இளவரசிக்கு இது தேவையா என்கிற மாதிரி மக்களும் மவுனமாக நின்றார்கள்.
அரியணையில் அமர்ந்த அரசர் அதிகம் பேசவில்லை. இருவருக்கும் மரண தண்டனை. கை நரம்புகளை வெட்டி ரெத்தம் வடிய வடிய உயிர் பிரியட்டும் இதுதான் மன்னர் உத்தரவு.
கனத்த மனதோடு மன்னர் எழுந்து போனார்.
அவர் உத்தரவு படி தண்டனை நிறைவேற்றப்பட்டது. கை நரம்புகள் துண்டிக்க பட்டன. மயங்கி விழுந்தார்கள் காதலர்கள்.
உயிர் பிரியும் அந்த கடைசி வினாடியில் அவள் வாயில் இருந்து மந்திரம் போல் வார்த்தைகள் வந்தது.
என்னை வாழவிடாத இந்த நாட்டில் ஏழு தலைமுறைக்கு யாரும் இல்லாமல் போகட்டும் என்று சபித்தாள்.
உயிர் பிரியும் கடைசி நேரத்தில் விடும் சாபம் கடவுள் விடும் சாபம் மாதிரித்தான். அவள் விட்ட சாபத்தின் படி அந்த அரச வம்சம் கலை இழந்தது. இயற்க்கை பொய்த்தது. நாட்டில் வறட்சி தாண்டவமாடியது.
நாட்டை விட்டு மக்கள் நாடோடியாக வெளியேறினார்கள். மனித நடமாட்டம் இல்லாத இடமாக மாறியது அந்நாடு. அதுதான் இன்று லங்காவி என்று செல்லப்படும் இடம்.
துன்மகாதிர் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டிட பணிகள் துவக்கப்பட்டு இன்று பெரும் சுற்றுலா ஸ்தலமாக வளர்ந்து நிற்கிறது.
ஏழு தலைமுறைக்கு முன்னால் இல்லாத மலை தொடர்கள் இன்று இருக்கிறது.
கர்ப்பிணியாக உயிர் துறந்த இளவரசி நினைவாக மலைதொடரே கர்ப்பிணி பெண் படுத்து இருப்பது போல் மலை வளர்ந்து நிற்கிறது.
உண்மையில் இயற்க்கை எழில் கொஞ்சும் இடம். வாழ்கையில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய இடம்.
லங்காவி ஆங்கில வடிவம்
லங்காவி ஆங்கில வடிவம்
நல்ல கதை ! படங்கள் அருமை !
ReplyDeleteதினமணி மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !