Follow by Email

Monday, 18 June 2012

மனைவி ஒரு மந்திரிதானே.


பெண்கள் நாட்டின் கண்கள். எல்லோரும் சொல்றாங்க. ஆத்தா புண்ணியவதிகளை பற்றி அதிகம் நான் எழுதினது இல்லை. அதற்க்கு இட ஒதிக்கீடு பிரச்னைதான் காரணம்.இப்போ அவர்கள் சாய்ஸ்.

ஒரு உண்மையை சொல்லனும்னா ஏனோதானோன்னு இருக்கிறதிலே ஆண்கள் வகையறாதான் அதிக மார்க் வாங்குறாங்க. ஆனால் கட்டு சிட்டா குடும்பம் நடத்துறதில பெண்கள் எபோதுமே கில்லாடிதான்.

வரவுக்கேற்ற செலவு செய்யறதுல மட்டும் அல்ல, செலவுங்குற வார்த்தைலேயே சேமிப்பையும் சேர்த்து கொள்வதில் படு சமர்த்து.

இவ்வளவு புகழாரம் சூட்டினாலும் இதிலேயும் ஒன்றிரண்டு ஊதாரிகள் இருக்கும்.

பொதுவா பொண்ணை பெத்தவங்க பொண்ணு வயசுக்கு வந்துட்டாலே வயத்திலே நெருப்பை கட்டிக்கிட்டு இருப்பாங்க. 

இந்த நெருப்பை எந்த இளிச்சவாயன் கிடைப்பான்னு பார்த்து அவன் தலைலே கட்டி விட்டு, அந்தாளு பாவம் திண்டாடி தெருவுலே நிற்பான்.

நீ எக்கேடோ கெட்டு ஒழி. அடுத்த வீட்டுக்காரி பட்டு புடவையா எடுத்து அடுக்கிறா...நகை நட்டா சேர்க்கிறா..நான் கையாலாகாத புருஷனுக்கு கழுத்தை நீட்டிட்டு கண்ணீர் வடிக்கிறேன்னு, உள்ள நிலவரம் தெரியாம தொல்லை பண்ணும். சரிதானே.

ஆனா இந்த இந்த மாதிரி குணாசியம் உள்ள பொண்ணுங்க குறைவு.  வீட்டு நிர்வாகத்திலே டோட்டல் கையிலே எடுத்துகிட்டு, அச்சாணி மாதிரி இருக்கிற பொண்ணுங்களுக்கு ஆதி காலம் தொட்டே ஒரு அடைமொழி வச்சிருக்காங்க. 

அது பெண் புத்தி பின் புத்தி.

நானும் விடலை. அறிந்தவங்க...தெரிஞ்தவங்க பல பேர் கிட்டே என்னங்க சமாச்சாரம், இதுக்கு என்ன அர்த்தம்னு கேடடு பார்த்தேன். 

அதா... பொம்பளைங்க எதையுமே யோசிக்காம பேசிட்டு பின்னாலே முழிப்பாங்க என்றார்கள்.

இந்த கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. இதில் ஒரு துளி கூட உண்மையில்லை. பெண்ணின் பருவ வளர்ச்சி எப்படி வேகமாக இருக்கிறதோ அதைப்போல அவர்களின் அறிவு முதிர்ச்சியும் வேகமானது. 

இருபது வயது பெண் தன் நிலை, தன் சுற்றத்தார் நிலை, எதிர்கால வாழ்க்கை என்று அனனத்து விஷயங்களையும் யோசிக்க முடிகிறது. 

ஆனால் ஆண்கள்?

இருபது வயதில் எதிர்காலத்தை பற்றி யோசிப்பவர்கள் எத்தனை பேர். உருப்படாதவன், தண்டசோறு, செக்கொலக்கை, தடிமாடு, இப்படி பல்வேறு பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்று கொண்டு வேற்று கற்பனைகளோடு சுற்றி திரிகிற இளைஞர்கள் ஏராளம்.

சரி மேட்டருக்கு வருவோம். பெண் புத்தி பின் புத்திக்கு ஒரு ஒரு உதாரணத்தை பார்ப்போம். 

நீங்க வீட்டிலே இருக்கீங்க. உங்களுக்கு மிக நெருக்கமான ஒருத்தர் உங்களை தேடி வர்றார். 

எதுக்கு வர்றார்? 

உங்க கிட்டே ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கிகிட்டு போகலாம்ன்னு வர்றார். வந்ததும் மேட்டரை ஆரம்பிக்காம பல பீடிகை.

இது அத்தனையும் கவனிச்சுக்கிட்டு இருக்கிற உங்க வீட்டுக்காரம்மா.. ஜாடையா உங்களை உள்ளே கூப்பிடுது  

உங்களுக்கும் பழக்க தோஷம்தானே பட்டுன்னு எழுந்து உள்ளே போறீங்க. 

இத பாருங்க... உங்க பிரண்டு மென்னு விழுங்குறதை பார்த்தால் கடன் வாங்க வந்த மாதிரி தெரியுது. அப்படி ஏதாவது கேட்டால், நானே சிரமத்திலே இருக்கேன்னு சொல்லுங்க. 

வள்ளல் பரம்பரை மாதிரி எடுத்துகிட்டு நீட்டாதிங்க. அந்த மனுழன் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிக்கிட்டு திரியுறான் சரியா?

பூம்பூ மாடுமாதிரி தலையை ஆட்டிகிட்டு வந்தா... மனைவி ஊகித்த மாதிரி கடன் தான் கேட்டார். 

ஆனால் உயிர் நண்பன் கேட்கும் போது இல்லைன்னு சொல்ல முடியலை. கொடுத்தீங்க . ஆனால் மனைவி சொன்னதுதான் உண்மையாச்சு. 

வாங்கி ஆறுமாசம் ஆகியும் இன்னும் திருப்பி கொடுக்கலை. இத்தனைக்கும் மனுஷன் ஒரு வாரம் தான் டயம் கேட்டார்.

இப்போ சொல்லுங்க யாருக்கு பின் புத்தி.இந்த பழமொழி எதுக்கு வந்துச்சு தெரியுமா? 

பின்னால என்ன நடக்கும் என்பதை முன்னாலேயே யோசிச்சு அதுக்கு தகுந்த மாதிரி நடக்கிறது பெண்களோட குணம்.

இதுதான் காலபோக்கில் மருவி பெண் புத்தி பின் புத்தின்னு தவறா புரிந்துகொள்ள பட்டிருக்கலாம் என்பது என் கருத்து.  

யோசிச்சு பாருங்க... மனைவி ஒரு மந்திரிதானே.


No comments:

Post a Comment