இணையதளங்களின் வளர்ச்சியால் உலகம் சுருங்கிவிட்டது. நட்பு வட்டம் பெருகி விட்டது.
உலகத்தின் எந்த மூளையில் இருந்தாலும் அந்த கணமே தொடர்பு கொள்ள பல வழிகள்.
இன்று பேஸ்புக் இளைஞர்கள் மத்தியில் பிரபலம்.நல்ல நட்பை பெறுகிற இதில் சில தீய சக்திகளும் இருக்கிறது.
ஆபாச படங்கள் அனுப்புவது. விடியோக்கள் அனுப்புவது. ஆபாச வக்கிர சாட்டிங்க்க்கு அழைப்பு விடுப்பது என்று சிலர் தொடர்ந்து செய்து வருவது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் எப்படி தடுப்பது என்று புரியாமல் இருக்கலாம். அல்லது சரியான பாடம் புகட்டவேண்டும் என்று கூட நினைக்கலாம்.
ஆனால் எப்படி அதை செய்வது. யாரிடம் புகார் தருவது என்பது புரியவில்லையா? இதோ உங்களுக்காக....
உங்களுக்கு தொல்லை தரும் நபர் எதாவது ஒரு போலியான முகவரியில் இருக்கலாம். அல்லது போலியான புகைப்படத்திற்கு பின்னே ஒளிந்திருக்கலாம். அதை பற்றி நீங்கள் கவலை படவேண்டாம்.
உங்களுக்கு அவர் அனுப்பிய செய்திகள் உங்களிடம் இருக்கும்.அந்த பக்கத்தை புக் மார்க் செய்து வையுங்கள்.
செல்பொன்னில் இருந்து தகவல் அனுப்பினால் அவரின் நெட்வொர்க் தொடர்பான எந்த செய்தியையும் மறைக்க முடியாது.
கம்புட்டர் மூலம் செய்திகள் அனுப்பினாலும் எங்கும் ஓடி ஒளிய முடியாது.
அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது இணையதள குற்றங்களை விசாரிக்கும் சைபர் கிரைம் போலீஸுக்கு தகவல் சொல்வது.
இதற்காக நீங்கள் போய்த்தான் புகார் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடிதம் மூலமாகவோ, அல்லது இமெயில் மூலமாகவோ நீங்கள் புகார் சொல்லலாம். உடன் நடவடிக்கை எடுக்க படும்.
அந்த முகரியை கிழே தருகிறேன். உங்களுக்கு தொல்லை தரும் இணையதள கொசுக்களை ஒழிக்க இது ஓன்று தான் வழி. முகவரி இதோ
Cyber Crime Cell
CB, CID
Chennai.
E-mail: cbcyer@tn.nic.in
No comments:
Post a Comment