பூமியில் பிறவியெடுக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் கர்மவினைகளின்படியே , நட்சத்திரமும் யோகமும் அமைகின்றன.
உண்மையைச் சொல்லப்போனால் கர்மவினை ஏதும் இல்லாதவன் பூமியில் பிறப்பதில்லை. கர்ம வினையின்றி எவரும் பூமியில் பிறவியெடுப்பதும் இல்லை.
எனவேதான் பூமியைக் கர்மபூமி என்கிறோம்.
நம்முன்னோர்கள், வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள், சாஸ்திரங்கள் , புராணங்கள் போன்றவற்றை ஆராய்ந்து கர்ம வினைகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வகுத்து வழிகாட்டியிருக்கிறார்கள்.
இனி 27 நட்சத்திரங்களையும், அவற்றின் அதிபதியான தேவதைகளையும் காண்போம்.
அசுவனி - 27 நட்சத்திரங்களுக்குள் முதன்மையானது அசுவனி நட்சத்திரம். அசுவனி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கூத்தனூரே அதிர்ஷ்ட தலமாகும். அங்கு குடி கொண்டுள்ள ஸ்ரீசரஸ்வதியே அதிர்ஷ்ட தெய்வமாகும்.
பரணி நட்சத்திரம்- இரண்டாவது நட்சத்திரமாய் பரணி நட்சத்திரம் வருகிறது. இந்த நட்சத்திரத்தின் தேவதை தர்மதேவதையான யமன் இந்த நட்சத்திரத்தின் வடிவம் முக்கோணமாகும்.
கிருத்திகை- 3 வது நட்சத்திரமான கிருத்திகையின் தேவதை அக்னிபகவான். இதவன் வடிவம் நட்சத்திரக்கூட்டம்.
ரோகிணி- 4வது நட்சத்திரம் ரோகினி- இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை ‘பிரம்ம தேவர்’ ஆவார். இதன் வடிவமும் 8 நட்சத்திரங்களைக் கொண்ட நட்சத்திரக்கூட்டமாகும்.
மிருகசீரிஷம்- 5வது நட்சத்திரமான மிருக சீர்ஷத்தின் தேவதை சந்திரபகவான்’ ஆலலார். இந்த நட்சத்திரன் வடிவம் 3 நட்சத்திரக்கூட்டமாகும்.
திருவாதிரை - 6வது நட்சத்திரமான திருவாதிரையின் தேவதை ‘ருத்திரன்’ ஆவார். இதன் வடிவம் தாமரை மொட்டு போன்றது.
புனர்பூசம்- 7 வது நட்சத்திரம் புனர் பூசம். தேவதை புனர்வசு தேவதையான ‘அதிதி’ ஆவார். வில்லைப்போன்ற வடிவமுள்ள நட்சத்திரம்.
பூசம்- 8வது நட்சத்திரம் பூசம்- இதன் தேவதை பிரஹஸ்பதி- வடிவம் மாலை வடிவில் நட்சத்திரக்கூட்டம்.
ஆயில்யம்- 9வது நட்சத்திரமே ஆயில்யம்- தேவதை ‘ஆதிசேஷன்’ பாம்பு வடிவில் நட்சத்திரக்கூட்டம் இதன் வடிவம்.
மகம்- 10வது நட்சத்திரம் மகம்- தேவதை ‘பித்ரு.’ வடிவம் -ஊஞ்சல் போன்ற அமைப்பு.
பூரம்- 11வது நட்சத்திரம் பூரம். தேவதை- ‘அர்யமான் வடிவம்’ இரண்டு நட்சத்திர தோற்றம்.
உத்திரம்- 12 வது நட்சத்திரம் உத்திரம். தேவதை - பகன். இரண்டிரண்டு நட்சத்திரத் தொகுப்பு.
ஹஸ்தம்- 13 ஆவது நட்சத்திரம் ஹஸ்தம்- தேவதை- சூரியபகவான். வடிவம் 5 நட்சத்திரக் கூட்டம்.
சித்திரை- 14வது நட்சத்திரம் சித்திரம். தேவதை- ‘துர்வஷ்டர் விஷ்வகர்மா’ ஆகிய இருவராவர். வடிவம் - முத்து.
சுவாதி- 15வது நட்சத்திரம் சுவாதி. தேவதை - வாயு பகவான். வடிவம் மாணிக்கம்.
விசாகம் - 16வது நட்சத்திரம் விசாகம். தேவதை ‘இந்திரன்’, ‘அக்னி’. வடிவம்- சக்கரம்.
அனுஷம்- 17வது நட்சத்திரம் அனுஷம். தேவதை- ‘மித்ரன்’. வடிவம் 3 நட்சத்திரங்கள்.
கேட்டை- 18வது நட்சத்திரம் கேட்டை. இதன் தேவதை ‘இந்திரன்.’ வடிவம்- குண்டலம்.
மூலம்- 19 நட்சத்திரம் மூலம்- தேவதை ‘நிருருதி’. வடிவம் - அங்குசவடிவில் 6 நட்சத்திர தொகுப்பு.
பூராடம்- 20வது நட்சத்திரம் பூராடம். தேவதை அப ஜல தேவதைகள். வடிவம்- அரைவட்ட சந்திரன்.
உத்திராடம் - 21 ஆவது நட்சத்திரம். தேவதை ‘விச்வே தேவர்கள்’ . வடிவம்- நட்சத்திரங்கள் தொகுப்பு.
திருவோணம்- 22வது நட்சத்திரம். தேவதை ‘திருமால்’. வடிவம் - 4 நட்சத்திரங்கள் தொகுப்பு.
சதயம்- 24வது நட்சத்திரம் சதயம். தேவதை ‘வருணன்’. வடிவம்- கோளவடிவில் 100நட்சத்திரக் கூட்டம்.
பூரட்டாதி- 25வது நட்சத்திரம பூராட்டாதி. தேவதை ‘அஜன்’ அல்லது ‘ஏகபாதர்’. வடிவம்- சதுரவ வடிவில் 4 நட்சத்திரங்கள்.
‘உத்திரட்டாதி’- 26வது நட்சத்திரம் உத்திரட்டாதி. தேவதை ‘அஹர்புத்ரியன்’. வடிவம்- சம சதுர வடிவில் இரண்டிரண்டு நட்சத்திரங்கள். .
ரேவதி- 27 நட்சத்திரங்களுள் கடைசி நட்சத்திரம் ரேவதியாகும். இதன் தேவதை ‘பூஷா’. வடிவம் - மீன்
Ankita dave 10 min video and many more 100% working links click here
ReplyDelete