Follow by Email

Wednesday, 8 January 2014

பிரஸ்ன முறைகள்

உலகெங்கிலும் ஜோதிட நிபுணர்களால் அநேகவகையிலான ப்ரச்சின மார்கங்களை - உத்தியை கையாளப் பட்டு வந்திருப்பதை தெரியமுடிகிறது. 

பிராசீன மார்கங்களை (முதல்) காலங்களில் China, Tibet, Egypt, Mughal,& Western countries என்று உலகின் பல இடங்களிலும் அந்தந்த தேசத்திற்கேற்ப பிரச்னமார்க்கங்கள் இருந்தன.

 தற்பொழுதும் ஜோதிஷம், கபால ஜோதிஷம், எல்லாம் பிரசாரத்தில் உள்ளன. அதில் நம்பிக்கையுடன் கேட்பவர்களுக்கு நல்ல விடைகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இங்கு பாரத தேசத்தில் தட்சிண பாகத்தில் கேரளத்தில் ஜோதிடக் கலையில் பிரச்சன மார்க்கம் நிறைய பிரயோக ரீதிகளால் கணிக்கப்பட்டு கையாண்டு வருகிறார்கள். அதில் சில.

1. தாம்பூல பிரஸ்னம்
2. நிமித்த பிரஸ்னம்
3. தேவ ப்ரஸ்னம்
4. ஆரூட பிரஸ்னம்
5. அஷ்ட மங்கல்ய பிரஸ்னம்

இப்படி அநேக மார்க்கங்கள் வழிகள் சொல்லப்பட்டுள்ளன. அந்தந்தப் பெயர்களில் குறிப்பிடும்படியே இவை ஒவ்வொன்றும். செயல்பாடு ரீதியாக உள்ளன.

1. தாம்பூல பிரஸ்னம் (வெற்றிலை)

நிச்சயிக்கப்பட்ட நாளில், கோயில், குரு - கணபதி வந்தனங்கள் செய்து விஷயம் தெரிய வேண்டியவரால் எடுத்துக்கொடுக்கப்படும் வெற்றிலையை வைத்துக்கொண்டு, அதில் கிடைக்கும் கணிதத்தை வைத்து பாவ பலங்கள் சொல்லப்பட்டுவரும் முறை இது. 

தாம்பூல சக்யை, தாம்பூல வடிவு, நிமித்தம், நேரம், கணக்கிடும் வழி ஆகிய அனைத்தும் மிகத் துல்லியமாக இருக்கவேண்டும்.

2. நிமித்த பிரஸ்னம்

கேள்வி கேட்கப்படும் நேரம், முகூர்த்தம், ஹோரை, சந்தர்ப்பம், முதல் வாக்கியம், முதல் அட்ஷரம், தூதலட்சணம், காதில் வரும் செய்தி, அதன்பொருள், இயற்கையில் இருந்து வரும் சில அறிகுறிகள். இவை அனைத்தையும் மனத்தை ஒருநிலைப் படுத்திக் கொண்டு, ஆழ்ந்த சிந்தனையில் வைத்து கணித்து கேட்கப்படும் கேள்விக்கு விடை அளிக்கும் முறையே இது.

3. தேவ  பிரஸ்னம்:

மனிதர்களுக்கு ஏற்படும் அவஸ்தை, கஷ்டங்கள் ஆகியன போன்றே மனிதர்களால், அல்லது தேவகணங்களால் கட்டப்பட்டு தலைமுறைகளால் வழிபட்டுவரும் தேவாலயங்களுக்கு ஏற்படும் கஷ்ட - நஷ்ட - ரோகாவஸ்தையை ஜோதிட ரீதியாக இறையருளால் சொல்லப்படும், 

கணிக்கப்படும் செயல் முறை தேவ பிரஸ்னம். இதில் 12 பாவங்களையும், கோவிலில் ஒவ்வொரு விஷயத்தையும், நபர்களையும், செயல்முறைகளையும் கண்டறிய உதவுகின்றன. (கோயில்களுக்கும் ஜாதகம் அமைத்து தசாசந்தி தோஷம் கணக்கிடும் முறை உள்ளது).

4. ஆரூட பிரஸ்னம்

குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்களை, அதன் நிவாரணங்களைத் தெரிந்து கொள்ள குடும்ப பிரஸ்னமாக வைத்துக் கொள்வதே ஆரூட பிரஸ்னம். ஆரூடம் என்றால் வீடுஎன்றும் ஒருபொருள் உண்டு. வாஸ்துதோஷநிவர்த்தியும் இதில் வரும்.

5. அஷ்ட மங்கல்ய பிரஸ்னம்

கோயில், குடும்பம், ஸ்தாபனம், அரசு என்று ஒரு கட்டுப் பாட்டில் இயங்கிகொண்டிருக்கும் அனைத்திற்கும் மேலே கூறிய 3 (தாம்பூலம், ஆரூடம், நிமித்தம்) முறைகளால் விடை கிடைக்காமல் போனால் மட்டுமே அஷ்ட மங்கல்ய பிரஸ்னம் செய்து கொள்ளவேண்டும்.  இதுவும் மிகவும் தேவையுள்ளபோது மட்டும் கையாள வேண்டிய மிக சிரமமான முறை. 

இதில் அநேக விற்பனர்கள் கலந்துகொண்டு பலமுறைகள் கையாளப்பட்டு தேவஹிதம் தெரிந்துகொண்டு 8 கோணங்களிலும் சிந்தித்து சொல்லப்படும் முறையே இது. நிறைய விவாதங்கள் இதற்கு தேவைப்படும்.

மேலும் அஷ்ட மங்கல்ய பிரஸ்னம் செய்யும் போது முன்கூட்டியே நாள்கள், மற்றும் பஞ்சாங்கம் (வாரம், நட்சத்திரம், திதி, காணம், நித்யயோகம்) நிச்சயிக்கப்பட்டு செயல்பட்டாலும் ப்ரசன சமயம் சில தோஷங்கள் உண்டாகலாம். அவற்றையும் கணக்கில் கொண்டு தீர்க்கமான பலன்களைச்சொல்ல முடிகின்றன.

உதாரணமாக தேவபிரச்னமாக அஷ்ட மங்கல்ய பிரஸ்னம் செய்யும் போது
1. தேவகோபம்
2. தர்மதேவ கோபம்
3. சர்பபாதை
4. பித்ருதாபம், பித்ருகோபம்
5. பிரேத பாதை
6. திருஷ்டி பாதை
7. வாக்குதோஷம்
8. விவிபோஜனம்
9. சத்ருபாதை
10. வாஸ்துவைகல்யம் (ஸ்தானதோஷம்)
என்று அனைத்துவிதமான பதில்களும் கிடைக்க ஆராயப்படுகிறது.

யார் யார் செய்து கொள்ள வேண்டும்?

 யாரை அணுகவேண்டும்?

மிகவும் சோதனைகாலத்தில் மட்டும், கடினமான நோய்களுக்கு டாக்டர்களைப் போய் பார்ப்பதைப்போலவே பிரஸ்னம் செய்து கொள்ள வேண்டும். நாளும், பொழுதும் ஜோதிடர்களை மட்டும் நம்பியே வாழ்க்கையை ஓட்டிக் கொள்பவர்களுக்கும் சேர்த்துத் தான் சொல்கிறேன் - ஜோதிடம் என்பது சோதனை இடம் அல்ல, ஜோதிடர் இறைவனும் அல்லர். 

தெய்வத்தின் அருளால், அவருடைய நேரமும் காலமும் நன்றாக உள்ள பொழுதும், கேள்வி கேட்பவறின் விமோசன காலமுமாகி இருந்து, தெய்வ வாக்கின் படியுள்ள பரிகாரவழிகளைக் கடைபிடித்து வருபவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியே தெய்வக்ஞன் என்ற ஜோதிடர்.

ஜோதிடத்தில் பரிகாரமே அல்ல, அது தலையெழுத்து என்று கடும் வாக்கு வாதம் செய்பவர்களும் அநுபவங்களை வைத்து ஆராய்ந்து தெரிந்து கொண்டு விதியை மதியால் வெல்லலாம் என்ற நம்பிக்கையால் (மனித வாழ்வே - நம்பிக்கையில் தான் இயங்குகிறது) நிம்மதி கிடைக்கலாம்.

பணம் மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளவர்களைத் தவிர்த்து முழுவதுமாக விடை அளித்து அவர் கூறும் பரிகாரங்களை முழு மனத்துடனும், நம்பிக்கையுடனும் செய்து கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆராய்ந்து கேட்டுத் தெரிந்துகொண்டு விளம்பரத்தால் மட்டும் பிரபலமானவர்களைத் தவிர்த்துக்கொண்டு பிரஸ்னம் செய்து கொள்வது சிறந்த பலன் தரும்.
”ஸ்ரீ ஸ்கந்த உபாசகர்” பி.டி.ஜெகதீஸ்வரன் செல்:9659690395


No comments:

Post a Comment