Follow by Email

Monday, 27 January 2014

ஆற்றல்களை அள்ளித் தரும் அருள் சாதனங்கள்!!

உபாசனை சித்தி யோகம் பற்றி இதுவரை பார்த்து வந்த்தோம். அந்தத் தொடர் மிக நல்ல வரவேற்பைப் பெற்றது குறித்து மகிழ்ச்சி. இன்னும் ஏராளமான தகவல்கள் இருப்பதாலும் இன்னும் பல ரகசியங்களைச் சொல்லும்படி பல உபாசகர்கள் கேட்பதாலும் உபாசனை பற்றித் தொடர்ந்து எழுத ஞான ஸ்கந்த மூர்த்தியின் அருளால் முடிவு செய்துள்ளேன். 

அதில் உபாசகர்கள் பயன்படுத்தும் அருள் சாதனங்களைப் பற்றியும் அதில் உள்ள ரகசியங்களையும் தொடர்ந்து எழுதப் போகிறேன்.  பல வாசகர்கள் மனதார வாழ்த்தியதன் பலனே பல அரிய கட்டுரைகளைத் திறம்பட எழுதத் துணை செய்கிறது. 

பலர் உபாசனையைப் பற்றி பலவாறு சொல்லி இருந்தாலும் கடந்த பதினான்கு ஆண்டுகளாக எமது பதினாறு வயதிலிருந்து செய்த உபாசனையால் பெற்ற அனுபவத்தாலும், ஜீவ நாடி மூலம் கிடைக்கும் செய்திகளாலும் பல்வேறு விஷயங்களைத் திருவருள் சக்தி மூலம் பகிர்ந்து கொள்கிறேன். 

ஒருவரது ஜாதகத்தின் மூலம் உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் சித்தர்கள் எழுதி வைத்த நாடி மூலமோ அல்லது ஜீவ நாடி மூலமோ உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பது உடனடி பலனைத் தருவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது. 

ஏதெனும் ஒரு தேவதையைத் தொடர்ந்து உபாசிப்பதன் மூலம் உயர்ந்த வாழ்வை உறுதியாய்ப் பெறலாம். அதனால்தான் உயர்ந்த வாழ்வளிக்கும் உபாசனை சித்தி யோகம் என்று சொல்கிறோம். 

மனதை ஒருமுகப்படுத்தினால் ஏராளமான சக்திகளைப் பெற முடியும். அதற்கு உதவி செய்வது உபாசனை. யார் ஒருவர் குரு மூலம் சரியாக உபாசனை செய்கிறாரோ அவர் அஷ்டமா சித்திகளை அடைவதோடல்லமல் அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை பெறுவார். 

அப்படி மனதை அடக்குவது என்பது அவ்வளவு எளிமையானதல்ல. எனவெ ஏதாவது ஒரு உபாயத்தைப் பயன்படுத்தி உபாசனையால் ஏற்படும் அதிர்வுகளை எதேனும் ஒரு பொருளில் சேமித்து வைத்து அதை மற்றவர்களும் உப்யோகப் படுத்த வேண்டும் எனத் தீர்மானித்த சித்தர்கள் அருள் சாதனங்களை அனுபவத்தில் உபயோகம் செய்து பார்த்து அதை அனைவரும் கடைபிடிக்கும்படி உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தனர். 

விபூதி, எலுமிச்சை, ருத்திராட்சம், சங்கு, யந்திரங்கள், வெற்றிலை, தர்ப்பைப்புல், போன்றவை அருள் சாதனங்கள் எனப்படும். நாம் மந்திரங்களைத் தொடர்ந்து ஜபம் செய்யச் செய்ய அதன் அதிர்வுகள் மேற்குறிப்பிட்ட பொருட்களில் பதிந்து அதன் சக்திகளை வெளியிடும் அமைப்பில் இறைவன் அவற்றைப் படைத்துள்ளான். 

அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையதால் அவை அருள் சாதனங்கள் எனப் பெயர் பெறுகின்றன. நவக்கிரகங்களின் கதிர் வீச்சை பிரதிபலிக்கும் நவ ரத்தினங்கள், எண்கள், வண்ணங்கள் மற்றும் மூலிகைகள் போலவே நமது அருள் ஆற்றலை பிரதிபலிப்பது அருள் சாதனங்கள் ஆகும்.

எனவெ அனைத்து அருள் சாதனங்களையும் பயன்படுத்தி ஆத்ம சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தியானம் செய்யும் போது வருகின்ற அருள் நிலையை அப்படியே தேக்கி வைக்க அருள் சாதனங்கள் உதவும். 

தியானம் என்பது, மனதை இறைவனிடம் வைத்து, மனதில் இறைவனின் உருவத்தையே பதித்து, மந்திர ஜபம் செய்வது. தியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்து, தியானம் செய்வது சிறப்பு. ஜன சந்தடியோ, வேறு ஏதாவது சப்தமோ இருக்கக் கூடாது. 

ஏதெனும் ஒரு ஆசனத்தின் மீது அமர்ந்து தான் தியானம் செய்ய வேண்டும். பொதுவாக ஆசனமானது நமது ஆற்றல்களை புவி ஈர்ப்ப்பு விசை ஈர்த்துக்கொள்ளாமல் தடை செய்கிறது. எனவெ எந்த ஒரு பூஜை, அல்லது உபாசனை ஆனாலும் வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது. 

ஜபம் செய்ய நதிக்கரை, மலை, புனித தலங்கள், சுத்தமான காற்று வீசும் இடங்கள் சிறந்தவை. பசுத்தொழுவத்தில் செய்யப்படும் ஜபம் பல மடங்கு பலன் தருகிறது. இதை அனுபவபூர்வமக உணரலாம். 

ஜபம் செய்ய ருத்ராட்சம், மணிமாலை, தாமரை மாலை, பவழம் போன்ற மாலைகளும், முத்து மாலைகளும் உபயோகப்படுகின்றன.  முக்கியமாக, மனம்  இறைவனிடம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லமல் வெறும் மாலையை மட்டும் உருட்டிக் கொண்டு, உட்கார்ந்தபடி வேறு ஏதெனும் எண்ணிக் கொண்டிருந்தால், அது தியானமாகாது. 

இத்தனை விஷயங்களை கவனித்து ஜபம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மனம் அங்கும் இங்கும் அலை பாயும். குருவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மனம் தளராமல் ஜபம் செய்யச் செய்ய தாரணை சித்தியாகிறது. இப்படி பண்ணிரண்டு தாரணை சேர்ந்து தியானமாக மாறுகிறது. கீழ்க்கானும் வழிமுறையைக் கடைபிடித்தால் உபாசனயில் ஓரளவு வெற்றி பெறலாம்.

தொடரும் ....ஸ்ரீ ஸ்கந்த உபாசகர்” 
P.D.ஜெகதீஸ்வரன் MCA., M.Phil.,
செல்:9659690395

No comments:

Post a Comment