ads

Wednesday 29 January 2014

இதுதான் ஹிந்து கலாச்சாரம் !!

தமிழர் கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது... 

இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது..விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன ....

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. 

காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.

1 comment:

  1. // இதுதான் ஹிந்து கலாச்சாரம் !!//

    //தமிழர் கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது...//

    ஹிந்து கலச்சாரமா ? இல்லை தமிழ் கலாச்சரமா ?

    // இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது..விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .//

    இயந்திர உற்பத்தி அதிகரிப்பு, செலவு குறைப்பால் .. பொருள்ட்களின் விலை குறைகிறது . மக்களின் வாழ்க்கை முறையும் சேமிப்பு என்பதில் இருந்து, செலவு / இருக்கும் வரை அனுபவித்தல் என்பதில் மாறி வருகின்றது

    இதன் தொடர்ச்சியெ இவைகள் ..

    //முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன ....//

    டேபுள் இல்லாதால்..

    //சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. //

    சாப்பிட அதிகப்டசம் 1/2 மணி நேரம் ஆகுமா? உணவு செரிக்க 12 - 14 ஏன் ஒரு நாள் கூட தேவைப்படும். அது வரை சம்மணமிட்டு உட்கார்திருக்கலாமா?


    // காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.//

    தமிழ் ஹிந்து கலச்சார மக்கள் அப்படி தான் சாப்பிடதில் இருந்து 10 -12 மணி நேரம் கால் மடக்கி சுக ஆசனத்தி இருந்தார்களா?

    அப்படி இருந்தால் அடுத்த வேளை தட்டு எடுத்துகொண்டு பிச்சைக்கு தான் போயிருக்க முடியும்...

    கலச்சாரம் தமிழ் இந்துன்னு மொத்தமா கும்மியடிகாமல்...

    முதலில் கலாச்சரம் என்றால் என்ன...
    தமிழ் என்றல் என்ன
    ஹிந்து என்றால் என்ன...
    தமிழ் காலாச்சரம் என்ன
    ஹிந்து கலாச்சாரம் என்ன

    தமிழ் ஹிந்து கலாச்சாரம் எங்கே வந்தது.. என்பதை ஆராய்ந்து பதிவிடவும்.

    தயவு செய்து ..கொஞ்சம் யோசித்து பதிவு எழுதவும்...

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...