சிவசொரூபமாக பார்க்கப்படுகிறது ருத்ராட்சம் சிவனின் கண்ணில் இருந்து தோன்றியதாக சிவஆகமம் சொல்கிறது.
பல்வேறு பாவங்கள், கணக்கில்லாத தோஷங்களை விலக்கும் ஆற்றல் மிக்கவை. எந்த பூஜை செய்வதாக இருந்தாலும், அந்த பூஜையின் பரிபூரண பலனை பெற வேண்டுமானால் ருத்ராட்சம் அணிந்திருந்தால் மட்டுமே கிட்டும் என்கிறது புராணங்கள்.
அதனால்தான் சிவசொரூப ருத்ராட்சத்திற்கு இவ்வளவு சிறப்பு. வைணவ சித்தாந்தப்படி துளசிமணியே ருத்ரட்சமாக மாறுகிறது. அதனால் துளசி மணி அணிந்தே பூஜைகள் செய்கிறார்கள். இது பாரம்பரிய பழக்கமாக இருந்தாலும் இப்போது ருத்டாட்சம் அணியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
பிறப்பும் இறப்பும் தெய்வசித்தம். பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்கிறோம். முடிவில் இறைவனின் பதம் அடையவேண்டும். அந்நிலையில் அவர்கள் கழுத்தில் ருத்ராட்சம் இருந்தால் பாவங்கள் நீக்கப்பட்டு, பரலோகம் அடையலாம் என்பது நம்பிக்கை.
ருத்ராட்சம் அணிந்த ஒருவர் ருத்ராட்சம் அணியாத மற்றவரை கைகூப்பி வணங்க கூடாதாம். அவ்வாறு வணங்குதல் பாவம் என்கிறது வேதங்கள்.
பாவம் அணியாதவருக்கு அல்ல. அணிந்தவருக்குதான் என்பதால் வணக்கம் என்று வார்த்தையாக சொல்லலாம்.
ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு நீராடினால், கங்கையில் புனித நீராடிய புண்ணியம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.
புண்ணியம் நிறைந்த ருத்ராட்சத்தை அணிவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது.
கழுத்தோடு ஒட்டி அணியப்படும் ருத்ராட்சம் விதிவிலக்கு. அதற்கு கண்ட ரட்சை என்று பெயர். மணமானவர்கள் கூட கழுத்தை ஒட்டி அணிவதால் அது புனிதம்.
மாறாக நெஞ்சுக்கு இறக்கி அணிந்திருந்தால் கட்டாயம் இரவில் கழட்டி வைக்க வேண்டும். குறிப்பாக மணமானவர்கள் அணியக்கூடாது..
பெண்கள் அணியலாமா என்பது ஒரு கேள்வி!!
பெண்கள் அணியலாம். ஆனால் பருவம் எய்துவதற்கு முன்பு சிறுமியாக இருக்கும் போதும், அதற்கு பிறகு மாதாந்திர குளியல் அதாவது மென்சஸ் நின்ற பிறகும் பெண்கள் அணியலாம். இடைப்பட்ட காலங்களில் கழுத்தில் அணியக்கூடாது.
பூஜைகள் செய்யும் போதும், ஜபங்கள் செய்யும் காலத்திலும் ருத்ராட்ச மணிமாலைகளை கொண்டு மந்திர உரூ ஜெபிக்கலாம் என்பதே வேத விளக்கங்கள்.
No comments:
Post a Comment