தமிழக மீனவர்களுக்கு அடுத்த தலைவலி ஆரம்பமாகி விட்டது. ஏற்கனவே இலங்கை ராணுவத்தால் நிம்மதி என்பது இல்லாமல் போய் விட்டது.
எந்த நேரம் என்ன நடக்குமோ என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு கடலில் தத்தளிக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இலங்கை வேறு கல்லை தூக்கி தலையில் போட்டிருக்கிறது, மறைமுகமாக.
அதாவது சீன மீன்பிடிக் கப்பல்கள் இலங்கை கொடியுடன் சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடிக்க உள்ளன என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்னதான் இந்த தகவலை கொழும்புவில் தெரிவித்துள்ளார்.
சீன மீன்பிடி கப்பல்கள் இலங்கை கொடியுடன் மீன்பிடிப்பதால் உள்நாட்டு கடல் உணவு ஏற்றுமதி அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்து சமூத்திரத்தில் இலங்கைக்கு சொந்தமான சர்வதேச கடல் பரப்பில் இலங்கை மீனவர்கள், மீன்பிடிப்பது மிகவும் குறைவானதாகவே உள்ளது.
ஆனால், வேறு சில நாடுகள் இந்து சமூத்திரத்தில் 48 சதவீதமான மீன்பிடிப்பை மேற்கொள்கின்றன. ( இந்தியாவை தான் இப்படி மறைமுகமாக சொல்கிறார்)
இலங்கை மீனவர்கள் பெரும்பாலும் தொலை தூரங்களுக்கு செல்லாமல் வெறும் 24 கடல்மைல் தூரத்திற்குச் மட்டுமே சென்று மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.
அதனால் ஆழ்கடல் மீன்பிடிப்பில் இலங்கைக்கு உள்ள உரிமைகளைப் பயன்படுத்த சீனாவை அனுமதிக்க அரசு முடிவெடுத்து உள்ளது. அதனால் உள்நாட்டு மீன் உற்பத்தி அதிகரிக்கும்.
இலங்கைக்கும் வருமான உயர்வு ஏற்ப்படும். இதை கருத்தில் கொண்டு அடுத்த வாரம் 4 சீன மீன்பிடிக் கப்பல்கள் இலங்கைக் கொடியுடன் இந்து சமூத்திர பகுதியில் மீன் பிடிக்க உள்ளனர் என்றார்.
தமிழக மீனவர்களை தலையில் தட்டி, தமிழக அரசை தலையில் குட்டி, இந்தியாவை பணியவைக்க பார்க்கிறதா இலங்கை. அல்லது மீனவர் போர்வையில் இந்தியாவின் தென் பகுதியை உளவு பார்க்க சீனாவிற்கு அனுமதி அளித்திருக்கிறதா?
இதில் எது உண்மை? அடுத்து இந்தியா செய்யப்போவது என்ன?
இதுவரை இலங்கை கடற்படை அடித்தது. இனி சீனா அடிக்குமா?
அதை இந்தியா வேடிக்கை பார்க்குமா? என்ன நடக்கும். உஷ் அப்பா .. இப்பவே கண்ணை கட்டுதே.
No comments:
Post a Comment