ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைக்க வேண்டுமானால் என்ன செய்யலாம்?
உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கலாம்.
சாதி, இன, மத அடிப்படையில் வேற்றுமைகளை ஏற்படுத்தலாம்.
தீவிரவாதிகளை ஏவிவிட்டு நாசவேலைகளை ஈடுபடலாம்.
கூடங்குளம் பிரச்சனை மாதிரி தன்னிறைவு தேவைகளை பூர்த்தி செய்ய விடாமல் தடுக்கலாம்.
ஏழாம் அறிவு படத்து வில்லன் மாதிரி ஆரோக்கியம், சுகாதாரம் போன்ற விஷயத்தில் வில்லத்தனம் செய்யலாம்.
கடைசியாக கள்ள நோட்டு அடிக்கலாம்.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க இதைவிட சிறந்த மார்க்கம் இல்லை.
இதுநாள் வரை கள்ளநோட்டை புழக்கத்தில் விடுவதுஎன்றால், திடீர் குபேர யோகத்திற்கு ஆசைப்பட்டு அலையும் கும்பலாக இருக்கும். ஆனால் ஒரு அரசாங்கமே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் என்ன செய்வது?
பாகிஸ்த்தானை பொருத்தவரை உறவாடி கெடு என்பதற்கு உதாரண நாடு. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே சமயத்தில் உருவான நாடாக இருப்பினும், வளர்ச்சி பாதையில் இந்தியா வல்லரசாக இருக்கிறது.
பாதை மாறிய பறவைமாதிரி தவறான சகவாசத்தால், அதனால் உருவான தீவிரவாதத்தால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது பாகிஸ்தான்.
அவரை விதைத்தால் அவரை முளைக்கும் என்பது போல், தீவிரவாதத்தை ஊக்கு வித்த பாவத்திற்கு அதே தீவிரவாதமே கண்ணில் குத்திய முள்ளாக வலிக்கிறது. இருந்தும் எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணுமே.
அந்த எண்ணத்தின் விளைவு கள்ள நோட்டுக்களை அச்சடித்து கொடுத்து இந்தியாவிற்குள் ஊடுருவ வைக்கிறது தீவிரவாதிகளை. தீவிரவாதிகளுக்கு உதவுகிறவர்களை.
நேற்று முன்தினம் நேப்பாள விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் கள்ள நாட்டுடன் இருவர் பிடிபட்டு இருக்கிறார்கள். ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர். மற்றவர் நேப்பாலி. இது முதல் முறை அல்ல.
இதற்கு முன் கடந்த மாதம் 15-ம் தேதி, இதே நேபாளம் காத்மாண்டு விமான நிலையத்தில் பாகிஸ்தானை சேர்ந்த தாய் மற்றும் மகனிடமிருந்து, 47 லட்ச ரூபாய் இந்திய போலி கரன்சியை அந்நாட்டு போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதற்கு அடுத்தப் படியாக நேற்று முன்தினம் காத்மாண்டு விமான நிலையத்தில் வந்திறங்கிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஷேக் முகமது பாக்ரன் என்ற 48 வயதான நபரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அவர் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி இந்திய கரன்சியை மறைத்து வைத்திருந்தார். இவர் தோஹாவில் இருந்து பயணம் செய்திருந்தார்.
ஷேக் முகமதுவும், அவருடன் வந்த நேபாள நாட்டவர் நூருல்லாவும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது சரி.. இது தொடர்கதையாகி போகாமல் தடுக்கும் மார்க்கத்தை இந்தியா யோசிக்க வேண்டும்.
No comments:
Post a Comment