கள்வர்களின் கைவரிசை தனிப்பட்ட மனிதர்களிடம் மட்டுமல்ல, கடவுளிடமும் காட்டப்படுகிறது. ஆலயத்திற்குள் புகுந்து நகைகளை, விக்ரகத்தை அபகரித்து செல்கிறார்கள்.
உலகை காப்பதாய் சொல்லப்படும் இறைவன், தன்னையே காத்துக்கொள்ள தெரியவில்லையே? இவரா நம்மை காப்பாற்றப்போகிறார்?
நல்ல கேள்வி...பதில் இதுதான்.
மனித வாழ்க்கை கர்மாவின் பொருட்டு உருவானவை. இங்கே நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கிறது. ஒருவன் தர்ம்மசீலனாக இருப்பதற்கும், தர்மத்திற்கு புறம்பாக கள்வனாக மாறுவதற்கும் கர்மாவே காரணம்.
நீ ஒருவனுக்கு தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தாலும் அந்த கணக்கு எழுதப்படும். ஒருவனுக்கு மனதறிந்து தீங்க்கிழைத்தாலும் அந்த கணக்கும் எழுதப்படும் என்கிறது வேதங்கள்.
அதனால்தான் குற்றம் செய்யும் பொது கடவுள் உன்னை பார்க்கிறார். தண்டனை பெறும்போது கடவுளை நீ பார்க்கிறாய் என்கிறது தர்மசாஸ்திரம்.
கடவுள் உலகை ரட்சிக்கிறார் என்பதில் ஐயமில்லை. உயிரினம் ஒவ்வொன்றிற்கும் ஆக்கலும், காத்தலும், அழித்தலும் அவர் பொருட்டே நடக்கிறது என்பதிலும் மாற்றம் இல்லை. இவ்வளவு சக்தி பெற்றவர் ஏன் தன்னை காத்துக் கொள்ள முடியவில்லை என்பது கேள்வி.
தெய்வகுற்றம் என்பது முன்பே தீர்மாணிக்கப்படுகிறது. கோவிலில் புகுந்து கொள்ளை அடிக்கிற அளவிற்கு ஒருவன் துணிகிறான் என்றால் அவனுக்கு பயங்கரமான தண்டனை காத்திருக்கிறது என்று பொருள். அதன் பொருட்டே அதை செய்ய துணிகிறான்.
பிட்பாக்கெட் அடிப்பவனுக்கு மூன்று மாத தண்டனை. திட்டமிட்டு திருடுவனுக்கு மூன்று வருட தண்டனை என்று நீதிமன்ற தீர்ப்புகள் அமைவது போல், தெய்வங்களின் நீதிநிலைகளில் கடும் தண்டனை பெறக்கூடிய ஆத்மாவாக இருப்பான். அதனால் தான் அவனுக்கு திருட தோன்றுகிறது. கடவுளும் பொறுமை காக்கிறார்.
இவன் திருடும் போது அவர் தரிசனம் என்பது கிட்டாது. நல்லவர்களுக்கு தரிசனம் கிட்டுமே தவிர, பாவிகளுக்கு தரமாட்டார். இது ஒப்புக்கு சொல்லும் பதில் இல்லை. உண்மையும் இதுதான்.
உலகை காப்பாரா,நம்மை காப்பாரா என்ற சந்தேகம், அவநம்பிக்கை வேண்டாம். உங்கள் வேலை நம்பிக்கை வைப்பது மட்டும்தான். மற்றது தானாக நடக்கும்.கவலை வேண்டாம்.
முடிவில் சரியாகச் சொன்னீர்கள்...
ReplyDeleteநல்ல கேள்வி?
ReplyDelete