ads

Sunday, 19 May 2013

இலங்கைக்கு ஒரு சபாஷ்!!



நல்லது ஒன்னு!!

கடந்த மே 5ம் தேதி மலேசிய பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சுவரொட்டிகளையும், விளம்பர பேனர்களையும் நகரெங்கும் வைத்திருந்தார்கள். 

நகர மாமன்றத்தின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது.  தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் தாங்கள் வைத்த விளம்பர தட்டிகளை அகற்றிவிட வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் மாமன்றமே அதை அகற்றும்.  

அவ்வாறு மாமன்றம் அகற்றினால், வேட்பாளர்கள் செலுத்திய வைப்பு தொகை ( டெபாசிட் ) திரும்ப தரப்பட மாட்டாது என்று விளம்பர படுத்தி இருந்தார்கள். 

நல்ல விஷயம். நம் நாட்டிலும் இதை நடைமுறைப்படுத்தலாம். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. 

இங்கே சுயேச்சை வேட்பாளர்கள் அதிகம். தாங்களாகவே வாக்குகள் பெற முடியாமல் வைப்புத் தொகையை இழந்து விடுவார்கள். 

அதனால் பேனர்களை அகற்ற என்று கூடுதல் கட்டணத்தை வசூலிக்கலாம். வேட்பாளரே பேனர்களை அகற்றி விட்டால் அத்தொகையை திரும்ப கொடுத்து விடலாம்.   

நல்லது இரண்டு!!




இலங்கையை திட்ட, தலையில் குட்ட ஆயிரம் காரணம் இருக்கும். பாராட்ட ஒரு விஷயம் இருக்கு. அது இதுதான்.

தங்கள் நாட்டு பிரஜைகள் வெளிநாட்டுக்கு விசா மூலம் செல்கிறார்கள் என்றால், இந்தியா மாதிரி ஏனோ தானோ என்றில்லாமல் மிக கவனமாக இருக்கிறது.

முதலில் விசா காப்பி சம்மந்தப்பட்ட நபருக்கு வந்ததும், அதை பெற்று மிக கவனமாக ஆராய்கிறார்கள். விசாவின் உண்மைத்தன்மை எப்படி, விசா கொடுத்த நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என்பது முதல் அலசல்.

இது உறுதி செய்யப்பட்ட உடன், வெளிநாடு செல்லும் நபருக்கு அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் பற்றிய முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அடுத்து.. அந்த நாட்டின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் பற்றியும், குறைந்த பட்சம் பேசும் மொழி அறிவும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

மருத்துவ சான்று பெற்று தங்கள் நாட்டு பிரஜைகள் வெளிநாட்டுக்கு செல்லும் போது, விசா கால அளவான முழு காலத்திற்கும் அனுமதி தருவதில்லை. முதலில் ஒரு மாதம் மட்டுமே அனுமதி கிடைக்கிறது.

வேலைக்கு வந்தவர், வேலை செய்யும் இடம் பிடித்தால் மேற்கொண்டு விசா நீட்டிப்பு செய்து கொள்ளலாம். அவருக்கு பிடிக்க வில்லை என்றால் விசா நீட்டிப்பு செய்யாமல் தங்கள் நாட்டு பிரஜையை திரும்ப அனுப்பி விடுகிறது இலங்கை.

இந்த நடைமுறைகளால் யாரும் கொத்தடிமைகளாக சிக்கும் அவலம் குறைந்து விடுகிறது. இதை நம் நாட்டிலும் நடைமுறை படுத்தினால் என்ன?

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...