ads
Thursday, 30 May 2013
அம்மா என்னும் தெய்வம்!!
ராஜஸ்த்தானில், நீதிகேட்டு நீதிமன்ற படியேறுகிறாள் ஒரு தாய். என் மகனும், மருமகளும் என்னை துன்புறுத்துகிறார்கள் என்பது அவரின் குற்றசாட்டு. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீட்டுக்குள் நடப்பவற்றை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலோட்டமாக இந்த செய்தியை பார்த்துவிட்டு ஒரு வீடியோ தொகுப்புக்குள் போனேன். அங்கே திலிப் மேத்தாவின் THE FORGOTTEN WOMAN என்ற என்ற ஆவணப்படத்தை பார்க்க நேர்ந்தது.
பொட்டில் அடித்த மாதிரி இருக்கிறது. இது பழைய படம்தான். ஆனால் ஒரு சமூகஅவலத்தை கேமரா மொழியில் பேசுகிறது.
உத்திரபிரதேச மாநிலம் மதுராவுக்கு அருகில் உள்ளது விருந்தாவனம். புராண காலத்தோடு தொடர்புப்படுத்தி பேசப்படும் ஊர். பகவான் கிருஷ்ணர் குழந்தை பருவமாக இருந்த காலத்தில் கோபியர்களுடன் கொஞ்சி விளையாடிய இடம் என்ற சிறப்பு இவ்வூருக்கு உண்டு. இங்கே இறந்தால் நேரடியாக சொர்க்கம்தான் என்ற ஆழமான நம்பிக்கையும் இருக்கிறது.
அந்த நம்பிக்கையின் அடிப்படையிலும், வயதான தாயை கவனிப்பதை பாரமாக நினைக்கும் பிள்ளைகளும் விதவை தாயை இங்கே விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள்.
தனித்து விடப்படும் விதவை தாய்கள், எங்கே போவது? தங்குமிடம் எது? சாப்பாட்டிற்கு என்ன வழி என்று தெரியாமல் அலைமோதுவதை பார்க்கும் போது, இரும்பு மனமும் இளகிப் போகும்.
ஏனிந்த அவலநிலை?
வாழ்க்கையே நம்பிக்கையில்தான் சுழல்கிறது. நம்பிக்கை என்பது தன்னம்பிக்கையை குறிக்கும்
சொல் அல்ல. உற்ற உறவுகளின்
மேல் உள்ள நம்பிக்கை. இந்திய
சமூகத்தில் பெண்களுக்கான வாழ்க்கை கட்டமைப்பே உறவுகளின் பின்னணியில் அமைந்திருக்கும்.
முதல்வர் ஜெயலலிதா சொன்னது போல், ஒரு
பெண் இளம்
வயதில் தாய் தந்தையர் அரவணைப்பில்
வாழ்கிறாள். பருவத்தில் கணவனின் துணையோடு வாழ்கிறாள்.
முதுமையில் பிள்ளைகளின் பாதுகாப்பில் வாழ்கிறாள்.
இந்த உறவுகள் பொய்த்துப்
போகும்போது, இருந்தும் இல்லாமல் ஆகும் போதும் என்னாகும்
என்பதுதான் விருந்தாவானக் காட்சிகள்.
ஒவ்வொரு தாயும் பத்து
மாத தவத்திற்கு பின் பிள்ளைகளை பெற்றெடுக்கிறாள்.
தன் இறுதி காலத்தில் பிள்ளைகளால்
பாதுகாக்கப் படுவோம் என்ற நம்பிக்கைதான்,
குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்க்க தூண்டுகிறது.
வம்சம் தழைக்க வந்த
வாரிசாகவும், வாழ்க்கையின் இறுதியில் காக்கும் நம்பிக்கை சுடராகவும் பிள்ளைகளை பேணி வளர்த்த தாயிக்கு
முதுமை என்பது இன்னொரு குழந்தை
பருவம்.
இது அனைவருக்கும் பொதுவான
நிலைதான். தான் வளர்த்த பிள்ளைகள்
தன்னை காக்கும் என்ற நம்பிக்கையை நசுக்கும்
போது, யாரை நொந்துக் கொள்வது?
தேவதைகள் ஆசிர்வதித்ததில்லை. எல்லா சாத்தான்களும் சபித்திருக்கின்றன
என்ற மேத்தா வரிகள்தான் நினைவுக்கு
வருகிறது.
இருக்கட்டும்.
முன்பு மாதிரி இல்லை
விருந்தாவனம். படத்தில் காட்டப்படுவது போல் உணவுக்கும் உடைக்கும்
அலையும் அவலநிலை இன்றில்லை. தங்குமிடம்
இல்லாமல் தவிக்கும் நிலையும் இன்றில்லை. பொட்டி பொட்டியான அறைக்குள்
முடங்கிப் போகும் பரிதாப நிலை
மாறியிருக்கிறது. உதவும் உள்ளம் கொண்டோர்களும்,
தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், மாநில
அரசாங்கமும் அவர்களை அரவணைத்துக் கொள்கிறது
என்பது ஆறுதலான அம்சமே.
ஆனால் மரத்துப் போன
மனிதம்தானே, தாயின் புனிதம் அறியாமல்
வீதிகளில் விட்டிருக்கிறது. எந்தவொரு குடும்பத்திலும் பெண்தான் ஆணிவேர். அட்சாணி. கோடிகளை தேடுவது ஆணாக
இருந்தாலும், குடும்ப தேர் குடைசாயாமல்
இருக்க பெண்ணே காரணம், அவள் தான்
சர்வமயம். சக்திமயம்.
இந்தி உணர்ந்தவர்கள் குறைவு.
பெண்களை அடிமைகளாக பார்த்த ஒரு சமூகத்தின்
பார்வையில் இன்னும் மாற்றம் இல்லை
என்பதற்கு விருந்தாவனம் ஒரு
சாட்சி.
திருவாரூரில் பிறந்தால் மோட்சம். சிதம்பரத்தை தரிசித்தால் மோட்சம். திருவண்ணாமலையை நினைத்தால் மோட்சம். காசியில் இறந்தால் மோட்சம் என்பது நம்பிக்கை.
முதியர்கள் சிலர் உறவுகளை துறந்து
மோட்சகதிக்காக காசிக்கு வருகிறார்கள்.
இவர்களில் பலர் உறவுகளால் ஒதுக்கப்பட்டவர்களும்
இருக்கிறார்கள். வாழும் வரை வாழ்க்கை.
வாழ்க்கைக்கு பின் மோட்சம் என்ற
நம்பிக்கையில் வாழ்கிறார்கள்.
இந்த நம்பிக்கையின் கடைசி
வரிதான் விருத்தாவனத்தில் இறந்தால் சொர்க்கம் என்பதும்.
ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள்
தாங்களாகவே தனிவழி தேடுகிறார்கள். ஆனால்
பெண்கள் அப்படியில்லை என்பது தான் உண்மை
.
இந்த அபலை தாய்கள்,
எழுத்தாளர்
எஸ். ராமகிருஷ்ணன் சொல்வது மாதிரி யாரோ
ஒருவருக்கு சகோதரி, யாரோ ஒருவருக்கு
மனைவி, யாரோ ஒருவருக்கு தாய்.
துரத்தும் உறவுகளும், தூக்கியெறிந்த பந்தங்களும், எந்த ஒரு குற்ற
உணர்சியும் இல்லாமல் வாழ்கிறார்கள். குடும்பம் நடத்துகிறார்கள். குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள். இவர்களில் நாளை முதிய தாய்களும்
இருக்காலாம். இதுதான் யதார்த்தம்.
Tuesday, 21 May 2013
பேஸ்புக் மெயிலை தடுப்பது எப்படி?
பேஸ்புக் பயனீட்டாளர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையே, அவர்கள் மெயில் ஐடிக்கு வரும் வாசகர் கமாண்டுகள்.
ஒரு வாரம் கவனிக்காமல் விட்டு விட்டால் பல நூறு மெயில்கள் வந்து இன்பாக்ஸ் நிறைந்து விடும். கீழே உள்ள படம் மாதிரி.
இதை தடுப்பது எப்படி?
முதலில் அக்கவுண்ட் செட்டிங் செல்லுங்கள். அதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்த விண்டோ ஒப்பன் ஆகும். அங்கே நோட்டிபிக்கேஷன் என்பதை கிளிக் செய்யுங்கள்.
மீண்டும் வேறு விண்டோ ஒப்பன் ஆகும்.
அதில் only notifications about your account, security and privacy என்பதை தேர்வு செய்து பின் குளோஸ் செய்து விடுங்கள். இனிமேல் உங்களுக்கு அனுப்பப்படும் மெயில்கள் தவிர வேறு பேஸ்புக் மெயில் எதுவும் வந்து உங்கள் இன்பாக்ஸ்சை நிரப்பாது ஓக்கேவா.
Sunday, 19 May 2013
இலங்கைக்கு ஒரு சபாஷ்!!
நல்லது ஒன்னு!!
கடந்த மே 5ம் தேதி மலேசிய பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சுவரொட்டிகளையும், விளம்பர பேனர்களையும் நகரெங்கும் வைத்திருந்தார்கள்.
நகர மாமன்றத்தின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் தாங்கள் வைத்த விளம்பர தட்டிகளை அகற்றிவிட வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் மாமன்றமே அதை அகற்றும்.
அவ்வாறு மாமன்றம் அகற்றினால், வேட்பாளர்கள் செலுத்திய வைப்பு தொகை ( டெபாசிட் ) திரும்ப தரப்பட மாட்டாது என்று விளம்பர படுத்தி இருந்தார்கள்.
நல்ல விஷயம். நம் நாட்டிலும் இதை நடைமுறைப்படுத்தலாம். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.
இங்கே சுயேச்சை வேட்பாளர்கள் அதிகம். தாங்களாகவே வாக்குகள் பெற முடியாமல் வைப்புத் தொகையை இழந்து விடுவார்கள்.
அதனால் பேனர்களை அகற்ற என்று கூடுதல் கட்டணத்தை வசூலிக்கலாம். வேட்பாளரே பேனர்களை அகற்றி விட்டால் அத்தொகையை திரும்ப கொடுத்து விடலாம்.
இலங்கையை திட்ட, தலையில் குட்ட ஆயிரம் காரணம் இருக்கும். பாராட்ட ஒரு விஷயம் இருக்கு. அது இதுதான்.
தங்கள் நாட்டு பிரஜைகள் வெளிநாட்டுக்கு விசா மூலம் செல்கிறார்கள் என்றால், இந்தியா மாதிரி ஏனோ தானோ என்றில்லாமல் மிக கவனமாக இருக்கிறது.
முதலில் விசா காப்பி சம்மந்தப்பட்ட நபருக்கு வந்ததும், அதை பெற்று மிக கவனமாக ஆராய்கிறார்கள். விசாவின் உண்மைத்தன்மை எப்படி, விசா கொடுத்த நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என்பது முதல் அலசல்.
இது உறுதி செய்யப்பட்ட உடன், வெளிநாடு செல்லும் நபருக்கு அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் பற்றிய முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அடுத்து.. அந்த நாட்டின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் பற்றியும், குறைந்த பட்சம் பேசும் மொழி அறிவும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
மருத்துவ சான்று பெற்று தங்கள் நாட்டு பிரஜைகள் வெளிநாட்டுக்கு செல்லும் போது, விசா கால அளவான முழு காலத்திற்கும் அனுமதி தருவதில்லை. முதலில் ஒரு மாதம் மட்டுமே அனுமதி கிடைக்கிறது.
வேலைக்கு வந்தவர், வேலை செய்யும் இடம் பிடித்தால் மேற்கொண்டு விசா நீட்டிப்பு செய்து கொள்ளலாம். அவருக்கு பிடிக்க வில்லை என்றால் விசா நீட்டிப்பு செய்யாமல் தங்கள் நாட்டு பிரஜையை திரும்ப அனுப்பி விடுகிறது இலங்கை.
இந்த நடைமுறைகளால் யாரும் கொத்தடிமைகளாக சிக்கும் அவலம் குறைந்து விடுகிறது. இதை நம் நாட்டிலும் நடைமுறை படுத்தினால் என்ன?
Thursday, 16 May 2013
Wednesday, 15 May 2013
இறைவனின் காலடியில் இறக்கி வை!!
விடியும் என்ற நம்பிக்கையில் தான் தொடர்கிறது வாழ்க்கை பயணம். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு பொழுதும் விடிகிறது. நம்பிக்கையின் அடிப்படையில் அமைவது மனித வாழ்க்கை.
எனது நம்பிக்கைகளே என் வார்த்தைகளாகின்றன. வார்த்தைகள் எழுத்துக்களாகின்றன. அனுபவங்கள் அந்த நம்பிக்கைக்கு வலு சேர்க்கின்றன.
துன்பங்களில் இருந்து தப்பித்து செல்லும் போராட்டமாகத்தான் இருக்கிறது பெரும்பாலானோர் வாழ்க்கை. வாழ்க்கயின் மீது நம்பிக்கையை கொடுக்கும் ஒரே சாதனம் மதம்தான். அதன் வழிகாட்டல்தான்.
மதம் மனிதர்களிடையே வேறுபாடுகளை சொல்லவில்லை. ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கவில்லை. மனிதனின் ஆதிக்க மனப் பாங்குதான் நடத்தைக்கு சாதகமாய் மதத்தை வளைத்துக் கொண்டது என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.
இந்த ஏற்ற தாழ்வுகளுக்கு எதிராக போராட முற்பட்டவர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையை பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே என் கருத்து.
விவாதங்களுக்கு முடிவில்லை. இருக்கிறார் இல்லை என்ற முரண்பாட்டை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால், மனித வாழ்க்கையின் சிக்கல்களுக்கு தீர்வு இதுதான் என்று சரியான வழியைக் காட்ட யாரும் இல்லாத போது, மதம் கூறும் வழிமுறைகளை நாம் பின்பற்றி பார்ப்போம். அதனால் என்ன கெடுதல் என்ற கருத்துதான் மனதில் நிற்கிறது.
எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை மனதில் விதைக்கும், நானிருக்கிறேன் என்ற தைரியத்தை தருகிற இறைவனை நம்பி வழிபாட்டினை மேற்கொள்வதினால் எதை இழந்து விட போகிறோம்.
இந்த எண்ணம்தான் என்னை வழிநடத்துகிறது. அதுதான் இறைநம்பிக்கையை மேலும் அதிகரித்தது. நான் வளர்ந்திருக்கிறேனே தவிர தாழ்ந்து விடவில்லை. நம்பிக்கையோடுதான் என் ஒவ்வொரு நாளும் விடிகிறது.
நான் கடைபிடிப்பதைதான் அடுத்தவருக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. பயன்பெற்றதால் சிபாரிசு செய்கிறேன்.
உனக்கென்ன அக்கறை என்று எழுகிற கேள்விக்கு சமுதாய பற்றும் சகமனிதனை நேசிக்க வேண்டும் என்ற குணமும் இதற்கான காரணம் என்பதே என்பதில்.
தன்னலமற்ற ரிஷிகளும், மகான்களும், ஞானிகளும் அறிவு ஜீவிகளும் தமக்கு பின்னால் வரும் தலைமுறையினரை முட்டாளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொய்யாக எதையும் சொல்லிவிட்டு செல்லவில்லை.
அவர்கள் உணர்ந்த உண்மையை நமக்கு வழிகாட்ட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் சொல்லி வைத்தார்கள். அதைதான் கடைப்பிடித்து வாழ்கிறேன்.
நிலையற்ற இந்த மானிட வாழ்க்கையில் வாழும் காலத்தில் எல்லோரும் நல்ல முறையில் வாழவேண்டும் என்ற ஆவலில் மனம் கூறும் வழியில் நடக்கிறது என் பயணம்.
என் அன்புக்குரியவர்களுக்கு என்ன சொல்கிறேனோ அதையே எழுகிறேன். அமைதியாய், நிம்மதியாய், வாழ்க்கையை வாழ்ந்து செல்வதற்கு வழிகள் நமக்காக சொல்லப்பட்டிருக்கின்றன.
நம்பிக்கையோடு கடைபிடிப்போம். துன்பங்களை இறைவனின் காலடியில் இறக்கி வைத்து விடுவோம். இறைவனின் பேரருள் எப்போதும் உங்களுக்கும் இருக்கட்டும். வாழ்க வளமுடன்.
Tuesday, 14 May 2013
தன்னை காப்பாற்றிக் கொள்ளமுடியாத கடவுள் உலகை காப்பாரா?
கள்வர்களின் கைவரிசை தனிப்பட்ட மனிதர்களிடம் மட்டுமல்ல, கடவுளிடமும் காட்டப்படுகிறது. ஆலயத்திற்குள் புகுந்து நகைகளை, விக்ரகத்தை அபகரித்து செல்கிறார்கள்.
உலகை காப்பதாய் சொல்லப்படும் இறைவன், தன்னையே காத்துக்கொள்ள தெரியவில்லையே? இவரா நம்மை காப்பாற்றப்போகிறார்?
நல்ல கேள்வி...பதில் இதுதான்.
மனித வாழ்க்கை கர்மாவின் பொருட்டு உருவானவை. இங்கே நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கிறது. ஒருவன் தர்ம்மசீலனாக இருப்பதற்கும், தர்மத்திற்கு புறம்பாக கள்வனாக மாறுவதற்கும் கர்மாவே காரணம்.
நீ ஒருவனுக்கு தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தாலும் அந்த கணக்கு எழுதப்படும். ஒருவனுக்கு மனதறிந்து தீங்க்கிழைத்தாலும் அந்த கணக்கும் எழுதப்படும் என்கிறது வேதங்கள்.
அதனால்தான் குற்றம் செய்யும் பொது கடவுள் உன்னை பார்க்கிறார். தண்டனை பெறும்போது கடவுளை நீ பார்க்கிறாய் என்கிறது தர்மசாஸ்திரம்.
கடவுள் உலகை ரட்சிக்கிறார் என்பதில் ஐயமில்லை. உயிரினம் ஒவ்வொன்றிற்கும் ஆக்கலும், காத்தலும், அழித்தலும் அவர் பொருட்டே நடக்கிறது என்பதிலும் மாற்றம் இல்லை. இவ்வளவு சக்தி பெற்றவர் ஏன் தன்னை காத்துக் கொள்ள முடியவில்லை என்பது கேள்வி.
தெய்வகுற்றம் என்பது முன்பே தீர்மாணிக்கப்படுகிறது. கோவிலில் புகுந்து கொள்ளை அடிக்கிற அளவிற்கு ஒருவன் துணிகிறான் என்றால் அவனுக்கு பயங்கரமான தண்டனை காத்திருக்கிறது என்று பொருள். அதன் பொருட்டே அதை செய்ய துணிகிறான்.
பிட்பாக்கெட் அடிப்பவனுக்கு மூன்று மாத தண்டனை. திட்டமிட்டு திருடுவனுக்கு மூன்று வருட தண்டனை என்று நீதிமன்ற தீர்ப்புகள் அமைவது போல், தெய்வங்களின் நீதிநிலைகளில் கடும் தண்டனை பெறக்கூடிய ஆத்மாவாக இருப்பான். அதனால் தான் அவனுக்கு திருட தோன்றுகிறது. கடவுளும் பொறுமை காக்கிறார்.
இவன் திருடும் போது அவர் தரிசனம் என்பது கிட்டாது. நல்லவர்களுக்கு தரிசனம் கிட்டுமே தவிர, பாவிகளுக்கு தரமாட்டார். இது ஒப்புக்கு சொல்லும் பதில் இல்லை. உண்மையும் இதுதான்.
உலகை காப்பாரா,நம்மை காப்பாரா என்ற சந்தேகம், அவநம்பிக்கை வேண்டாம். உங்கள் வேலை நம்பிக்கை வைப்பது மட்டும்தான். மற்றது தானாக நடக்கும்.கவலை வேண்டாம்.
Friday, 10 May 2013
கடவுள் இருப்பது உண்மையானால் இப்போது ஏன் வெளிப்படவில்லை?
கடவுள் இருக்கிறாரா என்பதை விட, எங்கே இருக்கிறார் என்றால் கேள்வி சரியானது. முதலில் இறைவழிபாடு என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம்.
அறிவுபூர்வமான தேடலை விட, ஆத்மார்த்தமான தேடலில் தான் இறைவனை காண முடியும்.
இறைவன் ஒரு யுகத்தில் மனிதனோடு மனிதனாக வாழ்ந்த காலம் உண்டு. இதிகாச காலத்தில் இறைவன் தோன்றி மறைந்திருக்கிறான். ஆனால் புராணகாலத்தில்தான் மனிதனோடு மனிதனாக வாழ்ந்திருக்கிறான்.
ராமாயணத்தை எடுத்துக் கொண்டால் ராமனும், லட்சுமணனும் இறையம்சங்கள்தான். ராமன் விஷ்ணுவின் அவதாரம்.
மனித வாழ்வில் ஏற்படும் அன்பு, பாசம், பிரிவு, வருத்தம், ராஜயோகம் என சகல நிலைகளையும் சந்திக்கிறான் என்றுதான் ராமாயணம் கூறுகிறது.
மகாபாரதத்தில் கூட கிருஷ்ணன் தெய்வாம்சம் பொருந்தியவன் தான். அக்கால கட்டத்தில் இன்னும் பல அவதார புருஷர்கள் சாதாரண மனிதர்களாக, சக மனிதர்களோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
சாகா வரம் பெற்ற கிருஷ்ணனுக்கு கூட காந்தாரியின் சாபத்தால் மரணத்தை எய்துவதாக சொல்லப்படுகிறது. அதாவது அப்போது எடுத்திருந்த அவதார உடலை உதறிவிட்டு போகிறார்.
அப்போது வாழ்ந்தவர்கள் இப்போது ஏன் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்பது தான் பலரின் கேள்வி.
இது கலியுகம். மனிதன் ஆசையில் உழல்கிறான். மனிதனை தவிர மற்ற உயரினங்கள் நிகழ்கால வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போகின்றன.
அதற்கு எதிர்கால தேவைகள்,சிந்தனைகள் இல்லை. மனிதன் அப்படி இல்லை. தேடுகிறான், அதற்காக ஓடுகிறான், மனநிறைவை பெற முடியாமல் போராடுகிறான்.
அதனால் வஞ்சகம், சூழ்ச்சி பெற்றவனாகி விட்டான். இக் காலத்தில் தெய்வங்கள் மறைந்தே வாழும்.
இது சரியான விளக்கமாக படவில்லை.
ராமாயணத்தில் கூட கலியுகத்தில் சொல்லப்படும் மனநிலை பெற்றவர்கள் இருந்திருக்கிறார்கள். கூனி சூழ்ச்சி செய்கிறாள், ராமன் காட்டிற்கு போகிறான்.
சீதையை அபகரிக்க ராவணன் வருகிறான். தன் உடன் பிறந்த தம்பி சுக்கிரீவனை விரட்டி விட்டு ஏகபோகமாக அரசாளுகிறான் வாலி. சுக்ரீவனின் மனைவியை கூட அபகரித்துக் கொள்கிறான்.
ஆக எல்லா நிலை மனிதர்களும் வாழும் இக்காலம் மாதிரியே அக்காலத்திலேயும் இருந்திருக்கிறது அதானே உண்மை.
உண்மைதான். அது அத்தனையும் அவதார நோக்கம்.அதனால் அது அரங்கேறியது. இப்போது நடப்பதும் அவதார நோக்கம் தான். கலியுகத்தின் முடிவில் நிகழப் போகும் கல்கி அவதாரத்திற்கான முன்னேற்பாடுதான் இதெல்லாம்.
இந்த கலியுகத்தில், காலம் வரும் போது கட்டாயம் வெளிப்படுவார். என்ன கல்கி அவதாரத்தை பார்க்கும் பாக்கியம் நம்மில் யாருக்கும் இல்லை.
நிற்க.
கடவுள் எங்கே இருக்கிறார் என்பது இருக்கட்டும். கடவுளின் வடிவில் நாம் சிலரை சந்திக்க நேரிடும்.
ஒரு இக்கட்டான நேரத்தில் உதவுகிற ஒருவரை கடவுள் மாதிரி வந்தீங்க என்போம். அந்த நேரத்தில் கடவுளின் வடிவம் அவர்.
உயிர் கொடுத்து, வளர்த்து ஆளாக்கி வழிக் கட்டும் தாயும் தந்தையும் கூட கடவுளின் அவதாரங்கள் தான்.
தறிகெட்டு ஓடி வரும் வாகனத்தை பார்த்து, உங்கள் கையை பிடித்து இழுத்து ஒருவர் காப்பாற்றினால் அவர் கடவுளின் வடிவம் தான்.
கடவுள் மறைந்து வாழவில்லை. மனிதனாகத்தான் வாழ்கிறார். புரிந்தவர்களுக்கு புரியும்.
Thursday, 9 May 2013
தமிழக எல்லையிலும் தடம் பதிக்கிறது சீனா!! - பகீர் ரிப்போர்ட்
தமிழக மீனவர்களுக்கு அடுத்த தலைவலி ஆரம்பமாகி விட்டது. ஏற்கனவே இலங்கை ராணுவத்தால் நிம்மதி என்பது இல்லாமல் போய் விட்டது.
எந்த நேரம் என்ன நடக்குமோ என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு கடலில் தத்தளிக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இலங்கை வேறு கல்லை தூக்கி தலையில் போட்டிருக்கிறது, மறைமுகமாக.
அதாவது சீன மீன்பிடிக் கப்பல்கள் இலங்கை கொடியுடன் சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடிக்க உள்ளன என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்னதான் இந்த தகவலை கொழும்புவில் தெரிவித்துள்ளார்.
சீன மீன்பிடி கப்பல்கள் இலங்கை கொடியுடன் மீன்பிடிப்பதால் உள்நாட்டு கடல் உணவு ஏற்றுமதி அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்து சமூத்திரத்தில் இலங்கைக்கு சொந்தமான சர்வதேச கடல் பரப்பில் இலங்கை மீனவர்கள், மீன்பிடிப்பது மிகவும் குறைவானதாகவே உள்ளது.
ஆனால், வேறு சில நாடுகள் இந்து சமூத்திரத்தில் 48 சதவீதமான மீன்பிடிப்பை மேற்கொள்கின்றன. ( இந்தியாவை தான் இப்படி மறைமுகமாக சொல்கிறார்)
இலங்கை மீனவர்கள் பெரும்பாலும் தொலை தூரங்களுக்கு செல்லாமல் வெறும் 24 கடல்மைல் தூரத்திற்குச் மட்டுமே சென்று மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.
அதனால் ஆழ்கடல் மீன்பிடிப்பில் இலங்கைக்கு உள்ள உரிமைகளைப் பயன்படுத்த சீனாவை அனுமதிக்க அரசு முடிவெடுத்து உள்ளது. அதனால் உள்நாட்டு மீன் உற்பத்தி அதிகரிக்கும்.
இலங்கைக்கும் வருமான உயர்வு ஏற்ப்படும். இதை கருத்தில் கொண்டு அடுத்த வாரம் 4 சீன மீன்பிடிக் கப்பல்கள் இலங்கைக் கொடியுடன் இந்து சமூத்திர பகுதியில் மீன் பிடிக்க உள்ளனர் என்றார்.
தமிழக மீனவர்களை தலையில் தட்டி, தமிழக அரசை தலையில் குட்டி, இந்தியாவை பணியவைக்க பார்க்கிறதா இலங்கை. அல்லது மீனவர் போர்வையில் இந்தியாவின் தென் பகுதியை உளவு பார்க்க சீனாவிற்கு அனுமதி அளித்திருக்கிறதா?
இதில் எது உண்மை? அடுத்து இந்தியா செய்யப்போவது என்ன?
இதுவரை இலங்கை கடற்படை அடித்தது. இனி சீனா அடிக்குமா?
அதை இந்தியா வேடிக்கை பார்க்குமா? என்ன நடக்கும். உஷ் அப்பா .. இப்பவே கண்ணை கட்டுதே.
Subscribe to:
Posts (Atom)
குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil
கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...