ads

Tuesday, 4 September 2012

உங்கள் கணினி வேகமாக செயல்பட வேண்டுமா?


இது கணினி யுகம். எல்லாத்துறைகளிலும் கணினி என்பது வந்து விட்டது. அதோடு அன்றாட விட்டு செலவு கணக்கில் இருந்து, வங்கி கணக்கு வழக்குகள் வரை வீட்டில் இருந்தே செய்கிற அளவிற்கு இந்த கணினியின் செயல்பாடு அவசியமாகி விட்டது.

முன்னேற்றம்தான் மறுக்கவில்லை. ஆனால் பலருக்கு இந்த கணினியை நினைத்தாலே வெறுப்பாக இருக்கும்.

காரணம் என்ன?

அதன்  வேகம்தான் வேறென்ன. அவசரத்திற்கு பூட்டாகாது. அது என்னவோ திருவாரூர் தேர் மாதிரி சண்டித்தனம் செய்யும். ஒரு பைலை ஒப்பன் செய்துவிட்டு மறு பைலை ஒப்பன் செய்வதற்குள் மண்டை காய்ந்து விடும். 

சரி இது போன்ற நிகழ்வுகளுக்கு என்ன காரணமாக இருக்கும்?


காரணங்கள் பல இருக்கலாம். அதில் முக்கியமானது வைரஸ் தொல்லை.

வைரஸ் என்பது தோற்று வியாதி மாதிரி.  இப்போது இணையதளங்கள் பயன்படுத்தாதவர்கள் யாருமே இல்லை. குறைந்த பட்ச்சம் பேஸ்புக்காவது வைத்திருக்கிறார்கள்.

இந்த இணைய தளங்களில் நாம் உலா வரும்போது எதிர்பாராத விதமாக வைரஸ் வந்து  விடுகிறது. இதை ஓரிரு நாளில் கண்டுபிடித்து நீக்கா விட்டால் நம் கணினியின் செயல்பாட்டிற்கு உரிய முக்கியமான பைல்களை அழிக்க துவங்குகிறது. அதனால் கணினியின் வேகம் குறையும்.

இது பாட்டன் காலத்து பழைய நியூஸ். இதுதான் டிப்ஸா. 

பொறுங்க ராஜா. காரணம் என்று வரும்போது எல்லாத்தையும் சொல்லணும்  இல்லையா. சரி அடுத்த பாயிண்ட்டுக்கு  வர்றேன்.


டிசிட்டல் கேமராவில் எடுத்த என்ன படத்தையும் உங்கள் டெஸ்க்டாப்பில் வைக்காதிங்க. அதாவது வால்பேப்பரா.

ஏன் என்ன காரணம்?

டிசிட்டல் கேமராவில் எடுத்த படங்களின் ரெசுளிஷன் அதிகமாக இருக்கம்.  அந்த படங்களை டெஸ்க்டாப்பில் வைக்கும் போது, கணினி தன்னை தயார்படுத்திக்கொள்ள தாமதமாகிறது.

ஓகே... இது கூட ஒரு பாயிண்டா  தெரியுது. அடுத்து என்னவோ?

சொல்றேன். சிலர் ஆர்வ கோளாறினால் அல்லது அறியாமையாலோ ஒரு புரோக்கிராமை திறந்து விட்டு, அது ஒப்பன் ஆவதற்குள் அடுத்த புரோக்கிராம் திறப்பதற்கான கட்டளையை கொடுப்பார்கள்.

அவ்வாறு அடுத்தெடுத்து கட்டளைகள் பிறப்பிக்கப்படும் போது, நீங்கள் என்ன சொல்ல வர்றீங்க என்று பாவம் கணினிக்கு தெரியாது.

திருவிழாவில் காணாமல் போன பிள்ளை மாதிரி திருதிருவென விழித்து விட்டு, எந்த செயலையும் செய்யாமல் பித்து பிடித்த மாதிரி நின்று விடும். (ஹேங் )


அது சரி அப்பறம்..!

நீங்கள் எந்த செயலை செய்ய துவங்கும் முன்பும், செய்த பின்பும் டெஸ்க் டாப்புக்கு வந்து ரீபிரஷ் செய்ய தவறாதீர்கள்.


அது சபாஷ்டா கண்ணா, நீ சமத்து பிள்ளை என்று தட்டி கொடுப்பது மாதிரி என்று வைத்தது கொள்ளலாம். அதுவும் புத்துணர்ச்சி பெற்று புது கட்டளைக்கு அடிபணிய தயாராக இருக்கும். சரியா?

நல்லாத்தான் இருக்கு. அடுத்து...!


அதைவிட முக்கியமாக டெஸ்க் டாப்பில் அவசியமான கோப்புகளை தவிர கண்டதையும் குவித்து வைக்காதீர்கள். நிறைய பேர் டெஸ்க் டாப்பை வைக்கோல்போர் மாதிரி வைத்திருப்பார்கள்.

கண்ணுல படுற மாதிரி முன்னாலேயே இருந்தால் எடுக்க வசதியாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் பெரிய தொல்லையே.

கணினிக்கு கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கும். அப்பறம் அதன் வேகம் குறையத்தான் செய்யும்.

ஒருத்தருக்கு கம்புட்டர் அறிவு எந்த அளவுக்கு இருக்கு என்பதை தெரிந்து கொள்ள, அவர் கம்புட்டரின் டெஸ்க் டாப்பை பார்த்தாலே தெரிந்து விடும். பிள்ளையாண்டானுக்கு என்ன தெரியும்ன்னு.

அடடா அப்பறம்!

ரீசைக்கிள் பின் என்பது உங்களுக்கு தெரியும். அவசியமில்லாத பைல்களை அழித்தால் அடுத்து போவது இங்குதான்.

உங்களுக்கு மீண்டும் தேவைப்படலாம் என்கிற பைலை சாதாரணமாக அழியுங்கள். திரும்பவும் அது முகத்திலேயே முழிக்க கூடாது என்று நினைக்கிறீர்களா சிப்ட் டெலிட்  செய்யுங்கள்.

இருந்தாலும் ரீசைக்கிள் பின்னிலேயே நிறைய பைல்களை வைத்திருப்பதும் கணினியின் வேகத்திற்கு ஒரு முட்டு கட்டை.


அடுத்து டெம்ரவரி பைல்கள்.  C டிரைவுக்கு போய் டெம் பைலை கண்டுபிடித்து வாரம் ஒரு முறையாவது டெலிட் செய்யுங்க.

அது என்ன டெம் பைல்.

உங்க கம்புட்டரில் நீங்க ஒரு பைலை ஒப்பன் செய்தால், கம்புட்டர் தன் பங்க்குக்கு கிறுக்குத்தனமா ஒரு பைலை தானா உருவாக்கி வச்சு இருக்கும்.

அப்படி உருவான பைல்கள் எல்லாம் குப்பையா சேர்ந்து இந்த டெம் போல்டர்க்குள்ள இருக்கும். அதைத்தான் அழிக்கிறோம்.

அவ்வளவுதானா இன்னும் இருக்கா?

இருக்கே.

இந்த டெம் பைலை டெலிட் செய்தாலும் முழு பைலும் அழிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை.


விடாது கருப்பு என்கிற மாதிரி இன்னும் இருக்கும். அதை கண்டு பிடிக்க ஒரு நூதன வழியை கண்டு பிடிக்கணும்.

எப்படி?


நேரே டெஸ்க்டாப் போங்க. அங்கெ run என்பதை கிளிக் பண்ணுங்க. அதில் % temp % என்று டைப் செய்து ஓகே கொடுங்க.



இப்போ புது டெம் பைல் ஒப்பன் ஆகும். அதையும் டெலிட் செய்யுங்க.

ஒரு நல்ல செய்தி. அப்பறம்..


இதே மாதிரி டெம்பரவரி இன்டர்நெட் பைல்களை தினசரி நீக்குவது நல்லது.
அது எப்படி?

சொல்றேன். நேரே மை கம்புட்டர் போங்க. அதை டபுள் கிளிக் செய்து டிரைவ் போங்கள்.



இங்கே முக்கிய பைல்கள் அடங்கிய C தவிர்த்து E மற்றும் G என்று இரண்டாக பிரிக்க பட்டிருக்கிறது. இது போல் உங்கள் கணினியிலும் இருக்கும். நீங்கள் அந்த பகுதிக்கு செல்லுங்கள்.



உதாரணமாக நான் E பகுதிக்கு போய் ரைட் கிளிக் செய்திருக்கிறேன். அப்போது ஒரு போல்டர் ஒப்பன் ஆனது. அதில் போய் properties என்பதை கிளிக் செய்தால் கிழே உள்ள படம் போல் புதிய போல்டர் ஒப்பன் ஆகும்.


அதில் General  என்பதை கிளிக் செய்தால் Disk  cleanup என்று வருவதை கிளிக் செய்யுங்கள். தேவையில்லாத பைல்கள் நீக்கப்படும்.

இப்போது செய்தது போலவே ஒவ்வொரு போல்டரிலும் உள்ள உபரி பைல்களை அழித்து விட்டால் கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்.


இதை போலவே உங்கள் போல்டரின் பார்டிஷனை மாதம் ஒரு முறை Defragment செய்யுங்கள்.

அதை எப்படி செய்வது? 

இதோ சொல்கிறேன். வழக்கம் போல் மைகம்புட்டர் செல்லுங்கள். அங்கே இருக்கும் போல்டரை செலக்ட் செய்து properties  சென்று tool என்பதை செலக்ட் செய்யுங்கள்.


பின் ஒரு புதிய போல்டர் ஒப்பன் ஆகும். அதில் Defragment என்பதை செலக்ட் செய்து ஓகே கொடுங்கள். அவ்வாறு கொடுத்தால் உங்கள் கணினியின் பைல்கள் சீரமைக்கப்படும். அதனால் கணினியின் வேகம் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...