Follow by Email

Wednesday, 12 September 2012

பெண்களே உஷார்..!!!


பேஸ்புக் மற்றும் சாட்டிங் தொடர்பாக நான் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறேன்.  

நாடு கடந்து வாழும் பலருக்கு தங்கள் இல்லத்தாருடன் பேசி மகிழ skype உறுதுணையாக இருக்கிறது என்று சொன்னால் மிகை இல்லை. 

ஆனால்,  இல்லத்தாருடன் என்பது கடந்து,  இணையதள தொடர்புகள் ஏற்படும் போதுதான் வில்லங்கம் விலை கொடுத்து வாங்க படுகிறது.

பலரும் அறிந்த விஷயம் தான். இருந்தாலும் மீண்டும் சொல்லவேண்டிய கட்டாயம்.

பேஸ்புக் வரமா சாபமா என்றே புரியாத அளவிற்கு, நன்மையையும் தீமையும் கலந்து நிற்கிறது. இதில் விட்டில் பூச்சிகளாய் விழுந்து தவிக்கும் பெண்கள் ஏராளம்.

பலருக்கு இந்த உண்மை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒருவருக்கு 100 நண்பர்கள் இருப்பதாக வைத்து கொண்டால், அவர்கள் பார்வைக்கு ஒரு போட்டோவை அப்லோர்ட் செய்தால், அந்த 100 நண்பர்கள் மட்டும் அந்த  போட்டோவை பார்ப்பதில்லை.

அந்த 100 நண்பர்களுக்கு நண்பர்களாக இருக்கும் பல 100 நண்பர்கள் அவர்கள் முக பக்கத்திற்கு போய் பார்த்து விடுவார்கள். இதுதான் எதார்த்தம்.


இது புரியாமல் பல இளம் பெண்கள் தாங்கள் எடுத்த புது புது புகை படங்களை வாரம் தோறும் தங்கள் பேஸ் புக்கில் வெளியிடுகிறார்கள்.

விளைவு என்ன?

ஒரு சில மணிதுளியில் உலகம் முழுவதும் அந்த புகைப்படம் போய் சேர்ந்து விடுகிறது.


சில பெண்கள் முன்னெச்சரிக்கையாக புகைப்படங்கள் வெளியிடுவதில்லை என்று வைத்து கொண்டாலும், ஆபத்து வேறு ரூபத்தில் வருகிறது.

எனது பேஸ்புக்கில்  நண்பர் ஒருவர் இளம் பெண்ணின் புகைப்படத்தை அப்லோர்ட் செய்திருந்தார்.

உடனே அவரின் நண்பர் ஒருவர் யாரு மச்சி? என்று ஒரு கேள்வி எழுப்பினார்.

அதற்க்கு அப்லோர்ட் பார்டி... என்னோட ஆளு... எப்படி இருக்கு என்று எதிர் கேள்வி கேட்டார்.

சூப்பர். மச்சி... அதுக்கு தங்கச்சி இருக்கா? என்கிறார் முதாலாம் பார்ட்டி.

ஏய்.. இது மற்றவர்.

பன் மச்சி....என்று அவர் ஜகா வாங்க... களத்தில் குதிக்கிறது அடுத்த சிகாமணி.

அவள் இதயத்தில் நீ இருந்தால் உன் உயிரை கொடு. 
அவள் இதயத்தில்  நீயும் ஒருவனாக இருந்தால்... அவள் போன் நம்பர் கொடு என்றார்.

காதலை வெறுத்த காளையர் சங்கத்தை சேர்ந்தவர் ஒருவர் வந்தார். ஏய்.. என்னங்கடா... சப்பை பிகருக்கு இங்கே சண்டை..... இப்படி அந்த பெண்ணை பற்றி கமான்ட்சுகள் பெருகி கொண்டே போகிறது.

பொதுவாக இணையதள பேச்சுக்கள் நாகரிகம் தாண்டி போகிறது என்பது உண்மை.

 பலர் காதலை வளர்ந்து அதில் தோல்வியை தழுவுகிறார்கள் என்பது உண்மை.

இன்னும் ஒரு படி மேலே போய், போன் வழி பேச்சு, நேரடி சந்திப்பு என்று தொடர்ந்து,   தவறுகள் அரங்கேற ஒரு வாய்ப்பை உருவாக்கி தருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.


நான் கடந்த பதிவு ஒன்றில் சொல்லி இருந்தேன் நினைவிருக்கா? இணையதளத்தில் ஆபாச படங்களை அரங்கேற்றும் நபர்களை பற்றி. தகாத உறவு கதை எழுத்தும் தளங்கள் பற்றி.

இந்த இடத்தில் ஒரு உண்மையை சொல்லவா.  ஒரு பிரபல பதிவாளர். அவரின் ஆன்மீக தளம் மிக பிரபலம்.

மணக்க மணக்க ஆன்மிக கருத்துக்களை எழுவார்.  ஆனால் அவரே ஒரு ஆபாச தளம் வைத்திருக்கிறார் வேறு பெயரில்.

இது எப்படி எனக்கு தெரியும் என்கிறிர்களா... அவரின் வழக்கமான எழுத்து நடை எனக்கு பரிச்சியம். அதை வைத்து தான் கண்டுபிடித்தேன். முதலில் மறுத்தாலும், பின் ஒத்து கொண்டார்.

 கலிகாலம். போகட்டும்.

சரி... சமிபத்தில் ஒரு வீடியோ ஒன்றை youtub இல் பார்த்தேன். அதிர்ந்து போனேன்.

தலையை வெட்டி வேறு உடலோடு ஒட்டி, புது பெயர் வைப்பது ஒரு புறம் இருக்க, ஒரு நாகரிகமான பெண்ணின் படத்தை கூட, அவள் அங்கங்கள் வெளியே தெரிகிற மாதிரி போட்டோஷாப்பில் செய்ய முடிகிறது.

இதோ அந்த வீடியோவை இணைத்திருக்கிறேன். இது பாடம் அல்ல.  நல்ல பாடம்.

பெண்களே... உஷார். இதை பார்த்தாவது உங்கள் படங்களை இணையதளங்களில் இணைப்பதை தவிருங்கள். முன்பே இணைத்த படங்களை நீக்குங்கள்.


பெற்றோர்கள் கவனத்திற்கு கிழே உள்ள  இந்த வீடியோ


No comments:

Post a Comment