Follow by Email

Tuesday, 25 September 2012

எமனையும் வெல்லும் எமதிசை


தனிமனித வளர்ச்சிக்கு காரணமானது எது?

முயற்சி, திறமை, சரியான வாய்ப்புகள், பணபலம், பக்கபலம், இப்படி பட்டியல் போட்டுக்கொண்டே போனால், முற்று புள்ளிக்கு சற்று முன்பாக வாஸ்து என்ற வார்த்தை இடம் பெறும்.


சரி...!

தனிமனித வளச்சிக்கு தடையாக இருப்பது எது?

அவசரம், ஆத்திரம், திட்டமின்மை, வறுமை, வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதில் கவனக்குறைவு, அலச்சியம் இப்படி பட்டியல் போட்டுக்கொண்டே போனால், முற்று புள்ளிக்கு சற்று முன்பாக வாஸ்து என்ற வார்த்தை மறுபடியும் இடம்பெறும்.

இது காலத்தின் கட்டாயம். 

ஒரு நண்பரின் கேள்வி இது?

என் அறிவாற்றலால் சாதிக்க முடியாத ஒன்றை, என் விடாமுயற்சியால்  பெறமுடியாத ஒன்றை, பணபலத்தால் சாதிக்க முடியாத ஒன்றை, வாஸ்து செய்து விடுமா?

அடடா... நல்ல கேள்விதான். பொட்டில் அறைந்த மாதிரி கேட்கிறார். அதனால் பதில் தேடித்தான் ஆகவேண்டும். வாருங்கள் என் நண்பரின் கோணத்திலேயே யோசிப்போம்.  

வாஸ்து என்பது என்ன?

அதற்கென உருவம் இருக்கா?

மாமா, மச்சான், அண்ணன், தம்பி, பங்காளி பாகஸ்தான், நண்பன் மாதிரி ஆபத்திற்கு உதவும் அதிமுக்கிய உறவா? இல்லையே...!

இந்த கேள்வி உங்களுக்குள்ளும் இருந்தால் மேலே தொடருங்கள்.

வாஸ்து என்பது மாமா மச்சான் உறவல்ல. இயற்கையோடு மனிதன் ஒத்து போகவேண்டியத்தின் அவசியத்தை சொல்வதுதான் வாஸ்து.

இப்போ ஓடுற பஸ்ல இருந்து இறங்குறீங்க. பஸ் எந்த திசையை நோக்கி போகிறதோ, அந்த திசையை நோக்கி கொஞ்ச தூரம் ஓடி, உங்கள் வேகத்தை கட்டுப்படுத்தினால் ஓகே.

ஏன்?

உங்கள் உடல் முன்னோக்கி இழுக்கப்படும் போது, அந்த வேகத்தோடு ஒத்து  போகவேண்டியது அவசியம். கட்டாயம்.

மாறாக ஓடும் பஸ்ஸில் இருந்து இறங்கும் போது எதிர் திசையில் போக முயற்சித்தால் கீழே விழுந்து அடிபட வேண்டியதுதான். இதுதான் இயற்கை.

அதுபோலதான் சூரிய ஒளியால் ஏற்படும் தாக்கம், மேடுபள்ளங்களால் ஏற்படும் தாக்கம், திசைகளின் ஈர்ப்பால் ஏற்படும் தாக்கம், இவற்றோடு ஒத்து போகவேண்டியத்தின் அவசியத்தை சொல்வதுதான் வாஸ்து.

ஓகே...நாம்   தலைப்புக்கு   வருவோம். பொதுவாக தெற்கு திசை வீடு என்பது சிறப்பில்லை என்று ஒரு செய்தி உலா வருகிறது.

காரணம் என்ன?


அது எமதிசையாம்.

அந்த திசையை நோக்கி வீடு கட்டினால், தலைவாசல் இருந்தால் தரித்திரம் என்று ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்ட புண்ணியவான் யார் என்று தெரியவில்லை.

உண்மையில் தெற்கு திசை பாதிப்பானதா?

இல்லை...இல்லை...இல்லை...!

தெற்கு செல்வத்தை குறிக்கும் திசை. பெயரை கேட்டால் சும்மா அதிரும்முல்ல என்று சொல்கிற மாதிரி யமதர்மனின் பெயர் வேண்டுமானால் கிலியை ஏற்படுத்தலாம். ஆனால் அவருக்கு உரிய திசை வளர்ச்சிக்கு உரிய திசை.

சரி.. இந்த எமன் யார்?

உலகத்திற்கு எல்லாம் வெளிச்சம் தரும் சூரியனின் மூத்த மகன். சனிபகவானின் அண்ணன். இவர்கள் இருவருமே தர்மதேவனின் இன்னொரு வடிவமாம்.

சனிபகவான் பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் நம்மை தீமைக்கு ஏற்ப நல்லதோ கெட்டதோ செய்கிறார் என்றால், மேலோகதிற்கு சென்றதும் அண்ணன் பார்த்துக்கொள்வார்.

ஆனால் எமன் உயிரை கவர்ந்து செல்லும் தொழிலில்  இருந்தாலும், உயர்ந்த குணம் படைத்தவர். எப்போதுமே பழியை ஏற்றுக்கொள்வதில்லை.

யோசித்து பாருங்கள்.

ஒருவர் இறந்தால் அதற்க்கு காரணம் எமன் என்று சொல்லுவதில்லை. அவரா... ஒரு வருஷமா  உடம்பு சரி இல்லாம இருந்தார்.. அதான்.

ரொம்ப நல்ல மனுஷன்.. விபத்திலே செத்து போய்ட்டார்.

ஹும்... குடி ... எப்பபாரு குப்பை வண்டி மாதிரி புல்லா இருப்பார். அதான்.

இறப்புக்குக்கான காரணம் இப்படி சொல்வார்களே தவிர, எமனை சொல்வதில்லை.


போகட்டும்....!

தெற்கு திசை நோக்கி தலைவாசல் இருந்தால் செல்வ செழிப்பாக வாழ வைக்கும்.

தெற்கு திசை நோக்கி வீடமைந்தால் புகழ், அந்தஸ்து, கவுரவத்தை தேடித்தரும்.

தெற்கு திசை நோக்கி நுழை வையில் அமைந்தால் நோயற்ற வாழ்வை பெறலாம்.

வாழ்க்கைக்கு பணம் தேவை. எவ்வளவு பணம் வேண்டும்? சரி.. நீடித்த ஆயுள் வேண்டும். 100 வயது வரை வாழலாம். ஆனால் நித்திய கண்டம், பூரண ஆயுள் என்பது மாதிரி, மருந்து மாத்திரையை விருந்து மாதிரிதான் சாப்பிடனும் என்றால், அந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன?

அது வாழ்க்கையே இல்லை. நரகம்.

ஆனால் இந்த எம திசை வியாதிகளில் இருந்து விடுதலை, விபத்துக்களில் இருந்து பாதுகாப்பு. பொருள் சேர்க்கை என்று பல நன்மைகளை தருகிறது தென்திசை,  என்கிறது வாஸ்து சாஸ்திரம். ஆராய்ந்து பார்த்தால் அனுபவ உண்மையும் அதுதான்..

அப்படியானால் எமனையும் வெல்ல எம திசை உதவி செய்கிறது.

அதனால் உங்கள் ஜாதகப்படி எந்த திசை வருகிறதோ, அந்த திசையில் வாசல் அமைக்க வேண்டும். உங்களுக்கு தென் திசை வந்தால் எந்த தயக்கமும்  தேவை இல்லை.

No comments:

Post a Comment