ads

Friday 14 September 2012

ஆளப்பிறந்தவனே ஓடி வா!

 வாழ்க்கையே ஒரு திருவிழா என்கிறார்கள் சுபி ஞானிகள்.  ஒவ்வொரு நாளும் ஆனந்தமே. வாழ்க்கையை நாம் எதிர்கொள்ளும் கண்ணோட்டத்தில்  இந்த ஆனந்தம் அமைகிறது.   அடித்த சூறாவளியில் ஒரு ஞானி தங்கி இருந்த கூறை பறந்து போய் விட்டது. ஆஹா.. இப்போது நிலவொளி எவ்வளவு அழகாக வீசுகிறது என்று மகிழ்ந்தாராம் ஞானி. ஞானிகளுக்கு எப்போதும் ஒரே மனநிலைதான் பரமானந்த நிலைதான்.  மனித மனம்  அப்படி இல்லை.  ஓடுகிறது, பறக்கிறது, பாய்ந்து  செல்கிறது, அப்படியே சோர்ந்து போய் முலையில் முடங்கி போகிறது.  வாழ்க்கையில் எது நடந்தாலும் அதற்கு காரணம் நாம் தான்.  நல்லது நடந்தாலும் சரி, கேட்டது நடந்தாலும் சரி.  நான் பணக்காரனாக இருந்தால் அதற்கு காரணம் நாம். சிக்கனத்தை கடைபிடித்திருப்போம், சேமிப்பை உயர்த்தியிருப்போம், வருமான வாய்ப்புகளை பெருக்கி இருப்போம், அதனால் பணத்தை சேர்க்க முடிந்தது.  நாம் ஏழையாக இருந்தால் அதற்கும் காரணம் நாம் தான்.  சிக்கனம் இருந்திருக்காது, வெட்டி செலவும், வீண் விரையங்களும் தொடர்ந்து வந்திருக்கும், வருமானத்தை பெருக்க திட்டமிட்ட எந்த காரியத்தையும் செய்திருக்க மாட்டோம். அதனால் ஏழையாக இருப்போம்.  சந்தோஷத்திற்கு   காரணம் நாம், சங்கடத்திற்கு காரணம் நாம். நமது மனம் பக்குவப்பட வாழ்க்கையை பற்றி நம் கண்ணோட்டம் மாறிவிடுகிறது.   வாழ்க்கையில் நாம் சந்திக்கும் கஷ்ட்டங்கள் நம்மை சிதைத்து விட்டு போகலாம். அல்லது திடமாய் செதுக்கி விட்டு செல்லலாம்.  அமைதியான கடல் ஆற்றல் மிக்க மாலுமியை உருவாக்காது என்றொரு பொன்மொழி  இருக்கிறது.   சோதனைகள் வரும்போதுதான் ஒருவரின் திறமை கூர்மையாகும் என்பதை சொல்வதே இந்த பொன்மொழி.  சோதனையில் விரத்தியடைந்து நொந்து போவதும், வெற்றி பெற்று உயர்ந்து செல்வதும், அவற்றை நாம் எதிர் நோக்கும் விதத்தில் தான் இருக்கிறது.   இதெல்லாம் நமக்கு வைக்கப்பட்ட பரிட்சை  என்று எண்ணிக்கொண்டால் பரீட்சையில் வெற்றி பெறுவதற்காக மும்மாரமாய் ஈடுபடுவோம் அல்லவா.  எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காமல் இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு, உங்கள் முயற்சியின் மேல் நம்பிக்கை வைத்து செயல் படுங்கள். வெற்றி பெறலாம்.  ஓன்று இறை பலம், இரண்டு தெய்வபலம்.  இவை இரண்டும் சேர்ந்து உங்களை வெற்றிகொள்ள வைக்கும்.  நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னை கைவிடுவதும் இல்லை என்கிறார் கீதை நாயகன்.  இறை நம்பிக்கை உள்ளத்தில் இருந்தால் நிச்சயம் ஒரு வெளிச்ச பாதை கண்ணுக்கு தெரியும்.   உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லாவிட்டாலும் கவலை இல்லை. உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை வையுங்கள்.  இரவில் வாகனத்தில் செல்கிறோம். காரின் வெளிச்சம் பத்தடி தூரத்திற்க்கு  தான் தெரியும். நாம் பயணம் செய்கிறோம், பத்தடி தூரத்திற்கு பின்னாலும் பாதை இருக்கும் என்ற நம்பிக்கை.  அதுபோல் தான் வாழ்க்கையும். நம்பிக்கை உள்ள மனிதன் தோற்ப்பதில்லை.  நம்பிக்கையோடு   செயல்படுங்கள்.  எந்த பிரச்சனை இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு இருக்கும். அதை சரியாக கண்டு பிடித்து பயன் படுத்திக்கொள்ள முயலும் போது, பிரச்சனைகள் நம்மை விட்டு விலகி சென்று விடும்.  இன்று பல பிரச்சனைகளுக்கு  காரணமாக இருப்பது பணம். பண பற்றாக்குறைதான்.  எல்லாரும் பணக்காரர்களாக பிறப்பதில்லை. பணக்காரர்களை எடுத்துக்கொண்டால், பணத்தை தவிர வேறு பிரச்சனைகள் இருக்கும்.  உழைப்பு, கடின முயற்ச்சி, நம்பிக்கை, இவற்றோடு இறைவனின் ஆசியும் இருந்தால் எதையும் வெல்லலாம். வென்று பாருங்கள்.  ஏனெனில்.... வாழ்க்கை ஒரு விளையாட்டு விளையாடி பாருங்கள்.  வாழ்க்கை ஒரு பந்தயம். ஜெயித்து பாருங்கள்.  வாழ்க்கை ஒரு சினிமா ரசித்து பாருங்கள்.  வாழ்க்கை ஒரு கவிதை ஆழ்ந்து யோசியுங்கள்.  வாழக்கை ஒரு ஆனந்தம், அனுபவித்து பாருங்கள்.  வாழ்க்கை ஒரு போர்க்களம் போராடி பாருங்கள்.  வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்து பாருங்கள்.


வாழ்க்கையே ஒரு திருவிழா என்கிறார்கள் சுபி ஞானிகள்.  ஒவ்வொரு நாளும் ஆனந்தமே. வாழ்க்கையை நாம் எதிர்கொள்ளும் கண்ணோட்டத்தில்  இந்த ஆனந்தம் அமைகிறது. 

அடித்த சூறாவளியில் ஒரு ஞானி தங்கி இருந்த கூறை பறந்து போய் விட்டது. ஆஹா.. இப்போது நிலவொளி எவ்வளவு அழகாக வீசுகிறது என்று மகிழ்ந்தாராம் ஞானி. ஞானிகளுக்கு எப்போதும் ஒரே மனநிலைதான் பரமானந்த நிலைதான்.

மனித மனம்  அப்படி இல்லை.  ஓடுகிறது, பறக்கிறது, பாய்ந்து  செல்கிறது, அப்படியே சோர்ந்து போய் முலையில் முடங்கி போகிறது.

வாழ்க்கையில் எது நடந்தாலும் அதற்கு காரணம் நாம் தான்.

நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி.

நான் பணக்காரனாக இருந்தால் அதற்கு காரணம் நாம். சிக்கனத்தை கடைபிடித்திருப்போம், சேமிப்பை உயர்த்தியிருப்போம், வருமான வாய்ப்புகளை பெருக்கி இருப்போம், அதனால் பணத்தை சேர்க்க முடிந்தது.

நாம் ஏழையாக இருந்தால் அதற்கும் காரணம் நாம் தான்.

சிக்கனம் இருந்திருக்காது, வெட்டி செலவும், வீண் விரையங்களும் தொடர்ந்து வந்திருக்கும், வருமானத்தை பெருக்க திட்டமிட்ட எந்த காரியத்தையும் செய்திருக்க மாட்டோம். அதனால் ஏழையாக இருப்போம்.

அதுபோல .... சந்தோஷத்திற்கு   காரணம் நாம், சங்கடத்திற்கு காரணம் நாம். நமது மனம் பக்குவப்பட வாழ்க்கையை பற்றி நம் கண்ணோட்டம் மாறிவிடுகிறது.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் கஷ்ட்டங்கள் நம்மை சிதைத்து விட்டு போகலாம். அல்லது திடமாய் செதுக்கி விட்டு செல்லலாம்.

அமைதியான கடல் ஆற்றல் மிக்க மாலுமியை உருவாக்காது என்றொரு பொன்மொழி  இருக்கிறது.

சோதனைகள் வரும்போதுதான் ஒருவரின் திறமை கூர்மையாகும் என்பதை சொல்வதே இந்த பொன்மொழி.

சோதனையில் விரத்தியடைந்து நொந்து போவதும், வெற்றி பெற்று உயர்ந்து செல்வதும், அவற்றை நாம் எதிர் நோக்கும் விதத்தில் தான் இருக்கிறது.

இதெல்லாம் நமக்கு வைக்கப்பட்ட பரிட்சை  என்று எண்ணிக்கொண்டால் பரீட்சையில் வெற்றி பெறுவதற்காக மும்மாரமாய் ஈடுபடுவோம் அல்லவா.

எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காமல் இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு, உங்கள் முயற்சியின் மேல் நம்பிக்கை வைத்து செயல் படுங்கள். வெற்றி பெறலாம்.

ஓன்று இறை பலம், இரண்டு தெய்வபலம்.  இவை இரண்டும் சேர்ந்து உங்களை வெற்றிகொள்ள வைக்கும்.

நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னை கைவிடுவதும் இல்லை என்கிறார் கீதை நாயகன்.

இறை நம்பிக்கை உள்ளத்தில் இருந்தால் நிச்சயம் ஒரு வெளிச்ச பாதை கண்ணுக்கு தெரியும்.

உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லாவிட்டாலும் கவலை இல்லை. உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை வையுங்கள்.

இரவில் வாகனத்தில் செல்கிறோம். காரின் வெளிச்சம் பத்தடி தூரத்திற்க்கு  தான் தெரியும். நாம் பயணம் செய்கிறோம், பத்தடி தூரத்திற்கு பின்னாலும் பாதை இருக்கும் என்ற நம்பிக்கை.

அதுபோல் தான் வாழ்க்கையும். நம்பிக்கை உள்ள மனிதன் தோற்ப்பதில்லை.

நம்பிக்கையோடு   செயல்படுங்கள்.

எந்த பிரச்சனை இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு இருக்கும். அதை சரியாக கண்டு பிடித்து பயன் படுத்திக்கொள்ள முயலும் போது, பிரச்சனைகள் நம்மை விட்டு விலகி சென்று விடும்.

இன்று பல பிரச்சனைகளுக்கு  காரணமாக இருப்பது பணம். பண பற்றாக்குறைதான்.

எல்லாரும் பணக்காரர்களாக பிறப்பதில்லை. பணக்காரர்களை எடுத்துக்கொண்டால், பணத்தை தவிர வேறு பிரச்சனைகள் இருக்கும்.

உழைப்பு, கடின முயற்ச்சி, நம்பிக்கை, இவற்றோடு இறைவனின் ஆசியும் இருந்தால் எதையும் வெல்லலாம். வென்று பாருங்கள்.

ஏனெனில்.... வாழ்க்கை ஒரு விளையாட்டு விளையாடி பாருங்கள்.

வாழ்க்கை ஒரு பந்தயம். ஜெயித்து பாருங்கள்.

வாழ்க்கை ஒரு சினிமா ரசித்து பாருங்கள்.

வாழ்க்கை ஒரு கவிதை ஆழ்ந்து யோசியுங்கள்.

வாழக்கை ஒரு ஆனந்தம், அனுபவித்து பாருங்கள்.

வாழ்க்கை ஒரு போர்க்களம் போராடி பாருங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்து பாருங்கள்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...