பரிகாரங்கள் பலன் தருமா?
இது என்ன விசித்திரமான கேள்வி..!
காரணமிருக்கிறது. ஒரு தவறை செய்து விட்டு அதற்கு பரிகாரம் செய்வது ஒரு வகை - இது மனசாந்தி.
எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறாமல் பட்டகாலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல், அடிமேல் அடி விழும்போது நிவாரணம் தேடி செய்யப்படுவது மறுவகை.
பரிகாரங்களை பலர் சொல்கிறார்கள். குறிப்பாக ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், மந்திரவாதிகள், அவ்வளவு ஏன்? கிராம தேவதை கோவில் பூசாரிகள் கூட சொல்வதுண்டு.பாதிக்க பட்டவர்கள் அதையே வேதவாக்காக கொண்டு நிறைவேற்றுவது உண்டு.
விரதமிருப்பது ஒரு வகை. பூஜைகள் செய்வது மறு வகை. ஒரு சில வசதி படைத்தவர்கள் யாகம், வேள்வி என்று தடபுடலாக செய்பவர்களும் இருக்கிறார்கள்.
சிலர் ஆடு, மாடு, கோழி என்று உயிர் பலி தந்தும் நிறைவேற்றுகிறார்கள்.
பரிகாரம் என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஜோதிடம் தோன்றிய காலத்திற்கு முன்பே இருந்திருக்கிறது.
அதற்கு ஆதாரமாய் புராண இதிகாசங்களில் தேவாதி தேவர்களும், அரக்கர் இனங்களும் விரும்பியதை அடைய பல்வேறு யாகங்களை செய்து இறைவனை திருப்திப்படுத்தி, வேண்டியதை பெற்றதாய் விவரம் சொல்கிறது.
தவம், யாகம், வேள்வி, பூஜை, வழிபாடு என்று பல பெயர்களில் வந்தாலும் நோக்கம் ஒன்றுதான்.
நமக்கு தேவையானதை பெற மெய்வருத்தி, உடல்வருத்தி, ஒரே சிந்தையோடு இறைவனை சரணாகதி அடைந்தால் விரும்பியதை பெறலாம். துன்ப சுமைகளை இறக்கி வைக்கலாம் என்பதே அது.
ராவணன் தவம் இருந்து மூன்றரை கோடி ஆண்டுகள் ஆயுளை பெற்றானாம். அவன் ஆசை சிரஞ்சீவியாக வாழ்வது.
மார்கண்டேயன் தவமிருந்து என்றும் 16 வரம் பெற்றான்.
அர்ச்சுனன் தவமிருந்து பாசுபாஸ்திரம் பெற்றான். இவர்கள் நோக்கமெல்லாம் இவ்வுலகில் சர்வ வல்லமை பெற்றவர்களாக திகழ்வது.
நாம் மனிதர்கள். தேவர்கள் மாதிரி அதிகபடியான ஆசை இல்லாவிட்டாலும் பூமியில் மனிதனாக பிறந்து விட்டோம்.
ஏதோ நாமும் வாழும் காலம் வரையில் வறுமையில் வாடாமல், நோய்நொடிகள் இல்லாமல், அன்பான மனைவி, அழகான குழந்தைகள், வசதியான வீடு, கொஞ்சூண்டு நிலம் நீச்சு, அப்படியே போக வர ஒரு வாகனம் இப்படி இருந்து விட்டால் கூட போதும், இந்த நிலைக்காகத்தான் போராடிக்கொண்டிருக்கிறோம்.
சரி பரிகாரங்கள் செய்தால் துன்பங்களில் இருந்து விடுதலையாகி விட முடியுமா? ஒரு கேள்வி எழுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் அமர்ந்த கிரகங்கள் அந்த ஜாதகரை வழிநடத்தி செல்லும். பொதுவாக எந்த கிரகத்தையும் இது கெட்ட கிரகம் என்று கட்டம் கட்ட தேவையில்லை.
காரணம் அது அந்த ஜாதகத்திற்கு எந்த ஆதிபத்தியம் பெறுகிறதோ, அதை பொறுத்தே தங்கள் பலனை தரபோகிறார்கள். இதில் மாறுபட்ட கருத்துக்கு வழியில்லை.
என்ன செய்ய? ரெண்டு கண்ணும் தெரியாதவனை ராஜபார்வை பார்க்க சொன்னால் என்னாகும்.
சரி விஷயத்திற்கு வருவோம்.
கிரகம் நம்மை செய்யும் நிலையில் இருந்தால் நம்மை செய்யும். தீமை செய்யும் நிலையில் இருந்தால் தீமை செய்யும். வீடு வாசல், கன்று காலிகள், வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, செல்வ செழிப்பு, ஆளடிமை என்று ராஜயோக வாழ்க்கையை அள்ளித்தருவதும் கிரகங்களே.
இத்தனை சுகங்களை அனுபவித்துகொண்டிருப்பவரை, ஒன்றும் இல்லாத ஓட்டாண்டியாக்கி நடுத்தெருவுக்கு கொண்டு வருவதும் கிரகங்களே.
சரி துன்ப சுமையை தாங்க முடியாத மனிதன் பரிகாரம் செய்வதால் பலன்கள் மாறிவிடுமா? பிழைத்து போகிறான் மனிதன் என்று கிரகம் பொறுத்து போகுமா?
ஆராய்வோம்.
எனக்கு தெரிந்த பெரியவர் தன் மகளுக்கு வரன் தேடிக்கொண்டிருந்தார். எதுவுமே ஒத்து வரவில்லை. ஜாதகம் ஒத்துழைத்தால் மன பொருத்தம் இல்லை.
மன பொருத்தம் இருந்தால் ஜாதகம் ஒத்துழைக்கவில்லை. அதற்காக அவர் சலிப்படையவும் இல்லை. திருமண அமைப்பாளர் பலரிடம் அந்த பெண்ணின் ஜாதகம் இருக்கிறது. அதற்கு இப்போதே வயது 35 ஐ தாண்டிவிட்டது.
அவர் செய்யாத பரிகாரமா? எதுவும் மீதமில்லை. எதை சொன்னாலும் உடனே செய்து விடுவார். அப்படி ஒரு நம்பிக்கை. என்ன செய்ய...!! பொண்ணை கரையேத்தனுமே.
அந்த பொண்ணும் சும்மா இல்லை. பாய் தலையனையோடு போய் கோவிலில் குடி இருக்கவில்லையே தவிர, மற்றபடி ஆளை காணும் என்று தேடினால் அனேகமாக ஆலயத்தில் இருக்கும் என்று அடையாளம் சொல்லலாம்.
அது தன் பங்க்குக்கு வழிபாடு, விரதம், சுமங்கலி பூஜை என்று ஏதேதோ செய்துகொண்டு தான் இருக்கிறது.
ஆனாலும் இந்த பரிதாபத்துக்குரிய ஜீவன்களின் கதறல், கல்லாய்ப்போன எந்த கடவுளின் காதிலும் விழவில்லை. ஏன் இரக்கமே இல்லாத கிரகமும் கண் திறந்து பார்க்கவில்லை.
என்ன காரணம்?
லக்னாதிபதி ஏழாம் அதிபதியோடு கூடி லக்னத்திற்கு 12 இல் இருந்தான். ஆட்சி பெற்ற பத்தாம் அதிபதியோடு மூன்று பேர் கூடி நின்றார்கள்.
இந்த லெச்சனத்தில் சுக்கிரனும் நீச்சம். இந்த அமைப்பு கல்யாணம் என்பது கனவிலும் இல்லை என்று கட்டியம் கூறியது. விதி வழியில் தான் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
என்னவாயிற்று பூஜை? என்னவாயிற்று பரிகாரம்?
சரி அதுதான் போகட்டும்.
சுமதி + சுந்தர், காதல் + கல்யாண ஜோடி. சந்திப்பில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது.
ஜாதகம் பார்க்கவில்லை. பொருத்தம் இருக்கிறதா தெரியாது. ஒருவருக்கு ஒருவர் பார்த்தார்கள், பிடித்திருந்தது. இருவரும் ஒன்றிணைந்து நல்லதொரு வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அவ்வளவுதான்.
இவர்களின் மன பொருத்தத்திற்கு முன்பு தச பொருத்தங்கள் தேவைப்படவில்லை. கடைசியில் திருமணத்தில் முடிந்தது. அதன்பின்பும் வாழ்க்கை நல்ல நிலையில் தான் சென்று கொண்டிருந்தது.
எதேச்சையாக நண்பர் ஒருவர் மூலமாக அறிமுகமான ஜோதிடர் ஒருவர் தம்பதிகளின் ஜாதகத்தை பார்த்தார்.
பெண் பரணி. ஆண் பூசம். எடுத்த எடுப்பில் நட்சத்திர பொருத்தம் அவுட். அடுத்து பெண்ணோ துலாம் லக்னம். 2 இல் ராகு, 8 இல் செவ்வாய் மற்றும் கேது. சுபக்கிரக பார்வையும் இல்லை. சுக்கிரன் கவலை படாமல் கன்னியில் இருந்தான்.
ஜோதிடருக்கு தர்மசங்கடமாக போய் விட்டது. தயங்கி தயங்கி விஷயத்தை சொன்னார். பொண்ணுக்கு நடப்பது ராகு திசை. பரிகாரம் செய்ய வேண்டும் என்றார்.
உயிருக்கு உலை வைக்கும் போது உதாசினப்படுத்த முடியுமா? அவர்களும் சம்மதித்தார்கள். ராகு கேதுவுக்கு சர்ப்ப சாந்தி செய்யப்பட்டது.
மாங்கல்ய தோஷ நிவர்த்தி வழிபாடு, திருநாகேஸ்வரம், கீழபெரும்பள்ளம் என்று ஆன்மிக உலாவும் போய் வந்தாகி விட்டது.
பிரச்சனை தீர்ந்ததா? இல்லையே.. வாகன விபத்தொன்றில் சுந்தர் காலமானார்.
பரிகாரம் பலனளிக்கவில்லையே ஏன்?
நான் இப்படி எழுதுவதால் ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். சில சமயம் இப்படி அசம்பாவிதங்கள் நடந்து விடுவதுண்டு. அதற்காக பரிகாரமே தேவை இல்லை என்ற முடிவுக்கு வர முடியுமா?
கேள்வி எழுகிறதா இல்லையா?
ஏழரை சனியோ, அஷ்டமத்து சனியோ நடப்பில் வந்தால் விநாயகரை அல்லது ஆஞ்சநேயரை வழிபட சொல்லி ஜோதிடர்கள் சொல்கிறார்கள். ஏன்?
சனியின் பிடியில் இருந்து தப்பித்தவர்கள் இவர்கள் மட்டும்தான். இவர்களை வணங்கினால் சனியின் பிடியில் இருந்து விடுபடலாம் என்ற கோணத்தில் சொல்லபடுபவை. நாமும் வணங்குகிறோம்.
உடனே விநாயகரும் ஆஞ்சநேயரும் ... என் பத்தன் என்னை சரணடைந்து விட்டான். என்னை எப்படி தீண்டவில்லையோ, அதைபோல் என் பத்தனையும் பாதுகாக்க வேண்டும் என்று சனியிடம் சொல்வார்களா?
சொல்வார்கள் என்ற நம்பிக்கையை ஜோதிட சாஸ்த்திரம் ஊட்டுகிறது. இதில் உள்ள உண்மை நிலையை பின்னால் சொல்கிறேன்.
நம்பினோர் கைவிடப்படார். இது நான்கு மறை தீர்ப்பு. நமக்கு ஒரு காரியம் நடக்க வேண்டும். என்ன செய்வோம்.
அவர்களுக்கு மிக நெருக்கமான நபர்கள் யார்? யாரை பிடித்தால் நம் காரியம் நடக்கும் என்று யோசித்து அவர்களை அணுகி, பவ்யமாக நமது நிலையை எடுத்து கூறி, நமக்கு என்ன வேண்டுமோ அதை பெறுகிறோம் அல்லவா. அதை போல்தான் கிரகங்களும்.
ஜோதிட சாஸ்திரத்தை சொல்லி வைத்த ஞானிகள், மகான்கள், ரிஷிகள் மறைமுகமாக ஒரு விஷயத்தை சொல்லி வைத்தார்கள். அது கிரகங்களின் அதிதேவதை.
ஒரு தசையோ புத்தியோ பாதகமான பலன்களை செய்து கொண்டிருந்தால் கிரகங்களுக்கு எஜமானாக, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிதேவதைகளை வணங்கினால் நம்மை கிட்டும் என்கிறது சாஸ்த்திரம். அது ஓங்கி அடிப்பதை தாங்கி விடுவதற்கு சமம்.
சரி....கிரகங்களின் அதிதேவதை என்ன?
சூரியன் .......சிவன்
சந்திரன் ......பார்வதி
செவ்வாய் ..சுப்பிரமணியர்
புதன் ........... மகாவிஷ்ணு
குரு ..............பிரம்மா, தட்ச்சினாமூர்த்தி
சுக்கிரன் ......லக்ஷ்மி, இந்திரன்
சனி ..............எமன், சாஸ்த்தா
ராகு .............காளி
கேது ............விநாயகர்
இது நவகிரங்களின் எஜமானர்கள். இவர்களை வணங்கும்போது நம்மை கிட்டும் என்பது ஜோதிட வாக்கு. என்னதான் கல் நெஞ்சக்கார கிரகமாக இருந்தாலும் ஒரு ஈரம் இருக்கத்தானே செய்யும்.
சரி நாம் விஷயத்திற்கு வருவோம்.
இங்கே சொன்ன பரிகார தேவதைகளை வணங்கும் போது கெடுதல் செய்யும் கிரகங்கள் தங்கள் கெடு பலனை குறைத்து கொள்ளும் என்பது உண்மையானால், முன்னே சொன்ன இரண்டு ஜாதகர்கள் தங்கள் விதியமைப்பை மற்ற முடியவில்லையே ஏன்?
பரிகாரங்கள் பலன் தராமல் போனதின் மர்மம் என்ன?
காரணம் இதுதான். அவர்கள் ஜாதகத்தில் பலமாக பிடித்திருந்த பிரம்மகத்தி தோஷம். ஊழ்வினையின் பயனாய் வாழ்க்கையோடு விளையாடியது. அதுதான் காரணம்.
அதோடு கோவிலுக்கு போவதும், அர்ச்சனை செய்வதும், விளக்கு ஏற்றுவதும் பரிகாரத்தின் ஒரு வடிவம். அதோடு ஹோமம் செய்வது முழு பலனை தரும். இதுபோன்ற கர்ம வினைகளை தீர்க்க கூடிய சக்தி அதற்கு உண்டு.
ஆனால் அதன் வழியே போய் பலனை பெற வேண்டும் என்ற அமைப்பிருந்தால், ஆகமம் தெரிந்த, புரிந்த, நல்ல குருமார்கள் வழியாக ஹோமம் செய்து விடுபட ஒரு வழி பிறக்கும்.
அதையும் மீறி விதி விளையாடினால்?
ஆண்டவன் விருப்பம் அதுவானால் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். வேறு என்ன சொல்ல.
முதலில் நம்பிக்கை தேவை. நம்புவோம்.

ஜோதிடத்தால் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்று வியாபாரம் செய்யும் இந்த நாளில் உண்மையை போட்டு உடைத்த தங்களது நேர்மையை நிச்சயம் பாராட்ட வேண்டும், நன்றி.
ReplyDelete