Follow by Email

Tuesday, 27 December 2011

yogam

kiragamaaligaa  yogam / கிரகமாலிகா யோகம் 

யோகங்கள் பல. அவற்றில் சில யோகங்கள் தான் பிரபலமானவை. காரணம் பலன் தருவதில் பல மடங்கு பலம் வாய்ந்தது.    அதில் ஒன்றுதான் கிரகமாலிகா யோகம்.  கிரகமாலிக யோகம் என்பதே கிரகங்களின் அணிவரிசைதான். 

சரி கிரகங்கள் எப்படி இருந்தால் யோகம்?

சேர்ந்தால் யோகம். பார்த்தால் யோகம். ஓரிடத்தில் இருந்தால் யோகம் என்று பட்டியல் இட்டுக்கொண்டே வந்தால் வீடு தோறும் கிரகங்கள் இருந்தால் யோகம்.  

அதுதான் கிரகமாலிகா யோகம். 

வீடு என்பது ராசியை குறிப்பது. இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக கிரகங்கள் இருந்தால் யோகம் தருகிறது. அதிலும் நன்மை தரும் யோகமும் உண்டு. தீமை தரும் யோகமும் உண்டு.

நன்மை தரும் யோகம் என்பது செல்வ விருத்தியை மட்டும் இல்லாமல் சமுகத்தில் புகழை தருவதும், அந்தஸ்தை தருவதும், அதிக்காரத்தை உயர்த்தி தருவதும், மந்திரிக்கு இன்னையான வாழ்க்கையை மாற்றி தருவதும் யோகம்தான். 

தீமைதரும் யோகம் என்பது வேறு. அதை எந்த வழியில் பெற்றார் என்பதுதான் கேள்வி.  நல்வழியில் பெறாமல் தீய வழியில் பெறுவதும் ஒரு வகை யோகம்தான்.  அது சண்டாள யோகம். 

மற்றவரை வஞ்சித்து மோசடி செய்து, தீய வழியில் ஈடுபட்டு மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட வைப்பது.  இதை நல் யோகமாக எடுத்துக் கொள்ள முடியாது. 

என்றாலும் அதுவும் யோக வரிசையில் இடம் பெறுகிறது என்பதே உண்மை. 

இருப்பது  ஒன்பது கிரகங்கள்.  இதில் ராகு கேது இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஏழாம் இடத்தில் அமர்வது வாடிக்கை. இதில் எந்த மாற்றமும் இருக்காது.  அடுத்து வரும் பட்டியலில் ராகு கேது தனித்து இருக்கலாம். அதை கணக்கில் எடுக்க வேண்டாம். மற்ற கிரகங்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை மட்டும் கவனத்தில் கொள்வோம்.

பொதுவாக கிரகங்கள் கெடிகார முள் எப்படி சுற்றுகிறதோ, அந்த வரிசையில் தான் சுற்றும். கிரக அணிவகுப்பு என்பது லக்னம் முதல் இருந்தால் யோகம் என்பது இளமையில் இருந்தே வரும்.

மாறாக ஏழாம் இடத்திருக்கு பின் இருந்தால் அந்த யோகம் வாலிபம் கடந்த பிறகு வரும். போகட்டும்... இனி இந்த யோகா வரிசையை காண்போம்.

  • ஒன்பது கிரகங்களும் ஒன்பது வீடுகளில் இருந்தால் அதற்கு கிரகமாலிகா யோகம் என்று பெயர்.  

உங்களுக்கு இந்த யோகம் இருக்கா?

அப்படின்னா  கண்ணுல படுற சாமியை பார்த்து உங்க கன்னத்தில் போட்டுகிற ஆசாமி நீங்க.  புரியலையா? பக்திமான்தான். கிட்டத்தட்ட சாமியார்.  குடும்ப வாழ்க்கை உங்களுக்கு  அவ்வளவா பிடிக்காது.  பின்னால ஆசிரமம் வச்சாலும் ஆச்சர்யம் இல்லை.

  • தொடர்ந்து எட்டு விடுகளில் கிரகம் இருந்தாலும் கிரகமாலிக யோகம் என்றே பெயர்.

உங்களுக்கு இந்த யோகம் இருக்கா?

அப்படினா நீங்க யாருக்கும் பணிஞ்சு போக மாட்டிங்க.  துணிச்சல் அதிகம்.  இரக்க குணம் கொஞ்சம் கம்மி. யாராவது ஏதாவது சேட்டை பண்ணினா போட்டு தாக்கி விட்டுடுவிங்க.

இந்த அமைப்பு உங்களுக்கோ அல்லது யாருக்கு இருந்தாலும்,  அரசியலில் இருந்தால் அமோகம் போங்கோ.  எந்த நாட்டு அரசியல்வாதியா இருந்தாலும் ஆதாயம் இல்லாம போகுமா.  குறுகிய காலத்தில கோடிஸ்வரனா மாறலாம்.

சினிமா துறையில ஒரு பேச்சு இருக்கு.  தூங்கும்போது காலை ஆட்டிகிட்டே தூங்கணும்.  இல்லேனா செத்து போயிட்டதா செய்தி பரவிடும்னு.  அரசியலில் அது  எப்படி  தெரியுமா?  தூங்கும் போது கண்ணை தொறந்து கிட்டே தூங்கணும்.  இல்லேனா செத்து போயிட்டதா செய்தி பரவிடும்.

ஏன்னா எதிரிகள் அதிகம்.  சிக்கினா சிட்டடையை போடுறது, அகப்பட்டா ஆட்டையை போடுறது அரசியலில்  சகஜம்தானே.  ஆனால் எதிரிகளை, எதிர்பாளர்களை முறியடிக்க விதியை மாற்றி சதி வலைகள்  பிண்ணுவார்கள் என்கிறது சாஸ்திரம்

அரசு அலுவலராக இருந்தால் கையும் நீளம், பையும் நீளம். லஞ்ச லாவண்யத்தில் முழ்கி திளைப்பார்கள்.  வியாபார துறையில் இருந்தால் கடத்தல், பதுக்கல், கலப்படம், என்று லாபம் ஒன்றையே குறிகோளாக கொண்டு செயல் படுவார்களாம்

சட்ட திட்டத்திருக்கு அஞ்சதவராக கட்டு படாதவராக, பெயரை கேட்டா அஞ்சி நடுங்குகிற அளவிற்கு இருப்பார்.

  • லக்னம் முதல் ஏழு விடுகளில் கிரகம் இருந்தாலும் கிரகமாலிகா யோகம் என்றே பெயர்.  பெரும்பாலும் வியாபாரம்தான். முதலாளிதான். முதல் போட்ட அத்தனை பேரும் முதலாளி இல்லை. 

பல இடங்களிலே முதலாளி தொழிலாளியா இருப்பார். தொழிலாளி முதலாளியா இருப்பார்.  

என்ன காரணம்?

நிர்வாக திறன் இல்லாதது தான் காரணம்.

எங்க முதலாளி தங்க முதலாளின்னு பாட்டு பாடிட்டு போய்டுவாங்க.  அதுக்காக கொடுமை படுத்துறது இல்லை.  திட்டி வேலை வாங்கிறது இல்லை.  திட்டம் போட்டு செயல்படுறது.

பாம்பை முட்டைல கொல்லனும், புலியை குட்டில கொல்லனும்ன்னு தெரிஞ்சு இருக்கணும்.  அதுதான் நிர்வாக திறன்.  இந்த அமைப்பு உங்களுக்கு இருந்தால் மீன் குஞ்சுக்கு நீந்த கற்று கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

அன்பானவராம், பண்பானவராம், கருணையானவராம்.  வாழ்க்கை பாதை வசந்த காலமாகவே இருக்குமாம், கசந்த காலம் என்பது காணாமல் போயிடுமாம்.

அன்பான நண்பர்கள், ஆரோக்கியமான உறவினர்கள், இணக்கமான குடும்ப உறுபினர்கள் என்று சகல நிலைகளும் சிறப்பாக இருக்கும்.  மொத்தத்தில் தொட்டது துலங்கும், மண்ணள்ளி போட்டாலும் பொன்னாக மாறும்.

  • லக்னம் முதல் ஆறு விடுகளில் கிரகம் இருந்தாலும் கிரகமாலிகா யோகம் என்றே பெயர்.  ராகு கேது தவிர்த்து மற்ற கிரகங்கள் இந்த வரிசையில் வரும். 

இந்த அமைப்பு உங்களுக்கு இருக்கா? இருந்தால் நீங்க புதுமைவாதி.  சிந்தனைவாதி.

அடிக்கடி கோவபட்டால் கோவத்திற்கு மரியாதை இல்லை...
கோவமே படாவிட்டால் நமக்கே மரியாதை இல்லைன்னு.... தத்துவ முத்துக்கள் உதிர்பீங்க.

அப்பறம்.....

என் நினைவாக உன்னிடம் ஒன்றும் இல்லை
ஆனால்
என்னிடம்   உன் நினைவைத்தவிர
வேறு ஒன்றும் இல்லைன்னு கண்ணதாசன், வைரமுத்து மாதிரி கலக்கலா கவிதை எழுதலாம்.   வாழ்நாள் சாதனையாளராக வரலாற்றில் இடம் பெறலாம்.

  • லக்னம் முதல் அஞ்சு விடுகளில் கிரகம் இருந்தாலும் கிரகமாலிகா யோகம் என்றே பெயர்.  பரம்பரை பணக்காரர்கள் உருவாக காரணம்.  செல்வா செழிப்பில் மிதக்க வைக்கும். 

வீடு வாகன யோகம், திருமண யோகம், திருமணத்தால் யோகம், பிள்ளைகளால் யோகம், உற்ற உறவுகளால் யோகம் என்று பல்வேறு பாக்கியங்களுக்கு அடித்தளம் போட்டு தருகிறது. மொத்தத்தில் சீரும் சிறப்புமாக,  செல்வ செழிப்புமாக வாழ வைக்கும்.

லக்னம் முதல் நான்கு வீடுகளில் கிரகம் இருந்தாலும் கிரகமாலிகா யோகம் என்றே பெயர்.  என்ன..... சபல புத்தியாம். கொஞ்சம் அப்படி இப்படி இருப்பாங்களாம். No comments:

Post a Comment