Follow by Email

Friday, 16 December 2011

WHETHER THE WORLD WILL DESTROYED ON 2012

 WHETHER THE  WORLD  WILL  DESTROYED  ON  2012 /  
 2012 இல் உலகம் அழியுமா?  

2012 
உலகம் அழியும் என்ற ஒரு வரி செய்தி உலகம் முழுவதும் விவாத பொருளாக மாறிவிட்டது.  இந்த வருடத்தை மையமாக வைத்து உருவான திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

திரை இட்ட இடமெல்லாம் வசூல். இது ஏதோ ஆர்வ கோளாரில் அணிவகுக்கும் மக்கள்  அல்ல. அதிர்ச்சியான தகவலை ஆராய வந்தவர்கள்.  ஜோதிடம் பார்க்க வரும் பலர் தங்களின் எதிர் காலத்தை பற்றி கேட்கிறார்களோ இல்லையோ உலக ஜாதகத்தை பற்றித்தான் முதல் கேள்வியே எழுப்புகிறார்கள்.

இதற்கெல்லாம் கரணம் இல்லாமல் இல்லை. எதிர் காலத்தை கணிக்கும் சில நிபுணர்கள், அடுத்து நடக்க போகும் சம்பவங்களை பல 100 வருடங்களுக்கு எழுதி வைத்து இருக்கிறார்கள். 

அதில்தான் 2012 ல் உலகம் அழியப்போகிறது என்ற அதிர்ச்சி  தகவல், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்போ  அடித்தட்டு மக்களுக்கு அதைவிட நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்பது கனவு.  மிடில் கிளாசில் இருப்பவர்களுக்கு இன்னும் மேலே போகவேண்டும். கார் வாங்கணும், வீடு வாங்கணும், லைப் ஸ்டைல் மாறனும், இப்படி பல கனவு.

கோடியில் புரளும் கோமான்கள் கூட, டாட்டா,  பிர்லா, அம்பானியை முந்தணும்  என்று கனவு.  அட சின்ன வயசு பையன்களை எடுத்துகிட்டா  கமலா நல்லா இருக்கா, விமலாவும் நல்லா இருக்கா, யாரை பிராக்கட் போடுறதுன்னு தெரியலை.  இப்படி ஒரு குழப்பம்.

ஆக... வாழ நினைக்கிற மக்களுக்கு மருந்து மாதிரி கசக்குது இந்த செய்தி. நியாயம்தான்.

சரி...உலகம் அழியுமா?

இந்த கோடி மில்லியன் டாலர் கேள்விக்கு விடை தேடுவோமா?

இந்த உலகம் எப்படி  தோன்றியது? யாரால் தோற்றிவைக்கபட்டது? எத்தனை யுகங்கள் கடந்து வந்திருக்கிறது என்பதை எல்லாம் நம்  புராணம் மற்றும் இதிகாசங்கள் சொல்லாமல் இல்லை.

மனிதன் சிந்திகவே தலைபடாமல் ஆட்டு மந்தை கூட்டமாகவே அலைந்து கொண்டிருந்த காலத்திலேயே அறிவின் உச்சத்தில் நின்று பேசியது நம் ரிக் வேதம்.

மனிதன் இறப்புக்கு பிறகு என்ன ஆகும் என்று யோசித்தானே தவிர, பிறப்புக்கு முன் எங்கே இருந்தான் என்று யோசித்தே கிடையாது. அதையும் சொன்னது ரிக் வேதம்.

வேதத்திற்கு பின் வந்த புராணங்களில்   உலகம் அழியும் நாள் குறிக்கப்பட்டது, அது கலியுகத்தின் முடிவில்தான்.  ஆனால் கலியுகம் என்பது பல ஆயிரம் வருடங்கள் கொண்டது. அது துவங்கி 5000 ஆண்டுகள் மட்டுமே பூர்த்தி செய்திருக்கிறது.

அப்படியானால் இப்போதைய செய்தி....

மிகைபடுத்தப்பட்ட செய்தி.  இன்றைய இயற்கை பேரிடர்களுக்கு மனித செயல்பாடும் ஒரு காரணம்.  இன்றும் பூமியை துளைத்து பெட்ரோல் எடுக்கிறோம், தண்ணீரை எடுக்கிறோம், இயற்கை எரிவாயுவை எடுக்கிறோம்,

அதனால் ஏற்படும் வெற்றிடத்தை பூர்த்தி செய்ய பூமி அடுக்குகள் நகர்கிறது.  அதனால் பூகம்பம் போன்ற பேரிடர்களை சந்திக்க வைக்கிறது.  அதனால் ஏற்படும் அதிர்வுகள் கடலுக்கு அடியில் ஏற்பட்டால் சுனாமியாக மாறுகிறது.

அதோடு ஓசோன் மண்டல பாதிப்பும் அடுத்து வரும் ஆபத்துகளுக்கு அஸ்திவாரமாக அமைகிறது.  சரி.... எதிர் காலத்தை பற்றி பேசும் ஜோதிட சாஸ்த்திரம் என்ன சொல்கிறது.

உலக பேரழிவுகளுக்கு காரணமான கிரககங்கள் நான்கு. இதில் சனி செவ்வாய் முக்கியமானவர்கள். குரு ரகு அடுத்த இடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் பாதிக்கபடும் போதுதான் உயிர் இழப்புகள் அதிகம் ஏற்படுகிறது.

ஜாதகத்தில் வரும் ராசிக்கட்டம் 360 டிகிரியை கொண்ட ஒரு வட்ட வடிவம். அதை 12 சம பகுதிகளாக பிரித்து ராசி என்றார்கள் நம் முன்னோர்கள்.  அதுதான் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள். இந்த 12 ராசிகளும் உலக வரை படத்தை சொல்லும்.

அதாவது ஒவ்வொரு டிகிரிக்குள்ளும் பல நாடுகள் டிகிரி கணக்கில் இடம் பெரும். அந்த டிகிரிக்குள் வரும் நாடுகளை குறிக்கும் ராசியில் இந்த கிரகங்கள் சம்மந்தம் பெரும்போதுதான், அந்த நாடுகளில் பெருமளவில் பொருள் சேதம், உயிர் சேதம் ஏற்படுகிறது.

12 ராசிகளும் நெருப்பு, நிலம், காற்று, நீர் என்று பிரிக்கபட்டிருக்கிறது.  உதரணமாக மேஷ ராசி நெருப்பு ராசி.  இந்த ராசியில் சனியும் செவ்வாயும் சேரும்போது தீ விபத்துகள் நிகழும்.

காட்டு தீ உருவாக காரணம் இதுதான். பெரும் பொருள் சேதம் ஏற்படும். உயிர் இழப்புகளை தரும்.  அதைபோல் குருவும் ரகுவும் ஒன்றிணைவது தவறு.  சாத்வீக கிரகமான குருபகவான் கர்ம வினை கிரகமான ராகுவோடு இணையும் போது பெரும் உயிர் இழப்புகள் ஏற்பட காரணமாக அமைகிறது.

கடந்த 2009 ம் ஆண்டில் இருவரும் இணைந்து மகர ராசியில் இருந்தார்கள். அந்த டிகிரியை குறிக்கும் நாடுகள் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள்.

அந்த ஆண்டில் அங்கு நடந்த உயிர் இழப்புகள் நாம் அறித்ததே.  ஆனால் 2012ல் உலகம் அழியும் என்று சொல்லபடுகிற நாளில் இதுபோன்ற கிரக அமைப்புகள் இல்லை.

அதோடு இந்து சாஸ்திரம் வலி உறுத்தும் கால அளவிற்கு இன்னும் பல ஆயரம் ஆண்டுகள் இருக்கிறது.  அதனால் யாரும் பீதி அடைய தேவையில்லை.

சதா சுற்றி கொண்டிருக்கும் கிரகங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளும் போது அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

மொத்தமாக உலகம் அழியும் என்று சொல்ல முடியாது. எனவே யாரும் பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.  No comments:

Post a Comment