ads

Monday, 19 December 2011

NEW YEAR PALAN/ புத்தாண்டு பலன்கள்

NEW YEAR PALAN/     புத்தாண்டு பலன்கள்

மேஷம்

நீங்க யாரு? செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். வேஷம் போட தெரியாதவர்கள். உயர்ந்த எண்ணமும் உறுதி கொண்ட மனமும் உங்களுக்கே சொந்தம்.  அன்பை விரும்புவிங்க. வம்பை வெருப்பிங்க.  வந்தா விடவும் மாட்டிங்க. 

திட்டமிடல் உங்க கூட பிறந்தது. வெற்றி பெரும் வரை ஓய மாட்டீங்க. முதலிடம் என்பது உங்கள் ராஜ கனவு.  சூடானவர், ஆனால் சுவையானவர்கள். வரம் தரும் சாமி எது என்பதை கண்டு பிடித்து வணங்குவீங்க. 

யாசிப்பதில்லை.  மற்றவரை யோசிக்க வைப்பவர்கள்.  நீங்கள் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை.  முன் கோபம் என்பது உங்கள் கூட பிறந்தது. சலிப்பில்லாமல் உழைபீங்க.  

நன்றே செய்யணும் அதை இன்றே செய்யணும் என்பது உங்கள் தாரக மந்திரம். உங்கள் வாழ்க்கை பதையில் சவால்கள் இருந்தாலும், சந்திக்க துணிந்தவர்கள்.  

சரி புத்தாண்டு எப்படி இருக்கும்? 

கண்டக சனி ஆரம்பமாகி விட்டது. இனி தொழில், உத்தியோகம், வருமானம், குடும்ப நலம், சுக சௌகரியம், உறவுகளில் பகை, ஆரோக்கியம், அன்றாட வாழ்க்கை இப்படி எதாவது ஒரு பாதிப்பு இல்லாமல் இருக்காது.  

அலைச்சல், திரிச்சல் அதிகமாகும். ஆதாய முயற்சிகளில் ஒரு தேக்கம் இருக்கும். எல்லாமே இருக்கிற மாதிரி தெரிந்தும் கூட, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது. 
அதற்காக நல்லதொரு மாற்றம் இல்லாமலும் போகாது. மனக்குறை மட்டும் மாறவே மாறாது.   கடவுள் கூட கண் திறக்கலையே, இனி மீள முடியுமா? கௌரவமாக வாழ முடியுமா? போனது வருமா? நிம்மதியும் சந்தோசமும் நீடிக்குமா? 

வேலையில் நெருக்கடி தணியுமா? வேண்டாத சிந்தனைகள் மறையுமா?  குடும்பத்தில் குழப்பம் விலகுமா? பிள்ளைகளின் எதிர் காலத்திற்காக உருப்படியாக எதையாவது செய்ய முடியுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் இருக்கிறது. 

பலவற்றிருக்கு பதில் தெரியாது.  கால சக்கரம் சுற்றி கொண்டுதான் இருக்கும் . உங்களுக்கு மட்டும் அது பயம் காட்டும்.  மே மாதம் நிகழும் குரு பெயர்ச்சிக்கு பிறகு எல்லாமே வந்து வந்து போகும். 

காசு பண கஷ்டம் குறைய, கடன்கள் மறைய சிறிது காலம் ஆகும். சந்தேகம் நீங்கி சந்தோசம் பிறக்க அவகாசம் தேவைப்படும். உடல் நலத்தில் கவனம் தேவை.  உடன் இருப்போரோடு கவனம் தேவை. 
அகலக்கால் வைக்கும் முயற்சி வேண்டாம்.  கடன் வாங்கி கடன் கொடுக்கும் முயற்சி அறவே வேண்டாம்.  வீட்டில் பகை வராமல் பார்த்து கொள்ளுங்கள். 
உடன்பாடில்லாத ஒரு விஷயம் ஒதுங்கி போனாலும் வாக்கு கொடுத்த வகையில்  வம்பு ஓன்று தேடி வரும்.








1 comment:

  1. nice... but innum ungaloda palaya tamil ethirparkkiran

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...