Follow by Email

Wednesday, 21 December 2011

பூஜை அறை ரகசியம்!/ pooja aarai rakasiyangal

பூஜை அறை ரகசியம்!/  pooja aarai rakasiyangal

ஒரு நிமிஷம் இதை படிங்க.

புது வீடு வாங்கிட்டிங்களா..
.
வீடு எப்படி இருக்கு?

நான் வீடு எப்படி இருக்குனு கேட்டது, வீட்டோட அழகை பற்றி அல்ல.  அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.  வீட்டு சூழ்நிலைகள் எப்படி இருக்கு. இதுதான் கேள்வி.

புரியலையா? சரி... புரியுற மாதிரி கேட்கிறேன். 
உங்களுக்கு 1000  வேலை இருக்கு. ஓடியாடி உழைத்துட்டு வீட்டுக்கு வர்றிங்க. வீட்டுக்கு வந்ததும் மனசுல நிம்மதி இருக்கா.  சந்தோசம் வருமா? ஒரு நிறைவா இருக்கா? 

அல்லது.....

வீட்டுக்கு வந்தாலே அடிச்சு போட்ட மாதிரி அசதி, எதையோ இழந்த மாதிரி ஒரு தவிப்பு, காரணமே இல்லாம கவலை, புரியாத புதிரா மனோநிலை இப்படி இருக்கா? 

முன் பதிலை சொன்னால் வாஸ்து பலம் இருக்குன்னு அர்த்தம். பின் பதிலை சொன்னால் வாஸ்து பலம் அவுட்டுன்னு அர்த்தம்.  வாஸ்து என்பது வெறும் மனம் சார்ந்த விஷயம் அல்ல. அது அறிவியல். 

இப்போ உங்களுக்கு என்ன வயசு?  சரி... ஓடுற பாம்பை தாண்டுற வயசா இருக்கலாம்.  கல்லை தின்னாலும் செரிமானம் ஆகும்னு சொல்லற மாதிரி திட காத்திரமான, ஆரோக்கியமான உடல் வாகை பெற்றவராக இருக்கலாம். 

இதெல்லம் வெளியே உலாவுற வரைதான். வீட்டுக்கு போனதும் கையை வலிக்குது, காலை வலிக்குது, தலையை வலிக்குது, சுரம் வர்ற மாதிரி இருக்குன்னு சொல்லற மாதிரி சூழ்நிலை வந்தால் வாஸ்து சரி இல்லைன்னு அர்த்தம். 

அதோட.... வீட்டு உறுபினர்கள் அதாவது.... அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மனைவி, பிள்ளைங்க உறவு எப்படி இருக்கு?  அவங்க நடவடிக்கைகளை கவனிச்சிங்களா? 

பழகும் விதத்திலே ஒரு பணிவு, பேசும் விதத்திலே ஒரு கணிவு தெரியுதா? எல்லாத்தையும் விட போலி இல்லாத அன்பு புலப்படுத்தா? 

உங்க ஆத்துகாரம்மா..அத்தான். அத்தான்னு கொஞ்சுதா? அட நீங்க பொண்ணா...வீட்டுக்காரர் செல்லம், சக்கரை கட்டின்னு நொடிக்கு 100 தரம் சொல்றாரா? வெளியே போன பிள்ளைங்க வீட்டுக்கு நேரத்தோட வருதா? 

சொன்னால்... பிள்ளைங்க வீட்டுக்கு வந்தால் வாஸ்து பலம் இருக்குன்னு அர்த்தம். 

அதில்லாமல் வேற்று கிரகவாசி போல், வேற்றுமையோடு இருந்தால், கர மிளகாயை கடிச்ச மாதிரி காரணமே இல்லாமல், முகத்தை கடுகடுன்னு வைத்திருந்தால், எதிர் கட்சி வக்கீல் மாதிரி, எதிர்த்து எதிர்த்து பேசினால் வாஸ்து பலம் இல்லைன்னு அர்த்தம். 

என்னையா இது.... மொட்ட தலைக்கும் முழக்காலுக்கும் முடிச்சு போடுறேன்னு  பார்கிறிங்களா? சம்பந்தம் உண்டு.  சரி.... வாஸ்துன்னா என்ன?
இயற்கையொடு மனிதன் ஒத்து போகவேண்டியத்தின் அவசியத்தை சொல்வதுதான்  வாஸ்து.  ஜோதிட சாஸ்திரத்தை தோண்ட தோண்ட சுரங்கம் என்பது மாதிரி, எப்படி நீண்டு கொண்டே போகிறதோ, அதை போல் வாஸ்து சாஸ்திரத்தையும் வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. 

அதில் இருந்து ஒரு துளியை பாப்போம். 

பூஜை அறை......

இறைவன் இருப்பிடம் கோவில். எங்கும் நிறைந்த இறைவன் தங்கும் இடமாக கோவிலை சொல்வது ஏன்? கேள்வி வருதா?  இதோ பதில். 

தீக்குசுக்குள் நெருப்பு ஒளிந்து கிடக்கிறது. உரசினால்தான் உயிர் பெரும்.  அதைபோல் தான்  இறைவன் எங்கும் நிறைந்து இருந்தாலும், இறைஅருளை  பெற கோவிலுக்குத்தான் போகவேண்டும். 

ஆனால் குடும்பத்தையே கோவிலாக பார்க்கும் பழக்கம் வழக்கம் இந்துக்களுக்கு  உண்டு. அதனால்தான் குடும்பம் ஒரு கோவில் என்றார்கள். தான் வசிக்கும் வீட்டிலேயே மினி கோவிலையே அமைத்தார்கள். 

அது பூஜை அறை.....

சிலர் பூஜை அறையை தனி அறையாக அமைத்திருப்பார்கள்.  சிலர் சுவற்றில் சுவாமி படங்ககளை மாட்டி வைப்பதுண்டு. சிலர் அலமாரியில் வைத்திருப்பர்கள்.  எப்படி இருந்தாலும் அதற்கென இடமும் அமைப்பும் சரியாக இருக்க வேண்டும்.
பொதுவாக பிரம்மஸ்தானம் என்று சொல்லக்கூடிய வீட்டின் ஹால் பகுதியில் அதாவது மைய பகுதியில் பூஜை அறையை அமைப்பதுதான் நல்லது.  அமைத்தால் செல்வம் பெருகும். புகழ் உயரும், ஆரோக்கியம் வளரும், ஆயுள் கூடும், பல்வேறு பாக்கியங்கள் வெறும் வாக்கியமாக இல்லாமல் வாழ்க்கையில் வரும்.

அப்படி அமைக்க முடிய வில்லையா...?

வடகிழக்கு மூலையில் அல்லது தென்கிழக்கு மூலையில் அமைக்கலாம்.

பொதுவாக சாமி படங்களையும் விக்கிரகங்களையும் கிழக்கு பார்த்து வைத்து மேற்கு நோக்கி வழிபடுவதுதான் சிறந்த முறை.  இன்னும் சொல்லப்போனால் இல்லறத்தில் இருப்போர், குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள் இந்த முறையில் தான் வழிபட வேண்டும். மற்ற திசைகளை நோக்கி வழிபடுவது நல்லதல்ல.

உதாரணமாக சாமி படங்களை தெற்கு நோக்கி வைத்து வடக்கு பார்த்து வழிபடும் முறை சாதுக்களுக்கும், சந்நியாசிகளுக்கும் உரியது.

இல்லறத்தில் இருந்து விலகியவர்களும், பிரம்மசாரி வாழ்க்கை வாழ்பவர்களும்,  திருமண பந்தத்தை வெறுத்தவர்களும், முக்தி பெறுவதற்கான  சக்தி பெரும் திசை.

பில்லி,  சூன்யம், செய்வினை, மாந்திரிக காரியங்களுக்கு வடக்கு நோக்கி படங்களை வைத்து தெற்கு நோக்கி வழிபடும் முறை கடை பிடிக்கபடுகிறது.  குடும்ப வாழ்க்கையில் இருப்போருக்கு இந்த முறை நல்லதல்ல.

பொதுவாக பூஜை அறையை வடகிழக்கு திசையில் அமைத்துவிட்டு படங்களை மேற்கு நோக்கி வழிபடும் பழக்கம் பரவலாக இருக்கிறது.  இது தவறு.

இந்த விழயங்களை கடைபிடித்தால் உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் என்பது மாற்றம் இல்லாமல் வரும்.  ஆத்துகாரம்மா அன்போட பேசும். வாழ்கையில் நிம்மதி இருக்கும்.No comments:

Post a Comment