ads

Wednesday, 29 January 2014

இதுதான் ஹிந்து கலாச்சாரம் !!

தமிழர் கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது... 

இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது..விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன ....

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. 

காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.

சும்மா இருப்பது எப்படி?


ஒரு மடத்தில் "சும்மா இருப்பது எப்படி?"என செய்முறை விளக்கம் தருமாறு தன் சிஷ்யர்களுக்கு அந்த மடத்து குரு ஒரு பரீட்சை வைத்தார். யார் சிறந்த விளக்கம் அளிக்கிறார்களோ அவன் 
ஞானத்தை உணர்ந்தவன் என பாராட்டி தலைமை பொறுப்பு அளிப்பதாக அறிவித்தார்.

எல்லா மாணவர்களும் சுறுசுறுப்பாய், சும்மா இருப்பதற்குண்டான வழிகளை பற்றி யோசிக்க ஆரம்பித்தனர். சிலர் பேசாமலும், சிலர் அசையாமலும், சிலர் உணவு உண்ணாமலும் இருந்தனர். 
சிலர் கண்களை மூடி தியானிப்பது போன்று சும்மா இருந்தார்கள். இன்னும் சிலர் மலைகள்,காடுகள் என்று போய் சும்மா இருப்பதை செய்து காண்பித்தார்கள்.

ஆனால் ஒரே ஒரு மாணவன் மட்டும் சும்மா இருக்க எந்த முயற்சியும் எடுக்காமல், தன்னுடைய வேலைகளை எப்போதும்போல செய்துக்கொண்டிருந்தான். போட்டியின் முடிவு நாள் வந்தது.
குரு முடிவை சொன்னபோது அனைவருக்கும் அதிர்ச்சி.

எந்த முயற்சியும் எடுக்காத அந்த மாணவனுக்குத்தான் குரு பாராட்டி பொறுப்பை அளிப்பதாக அறிவித்தார். இதை ஏற்காமல், எல்லா மாணவர்களும் குருவிடம் சென்று விளக்கம் கேட்டார்கள்.
இதற்கு குரு, 

"நீங்கள் எல்லோரும் சும்மா இருப்பதைப் பற்றி சிந்தித்துக் சிந்தித்து, எப்படியெல்லாமோ சும்மா இருக்க முயற்சி செய்தீர்கள்... நீங்கள் எடுத்த முயற்சியாலேயே நீங்கள் சும்மா இருக்க தவறிவிட்டீர்கள்...

ஆனால் எந்த முயற்சியும் எடுக்காமல்,அந்தந்த நேரத்தில் தன் முன்வரும் வேலைகளை செய்தபடி 
உண்மையாகவே சும்மா இருந்து காட்டியது இவன் மட்டுமே" என்று கூறினார் குரு.

ஆக சும்மா இருப்பது என்பது மனதில் சும்மா இருப்பது. மனம், நடந்து முடிந்து போன விஷயத்திற்கும், இனி வரப்போகிற விஷயத்திற்கும் குழப்பமடையாமல் இருப்பதே சும்மா இருப்பது.

யாரோ சொன்னாங்க!!

ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். 

அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள். 

அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள். 

அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் . 

அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.

மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார். 

அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்..

அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.

ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள். 

அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.

அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்.. 

அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.

அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள். 

இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள். 

இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.

அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள். 

அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். 

இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்?

நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.

அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!

அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்.

Tuesday, 28 January 2014

சனி நல்லவரா கெட்டவரா?

                   2         
     

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய   மரத்தில்   தொங்கிக்கொண்டிருந்த  பிரேதத்தைக்   கீழேத் தள்ளி அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். 

 அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது. 

“அ ஹோய்.. வாரும் பிள்ளாய் வேதியனே!   உன்னைப் பார்க்கும் போது ஆச்சரியமாய் இருக்கிறது!   எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காத உன் திடமனதை பாராட்டி, உனக்கு ஒரு கதை சொல்கிறேன். கேட்டுக் கொண்டே வா.! 

நான் முன்பே சொன்னது போல் சூரியனுக்கு பிள்ளைகளாக பிறந்தவர்கள் யமனும் சனிபகவானும் . இதில் யமன் நேரில் வந்து நின்றாலும் பயப்படாதவர்கள் கூட சனிபகவான் என்றால் பயப்படுவார்கள். ஒன்பது கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறார்.

கிரகங்களில் ஈஸ்வரன் என்ற பட்டப்பெயரையும் சேர்த்து அழைக்கப்படும் பெருமை பெற்றவர் சனி பகவான் ஒருவரே. 

சனி பகவானுக்கு ஒரு கால் ஊனம். அது எப்படி வந்தது என்றால்..  

ஒரு முறை கயிலாயத்தில் ஒரு விழா. விநாயகருக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது. அவ் வைபவத்திற்கு அனைத்து தெய்வங்களும் வந்திருந்தனர். அப்போது விநாயகருக்கு வேழ முகம் இல்லை. முருகனைப் போன்ற முகம்.

அவ்விழாவிற்கு தானும் செல்ல வேண்டும்¢ என ஒரு குழந்தை  அடம் பிடித்தது. தாயார் சாயா தேவியோ குழந்தையின் மகிமையை அறிந்தவள். குழந்தைக்கு சமாதானம் சொல்லி போக விடாமல் தடுத்தாள். 

அம்மா நான் யாரையும் அருகில் சென்று பார்க்கவில்லை. தூரத்தில் ஒரு ஓராமாய் நின்று பிறந்த நாள் விழாவைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று கெஞ்சியது.

இரக்கப்பட்ட தாய் அனுமதியளிக்கிறாள்.

கயிலை மலையின் மீது குழந்தை மெல்ல மெல்ல ஏறி வருகிறது.  உமையொருபாகன் தனது ஞானக் கண்ணால் கண்டு கொள்கிறார். உடனே உமையிடம், தேவி கயிலை மலை மீது ஒரு குழந்தை தவழ்ந்து வந்துகொண்டிருக்கிறது, அதன் பார்வை பொல்லாதது, என்வே விநாயகன் மீது அக்குழந்தையின் பார்வை படாதவாறு விநாயகரைப் பாதுகாத்துக் கொள் என்கிறார்.

பார்வதிக்கு உடனே ரோஷம் வந்து விட்டது.  “என் மடியில் உட்கார்ந்திருக்கும் போது என் குழந்தைக்கு எந்த தீங்கும் வராது. அந்தக் குழந்தையால்  என் மகனுக்கு எந்த பாதிப்பும் வராது’  என்று பதில் சொல்கிறாள்.

தவழ்ந்து வந்த குழந்தை விழா நடக்கும் மேடைக்கருகே வந்து விட்டது.  எல்லோர் பார்வையும் அக்குழந்தையின் மீது பட்டது. தேவர்கள் அனைவரும் , என்ன நடக்குமோ என்று பயந்து நடுங்கினர்.  அக்குழந்தையின் பார்வையோ விநாயகர் மீதே இருந்தது.  

அணிமணிகள் அணிந்து சர்வ அலங்காரத்துடன் சிரித்த முகமாய் இருக்கும்  கணேசரது முகத்தை குழந்தை கூர்ந்து கவனித்தது.

அந்த நொடியில் அச்சம்பவம் நடந்தது. விநாயகர் மயங்கி விழுந்தார் அவரது தலை குழைந்து காணாமல் போய்விட்டது. 

பார்வதி பதறிப்போனாள்.  கணேசனின் நிலையைக் கண்டு கதறினார். அய்யோ ஈஸ்வரர் சொன்னதை கேட்காமல் போய்விட்டேனே என்று கலங்கினார். அவரது சோகம் கோபமாய் மாறியது . இதற்கு காரணமான குழந்தையை கோபத்துடன் பார்த்தாள். 

‘நீ இங்கே வந்ததால்தானே என் குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டது.  நீ இனி எங்கும் செல்ல முடியாதவாறு உன் கால்கள்  முடமாகட்டும் என்று சபித்தாள்’
ஈசன் , பைரவரை அழைத்தார். பைரவா ‘நீ வெளியே சென்று வடக்கு நோக்கிப் படுத்திருப்பவர் யாராயிருந்தாலும் அவரது தலையைக் கொய்து வா’  என்று ஆணையிட்டார்.

பைரவன் வெளியே சென்று வடக்கு நோக்கிப் படுத்திருந்த யானைக் குட்டியின் தலையை வெட்டி வந்து ஈசனிடம் கொடுத்தார். 

ஈசன் அத்தலையை விநாயகரின் உடலோடு ஒட்டினார்.

இதற்கிடையில் கால்கள் பாதிக்கப்பட்ட குழந்தை விந்தி விந்தி நடந்து கொண்டே தன் இருப்பிடம் திரும்பியது.

சாயாதேவி நடந்ததை உணர்ந்து கொ£ண்டாள். பெற்ற வயிறு பற்றி எரிந்தது.   விழாவுக்கு வந்த மகனுக்கு உணவுக் கூட கொடுக்காமல்   சாபமிட்ட, அவளது மகனின் வயிறு பெருத்துப் போகட்டும் என்று சாபமிடுகிறாள். விநாயகரின் வயிறு பெருத்துப் போகிறது.

விநாயகரின் அழகிய முகம் மறைவதற்கும், பானை வயிறு ஏற்பட்டதற்கும் சனி பகவானே காரணமாகும்.   

சனி பகவானி¢ன் பார்வை பட்டு தொல்லைப்பட்டவர்கள் ஏராளம். 

இலங்கை வேந்தன் இராவணனின் கதை முடிவதற்கும் சனியின் பார்வையே காரணமாகும்.

பரமேஸ்வரனிடம் , யாரும் தன்னை வெல்ல முடியாத அளவில் வரம் பெற்ற இரவாணன் தேவர்களை அடிமைப்படுத்தினான் , நவக்கிரகங்களையும் கொண்டு வந்து தன் சிம்மாசனத்திற்கு செல்லும் படிக்கட்டுகளாக அமைத்து வைத்து அவர்கள் மீதேறி நடந்து சென்றான். 

நரரதர் ராவணனைச் சந்திக்க   வருகிறார்.  அவரிடம் தன் பெருமையைப் பற்றி பேசி கர்வப்படுகிறான் ராவணன்.

ராவணா!  உன் புகழினை , வலிமையை இந்த உலகே அறியும். நவக்கிரகங்களையும் வென்று படிக்கட்டுக்களாய் அமைத்துக் கொண்டாய்.  உனது படிக்கட்டுகளில் படுத்திருப்பவர்களி¢ல் சனி பகவான் ஈஸ்வரன் பட்டம் பெற்றவன், உனது புகழை அவன் பார்க்க வேண்டும், அவனைத் திருப்பிப் போடு என்கிறார் நாரதர்.

சனி பகவானைத் திருப்பிப் போடுகிறான் இராவணன்.  இராவணனின் முகத்தை உற்றுக் கவனிக்கிறார் சனி. 

அப்போது அண்ணா! என்று   ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்கிறான் இரவாணன். மூக்கறுபட்டு இரத்தம் வழிய சூர்ப்பனகை வந்து கொண்டிருக்கிறாள்.

சனியின் பார்வை சரியாக வேலைச் செய்கிறது என்று எண்ணிக்கொள்கிறார் நாரதர்.

இப்படி வலிமைமிக்க இராவணனின் அழிவிற்கு காரணமாகிறார் சனிபகவான்.
வேதியா! அரிச்சந்திரன் கதை தெரியுமா உனக்கு ?   காசி நகரத்து அரசனாய் இருந்தவன்.  நேர்மைக்குப் பெயர் போனவன்.   

மக்களுக்கு நல்லாட்சி தந்தவன்.  அவன் ஜாதகத்தில் சனியின் பார்வைபடுகிறது.  விதி மாமுனி விஸ்வாமித்திரர் உருவத்தில் வந்து சேர்கிறது   சொன்ன  சொல் காத்திட வேண்டும்  என்பதற்காக , விஸ்வாமித்திரரிடம் நாடுநகரத்தையும், இழந்து கொடுக்க வேண்டிய பணத்திற்காக , தன் மனைவி சந்திரமதி, மகன் லோகிதாசனையும் அடிமையாய் விற்று, தானும் ஒரு ஒரு புலையனிடம் வெட்டியானாய் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுவதல்லாமல். தன்மனைவியையே வெட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகிறான்.  

சொல்லொண்ணா துன்பம் அடைகிறான். அவன் இத்துன்பம் அடைய சனி பகவானே காரணமாகிறார்.

நளன் தமயந்தி கதை தெரியுமா?

நிடத நாட்டு மன்னன் நளன் . அவனிடம்  குடும்பினி தேசத்து அரசிளங்குமரியான தமயந்தியின் அழகினைப் பற்றி ஹம்சப் பறவை சொல்கிறது. அதே ஹமசம் தமயந்தியிடமும் ,உனக்கு ஏற்ற ஆணழகன் நளன்தான் என்று கூறுகிறது.

தமயந்தின் மேல் எமன், சனி போன்ற இந்திரன் , கலிபுருஷன், துவாப்பரன் தெய்வங்களும் ஆசைகொள்கின்றனர். 

ஆனால் நளனும் தமயந்தியும் திருமணம் புரிந்து கொள்கின்றனர்.  நளனைப் பற்ற சரியான சந்தர்ப்பம் எதிர்நோக்கியிருக்கிறார் சனி
.
ஒரு முறை இறைவழிபாட்டிற்கு சென்ற நளன் தன் குதிகால்கள் சரியாக நனையாமல்  குளித்துவிட்டு ,வழிபாட்டிற்குச் சென்று விடுகிறான். இதுவே சரியான காரணம் என்று  உடனே நளனை பிடித்துக் கொள்கிறார் சனி.

நளனுக்கு கெடுதல்கள் நேருகின்றன. புஷ்கரனுடனான ,சூதாட்டத்தில் தன் இராச்சியத்தை இழந்து தன் மனைவியுடன¢  கானகத்திற்குச் செல்கிறான்.  அங்கே தமயந்தியைப் பிரிகிறான். 

 பிறகு அவன் காப்பாற்றிய கார்க்கோடகன் என்ற  அரவமே அவனைத்  தீண்ட  உருவம் கறுமையடைந்து மாறிப்போகிறான். கோசல அரசன் ரிதுபாலன் என்பவனிம் சமையற்காரனாக பணிபுரிகிறான்.  

இறுதியில் தமயந்தியுடன் இணைந்தாலும், நேர்மையான அரசன் துன்புறுவதற்கு சனிபகவான் காரணமாக இருக்கிறார்.

சனி ஒரு முறை சிவபெருமானையே  பீடிப்பதற்காக செல்லும் போது அவர் ஒரு குளத்தின் தாமரைத் தண்டில் மறைந்து கொள்ள நேரிடுகிறது. அதே போல் திருமாலும் சனிக்கு பயந்து மறைந்து கொள்கிறார். 

குழந்தையாய் இருந்த காலத்தில் சனியால் அவதிப்பட்டார் விநாயகர். ஆனால் அதன்பின் விநாயகரைப் பிடிக்க முடியவில்லை. அதே போல் ஆஞ்சநேயரையும் சனியால் பிடிக்க முடியவில்லை என்று கதைகள் கூறுகின்றன.  

‘வேதியா!  சூரியனின் குமாரனும், நவக்கிரகங்களில் ஒருவனாகவும் விளங்குகின்ற சனிபகவான் ஏனிப்படி அனைவரையும் ஆட்டிப்படைக்கிறார்.  

சனி பகவான் நல்லவரா கெட்டவரா?   இந்தக் கேள்விக்குறிய பதில் உனக்குத் தெரிந்திருந்தும் நீ சொல்லாமல் மௌனமாக இருந்தால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறும்’, என்று கூறுகிறது வேதாளம்.

வேதாளமே!  

ஒரு மனிதனின் இப்பிறவியை நிர்ணயம் செய்வது சென்ற பிறப்பில் அவன் செய்த நல்வினையும் தீவினையும் என்கிறது இந்து மதம்.

சென்ற பிறவியின் வினைகளின்படி இப்பிறவியில் அவன் அனுபவிக்க வேண்டிய வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப , அமைந்திருக்கும் கிரக நிலையில், அந்த நேரத்தில், அதற்கேற்ற குடும்பப் பின்னணியில்  பிறவி யெடுக்கிறது   உயிர்.   மனிதப் பிறவி மட்டுமன்றி கீழான பிறவியும் எடுக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

எனவே வாழ்க்கையில் ஒருவன் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங்களை கிரகங்களோ, ஏனையவரோ முடிவு செய்வதில்லை . அவனே முடிவு செய்து கொள்கிறான். 

தீதும் நன்றும் பிறர் தர வாரா’  என்று இதைத்தான் சொல்கிறார்கள்.

கிரகங்கள் எப்போதும் அதற்குடைய இயற்கைத் தன்மையில் இருக்கின்றன. நம்முடைய நேரப்படியே பலன்கள்  நடைபெறுகின்றன.

கடலோரத்தில் பிறந்தால் மீன்பிடிப்போம், வனத்தில் பிறந்தால் வேட்டையாடுவோம்,  சமவெளியில் பிறந்தால் விவசாயம் செய்வோம், பாலைவனத்தில் பிறந்தால் ஒட்டகம் மேய்ப்போம். 

நிலங்கள் அதன் இயற்கைத் தன்மையுடன்  எப்போதும் இருக்கின்றன. நாம் எங்கே பிறக்கிறோமோ அதன்படி நம் தொழில் அமைவதைப் போல     நமது வினைகளை அனுபவிக்கும் சூழநிலைக்கேற்பவே நம்  பிறவி அமைகிறது.    நம் பிறந்த நேரத்தில்  நிலவுகின்ற கிரகங்களின்   அமைப்புப்படி , பலன்கள்  விளைகிறது. 

கஜமுகாசுரன் என்ற அசுரன் தவமிருந்து, தான் மனிதர்களாலும், தெய்வங்களாலும், விலங்குகளாலும், கொல்லப்படக்கூடாது என்றும், எந்த ஆயுதங்களும் தன் உயிரை பறிக்கக்கூடாது  என்று இறைவனிடம் வரம் வாங்குகிறான்.  

எனவே அவனை அழிக்க ஒரு படைப்பு தேவைப்பட்டது. அதற்காக அவதரத்தவர் விநாயகர்.  யானைமுகமுடைய விநாயகர் , தன் தந்தததை உடைத்து கஜமுகாசுரனை அழிக்கிறார்.

எனவே எனவே விநாயகருக்கு  வேழ முகம் அமைவதற்கு காரணமாகி,  கஜமுகாசுரனின் அழிவிற்கு முக்கிய காரணகர்த்தா ஆகிறார் சனி பகவான் என்பது நமக்கு விளங்குகிறது.  இதில் சனி மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் நல்லதையே செய்துள்ளார் என்பது தெரிகிறது.

அரிச்சந்திரனின் விதிப்படி அரிச்சந்திரனின் குடும்பத்திற்கு கஷ்டத்தைக் கொடுத்தாலும் ,விளைவு அவர்களுக்கு நன்மையாகவே முடிகிறது.  அரிச்சந்திரனின் புகழ் காலங்கள் கடந்தும் பேசப்படுவதற்கும்  அரிச்சந்திரன் அனுபவித்த துன்பங்களும் ,உறுதியான மன நிலை¬யும் காரணமாகும் , இதன் பிறகு இழந்த நாடு நகரத்தையும்  சனி பகவானின் அருளால் பெற்று மகிழ்கிறார்.

நளன் தமயந்தியின் பிறப்புக்கும் அவர்களின் முன் ஜென்மமே காரணமாகும்.  முற்பிறவியில் காட்டுவாசிகளின் தலைவனாக வாழ்ந்த நளனும், அவன் மனைவியும் வழிதவறிவந்த ஒரு சிவனடியாரின் உயிரைக் காக்க தன்னுயிரை தியாகம் செய்தவர்களாவர்.

அதனாலேயே  அரசகுடுமபத்தில் பிறக்க நேர்ந்தது. இருப்பினும் அவர்களின் ஊழ்வினையின் காரணமாய்  சனி பகவானின் பார்வையில்  படநேர்ந்தது. இருப்பினும் சனி அவர்களுக்கு நல்லதையே செய்தார் என்பது  முடிவு சுபமாய¢ அமைவதி¤லிருந்து புரிகிறது. பரத்வாஜரின்  அருளாசிபடி, நளன் சனி பகவானுக்கு திருநள்ளாறில் ஒரு குளம் வெட்டி வழிபட்டு  இழந்த செல்வங்களையெல்லாம் பெற்று மகிழ்ந்தார் என்று  புராணக்கதையொன்று  கூறுகிறது.

 சனி பகவான்  12 ராசிகளையும் சுற்றிவர  முப்பது ஆண்டுகள் ஆகிறது. எனவே  மனிதனுடைய வாழ்நாள் காலத்தில்  சனிபகவானுடைய பார்வையிலிருந்து  யாரும்   தப்ப முடியாது என்பது மட்டும் உண்மை. 

ஆனாலும் அவரை வணங்கி வழிபடும் போது   அவர் மனமிறங்கி தன் பார்வையை தணித்துக் கொள்வார் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

 தனக்கு உண்டான கடமையைச் செய்யும் ஒருவரை அந்தக் கடமையின் தன்மை எதுவாகயிருந்தாலும்,   சாஸ்திரங்கள் குறை கூறுவதில்லை.

இந்தக் கருத்தையே  “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே”  என்று ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் வலியுறுத்துகிறார்.

வாழ்க்கை இன்பமாகவே அமைந்து விட்டால் ஒரு மனிதன் அதிலிருந்து கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமேயில்லை.  அவன் ஆன்மா தெளிவடைவதுமில்லை. 

இன்ப துன்பத்தை அனுபவித்து, அதிலிருந்து  விடுபடும்போதே , இந்த வாழ்க்கையைப் பற்றிய  தெளிவான சிந்தனை ஒரு மனிதனுக்கு உண்டாகிறது. அவன் மனம் பக்குவமடைகிறது. 

‘எனவே வேதாளமே!

மனித மனம் பக்குவப்பட்டு, பரம்பொருளை நெருங்க காரணமாய் இருக்கும் சனீஸ்வரன் நல்லவரே! என்பதே உன் கேள்விக்கான என் பதிலாகும்.  

வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லியதன்  மூலம் வேதியனின் மௌனம் கலைந்ததால்  வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு மீண்டு¢¢ம் புளிய மரத்திற்குச்  சென்று,   கிளையொன்றைப் பற்றிக்கொண்டு   தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.

மதிவாணன் 
   

Monday, 27 January 2014

ஆற்றல்களை அள்ளித் தரும் அருள் சாதனங்கள்!!

உபாசனை சித்தி யோகம் பற்றி இதுவரை பார்த்து வந்த்தோம். அந்தத் தொடர் மிக நல்ல வரவேற்பைப் பெற்றது குறித்து மகிழ்ச்சி. இன்னும் ஏராளமான தகவல்கள் இருப்பதாலும் இன்னும் பல ரகசியங்களைச் சொல்லும்படி பல உபாசகர்கள் கேட்பதாலும் உபாசனை பற்றித் தொடர்ந்து எழுத ஞான ஸ்கந்த மூர்த்தியின் அருளால் முடிவு செய்துள்ளேன். 

அதில் உபாசகர்கள் பயன்படுத்தும் அருள் சாதனங்களைப் பற்றியும் அதில் உள்ள ரகசியங்களையும் தொடர்ந்து எழுதப் போகிறேன்.  பல வாசகர்கள் மனதார வாழ்த்தியதன் பலனே பல அரிய கட்டுரைகளைத் திறம்பட எழுதத் துணை செய்கிறது. 

பலர் உபாசனையைப் பற்றி பலவாறு சொல்லி இருந்தாலும் கடந்த பதினான்கு ஆண்டுகளாக எமது பதினாறு வயதிலிருந்து செய்த உபாசனையால் பெற்ற அனுபவத்தாலும், ஜீவ நாடி மூலம் கிடைக்கும் செய்திகளாலும் பல்வேறு விஷயங்களைத் திருவருள் சக்தி மூலம் பகிர்ந்து கொள்கிறேன். 

ஒருவரது ஜாதகத்தின் மூலம் உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் சித்தர்கள் எழுதி வைத்த நாடி மூலமோ அல்லது ஜீவ நாடி மூலமோ உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பது உடனடி பலனைத் தருவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது. 

ஏதெனும் ஒரு தேவதையைத் தொடர்ந்து உபாசிப்பதன் மூலம் உயர்ந்த வாழ்வை உறுதியாய்ப் பெறலாம். அதனால்தான் உயர்ந்த வாழ்வளிக்கும் உபாசனை சித்தி யோகம் என்று சொல்கிறோம். 

மனதை ஒருமுகப்படுத்தினால் ஏராளமான சக்திகளைப் பெற முடியும். அதற்கு உதவி செய்வது உபாசனை. யார் ஒருவர் குரு மூலம் சரியாக உபாசனை செய்கிறாரோ அவர் அஷ்டமா சித்திகளை அடைவதோடல்லமல் அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை பெறுவார். 

அப்படி மனதை அடக்குவது என்பது அவ்வளவு எளிமையானதல்ல. எனவெ ஏதாவது ஒரு உபாயத்தைப் பயன்படுத்தி உபாசனையால் ஏற்படும் அதிர்வுகளை எதேனும் ஒரு பொருளில் சேமித்து வைத்து அதை மற்றவர்களும் உப்யோகப் படுத்த வேண்டும் எனத் தீர்மானித்த சித்தர்கள் அருள் சாதனங்களை அனுபவத்தில் உபயோகம் செய்து பார்த்து அதை அனைவரும் கடைபிடிக்கும்படி உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தனர். 

விபூதி, எலுமிச்சை, ருத்திராட்சம், சங்கு, யந்திரங்கள், வெற்றிலை, தர்ப்பைப்புல், போன்றவை அருள் சாதனங்கள் எனப்படும். நாம் மந்திரங்களைத் தொடர்ந்து ஜபம் செய்யச் செய்ய அதன் அதிர்வுகள் மேற்குறிப்பிட்ட பொருட்களில் பதிந்து அதன் சக்திகளை வெளியிடும் அமைப்பில் இறைவன் அவற்றைப் படைத்துள்ளான். 

அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையதால் அவை அருள் சாதனங்கள் எனப் பெயர் பெறுகின்றன. நவக்கிரகங்களின் கதிர் வீச்சை பிரதிபலிக்கும் நவ ரத்தினங்கள், எண்கள், வண்ணங்கள் மற்றும் மூலிகைகள் போலவே நமது அருள் ஆற்றலை பிரதிபலிப்பது அருள் சாதனங்கள் ஆகும்.

எனவெ அனைத்து அருள் சாதனங்களையும் பயன்படுத்தி ஆத்ம சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தியானம் செய்யும் போது வருகின்ற அருள் நிலையை அப்படியே தேக்கி வைக்க அருள் சாதனங்கள் உதவும். 

தியானம் என்பது, மனதை இறைவனிடம் வைத்து, மனதில் இறைவனின் உருவத்தையே பதித்து, மந்திர ஜபம் செய்வது. தியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்து, தியானம் செய்வது சிறப்பு. ஜன சந்தடியோ, வேறு ஏதாவது சப்தமோ இருக்கக் கூடாது. 

ஏதெனும் ஒரு ஆசனத்தின் மீது அமர்ந்து தான் தியானம் செய்ய வேண்டும். பொதுவாக ஆசனமானது நமது ஆற்றல்களை புவி ஈர்ப்ப்பு விசை ஈர்த்துக்கொள்ளாமல் தடை செய்கிறது. எனவெ எந்த ஒரு பூஜை, அல்லது உபாசனை ஆனாலும் வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது. 

ஜபம் செய்ய நதிக்கரை, மலை, புனித தலங்கள், சுத்தமான காற்று வீசும் இடங்கள் சிறந்தவை. பசுத்தொழுவத்தில் செய்யப்படும் ஜபம் பல மடங்கு பலன் தருகிறது. இதை அனுபவபூர்வமக உணரலாம். 

ஜபம் செய்ய ருத்ராட்சம், மணிமாலை, தாமரை மாலை, பவழம் போன்ற மாலைகளும், முத்து மாலைகளும் உபயோகப்படுகின்றன.  முக்கியமாக, மனம்  இறைவனிடம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லமல் வெறும் மாலையை மட்டும் உருட்டிக் கொண்டு, உட்கார்ந்தபடி வேறு ஏதெனும் எண்ணிக் கொண்டிருந்தால், அது தியானமாகாது. 

இத்தனை விஷயங்களை கவனித்து ஜபம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மனம் அங்கும் இங்கும் அலை பாயும். குருவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மனம் தளராமல் ஜபம் செய்யச் செய்ய தாரணை சித்தியாகிறது. இப்படி பண்ணிரண்டு தாரணை சேர்ந்து தியானமாக மாறுகிறது. கீழ்க்கானும் வழிமுறையைக் கடைபிடித்தால் உபாசனயில் ஓரளவு வெற்றி பெறலாம்.

தொடரும் ....



ஸ்ரீ ஸ்கந்த உபாசகர்” 
P.D.ஜெகதீஸ்வரன் MCA., M.Phil.,
செல்:9659690395

Thursday, 16 January 2014

பசுவை வணங்கினால் ஏற்படும் புண்ணியங்கள்



“ஸ்ரீ ஸ்கந்த உபாசகர்” P.D.ஜெகதீஸ்வரன் MCA., M.Phil., செல்:9659690395
இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுகின்றனர்இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர் பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும்,
 புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாகக் கருதுகின்றனர்.


*பசுவின் கொம்புகளின் அடியில்பிரம்மன், திருமால்
*கொம்புகளின் நுனியில்கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,
*சிரம்சிவபெருமான்
*நெற்றி நடுவில்சிவசக்தி
*மூக்கு நுனியில்குமரக் கடவுள்
*மூக்கினுள்வித்தியாதரர்
*இரு காதுகளின் நடுவில்அசுவினி தேவர்
*இரு கண்கள்சந்திரர், சூரியர்
*பற்கள்வாயு தேவர்
*ஒளியுள்ள நாவில்வருண பகவான்
*ஓங்காரமுடைய நெஞ்சில்கலைமகள்
*மணித்தலம்இமயனும் இயக்கர்களும்
*உதட்டில்உதயாத்தமன சந்தி தேவதைகள்
*கழுத்தில்இந்திரன்
*முரிப்பில்பன்னிரு ஆரியர்கள்
*மார்பில்சாத்திய தேவர்கள்
*நான்கு கால்களில்அனிலன் எனும் வாயு
*முழந்தாள்களில்மருத்துவர்
*குளம்பு நுனியில்சர்ப்பர்கள்
*குளம்பின் நடுவில்கந்தவர்கள்
*குளம்பிம் மேல் இடத்தில்அரம்பை மாதர்
*முதுகில்உருத்திரர்
*சந்திகள் தோறும்எட்டு வசுக்கள்
*அரைப் பரப்பில்பிதிர் தேவதைகள்
*யோனியில்ஏழு மாதர்கள்
*குதத்தில்இலக்குமி தேவி
*வாயில்சர்ப்பரசர்கள்
*வாலின் முடியில்ஆத்திகன்
*மூத்திரத்தில்ஆகாய கங்கை
*சாணத்தில்யமுனை நதி
*ரோமங்களில்மகாமுனிவர்கள்
*வயிற்றில்பூமாதேவி
*மடிக்காம்பில்சகல சமுத்திரங்கள்
*சடாத்களியில்காருக பத்தியம்
*இதயத்தில்ஆசுவனீயம்
*முகத்தில்தட்சிணாக்கினி
*எலும்பிலும், சுக்கிலத்திலும்யாகத் தொழில் முழுவதும்
*எல்லா அங்கங்கள் தோறும்கலங்கா நிறையுடைய
 கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள் .

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது  பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டனஅவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. . இவை பொன்னிறம், கருமை, வெண்மைபுகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தனஇவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றனஇவற்றில் இருந்துவரும் கோமயம்(சாணம்),  

மூத்திரம்(கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவைஇவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே  பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது

இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர்செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும்

காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம் . தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம்பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.வைகுண்டம்ஸ்ரீமன் நாராயணனின் வாசஸ்தலம்.

 வைகுண்டத்திற்கும்  ஊர்த்தவ பாகத்தில் விளங்குவது கோலோகம்.
கோமாதாவின் உடற் பகுதியும்   அங்கே அருளும் தெய்வங்களும்
1. முகம் மத்தியில்                       சிவன்
2. வலக் கண்                               சூரியன்
3. இடக் கண்                               சந்திரன்
4. மூக்கு வலப்புறம்                     முருகன்
5. மூக்கு இடப்புறம்                     கணேசர்
6. காதுகள்                                    அஸ்வினி குமாரர்
7. கழுத்து மேல்புறம்                     ராகு
8. கழுத்து கீழ்புறம்                        கேது
9. கொண்டைப்பகுதி                     ப்ரும்மா
10. முன்கால்கள் மேல்புறம்           சரஸ்வதி, விஷ்ணு
11. முன்வலக்கால்                         பைரவர்        
12. முன் இடக்கால்                        ஹனுமார்
13. பின்னங்கால்கள்                      ப்ராசரர், விஷ்வாமித்திரர்
14. பின்னகால் மேல்பகுதி             நாரதர், வசிஷ்டர்
15. பிட்டம் - கீழ்ப்புறம்                கங்கை
16. பிட்டம் - மேல்புறம்                லக்ஷ்மி
17. முதுகுப்புறம்                           பரத்வாஜர், குபேரர் வருணன், அக்னி    
18. வயிற்றுப்பகுதி                        ஜனககுமாரர்கள் பூமாதேவி
19. வால் மேல் பகுதி                     நாகராஜர்
20. வால் கீழ்ப்பகுதி                       ஸ்ரீமானார்
21. வலக்கொம்பு                            வீமன்
22. இடக்கொம்பு                            இந்திரன்
23. முன்வலக்குளம்பு                     விந்தியமலை
24. முன்இடக்குளம்பு                      இமயமலை
25. பின் வலக்குளம்பு                      மந்திரமலை
26. பின் இடக்குளம்பு                      த்ரோணமலை
27. பால்மடி                                      அமுதக்கடல் 


பசு வழிபாடு வகை
 வழிபாடு இரண்டு வகைப்படும்.
1. பசு மாடுகளை சந்தன குங்குமம் போன்றவற்றால் அலங்கரித்துஎல்லா மந்திரங்களும் கூறி, மலர்களால் அர்ச்சித்துதூப, தீப, நிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை.ஈசனை விக்ரஹங்கள் வைத்து விரிவாக வழிபட முடியாதவர் இறைவனின் படத்தை மட்டும் வைத்து வழிபடுவது போலவீட்டில், கோமாதாவின் படத்தை மட்டும் வைத்து   வழிபாடு செய்வதும் முதல் வகையிலேயே அடங்கும்

2. பசுவைத் திருநாமங்கள் கூறி வழிபடா விட்டாலும்வீட்டுப்பசுவுக்கு மட்டுமின்றி பசு இனத்துக்கே உதவுவதாக அவற்றின் நலனைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் பசுவழிபாடேஇரண்டாம் வகை பராமரிப்பு வழிபாடு இருந்தால் தான் முதல் வகை பூஜை வழிபாடு நடக்க முடியும்.

கோமாதாவில் (பசு) முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்அதன் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, கோமாதா பூஜை செய்யும் போதுபசுவை முன்புறமாக தரிசிப்பதைவிடபின்புறம் தரிசனம் செய்வது மிகவும் நன்மை தரும்

பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால் பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும்.பசுவின் சாணமும் லட்சுமி அம்சமாகும்எனவேதான், அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.பசுவுக்கு பூஜை செய்வது பராசக்திக்கு பூஜை செய்வதற்குச் சமமாகும்.பிரம்மா,விஷ்ணு,சிவன் முதலான மும்மூர்த்திகளின் மேலதிகாரியாக சதாசிவம் என்றொரு தெய்வம் உண்டு.

சதாசிவத்திற்கும் மேலதிகாரியாக திருமூர்த்தி இருக்கிறார்.

இவர்களுக்கும் மேலாக 10 வயது சிறுமியாக மனோன்மணி என்ற ஆதிபரப்பிரம்ம சக்தி இருக்கிறாள்

இவளே இந்த பிரபஞ்சம்உலகம்உயிர்கள் என  அனைத்தையும் படைத்து,காத்து,ரட்சிப்பவளாக இருக்கிறாள்.  இவளின் எளிய அம்சமாக பசு என்ற கோமாதா நம்முடன் வாழ்ந்து வருகிறாள்.இதனாலேயேமுப்பத்துமுக்கோடி தேவர்களும்,  நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்ட வசுக்களும்,நவக்கிரகங்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றன.


கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம்.எந்த ஜாதி,மதம்,மொழியும் தடையாக இராது.(உருவ வழிபாடு இல்லை என சொல்லும் மதத்தினர் கூட கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்)


கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கிவிடும்;குழந்தைபாக்கியம் உண்டாகும்.கெட்ட சக்திகள் நெருங்காது. முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கிவிடும் நீண்ட கால மனக்குறைகள் நீங்கிவிடும்.  கோமாதா பூஜையைச் செய்ய பக்தியும்,நம்பிக்கையும் முக்கியமாகும்.

முதலில் பசுவை அழைத்துவர வேண்டும்.அதன் மீது பன்னீர் தெளித்து மஞ்சள்,குங்குமம் பொட்டு அதன் நெற்றியில் வைக்க வேண்டு  பசுவின் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டும்.பிறகு பசுவிற்கு புடவை அல்லது ரவிக்கை சாற்றி,அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் 

போன்றவற்றை ஆகாரமாகத் தர வேண்டும். நெய்விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுக்க வேண்டும்.எடுத்துவிட்டு,விழுந்து வணங்க வேண்டும்.

கோமாதா 108 போற்றியை பக்தியுடன் ஒருவர் மனதை ஒருமுகப்படுத்திச் சொல்ல வேண்டும் (இடையில் நிறுத்தக்கூடாது)

மற்றவர்கள்போற்றி”, “ஓம்என சொல்லிட வேண்டும். 108 போற்றி முடித்தவுடன் மீண்டும் ஒருமுறை நெய் தீபத்தால் ஆரத்தி செய்ய வேண்டும்
பிறகு,3 முறை பசுவை வலம் வந்து விழுந்து வணங்க வேண்டும்.

இப்படிச் செய்வதால், பல யாகங்கள் செய்த பலனும் பல புராதன கோவில்களுக்குச் சென்று தெய்வத்தை வணங்கிய பலனும் ஒரு சேரக்கிடைக்கும்.


பசுமாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் லஷ்மி கடாக்ஷம் இருக்கும். அதனால்தான் தெய்வசக்தி நிறைந்த கோயில்களில் கூட பசுமாடுகளை வளர்த்து அதற்கு முறையாககோ பூஜைசெய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.  எப்பேர்பட்ட தோஷத்தையும் போக்கும்  ஆற்றல் பசுவுக்கு இருக்கிறது

மகாபாரதத்தில் பிஞ்சு குழந்தையான கண்ணனை கொல்ல கம்ஸன், பல முயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒரு முயற்சியாக அரக்கி ஒருத்தியை அனுப்பினான்

அந்த அரக்கி, அழகான பெண் வடிவம் எடுத்துக் கொண்டு யசோதையின் வீட்டிற்கு வந்தாள். அங்கே குழந்தை கிருஷ்ணன் தூங்கிகொண்டு இருந்தான். கண்ணனின் மேல் பாசம் கொண்டவள் போல நடித்து, குழந்தைக்கு தாய்பால் கொடுத்தாள்.

அவளின் நோக்கம் பாசம் அல்ல. அது கொடுமையான திட்டம். அது என்னவென்றால், அரக்கியின் தாய்பாலை குழந்தை குடித்தால், அவள் உள்ளத்தில் இருக்கும் விஷம், அவள் உடல் முழுவதும் இருந்த காரணத்தால், தாய்பாலின் மூலமாக அவ்விஷங்கள் குழந்தையான கண்ணனின் ரத்தத்தில் பரவி, கண்ணனி்ன் இரத்தத்தை அட்டைபூச்சியை போல உறிஞ்சி எடுத்துவிடும் என்று நினைத்தாள் அந்த அரக்கி.

நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள். ஆனால் அந்த அரக்கியோ ஒரு தெய்வத்தையே மடியில் வைத்துக்கொண்டு கொடுமை செய்ய நினைத்தாள். தெய்வ குழந்தையான கண்ணனும் அவள் உயிரை எடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தான். அவளாக வந்து மாட்டினாள். பாலுடன் அரக்கியின் உயிரையும் உறிஞ்சினான் கண்ணன். செத்து தொலைந்தாள்.

அவள் உயிர் பிரிந்த போது பெரும் அலறலுடன் பூமியில் விழுந்தாள். மிக பயங்கரமான அந்த குரலை கேட்ட ஊர் மக்களும், தாய் யசோதையும் ஒடிவந்து பார்த்தபோது, அரக்கி ஒருத்தி மாமிச மலை போல் இறந்து கிடப்பதை பார்த்தார்கள். என்ன நடந்தது என்பதையும் புரிந்துக் கொண்டார்கள்

ஒரு கொடூரமான அரக்கியை தன் குழந்தை கண்ணன் வீழ்த்தினான் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், ஒரு உயிரை கொன்ற பாவம் பிரம்மஹத்தி தோஷமாக கண்ணனை பிடித்துக்கொள்ளக் கூடாதே என்று அஞ்சினாள் தாய் யசோதை.

உடனே அதற்கான தோஷ நிவர்த்திக்காக பசுவின் வாலில் கண்ணனை சுற்றி, அவன் தலையில் கோமியத்தை தெளித்து தோஷத்தை போக்கினாள் யசோதை. இது, ஸ்ரீவி்ஷ்ணு புராணத்தில் இருக்கிற தகவல்.

ஆகவே, இறைவனாக இருந்தாலும்  இறைவனுக்கே தோஷம் பிடிக்காமல் இருக்க சிறந்த பரிகாரம் பசுதான் என்கிறது சாஸ்திரங்களும்புராணங்களும்.
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள்:

பூமாதேவியே கோமாதாவாக அவதாரம் எடுத்தாள் என்கிறது புராணம். தேவர்களும்அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து தோன்றியது பசு. கோமாதா என்று போற்றப்படும் அந்த பசுவின் உடலில் தேவர்களும், முனிவர்களும், இறைவனும், இறைவியும் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார்கள்.

அதனால் முனிவர்கள், தேவர்கள், இறைவனும் பசுவின் உடலில் குடி வந்தார்கள். அப்படியே முப்பத்து முக்கோடி தேவர்கள்களும்பசுவின் உடலில் குடிவந்து விட்டார்கள்.

கடைசியாக வந்த கங்கையும்லஷ்மியும், தங்களுக்கு இடம் இல்லாததால் வருந்தினார்கள். இதை கண்ட கோமாதா, “அகில உலகத்தையே பூமாதேவியாக இருந்து சுமக்கும் நான், உங்களை சுமக்க மாட்டேனா?” என்று கூறி தன் பின் பகுதியில் இடம் தந்தாள். இதனால் பின்பாகத்தில் கங்கையும், ஸ்ரீலஷ்மி தேவியும் அமர்ந்ததால், பசுவின் சாணத்தில் ஸ்ரீலஷ்மியும், கோமியத்தில் கங்கையும் இருப்பதாக ஜதீகம்.

தோஷத்தை போக்கும் கோமாதா

கோயிலுக்கு நல்லவர்கள்கெட்டவர்கள் என்று பல பேர் வருவதால் அவர்களுடைய தோஷம் அந்த கோயிலுக்குள் நிலைத்துவிடாமல் இருக்க அந்த காலத்திலிருந்து இந்த காலம்வரையிலும் சில கோயில்களில், காலையில் பசுவுக்கு கோபூஜை செய்வதுடன், அந்த கோயிலை சுற்றி அந்த பசுவை வலம் வர வைப்பார்கள்.

கங்கை எப்படி புனிதம் வாய்ந்ததோ அதுபோல், எண்ணற்ற மடங்கு புனிதம் வாய்ந்தது பசுவின் சாணம். பசு சாணத்தை கரைத்து வீட்டின் வாசலில் தெளித்தால் கிருமி நாசினியாகும். பசுவின் சாணத்தால் தயாரிக்கப்படும் திருநீறின் மகிமை அற்புதமானது

திருநீறை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் கண் திருஷ்டி பாதிப்பு, விரோதிகளால் எற்படும் தொல்லை, நோய்கள் போன்றவை நீங்கும். துஷ்டசக்திகளும் அண்டாதுகோமியத்தை வீட்டிற்குள் தேளித்தால், வீட்டில் இருக்கும் தோஷங்கள் விலகியோடும். கங்கையின் அருளாசி கிடைக்கும். ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்வாள்.

கோ பூஜை

வருடத்திற்கு ஒருமுறையாவது நம் வீட்டிற்கு பசுவை அழைத்து வந்து, அதற்கு மஞ்சள்குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து, அந்த பசுமாடு வயிறு நிறைய சாப்பிட பழங்கள், அகத்திகீரை போன்றவற்றைகொடுத்து, நெய் விளக்கு ஏற்றி, தீபஆராதனை செய்ய வேண்டும்

பிறகு நெய் விளக்கை கையில் எடுத்து அந்த பசுவை சுற்றி மூன்று முறை வலம் வர வேண்டும். இப்படி வருடத்திற்கு ஒருமுறையாவது கோபூஜை செய்து வந்தால், நம் இஷ்ட தெய்வகுல தெய்வ அருளாசியும் கிடைத்து, தலைமுறை தலைமுறைக்கு சுபிக்ஷம் பெருகும்.

யாகம்ஹோமம்

வீட்டில் யாகம்ஹோமம் போன்ற தெய்வ வழிபாடுகளை செய்யும் போது, யாகத்தில் () ஹோமத்தில் பசு வரட்டியை போட்டால் இன்னும் அந்த யாகத்திற்கும் ஹோமத்திற்கும் சக்தி கூடும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்யாகம்ஹோமம் போன்றவை நிறைவு பெற்றதும் அந்த சாம்பலை ஒரு வெள்ளை துணியில் கட்டி வீட்டின் தலைவாசலில் மாட்டினால் அந்த வீட்டுக்குள் எந்த தோஷமும் நுழையாது. ஸ்ரீலஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.

இப்படி எண்ணற்ற சக்தி வாய்ந்த பசுவை வணங்கிமுப்பத்து முக்கோடி தேவர்களின்ஆசியை பரிபூரணமாக பெற்று, தலைமுறை தலைமுறைக்கும் வளமோடும்நலமோடும் வாழ்வாங்கு வாழ்வோம். ’கோமாதா நம் குலத்தை காக்கும் குலமாதா’. ஆகவே கோமாதாவான பசுக்களை நன்றாக பராமரித்துபாதுகாத்து வணங்கினால் நிச்சயம் அனைவருக்கும் சுபிக்ஷத்தை அள்ளி அள்ளி தருவாள்.


குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...