ads

Saturday, 23 March 2013

ஈழ தமிழருக்காக கை கோர்த்த 25 நாடுகள்!!


மாற்றங்கள், ஏமாற்றங்களை எல்லாம் கடந்து, 25 நாடுகளின் ஆதரவோடும் 13 நாடுகளின் எதிர்ப்போடும் இலங்கை மீது அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறி விட்டது. 

இதுவரை ஈழத்தமிழன் அழிவுக்கு எதிரான குரல், இலங்கையிலும் தமிழகத்திலும் புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகளில் மட்டுமே கேட்டது. அந்தக் குரலுக்கு உலகளாவிய அங்கீகாரம் இப்போது கிடைத்துள்ளது.

2012-ம் ஆண்டு மார்ச் மாதத் தீர்மானத்துக்கும் இப்போதைய தீர்மானத்துக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லைதான். 

அதேபோல் மக்களின் முன்னேற்றத்துக்காகக் கொடுக்கப்பட்ட ஓர் ஆண்டு அவகாசத்தில் இலங்கையின் கள நிலைமையிலும் பெரிய வித்தியாசம் இல்லை. இப்போது மேலும் ஓர் ஆண்டு காலம் அவகாசம் தரப்பட்டுள்ளது.

வாக்கெடுக்கும் முன் விவாதங்கள்

அனைத்து தமிழர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நாள் மார்ச் 21. அன்றைய தினம் இந்திய நேரம் மதியம் 2 மணிக்கு இறுதி விவாதம் நடந்தது. 

இலங்கையை பச்சையாக ஆதரித்தது பாகிஸ்தான். ”இலங்கைக்கு இன்னும் அவகாசம் தேவை. அந்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது முறையானதல்ல. 

தீவிரவாதத்தை ஒழிக்கும் போரில் வென்றுள்ள இலங்கையைப் பாராட்ட வேண்டுமே தவிர, எதிர்க்கக் கூடாது’ என்று இலங்கையை அவர்கள் ஆதரிக்க, அடுத்து இந்தியா பேசியது.

தொடக்கத்திலேயே ஒலிவாங்கியின் இடர்பாடோடு தொடங்கிய இந்தியாவின் பேச்சு, ”13வது அரசியல் சட்டத்திருத்தத்தை அமல்படுத்துதல், ‘கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்கப் பரிந்துரைகள்’ (எல்.எல்.ஆர்.சி.) அடிப்படையில் முன்னேற்றப் பணிகள், தமிழர் வாழ்நிலங்களில் பாதுகாப்புப் படையைக் குறைத்தல், நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திர விசாரணை செய்தல், இடம்பெயர்ந்தவர்களுக்கு வசதியை ஏற்படுத்துதல் போன்றவை நிறைவேற்றப்பட வேண்டும். 

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வடக்கு மாகாண தேர்தல் நடக்கும் என எதிர்ப்பார்க்​கிறோம். போர் முடிந்திருக்கும் இந்தத் தருணத்தை சமாதானத்துக்கான காலமாகப் பார்க்கிறோம்” என்று, இந்தியா சார்பில் பேசியவர் கவனமாக இலங்கையைக் குற்றம் சாட்டிவிடாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். 

இலங்கை நம்முடன் நெருங்கிய உறவில் இருக்கிறது. அதனால் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் எப்போதும் இந்தியா கவனம் செலுத்தும்” என்றும் கவனத்துடன் முடித்தார்.

அமெரிக்காவின் தீர்மானத்தில் உள்ள ஒரு வரியைக்கூட இலங்கை ஏற்றுக்கொள்ள​வில்லை. ”அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கையில் நாங்கள் செய்த மறுவாழ்வுப் பணிகளை அமெரிக்கா கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை’ என்று இலங்கைப் பிரதிநிதி பேசினார்.

இறுதியில் வாக்கெடுப்பு நடந்தது. அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்து தீர்மானத்தை வெற்றிபெற வைத்தன. இந்தியாவும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

நாங்கள் பாடம் புகட்டுவோம்!

ஜெனிவாவில் இலங்கையின் மனித உரிமைப் பிரச்னைகள் பெரும்அதிர்வுகளை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. 

மனித உரிமைப் பிரச்னைகளை எடுத்துக்கூறும் அமைப்புகளின் மீதும் ஐ.நா-வின் பிரதிநிதிகளின் மீதும் இலங்கை அரசு, மிகச்சுலபமாகப் புலிப்பட்டம் கட்டி புறக்கணிக்க முயற்சி செய்கிறது. 

புலிப் பட்டம் கட்டும் காட்டத்தை இலங்கை அரசின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதி மகிந்த சமரசிங்க ஜெனிவாவிலேயே வெளிப்படுத்தினார். அவர், ”ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள் புலம்பெயர்ந்துள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவில் செயல்படுகிறது. 

ஐ.நா. அதிகாரி நவநீதம் பிள்ளையும் அந்த ஆதரவில்தான் செயல்படுகிறார்” என்று ஆதாரமில்லாமல் ஆவேசப்பட்டார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி வெளியிட்ட ‘நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம். 

இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை’ என்ற 144 பக்க அறிக்கையில், இலங்கையைத் தோலுரித்துக் காட்டியது. 

இந்த அறிக்கையில், 2006-2012 வரை பாலியல் வல்லுறவுகளால் பாதிக்கப்பட்ட 75 பேரின் ஆதாரப்பூர்வ வாக்குமூலங்கள் வெளியிட்டு இருந்தது. 

இதுபற்றி கருத்துக் கூறிய அந்தக் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குநர் பிராட் ஏடம்ஸ், ”இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சிறையில் பல தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திச் சித்ரவதை செய்துள்ளனர். 

இவை யுத்தகாலத்தில் மட்டும் நிகழ்ந்த அட்டூழியங்கள் அல்ல. இப்போதும் அந்த அட்டூழியங்கள் தொடர்கின்றன. புலிகளோடு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படும் தமிழர்கள் கடும் ஆபத்தை எதிர்கொள்கிறார்கள்”என்றார்.

ஆனால், இலங்கையோ இதை முழுமையாக மறுத்தது. இப்படி ஆயிரக்கணக்கான மனித உரிமை பிரச்னைகள் பேசப்பட்டாலும் இலங்கைக்கு தண்டனை என்பதே இல்லை. ஏன் என்றால் சர்வதேச நீதிமன்றத்தாலோ, ஐ.நா-வினாலோ இலங்கையை தண்டிக்கவே முடியாது. 

காரணம், இலங்கையும் இந்தியாவும் சர்வதேச நீதிமன்றத்துக்கான விசாரணை விதிமுறைகளுக்கு இணங்கி இன்றுவரை கையெழுத்திடவில்லை.

அமெரிக்காவின் நீர்த்துப்போன தீர்மானம்

இலங்கையை தன் வசத்துக்குள் கொண்டுவர துடித்துக் கொண்டிருந்த அமெரிக்கா, இத்தனை நாட்களாக ‘ஐ.நா. தீர்மானத்தில் சர்வதேச விசாரணை’ என்று பொய்யாக மிரட்டுகிறது. 

இப்போது அதை விலக்கிக்கொண்டு ஒரு வெற்றுத் தீர்மானத்தைத்தான் ஐ.நா-வில் சமர்ப்பித்தது. இலங்கையில் தமிழர் வாழ் நிலங்களில் ராணுவத்தை உடனே விலக்க வேண்டும், போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும், மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளை இலங்கை அரசு வலுப்படுத்த வலியுறுத்தப்படும்… இவ்வாறு அந்த தீர்மானம் இருக்கிறது. 

இலங்கை மீதான நடவடிக்கைகள் பேசப்பட்ட காலத்திலிருந்தே இனப்படுகொலை என்பதை மறைத்துப் போர்க் குற்றம் என்ற அடிப்படையிலேயே அமெரிக்கா தனது தீர்மானங்களை முன்வைத்தது. 

இனப்படுகொலை என்று குறிப்பிடப்படவில்லையே என்று கேள்விகள் எழுந்தபோது ‘போர்க் குற்றத்தின் மீதான சுதந்திர விசாரணை’ நடக்குமானால் அதிலே ‘இனப்படுகொலை’ என்பது சேர்க்கப்படும் என்று ஏமாற்றி, இப்போது அந்த ‘சுதந்திர விசாரணை’ என்ற பேச்சையே விலக்கிக் கொண்டது.

சுப்பிரமணியன் சுவாமியின் வேலை!

இப்படி இந்தத் தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டதற்கு, இலங்கையை காப்பாற்றும் முடிவில் இந்தியா உறுதியாக இருப்பதே காரணம் என்று சொல்லப்பட்டாலும், இதற்குப் பின்னால் சுப்பிரமணியன் சுவாமியின் பங்களிப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. 

மார்ச் 1-ம் தேதி, மகிந்த ராஜபக்ஷேவை சந்தித்த சுவாமி, அடுத்த நான்காவது நாளிலேயே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்திக்கிறார் என்றால் அது இலங்கையைக் காப்பாற்றத் துடிக்கும் செயல்தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

‘மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த விசாரணையாக இருந்தாலும், அது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசால்தான் நடத்தப்பட வேண்டும். 

ஒருபோதும் சர்வதேச பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படக் கூடாது’ என்பதே சு.சுவாமி அமெரிக்க அதிகாரிகளிடமும் ஒபாமாவிடமும் தெரிவித்த கருத்தின் சுருக்கம். இதையேதான் அமெரிக்காவும் தன் தீர்மானத்தில் கூறி இருக்கிறது. 

எப்படி இருந்தாலும் தமிழர் பிரச்னையை உலக நாடுகளின் விவாதப் பொருளாக மாற்றிவிட்டது இந்தத் தீர்மானம்!

நன்றி : CNN
இந்த கட்டுரையின் முழுவடிவமும் CNN க்கே சொந்தம் 

புத்தாண்டு பலன்கள் - நட்சத்திர ரீதியாக!!



அசுவினி 

இந்த புத்தாண்டு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். நமக்கு நல்ல காலம் வராதா என்ற கேள்விக்கே இடமில்லை. தொலைந்து போன சந்தோஷமும், கலைந்து போன கனவுகளும் கைகூடும்.

பரணி 

பொம்மை ராசாவாக இருந்த நிலை மாறும். சிலருக்கு சிம்மாசனமும் தேடி வரும். சொந்த வீடு வாகன யோகம் சிக்கலின்றி முடியும். உங்கள் அணுகு முறை, அதிரடி குறையாத ஆக்ஸன் இவை இரண்டுமே வெற்றியை தேடி வரும். 

கார்த்திகை 

நீண்ட நாளாய் மனதில் மையம் கொண்டிருந்த கேள்விக்கு விடை தெரியும். தோலை தூர பயணங்கள்  இனிக்கும். இதில் பக்தி மார்க்கமும் ஓன்று.  உங்கள் நலம் விரும்புவோர்கள் எல்லாம் அன்பை பொழிவார்கள். பதவியில் அங்கீகாரம் கிட்டும்.




கார்த்திகை 

இந்த புத்தாண்டில் பணம் பண்ணவும் தெரியும் அதை பயனுள்ள வகையில் செலவு செய்யவும் தெரியும். முதலில் தப்பாகி விடுமோ, தலைகிழாய் மாறி விடுமோ என்ற ஐயம் தோன்றினாலும், வழி திறக்கும், ஒளி பிறக்கும்.

ரோகினி 

திடீர் மாறுதலை சந்திக்கலாம். லாபங்கள் நஷ்டங்கலாகலாம். அந்த நஷ்டங்ககள் கஷ்டங்களை தரலாம். எதிர்ப்புகள், ஏளனங்கள் , உருட்டல், மிரட்டல்கள், அவமானங்களை இவற்றை  சந்திக்கலாம்.

அதனால் இதுநாள் வரை வரம் தந்த சாமியை சிரம் தாழ்த்தி வணங்குங்கள் துயரங்கள் குறையும்.

மிருகசீரிஷம்

இருக்கிற பணியில் நிரந்தரம், அல்லது புதிய பதவியில் அங்கீகாரம் என்பது கேள்வி குறியாக தெரியும். கனவுகள் நிறைவேறவும், லச்சியங்கள் ஈடேறவும் சிறிது அவகாசம் தேவைப்படும். என்றாலும் எதிர்ப்பார்த்த அதிஷ்ட வாய்ப்பொன்று உங்களை வந்து சேரும்.



மிருகசீரிஷம்

உங்கள் எண்ணங்களுக்கு வலு கூடும். விரையங்கள் கட்டுப்படும். எதிரிகள், கடன் தொல்லை, இனம் புரியாத நோய் தொல்லை, இவைகளில் இருந்து விடுபட்டு வியத்தகு சாதனை புரிய போறிங்க. கணவன் மனைவி ஒன்றுமை ஓங்கும். பிள்ளைகளால் பெருமை கொள்ளலாம்.


திருவாதிரை

உங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். வரவேண்டியது வரும். பணவசதியை இழந்ததும், மனநிமதி குறைந்ததும் இனி மாறும்.

நீங்கள் விரும்பிய வாழ்க்கை வெகு விரைவில் தேடிவரும். உங்களை சுற்றி ஒன்றும் இல்லாதவர்கள் உயர்ந்தார்கள். தகுதி இருந்தும், தனித்திறமை இருந்தும் தடுமாறிய நிலை இனி இல்லை.


புனர்பூசம்

கஷ்டகாலத்திலும் நல்ல காலம் என்பது போல், இஷ்ட தெய்வம் தான் இதுவரை காத்தது. நீங்கள் விழுந்துவிடவில்லை. இதுவரை எழுந்துவிடவும் இல்லை.  தடுமாறிக் கொண்டிருகீங்க.இனி தலை நிமிரலாம். இளைய தலைமுறையை  பற்றிய சிந்தனைக்கு இனி விடிவு காலம் பிறக்கும்.





புனர்பூசம்

உங்களது கடமைகளை மிக சரியாக முடிக்கலாம். பணம் தேவைக்கு ஏற்ற மாதிரி வந்து கொண்டிருக்கும். எல்லாம் சரியாக நடந்தாலும் சின்ன குறை ஓன்று மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும். உங்களின் நீண்ட நாள் கோரிக்கை ஓன்று நிறைவேறும்.


பூசம்

குடும்ப சந்தோசம் கூடும்.  உறவினர் தொல்லை, பங்காளிகள் தொல்லை இனி இல்லை. சூரியனை கண்ட பனிபோல் விலகும்.

தாம்பத்திய சுகம் குறையவோ, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவோ வழியில்லை.  எதிர்ப்பார்ப்பில் ஏமாற்றம் இருக்காது. எதிர்பாராத அதிஷ்ட வாய்ப்பொன்றும் உண்டு.

ஆயில்யம்

இதுவரை இருந்த இடர்பாடுகள் இனி இருக்காது.  இதுவரை கொடுத்ததை எல்லாம் கெடுத்து, கேள்வி கேட்ட உங்களை பதில் சொல்லும் நிலைக்கு உள்ளாக்கி வைத்திருந்த கால நேரம் விலகி  விட்டது.

இனி நீங்கள் நீங்களாக இருப்பிர்கள். முயற்சிகள் பலிதமாகும், முன்னேற்றம் அதிகமாகும்.



மகம்

முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் குளறுபடி, எதிர்ப்பார்ப்பில் ஏமாற்றம், வேண்டியவருடன் விரோதம், வேண்டாதர்களின் குரோதம் என்று எதிர் மறையான  பலன்கள் எதிர்பட்டாலும் சமாளித்துக் கொண்டுதான் இருப்பிங்க.

விதியை மதியால் வெல்ல முடியாமல் சதி வலையில் சிக்கினாலும், புதிய பாதை தெரிவதால் பயணத்தை தொடரலாம். தைரியமா இருங்க.

பூரம்

எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, நஷ்ட வியாபாரத்தை லாபத்திற்கு மாற்றும் முயற்சி. விரோதமானவர்களின் வீராப்பு, மிரட்டல், சங்கடங்களை சமாளித்து சரிவில் இருந்து மீள்வது, எண்ணிய காரியங்களை எளிதாய் முடிப்பது என்று தொடரும் கேள்விகளுக்கு சில சாதகமாகவும், சில பாதகமாகவும் முடியலாம். இருப்பினும்  அது உங்களை பாதிக்காது.

உத்திரம்

நீங்கள் பலவகையிலும் அலைகழிக்கப்பட்டீங்க. அன்றாட வாழ்க்கையிலும் அல்லல்கள், வரவுக்கு மீறிய செலவுகள், பதவி பற்றிய பயம்,  அந்தஸ்திற்கு  ஆபத்து வருமோ என்ற அச்சம் ஒருபுறம் நீடித்தாலும்  விட்டதை பிடிப்பதற்கும் விரும்பியதை பெறுவதற்கும் முயற்சிக்கலாம்.




உத்திரம்

குடும்ப பிரச்சனைகள் தீருமா என்பது முதல் கேள்வி, வேலை செய்யலாமா சொந்தமாக ஏதாவது செய்யலாமா என்பது மறுகேள்வி. பிக்கல்  புடுங்கல் இல்லாமல் வாழ்க்கையை எப்படி நடத்துவது என்பது இன்னொரு கேள்வி, எதிர்காலத்தை எப்படி திட்டமிடுவது என்பது மற்றொரு கேள்வி. எல்லா கேள்விக்கும் விடை கிடைக்கும்.

ஹஸ்தம் 

ஒரு இக்கட்டான நிலைதான். செலவுகள் அதிகமாகி வரவுகள் குறையும். உறவாடிய சில உறவுகள் உங்களை உதறி தள்ளலாம். 

எதையும் தள்ளி போடவும் முடியாமால், செயல்படுத்தவும் முடியாமல் ரெண்டும் கேட்டான் நிலை தொடரவே செய்யும்.  சின்ன தலைவலிக்கே பெரிய செலவுகளை சொல்லி டாக்டர் பயமுறுத்தலாம். 

சித்திரை 

திருமண வயதில் உள்ளவரா? தடையும் தாமதமும் தவிர்க்க முடியாது. கொஞ்ச காலத்திற்கு அடுத்தவர் திருமணத்தை பார்த்துதான் ஆனந்த படவேண்டி வரும். 

சில வில்லங்க விவகாரங்கள் தீர்ந்தாலும், புதிய பூதம் ஓன்று வரலாம். மற்றபடி இடமாற்றம், பதவி மாற்றம் ஏற்படவும் சான்ஸ் இருக்கு.





சித்திரை 

உங்கள் பூர்வீக பலம் குறைந்தாலும், பிள்ளைகளால் புது பிரச்சனைகள் முளைத்தாலும், பூர்வீக சொத்துக்களை ஏமாற்றி பறித்தாலும் நீங்கள் கலங்க போவதில்லை. வலிகளுக்கும் வேதனைகளுக்கும் ராஜ வைத்தியம் இருக்கு, கவலை வேண்டாம்.

சுவாதி

நீங்கள் அரசியல்வாதியா? பந்தியில் உட்கார முடியாவிட்டாலும் சந்தியில் நிற்க மாட்டிங்க. சில முடிவுகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் வரும்.

உங்களை பகடை காயாக்கி விளையாடியவர்கள் இனி பயந்து விலகலாம்.

விசாகம்

விரும்பியது கிடைக்காவிட்டாலும் விரும்பாத ஒன்றை விரும்ப வேண்டி வரும்.  காரணமில்லாமல் கவலை பட்டதும், வழி தெரியாமல் விழி பிதிங்கியதும் போதும் என்ற முடிவுக்கு வருவீர்கள். 

உங்கள் முன்னேற்றத்திற்க்காக இதுவரை சிறு துரும்பை கூட தூக்கி போடமுடிய  வில்லை.   இனி வரும் காலத்தில் எதை செய்யணும் அதை எப்படி செய்யணும் என்பதை புரிந்து கொள்ளலாம். 




விசாகம்

இனி தான் திருப்பங்கள் ஏற்ப்பட போகின்றன. கை விட்டு போனதும், கஷ்ட நஷ்டங்களை எற்படுத்தியதும் மாறும். வாழ்வா, சாவா என்ற நிலையில் இருந்து விடுபடபோறிங்க.

அனுஷம் 

கர்ணன் கவச குண்டலத்தோடு பிறந்த மாதிரி உங்களை காத்து ரட்ச்சிக்கும் ஆன்மீக பலம் இப்போதும் இருக்கிறது. எப்போதும் தப்பு கணக்கு போடாத நீங்கள் சரியான கணக்கை போட்டு சரிவில் இருந்து மீள்வீர்கள். 

தொழில்துறையில் அபரீதமான லாபம் வரும். ஏதாவது முக்கிய முடிவுகள் எடுக்கும் போது மட்டும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து எடுங்களேன்.


கேட்டை 

எதிர்பார்ப்பு சின்னதாக இருப்பினும் எதிர்ப்புகள் பெரிதாய் இருந்த நிலை இனி இருக்காது.  கஷ்டப்பட்டு சேர்த்த செல்வமும், செல்வாக்கும் மறைந்து செல்லாக்காசாகி விடுவோமோ என்று கடந்த காலங்களில் நடந்தவற்றை எண்ணி உள்ளம் வெதும்ப்பினீங்க. 

இனி ஒரு விதி செய்வோம் என்று சொல்லலாம் ஓகேவா.



மூலம்

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது மாதிரி, உங்களை வெல்லவும் கீழே தள்ளவும் சில தீய சக்திகள் முயற்சித்தாலும் தெய்வ சக்தியால் வெல்லலாம்.

இது வரை ஒன் மேன் ஆர்மியாக இருந்த உங்களுக்கு, இல்லற துணையின்  ஆதிக்கம் அதிகமாகலாம். தொழில்த்துறை வளர்ச்சி  சீராக இருக்கும் கவலை வேண்டாம்.

பூராடம் 

உங்கள் தைரியம், தன்னம்பிக்கை, கூடவே பிறந்த விடாமுயற்ச்சி குறையலாம். நடக்க கூடாத எதுவும் நடந்து விடுமோ, செய்தொழில் வியாபாரம் படுத்து விடுமோ என்ற கேள்வி எழும்.  

இருப்பினும் பெரும் விலை கொடுத்தே மீள வேண்டி வரும். புதிய முயற்சிகளில் முட்டுக் கட்டை என்பது தவிர்க்க முடியாத ஓன்று.


உத்திராடம்

உங்களை உதை பந்தாக்கவும் முடியாது, உதாசீனப்படுத்தவும் முடியாது. பாதி கிணறு   தாண்டிய மாதிரி, சில காரியங்கள் அந்தரத்தில் இருந்தாலும், இந்திர லோகத்தை ஆளும் முயற்ச்சிக்கு முதல் படி தெரியும். வரவுகள் சீரடையும்.



உத்திராடம்

வருமானம் பல வகையில் வரும். வராத பணமும் வரும். இழந்த புகழ் செல்வாக்கை, மீண்டும் பிடித்து விட முடியும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். விட்டதை விட்ட இடத்திலேயே பிடிக்கலாம்.

திருவோணம்

இதுவரை கண்டாதி கண்டங்கள் பலவற்றை சந்தித்தாகி விட்டது. தொழில் உத்தியோகத்தில் தேக்க நிலை, முயற்ச்சிகளில் முன்ற்றமின்மை, இனம் புரியாத பயம், எதிர்கால கேள்வி குறி என்று ஏகப்பட்ட விஷயங்கள் வரலாம். ஆனாலும் நாளடைவில் சீரடையும். திருமண முயற்சிகள் கை கொடுக்கும்.

அவிட்டம்

நீங்கள் கேள்வி நாயனாக மாறலாம். பல கேள்விகள் எழும். விட்டானா பார் என்ற வீராப்பை விட நமக்கு நல்ல பாடம்தான் என்று ஒதுங்கி இருப்பதே நலம்.

இது கஷ்டகாலம். இதுவரை குறி தவறாமல் சென்று தாக்கிய உங்கள் பிரம்மாஸ்த்திரம், இப்போது இலக்கு தவறி  உங்கள் மேலேயே விழலாம்.எதிலும் தடையும் விடை தெரியாத நிலையும் வரும்.




அவிட்டம்

நிறைய நம்பிக்கையை ஏற்படுதுகிற விதமாக ஆரம்பமாகிறது. விரக்தியின் உச்ச கட்டத்தில் சில சமயம் விபரீதமான முடிவுகளை எடுக்க வைக்கும். அவசரம் வேண்டாம். காத்திருங்கள்  கதவு திறக்கும்.

சதயம் 

விடியலை எதிர் பார்த்திருக்கும் பறவை மாதிரி சில விஷயங்களுக்காக  காத்திருக்க நேரலாம். கடன் தொல்லை, நோய் தொல்லை, பொய் வழக்கு, புனையல் கேஸ், இஷ்ட ஜன பந்துக்களின் விரோத பார்வை என்று வாழ்க்கையின் மறுபக்கத்தை சந்திக்க நேரலாம்.

இருப்பினும் தடம் மாறாமல் இருப்பீர்கள். ஜாமீன் கையெழுத்து வேண்டாம். அளவுக்கு அதிகமான நம்பிக்கை வேண்டாம். கடன் வாங்கி கடன் கொடுக்கும் முயற்சியும் வேண்டாம். 

பூரட்டாதி

பதவி, புகழ், செல்வம், செல்வாக்கு, சுற்றம், நட்பு இவற்றில் ஏதாவது ஒன்றை இழக்க நேரலாம்.  நீங்கள் விழுந்து விடுவீர்கள் என்பது நீங்களே எதிர்பாராத ஒன்றுதான். என்ன செய்ய.... விழுந்து தான் எழணும்.

புது வீடு வாகன யோகத்திற்கு வாய்ப்புகள் உண்டு. அது கடன் வாங்கி தான் காரியம் நடக்கும்.



பூரட்டாதி

புதிய அங்கீகாரம், புதிய பதவி, தகுதிக்கு மீறிய செல்வாக்கு, சுதந்திரம் எல்லாமே கிடைக்கும்.  தடைகளை மீறி வாய்ப்புகள் வரும். சிறிய அளவில் மனக்குறையும் இருக்கும்.

உத்திரட்டாதி

நம்மளை யாரும் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறார்களே என்று ஏங்குவீர்கள். பொதுவாக உயர்வு என்பது உங்களின் ஒரு வரி மந்திரமாக இருப்பினும், தந்திரமாக காலம் கழிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

அதனால் வார்த்தைகளில் கவனம். செயல்களில் முழு கவனம் என்பது முக்கியம்.

ரேவதி

பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் சிறிய மாற்றமாவது இருக்கும். குடும்ப குழப்பம், வீண் தொல்லைகள், வியாதிகள், விரோதிகள், பணியில் பிரச்சனை என்று பல தொல்லைகள் இருக்கும்.

அதில் சிலவற்றுக்கு தீர்வும், சிலவற்றுக்கு சமாதானமும் அடையலாம். செலவுகள் அதிகமாகும்.

Wednesday, 20 March 2013

குறைவில்லா வாழ்வு தரும் குரு வளையம்!!!



வியாழன் 

இதிகாச காலத்தில் இருந்து இன்று வரை பிரகஸ்பதி என்று போற்றப்படுபவர். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஆச்சாரியார்  நவகிரக பரிபாலனத்தில் குரு என்று அழைக்கப்படுகிறார். 

ஒருவரின் அந்தஸ்த்து கவுரவத்திற்கு ஆதாரமாய் விளங்குபவர். நான் யார் தெரியுமா? என் அந்தஸ்த்து என்ன? கவுரவம் என்ன? என்ற எண்ணங்கள் மனதில் எழுகிறது என்றால் அதற்க்கு குருவே காரணம்.

இவர் பார்வைக்கு பலம் அதிகம். பார்த்தால் போதும் பறந்து விடும் பல தோஷம். இவ்வளவு பெருமை வாய்ந்த குரு சிலருக்கு மட்டும் சிற்றன்னையாய் செயல்படுவார். 

சிற்றன்னை என்றால் தெரிகிறதா? அம்மாவோடு உடன் பிறந்த உடன் பிறப்பு அல்ல. அடியே என் சக்களாத்தி... வாடி உன் வாயை கிழிக்கிறேன்னு ஆத்திரத்தில் சிலரின் அம்மா கத்திருப்பாங்களே, அந்த சக்களாத்தி தான் சித்தி.

சிலருக்கு மட்டும் அம்மாவுக்கு பிறகு அதிகாரப் பூர்வமாக பட்டத்து இளவரசியாக பதவிக்கு வந்தவங்க. முதல் தார பிள்ளையை அவதார நாயகி அல்லோகலப்படுத்தும் இல்லையா? அந்த மாதிர் செயல்படக்கூடியவர் குரு.

யாருக்கு?

உதாரணமாக மிதுனலக்னம்.

இந்த லக்னத்திற்கு, இருக்கும் இடத்திற்கு தகுந்த மாதிரி இடர்பாடுகளை இன்னல்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார். தனிப்பட்ட முறையில் செல்வாக்கை உயர்த்துவார்.

வெளிவட்டாரத்தில் அவருக்கு என்ன கவலை என்கிற மாதிரி ஒரு பெயர் இருக்கும். ஆனால் உள்ளுக்குள் இருக்கும் குடைச்சல், குத்துவலி அவருக்கு மட்டுமே தெரியும்.

வெள்ளை வேட்டி பிள்ளை பட்டம் என்கிற மாதிரி கவுரவ குறைவு இருக்காது. மனைவிக்கு அடங்கியவராக வாயில்லாத பூச்சியாக இருப்பார்.

அல்லது தொழில் உத்தியோக ரீதியாக பாடுபட்டு உழைத்தும் பலன் என்னவோ பாதி கிணறு தாண்டிய மாதிரி இருக்கும்.  இந்த ஓரவஞ்சனை குருதான் நான்கு வீடுகளை அமர்ந்தால் அதற்கு குரு வளைய குரு என்று பெயர்.


அல்லது வியாழ வட்டம் என்று பெயர்.

பலன் என்ன என்று பார்ப்போமா?

குருவளயத்தில் இருக்கும் குரு குறைவில்லாத வாழ்க்கையை தருவார் என்று பொருள். பொருளாதார நிலையில் எவ்வளவு அடி மட்ட பிறப்பாக இருந்தாலும் வயது ஏற ஏற வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டே போவார்.

உயர்வது செல்வமும் செல்வாக்கும் மட்டும் அல்ல, அந்தஸ்தும் கவுரவுமும் தான். கிட்டத்தட்ட உள்ளூர் MLA  மாதிரி உலா வர வைப்பார்.

செய்தொழில் ஏற்றம் பெரும். சேர்ந்தவரால் ஆதாயம் வரும். வருமான வாய்ப்புகள் பல வகையில் உயர்ந்து வாழ்க்கைத்தரமும் சிறப்பை பெரும் இதுதான் குரு வளையம்.


அந்த நான்கு  ராசிகள் என்னென்ன?

ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம்.

இந்த நான்கு ராசிகளில் அமரும் குருவுக்குத்தான் குருவளைய குரு என்று சொல்வதுண்டு.  இனி விளக்கத்தை பார்ப்போம்.


ரிஷப குரு 

ரிஷபம் என்பது அசுர குருவான சுக்கிரனின் வீடு.  எப்போதுமே தேவ குருவான குரு பகவானுக்கும், அசுர குருவான சுக்கிரனுக்கும் உறவு நிலை  என்று பார்த்தால் ஆளும் கட்சி எதிர் கட்சி மாதிரி ஆளுக்கொரு திசையில் இருப்பார்கள்.

இவர்கள் இருவரும் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் ஆதாயம் தருகிற மாதிரியான விஷயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. முடிந்தால் கெடுப்பது, முடியாவிட்டால் தடுப்பது என்ற இரு அம்ச கொள்கையை இறுக்கமாக பிடிப்பவர்கள்.

அப்பேற்பட்ட குனாசியம் பெற்ற குரு தன ஜென்ம பகைவன் சுக்கிரன் வீட்டிற்கு வந்தால் தரும் பலன் என்ன?

இதுதான்.

பொருளாதார நிலையில் உயர்வை தருகிறாரோ இல்லையோ பெயர் புகழை வளர்ப்பதில் குருவின் பங்கை குறுப்பிட்டே ஆக வேண்டும். பணபலத்தை விட பக்க பலம் அதிகமாக இருக்கும்.

ஆன்மீக சிந்தனையும், அறவழி செயல்பாடும் ஆன்றோறாய் அடையாளம் காட்டும். கற்றுணர்ந்த சான்றோர்களால் பாராட்டப் படுவார்கள்.

அரசியல் ஈடுபாட்டை தரும், ஆனால் வெற்றி தோல்வி மாறி மாறி வருவதுதான் கவளிக்குரிய விஷயம். இருப்பினும் கொண்ட கொள்கையில் இருந்து பின் வாங்காத கொள்கைவாதிகள்.


சிம்ம குரு

சிம்ம குருன்னா சும்மாவா? மகாமக ஆண்டில் பிறந்தவராயிற்றே, அதனால் சிம்ம சொப்பனமாக திகழ வைப்பார். ஜாதகரின் செயல்பாடுக அனைத்துமே அதிரடியாக இருக்கும். தீவிரமான கொள்கை கொண்ட தீவிரவாதிகள்.

நான் தீவிரவாதின்னு சொன்னது துப்பாக்கியை தூக்குபவர் என்று முடிவெடுக்க வேண்டாம்.

முடிவெடுப்பதில் தீவிரவாதிகள். செயல்படுத்துவதில் தீவிரவாதிகள், கொண்ட கொள்கையில் தீவிரவாதிகள். மாற்று கருத்து கொண்டோர் ஏற்றுக் கொண்டால் போச்சு. இல்லையேல் புறம் தள்ளிவிட்டு புது விதி படைக்கும் புதுமைவாதிகள்.

எப்போதுமே சுய முயற்ச்சிக்கும், முன்னேற்ற வாழ்க்கைக்கும் முன் மாதிரியாய் திகழ்வார்கள்.

மற்றவரின் கருணை பார்வைக்காக காத்திருப்பதில்லை. கடைசி வரை கவுரவுமும் குறைவதில்லை. வாழ்க்கை என்னும் கோட்டை கொத்தளத்தில் எந்நாளும் வெற்றிக் கொடி பட்டொளி வீசி பறக்கும். அடித்து பேசலாம்.


தனுசு குரு 

நினைத்ததை நடத்தி முடித்து நிறைவான வாழ்க்கை அமையும். அதிஷ்ட காற்று மட்டும் அடிப்பதில்லை, அதிஷ்ட கதவும் திறந்தே இருக்கும்.

வாழ்க்கை பாதையில் இவர்கள் முட்களை சந்திப்பதை விட ரோஜாக்கக்களை சந்திப்பதே அதிகம்.

ராஜாதிராஜ, ராஜமார்த்தாண்ட ராஜ குலோத்துங்க, ராஜகுல திலக் என்று போற்றி சொல்கிற மாதிரி மன்னாதி மன்னரை போல் ராஜ யோக வாழ்க்கை நடத்துவார்கள்.


கும்ப குரு 

பிறப்பில் எவராக இருந்தாலும் அந்தனகுல மாண்பு அதிகம் இருக்கும். அந்தனகுஅல் மான்புன்னா தெரியுதா?

ஆச்சாரம், அனுஷ்டானம், பூஜை விரதம் அது. தங்கள் வாழ்க்கை பாதையை எல்லாம் வல்ல இறைவன்தான் தீர்மானிக்கிறான். அவனன்றி அணுவும் அசையாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உடையர்கள்.

ஆன்மீக பலம் மாதிரியே பொருளாதார பலமும் போக போக உயர்ந்து கொண்டே போகும். இதில் சந்தேகமில்லை.

ஓகே. இதுவரை குருவளைய குருவை பற்றி பார்த்தோம். மற்ற ராசிகளில் இருக்கும் குரு, இருக்கும் இடத்திற்கு தகுந்த மாதிரி பலன்களை தருவார். சேரும் கிரகத்திற்கு தகுந்த மாதிரி பலன்களை தருவார்.






Tuesday, 19 March 2013

ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்


ஒரு காலத்தில் கிராமத்து கோவில் பூசாரிகளே பெரும்பாலும் வைத்தியர்களாக இருந்திருக்கிறார்கள். 

உடல் நிலை சரியில்லை என்றால் திருநீறு மந்திரித்து கொடுப்பதில் இருந்து, பாடம் போடுவது, காஷாயம் கொடுப்பது எல்லாம் பெரும்பாலும் இவர்களே. பின் ஒவ்வொரு ஊரிலும் நாட்டு வைத்தியர் என்பவர் இருந்தார்.

மூலிகைகளை கொண்டு மருந்து தயாரித்து நோய்களுக்கு ஏற்ப வைத்தியம் செய்வார்.  பல வகையான ஆற்றல் மிக்க மூலிகைகள் இருந்தன. 

வெட்டிய கைகளை கூட ஓட்ட வைத்துவிடும் மூலிகைகள் இருந்தன என்று படித்திருக்கிறோம்.

பண்டைய காலத்தில் வைத்திய துறையில் இந்தியர்கள் மிகவும் சிறப்பான இடத்தில் இருந்திருக்கின்றனர்.

அறுவை சிகிச்சை, அவயமாற்று சிகிச்சை என்கின்ற பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவற்றை இந்திய சித்த வைத்தியர்கள் செய்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் சித்தர்கள் என்று அழைக்கப்பட்ட அனைவரும் இந்த வைத்திய சாஸ்திரம் தெரிந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

தன்வந்திரி, போகர், தேரையர் போன்ற சித்தர்களை பற்றியும், சுஷ்ருதா, சர்க்கா போன்ற வைத்தியர்கள் பற்றியும், அவர்களின் நூல்கள் பற்றியும் இன்று நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.

இவ்வுலகில் அதிக அளவில் மக்கள் மடிந்து விழுந்தது நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போரினால் அல்ல. கிராமம் கிராமாக லட்ச்சக்கணக்கான மக்கள் மடிந்து மறைந்தது அவர்களை தாக்கிய நோய்களாலேயே என்று கூறுகிறது வரலாறு.



அம்மை, பேதி, கொள்ளை போன்ற நோய்களினால் மக்கள் கூட்டம் கூட்டமாக மடிந்திருக்கின்றனர்.

சுமார் 12,000 வருட காலத்திற்கு முன் ஒரு மனிதனுக்கு நோய் வந்தால் அவனை பேய் பிடித்திருக்கிறது என்று மக்கள் நம்பினார்களாம். அவன் மண்டை ஓட்டை துளை செய்து ஓட்டை போட்டால் பேய் ஓடிவிடும் என்று கூர்மையான ஆயுதத்தால் ஓட்டை போடுவார்களாம்.

நோயாளி ரத்தம் வழிந்து செத்து போவாராம்.  உலகின் பெரும்பான்மையான நோயாளிகளுக்கு மிகவும் மோசமான, கடுமையான சிகிச்சை முறைகளே நடந்து வந்திருக்கிறது.

கிருஸ்து  பிறப்பதற்கு சுமார் நானூரு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹிப்போ கிராட்டஸ் என்பவர்தான் நோய் நொடிகளுக்கு பேய் பிசாசுகளின் மேல் காரணத்தை போடுவது முட்டாள்த்தனம் என்று சுட்டிக் காட்டிய மருத்துவர்.

இறந்த உடல்களை அறுத்துப் பார்த்து எதனால் அவர்கள் இறந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க அந்த காலத்தில் வழியில்லை. அப்படி செய்தால் மதத்துரோகம் என்று சொல்லப்பட்டதால் மதத்தலைவர்களை எதிர்க்கும் துணிவு யாருக்கும் வரவில்லை.

துருக்கியை சேர்ந்த கேலன் என்ற மருத்துவர்தான், நம் உடலில் ரத்தம், பித்தநீர், சளி என்ற திரவங்கள் இருக்கின்றன. இவை குறைந்தாலோ, கூடுவதாலோ நோய்கள் உருவாகின்றன என்றார்.

கிட்டத்தட்ட இவரது கூற்று நம் சித்தர்கள் உடலில் நோய் ஏற்படுவதற்கு வாதம் பித்தம் சிலேத்துமம் என்ற நாடிகளின் துடிப்புகள் குறைவதும், கூடுவதும்தான் என்று சொன்னதை போலவே இருக்கிறது.

உடம்பில் இருக்கும் கார அமில தன்மை கொண்ட திரவங்களின் ஏற்ற இறக்கங்களே நோய்களுக்கு காரணம் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. கேலன் அறிவாளி என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்ததால் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டார்கள்.

மதத்தலைவர்களின் அதிகாரங்கள் சரியாய் ஆரம்பித்த காலத்திற்கு பின்தான் இறந்து போன உடலை வைத்து உடல் கூறுகளை பற்றி (அனாடமி) படிக்க வழி பிறந்தது.

அக்காலத்தில் வைத்தியர்கள் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போதும், அறுவை சிகிச்சை செய்யும் போதும் மிக கடுமையான முறைகளை கையாண்டனர்.

நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டால் சத்தம் வெளியில் கேட்காதவாறு அமைக்கப்பட்ட அறையில், அந்த நோயாளியை படுக்க வைத்து, மருத்துவ மனையின் ஊழியர்கள் ஒன்றாய் சேர்ந்து நோயாளி முண்டி திமிர முடியாமல் இறுக பிடித்துக் கொள்வார்களாம். அதன் பின் மருத்துவர் அறுவை சிகிச்சையை ஆரம்பிப்பாராம்.

1791இல் லண்டன் மருத்துவமனையில் இந்த முறைதான் பின்பற்றபட்டு வந்தது. பல நாடுகளிலும் இதே முறைதான்.

அதன் பிறகு மூலிகையை பயன்படுத்தி முகர செய்து மயக்கமடைய செய்து அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர்.

1591இல் எடின்பர்க் நகரில் கியுபொன் மேக் அயனே என்ற அம்மையார் பிரசவ காலத்தில் வலி தாங்க முடியாமல், எனக்கு வலிக்காமல் இருக்க மருந்து கொடுங்கள் என்று கேட்டாராம்.

ஆனால் மதவெறியர்கள்...... கடவுள் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுத்த தண்டனைதான் வலி. அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் தண்டனை தருவோம் என்று கூறி, அப்பெண்ணை இழுத்து வந்து உயிரோடு புதைத்து விட்டார்களாம்.

பிற்காலத்தில் முதலாம் எலிசபத் அரசி தன் பிரசவத்தின் போது மயக்க மருந்து தாருங்கள் என்று கேட்டாராம். கிரேக்க நாட்டு ராணுவ அறுவை சிகிச்சை நிபுணர் டயோஸ் கார்டிஸ் என்பவர்தான் மயக்க மருந்து என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தினார்கள் என்கிறார்கள்.

1275இல் ரேமான்ட் லல்லியஸ் என்பவர் சலப்பூரிக் ஆசிட்டில் ஆல்கஹாலை கலந்து ஒரு  மருந்து கண்டுபிடித்தார். 

இதனை 1695இல் பாரா செல்சஸ் என்ற சுவிஸ் நாட்டு மருத்துவர் வலிநிவாரணியாக பயன்படுத்தி சிகிச்சை செய்திருக்கிறார். 

1772இல் இங்கிலாந்தை சேர்ந்த ஜோசப் பிரிஷ்டிலே என்பவர் நைட்ரஸ் ஆக்ஷ்சைடு என்ற மயக்க மருந்தை கண்டுபிடித்து பயன்படுத்திருக்கிறார்.


இவர்தான் பிராணவாயு, கரியமில வாயுவை கண்டுபிடித்தவர். இவர் மத துரோகம் செய்ததாக புகார் கூறப்பட்டதால் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து விட்டார்.

1815 இல் ஜியார் சியாவில் பிறந்த கிராம்போர்ட் லாங் என்ற மருத்துவர் தன் 26ஆவது வயதில் அறுவைசிகிச்சைக்கு முதன் முதல் மயக்க மருந்தை உபயோகித்தார்.

ஈதர் மயக்க மருந்தை மூக்கில் முகர வைத்து மயக்கம் பெற வைத்து அதன் பின் அறுவை சிகிச்சை செய்தார். பிரசவத்திற்கும் மயக்க மருந்தை உபயோக்கிய ஆரம்பித்தவர் இவர்தான்.

ரத்தம் இதயத்தில் சுத்தகரிக்கப் பட்டு ரத்த குழாய் மூலம் உடல் முழுவதும் செல்கிறது என்பதை எல்லாம் அக்காலத்தில் யாரும் நம்பவில்லை. ரத்தம் உடலில் தேங்கி இருக்கிறது என்றே நினைத்தனர்.

1628 இல் வில்லியம் ஹார்வி என்ற அறிவியல் மேதை தான் ரத்த ஓட்டம் பற்றியும் அதனால் ஏற்ப்படும் இதய துடிப்பை பற்றியும் உலகிற்கு அறிவித்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூச்ச சுபாவம் கொண்ட ரேனே என்ற பிரஞ்சு மருத்துவர் பெண்களின் மார்பில் காதை வைத்து அவர்களின் இதய துடிப்பை கேட்க மிகவும் கூச்சப்பட்டார். தனது சௌகரியர்த்தாக இவர் கண்டுபிடித்ததுதான் ஸ்டெதாஸ்கோப்.


பிறகு ராண்ட்ஜன் என்பவர் எக்ஸ்ரேயை கண்டுபிடித்தார். 1928இல் ஸ்காட்லாந்தை சேர்ந்த அலக்ஸ்சான்டர் பிளமிங் என்ற மருத்துவர் பென்சிலின் மருந்தை கண்டுபிடித்தார். அது கிரிமி கொல்லியாக செயல்படுவதை அறிந்தார்.


தொடர்ந்து இன்னும் சில மருந்துவர்களும் இதில் தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்டனர். முடிவில் நோய்களுக்கு எதிராக போர்புரிய மனிதனுக்கு பென்சிலின் என்ற ஆயுதம் கிடைத்தது.

இன்று மருத்துவ துறை அபாரமான வளர்ச்சியை பெற்று திகழ்கிறது. கிட்னி, இதயம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு செலலிழந்து போனவர்களும் மாற்று உறுப்புகளை, இறந்து போனவர்களிடம் இருந்து சில மணி நேரங்களுக்குள் எடுத்து பொருத்தி நோயாளிகளின் உயிர்களை காத்து விடுகின்றனர்.

இப்போது செயற்கை ரத்தத்தை உருவாக்கி விட்டோம் என்று அறிவித்துள்ளனர். எதிர் காலத்தில் செயற்கை இதயம், செயற்கை கிட்னி போன்றவைகளும் கிடைக்கலாம்.


அறிவியல் முன்னேறி கொண்டிருந்தாலும் புது புது நோய்களும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. ஆய்வாளர்களும் அதற்க்கான மருந்தினை காணும் முயற்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

ஆனாலும் மருந்துகள் கண்டுபிடிப்பதற்குள் சில ஆயிரம் உயிர்கள் காப்பாற்றபடாமல் போகின்றன.

-மதிவாணன்




Monday, 18 March 2013

வலியில்லாமல் வெற்றியில்லை!!

சின்ன வார்த்தைகளின் தாக்குதல்களால் சுருண்டு விழுந்து விடுகிறோம். சின்ன தோல்வியால் மனம் உடைந்து போகிறோம், 

எதிர்மறையான விமர்சனங்கள் நம்மை காயபடுத்தி விடுகிறது. கோவப்படுத்தி விடுகிறது.  ஏற்பட்டு விடும் அவமானங்கள் நம்மை குறுக வைத்து விடுகிறது.

நேரம் கிடைக்கும் போது நம் உணர்வுகளை எல்லாம் தூர ஒதுக்கி வைத்து விட்டு அமைதியாக உட்கார்ந்து சிந்தித்து பார்த்தால்,  இந்த சம்பவங்களினால் நாம் பாதிக்க பட தேவையில்லை என்பதை உணர்வோம். 

இவையெல்லாம் எல்லா மனிதர்களுக்கும் நேர்கிறது என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரன மனிதர் முதல் சாதித்த மனிதர் வரை எல்லோருமே இது போன்ற பிரச்சனைகளை கடந்துதான் வந்திருக்கிறார்கள். இதை தெளிவாக தெரிந்து கொண்டால் இவற்றினால் நாம் பாதிக்கப் படபோவதில்லை. பாதித்தால் நஷ்டம் நமக்குத்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மனிதர்கள் பலவிதம். எல்லோரும் நம்மை புரிந்து கொள்ள மாட்டார்கள். எல்லோரும் நம்மை தட்டிக் கொடுத்து வளர்த்து விட மாட்டார்கள். 

நமக்கு நன்கு தெரிந்தவர்களே சில சமயம் தூக்கி எரிந்து எரிந்து பேசிவிடும் போது மற்றவர்கள் நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் பிரயோசனம் இல்லை. 

ஒரு முதலாளியாய் உங்களை நினைத்து பாருங்கள்.உங்கள் பணியால் ஒரு தவறு செய்துவிடும் போது உங்களால் அவனை பேசாமல் திட்டாமல் இருக்க முடியுமா? நீங்கள் பிறரிடம் பெரும்தன்மையுடன் நடந்து கொள்கிறீர்களா? 

ஒரு தவறு நடந்துவிடும் போது உங்களால் கோவப்படாமல்  இருக்க இருக்க முடியுமா?

உலகில் அவமானப்படாதவர்கள், தோல்விகள் அடையாதவர்கள் யாரும் இல்லை.

அமிதாபச்சன் சினிமாவில் சான்ஸ் கேட்டு சென்ற போது, இவன் என்ன ஒட்டக சிவிங்கி மாதிரி இருக்கான். இந்த மூஞ்சி எல்லாம் சினிமாவுக்கு சரியாய் வராது என்று திருப்பி அனுப்பினார்களாம்.

அவர் துவண்டு விடவில்லை. நம்மால் நடிகனாக முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அவர் துவண்டு போயிருந்தால் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியாது.

அன்னை தெரஸா தான் பராமரிக்கும் குழந்தைகளின் செலவிற்காக ஒவ்வொரு கடையாக நம்கொடை கேட்டு தட்டினை ஏந்திய போது, அத்தட்டில் எச்சில் துப்பி அவமானப் படுத்தினானாம் ஒரு கடைக்காரன்.

தெரஸா உணர்ச்சி வசப்பட்டு கோவத்தில் கொந்தளிக்க வில்லை. அமைதியாய் அதை துடைத்து விட்டு மீண்டு தட்டி நீட்டினார். கலங்கி போன கடைக்காரன் அதிக பணம் கொடுத்து அனுப்பினானாம்.

மைக்கல் ஜோர்டான் என்பவர் உலகின் மிக சிறந்த கூடை பந்து வீரர். பள்ளிகூடத்தில் அவரை கூடை பந்து விளையாட லாயக்கு இல்லாதவன் என்று டீமில் இருந்து விரட்டி விட்டார்களாம்.

புகழ் பெற்ற அறிவியல் மேதை ஜஸ்டினை இன்று அறியாதவர் யாரும் இல்லை. அவர் மண்டு மக்கு என்று பிராகிரஸ் ரிப்போர்டில் எழுதப்பட்ட குறிப்புகளோடு பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டவர்தான் அவர்.

நோர்மா  என்ற பெண்மணி மாடலாக ஆசைப்பட்டு ஒரு கம்பெனியில்  வாய்ப்பு கேட்டார். கேலியாக சிரித்து போ போய் எங்காவது கிளார்க் வேலையை பாரு. இல்லைன்னா கல்யாணம் செய்துகிட்டு புள்ளை குட்டியை பெத்துக்க என்று சொல்லி அனுப்பி விட்டார்களாம்.

ஆனாலும் மனம் நொந்து போகாத அந்த பெண்மணிதான் மர்லின் மன்றோ என்று புகழ் பெற்றார்.

இங்கே அவமானபடாதவர்கள் காயப்படாதவர்கள்  யாரும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டால் எழுந்து நிற்க வேண்டும் என்ற உத்வேகம் உங்களுக்கு வரும்.

- மதிவாணன்


Sunday, 17 March 2013

மாந்தி S / O சனீஸ்வரன்.




மாந்தி S / O சனீஸ்வரன்.

இது ஒரு உபகிரகம்தான். இருந்தாலும் குத்தூசி போடுறதுல பத்து பாவ கிரகத்திற்கு சமம். இவாளும் பாவ கிரக வரிசையில் வருவதால் 3,6,11 ஐ தவிர எங்கிருந்தாலும் இடைஞ்சல், யாரோடு சேர்ந்தாலும் குடைச்சல். 

இது பெரும்பாலும் ஜோதிடர்கள் மத்தியில் பிரபலம் இல்லாத கிரகம். ஆனால் நல்லா போகும் வாழ்க்கையை செல்லாகாசாக்குவதில் கில்லாடி. 

உம்மருக்கு  என்ன கொடுத்து வச்ச மகராஜான்னு பலனை சொல்லிக்கொண்டிருந்தால், ஜாதகம் பார்க்க வந்த அன்பர் தங்கத்தை தவற விட்ட பொண்ணு தரையை பார்த்து நடப்பதுபோல், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பார். 

காரணம் ... முள்ளு மேல உட்கார்ந்த மாதிரி ஆள் சொல்ல முடியாத துயரத்தில் இருக்கும் பொது என்னத்தை சொல்ல.

ஒன்பது கிரகத்திற்கு இருப்பது போல் இதற்கென தசாபுத்திகள் கிடையாது. ஒரு பாவத்திற்கு அதிபதியாக வருகிறமாதிரி ஆட்சி வீடுகள் கிடையாது. ஆனால் இருக்கும் இடத்தை வைத்து, சேரும் கிரகத்தை வைத்து பலனை தரும்.


ஆனால் நடைமுறையில் மாந்திக்கும் ஆட்சிவீடுகள் பற்றிய குறிப்புகள் உண்டு.

என்னவோ?

சொல்றேன். கும்பம் இருக்குல்ல கும்பம் அது ஆட்சி வீடு. தனுசு உச்ச வீடு. மிதுனம் நீச்ச வீடு.

உண்மையாகவா?

அப்பா சொத்துல பிள்ளைக்கு பங்குண்டு என்ற அடிப்படையில் சனியோட பிள்ளைக்கு கும்பம் ஆட்ச்சி வீடா வந்துச்சோ என்னமோ.உறுதிபடுத்த முடியாது.


அதனால் ஆட்சி வீடுகள் உண்டு என்பதை உறுதிபடுத்த முடியாததால் ஆரம்ப நிலையிலேயே இதை தள்ளுபடி செய்கிறேன்.

பழைய கிரந்த்தங்களை தேடி தேடி அலசி பார்த்தால் ஒரு சில இடங்களில் மட்டுமே மாந்தி பற்றிய குறிப்பு தென்படுகிறது. அதுவும் முழுமையாக இல்லை.

யோசித்து பார்த்தால் ஒரு விஷயம் புலனாகிறது. வழிப்பாட்டு தளங்களில் நவகிரங்களுக்கு இடமளித்து வணங்குதலுக்கு உரியதாய் ஏற்றுக் கொண்ட நம் முன்னோர்கள்.  உப கிரகங்களை அந்த வரிசையில் சேர்க்க வில்லை.

ஏன்? பெரிய அளவில் மாற்றம் எதையும் தந்து விடாது என்ற கோணத்திலா?

ஒரு வகையில் உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிலும், கேரளா, ஆந்திரா, இலங்கையிலும் கூட மாந்தியை குறிப்பிடாத ஜாதக குறிப்புகள் இல்லை.


பொதுவாக மாந்தியை கொண்டு அறியப்படும் பலன்கள் பின் வருவன.

திடீர் கண்டங்கள், தீர்க்க முடியாத வியாதிகள், மரணம் இவற்றை அறிய முடியும்.


அம்சத்தில் மாந்தி இருக்கும் ராசியை, பிறப்பு ராசி கட்டத்தில் இருப்பதாக வைத்து கொண்டு, அதற்கு திரிகோண ராசியில் கோச்சார சனி வரும் காலம் ஜாதகருக்கு கண்டங்கள் வரத்துவங்கும்.

அந்த ஜாதகருக்கு எட்டுக்குடையவன் திசை நடந்தால் திடீர் கண்டம், விபத்து, நஷ்டம், திருட்டு, வழிப்பறி, தீ விபத்து, போலிஸ் கேஸ் இதில் ஏதாவது ஓன்று நடப்பில் வரும்.

மாந்தி இருக்கும் ராசிக்கு திரிகோணத்தில் கோச்சார சனி வரும் காலம் ஆறுக்குடையவன் திசை நடப்பில் இருந்தால் தீராத வியாதி, சண்டை, பற்களுக்கு இடையே நாக்கு இருப்பது போல், பிரச்சனைகளுக்கு இடையே வாழும் சூழல், அவமானங்கள் அரங்கேறும்.

மாரக திசை நடப்பில் இருந்தால் மாரகம் செய்யும் கடமை மாந்திக்கே உண்டு.





Saturday, 16 March 2013

பரதேசி திரை விமர்சனம்


வெள்ளையர்கள் ஆட்சியில் நம்மக்கள் விடுதலைக்காக போராடியது பற்றி நமக்கு தெரியும். அந்த காலகட்டத்தில் அன்றாட வாழ்க்கை நடத்தவே போராடிய நம் பாட்டன்கள் பற்றியும், அவர்கள் அறியாமையை, ஏழ்மையை பயன்படுத்தி எப்படி எல்லாம் மனித வள சுரண்டல்கள் நடந்தன என்பதை பற்றியும் கண்ணீர் கலந்த காவியத்தை படம் பிடித்து காட்டிருக்கிறார் பாலா.

1939 ல் சாலூர் என்ற தமிழக கிராமம்தான் கதைகளத்தின் துவக்கம். முன்பகுதியில் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் மனோநிலை, வாழ்க்கை சூழல், கலாச்சாரம், பழக்க வழக்கங்களை பற்றி தெளிந்த நீரோடையாய் பேசுகிறது படம். 

மிக எதார்த்தமான வசனங்கள்.  

அந்த கிராமத்தில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் முரசு அடித்து அறிவிக்கும் பாத்திரம் தான் அதர்வாவுக்கு. நான் தான் ராசா வந்திருக்கேன் என்று  கிராமத்து மக்களிடம் தன்னை அறிமுகபடுத்தி கொண்டாலும், ஓட்டுபொறுக்கி என்றுதான் அதர்வாவை அழைக்கிறது அந்த கிராமமே. 

ஊர் பெண்களிடம் வயது வித்தியாசம் இல்லாமல் முறை வைத்து அழைப்பதும், எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா வேலைகளையும் செய்து கொடுத்து விட்டு அந்த கிராமத்து மக்கள் தரும் அரிசியையும், பழைய சோற்றையும் கூலியாக  பெரும் பரதேசி வேடத்தில் வாழ்ந்திருக்கிறார் அதர்வா.

அதே கிராமத்தில் அங்கம்மாவாக வரும் துடுக்கு பெண் வேடம் வேதிகாவுக்கு.  அதர்வாவுக்கும், வேதியாவுக்கும் இடையில் காதல் வருவதும், வெளியில் தெரிந்து,  வீட்டுக்கு வீடு பொருக்கி திங்கிற நாயிக்கு என் பொண்ணு கேட்குதா என்று வேதிகாவின் அம்மா பஞ்சாயத்து கூட்டுவதும் எதார்த்தத்தின் உச்சம்.

அதர்வாவின் பாட்டியாக வந்திருக்கும் கூன கிழவி என்னமாய் பிரமாதபடுத்துகிறார்.  வேதிகாவுடன் காதல் வந்ததும், கனவு கண்டு புலம்பும் அதர்வாவிடம், ’எனக்கு கூட நீங்க ரெண்டு பேரும் பிச்சை எடுக்குற மாதிரி கனவு வந்தது’ என்று சொல்லுகிற காட்சியில் தியேட்டரே அதிருது. 

தன்ஷிகாவுக்கு நல்ல அழுத்தமான பாத்திரம். ஒரு கை குழந்தைக்கு தாயாக வரும் விதவை பெண் வேடம்.  அடாடா.

ஏழை மக்களின் வாழ்க்கையில் விளையாட விதி கங்காணி உருவத்தில் வருகிறது.

இங்கன கிடந்து கஞ்சிக்கு படாத பாடு படாதிங்க.  வேலைக்கு தக்கன கூலி. தங்குறதுக்கு வீடு, கூதலுக்கு கம்பளி, கறிச்சோறு, ஞாயிற்று கிழமையானா விடுப்பு என்று ஆசை வார்த்தை காட்டுவதும், அதை நம்பி அந்த கிராமத்து அப்பாவி மக்கள் பஞ்சம் பிழைக்க போவதும், அங்கு நடக்கப் போகும் விபரீதத்தை  வைரமுத்து ரத்தத்தால் எழுதியிருக்கிறார். 

செங்காடே ......... என துவங்கும் பாடலில் கங்காணி பேச்ச கேட்டு சனம் போகுதே, நண்டுகளை கூட்டிக்கொண்டு நரி போகுதே என்ற வரிகள் அங்கு நடக்க போகும் விபரீதத்தை சுளீரென்று உணர்த்துகிறது.  

48 நாட்களாய் நடந்து டீ எஸ்டேட்டுக்கு போகும் அந்த பயணம்,  அதனைத் தொடர்ந்து வரும் அடுத்தடுத்த ஒவ்வொரு நிமிடமும் நம்மை உலுக்கும் காட்சிகள்.

சரியான உணவு இல்லாமல், தங்குமிட வசதிகள் இல்லாமல் சங்கு ஊதினா வேலைக்கு புறப்பட்டு போகும் அடிமைகளாக நடத்தப்படும் கொடுமை கல் நெஞ்சையும் கரைய செய்யும்.

ஒரு வருட ஒப்பந்தம் முடிந்துவிட்ட நிலையில், ஊருக்கு போகலாம் என்று அப்பாவி  ஜனங்கள் சம்பளப்பணத்திற்காக கையேந்தி நிற்பதும், சட்டி பானை வாங்கியது,  கம்பளி,  சாப்பாட்டு செலவு, மருத்துவ செலவு, மந்திரவாதி தாயத்து கட்டியது    என பணத்தை எடுத்துக் கொண்டு, மிச்ச  கடனைத் தீர்க்க இன்னும் நீ பல வருஷம் வேலை செய்யணும்’னு அப்பாவி அடிமைகளிடம் கங்காணி செய்கிற சூழ்ச்சி கொடுமையின் உச்ச கட்டம்.

யாருமே எதிர்பாராத கிளைமாக்ஸ்.  சத்தியமா சொல்றேன் எனக்கு அழுகையே வந்துட்டு. 

பாடலில் மட்டும் அல்ல, பின்னணி இசையிலும் மிரட்டுகிறார் ஜி வி பிரகாஷ். 

வெள்ளைக்காரனை தவிர வெள்ளை சட்டை போட்டது கங்காணி தான் படத்தில். 

கிராமத்து பாத்திரங்களாக வரும் அத்தனை முகங்களும் இதுவரை தமிழ் சினிமா அறியாத முகங்கள். ஆனாலும்   வெகுளியான பாத்திரத்தில் வெளுத்து வாங்குகிறார்கள். 

கொத்தடிமைகள் வாழ்வில் விளக்கேற்ற வந்தவர்கள் போல வரும் டாக்டரும் அவர் மனைவியும் எப்படி சத்தமில்லாமல் மதம் மாற்ற முயல்கிறார்கள் என்பதை தெளிவாய் சொல்கிறது படம்.

இந்த படத்தில்  சில குறைகள் இருக்கிறது. ஆனால் அதை பற்றி எழுத மனம் இல்லை. 

வெல்டன் பாலா. தமிழ் சினிமாவை  உலக தரத்திற்கு கொண்டு சென்றதற்கு. விருது நிச்சயம். 

Monday, 11 March 2013

காயத்திரி மந்திர மகிமை!!



விஷ்வாமித்திரர் ஆரம்பத்தில் கௌசிகன் என்னும் பெயருடைய அரசனாக இருந்தார். 

அப்போது வசிட்ட முனிவருடைய தவ வலிமையை கண்டு தானும் அவ்வாறு பிரம்மா ரிஷியாக வேண்டும் என்று மனதில் எண்ணம் கொண்டார். 

தனக்கென்று பெரிய நாடு, அணி, தேர், குதிரை ஆட்பெரும் படை போன்றவைகளை கொண்ட கோமகன் கௌசிகன். 

அத்தகைய மாமன்னன்  கட்டிற்க்குள் காவி கட்டி கமண்டலம் ஏந்தி, ருத்ராச்ச மணிமாலைகள் அணிந்து, அரச போகமும் அரண்மனை வாழ்வும் துறந்து தவம் மேற்கொண்டார் என்பது வரலாறு.

பிரம்ம பலத்தை பெறுவதற்காக கடுமையான தவத்தை மேற்கொண்டார். அதுசமயம் சுரியவம்சத்து அரசனான திரிசங்கு மனித உடலுடன் சொர்க்கலோகம் போக வேண்டும் என்று வசிட்ட முனிவரிடம்  வேண்டினான். 

வசிட்ட முனிவரோ அது முடியாது என்று மறுத்தார். அந்தனை கேள்வியுற்ற விஷ்வாமித்திரர் தனது தவ வலிமையால் திரிசங்குவை தேவலோகம் நோக்கி அனுப்பினார்.

திரிசங்கு மனித உடலுடன் மேலே வருவதை கண்ட இந்திரன் தனது தவ வல்லமையால் திரிசங்குவை கிழே போக செய்தான். கெளசிகருக்கு கோவம் வந்தது.  திரிசங்குவை அந்தரத்தில் நிற்க வைத்தார். 

சிரிசங்குவிற்கு தனியாக சொர்க்கம் அமைத்து கொடுத்தார். அதுதான் திரிசங்கு சொர்க்கமானது.

கௌசிகர் மீண்டும் தவத்தை தொடங்கினார். அவரது உக்கிரமான தவத்தை கண்டு தேவர்களும், அருந்தவசியர்களும், அஞ்சினர். முடிவில் வசிட்டர் விசுவாமித்திரரை அமைதிபடுத்த பிரம்மரிஷி விசுவாமித்திரரே என்று நேருக்கு நேர் அழைத்தார்.

இப்பேற்பட்ட தவவலிமையுள்ள விசுவாமித்திர மகரிஷியால் நமக்கு கிடைத்த ஞான பொக்கிஷம்தான் காயத்திரி மஹா மந்திரம்.


அஸ்திரங்களுக்குள்  வலிமைபெற்றது பிரம்மாஸ்திரம். அந்த பிரம்மாஸ்திரம் என்னும் இணையற்ற அஸ்திரங்களுக்கு காயத்ரி மந்திரமே ஆதாரம். இதனை விஷுவாமித்திரரே பிரம் தேஜோபலம் என்று  வாய் மொழிந்தார்.

இந்த காயத்திரி மந்திரத்தின் அதிதேவதை ஸ்ரீ காயத்திரி தேவி. அவரவர் சக்தி நேரம் இவைகளுக்கு ஏற்றவாறு 1008-108-28 முறை என்ற எண்ணிக்கையில் காயத்ரி மத்திரத்தை ஜெபம் செய்யலாம்.

மனதுக்குலேயே ஒரு நிலை உணர்வோடு மனனம் செய்வது நல்லது.

மனதுக்குள் ஆழ்நிலை தியானத்தில் முணுமுணுத்து ஜெபிப்பது நல்லது.

பிறர் காதில் விழும்படி உயர்ந்த குரலில் உச்சரித்து ஜெபிப்பதும்.

உயர்ந்த குரலில் ஜெபிப்பதை விட முணுமுணுத்து ஜெபிப்பதை விட மனதை ஒரு நிலைப்படுத்தி ஜெபிப்பது ஆயிரம் மடங்கு உயர்ந்தது.


ஓம் பூர்புவஸ்ஸுவ
தத்ஸவதுர்வரெனியம் 
பர்க்கோ தேவஸ்ய தீமஹி 
தியோ யோ ந 
பிரசோதயாத் 

Friday, 8 March 2013

வீரசிங்கம்-நேதாஜி -2


வீரசிங்கம்-நேதாஜி  முதல் பகுதி 

புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஒருவருக்கு மட்டுமே இடம் இருக்கிறது என்று ஜப்பான் அதிகாரிகள் கூறினார்கள். விமானத்தில் போவதா வேண்டாமா என்று ஒரு கணம் நேதாஜி யோசித்தார். 

சைகோன் நகரை எந்த நிமிடமும் பிரிட்டீஷ் அமெரிக்க படைகள் கைப்பற்றலாம்  என்ற நிலை இருந்தது. அந்த படைகளிடம் சிக்கினால் தன்னை கைது செய்வது நிச்சயம். 

போர் கைதியாக பிடிபடுவதை நேதாஜி விரும்பவில்லை. எனவே விமானத்தில் போவதே மேல் என நினைத்தார். விமானத்தில் ஏறி அமர்ந்தார்.

கடைசி நேரத்தில் இன்னொருவர் வரலாம் என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள்.

எனவே ஹபீப் -வுர் - ரகிமான், நேதாஜி அருகில் போய் அமர்ந்தார். விமான நிலையத்தில் கூடி இருந்தவர்களி பார்த்து நேதாஜி ஜெய் ஹிந்த் என்று கூறினார். விமானம் புறப்பட்டது.

அது எந்த இடத்திற்கு போகிறது என்று அறிவிக்க படவில்லை. நேதாஜியின் கடைசி விமான பயணம் அதுவாக இருக்கும் என்றும் யாரும் நினைக்கவில்லை.

ஆகஸ்ட் 19ம் தேதி ஜப்பான் ரேடியோ நேதாஜி இறந்து விட்டார் என்ற திடுக்கிடும் செய்தியை அறிவித்தது.

ஜப்பான் ரேடியோ கூறியதாவது.

சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தின் தலைவராக நேதாஜி 1945 ஆகஸ்ட் 16ம் தேதி ஜப்பானிய அரசுடன் பேச்சு நடத்த விமானத்தில் புறப்பட்டார்.

18ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பார்மோசா தீவில் உள்ள தைஹோக்கு விமான நிலையத்தில் அவர் விமானம் விபத்துக்குள்ளானது.

அதில் அவர் படுகாயம் அடைந்தார். ஜப்பானில் ஒரு மருத்துவ மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமால் அன்று நள்ளிரவில் அவர் மரணம் அடைந்தார்.

அவர்தான் பயணம் செய்த ஜெனரல் சுனாமாசா என்ற ஜப்பானிய அதிகாரி விபத்து ஏற்பட்ட உடனேயே மரணம் அடைந்தார்.

நேதாஜியின்   உதவி தளபதி ஹபீப் வுர் ரகிமானும் மற்றும் நான்கு ஜப்பானிய அதிகாரிகளும் பலத்த காயம் அடைந்தனர் இவ்வாறு ஜப்பனிய ரேடியோ அறிவித்தது.

இந்த செய்தி இந்திய மக்களை நிலை குலைய செய்ததது. நேதாஜி இறந்து விட்டார் என்பதை பலர் நம்பவில்லை.

நேதாஜி இறந்து  விட்டார் என்றால் அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்க வில்லை என்று கேட்டனர்.

ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து படுகாயம் அடைந்த ஹபீப் வுர் ரகிமான் நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன் என்று கூறினார்.

ஆயினும் முத்துராமலிங்க தேவர் உட்பட பல தலைவர்கள் நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்றே கூறி வந்தானர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1956 இல் நேதாஜி பற்றிய உண்மைகளை கண்டறிய மூவர் கொண்ட ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

அந்த கமிட்டி டோக்கியோ, சைகோன், பாங்காக் உட்பட பல இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தியது.

இறுதியில் கமிட்டியின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை. டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவர் அஸ்த்திதான் என்று அறிக்கை கொடுத்தார்.

மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் ( நேதாஜியின் அண்ணன் ) இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். 1967 இல் 350 எம். பி க்கள் கையெழுத்திட்டு நேதாஜி பற்றி மீண்டும் விசாரணை நடத்தும் படி ஜனாதிபதியிடன்  மனு கொடுத்தார்.

அதன் படி ஓய்வு பெற்ற பஞ்சாப் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜி. டி கொசலாவை  கொண்ட ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

அவர் ஜப்பான் தைவான் உட்பட பல நாடுகளுக்கு சென்று விசாரணை நடத்தி விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார்.

Thursday, 7 March 2013

திரைக்கதை எழுதுவது எப்படி?


சினிமா ஒரு கனவு தேசம். சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற வெறி, ஆவல், லட்சியம் கொண்ட ஆண் பெண் கூட்டம் எண்ணில் அடங்காது.

ஒரு பாரதிராஜா வெற்றி பெற்றால் 1000 பாரதிராஜாக்கள், சரியான வாய்ப்புகள் இல்லாமல் போராடுகிறார்கள். அல்லது போராடி பார்த்து விட்டு பின் வாங்கி போகிறார்கள். 

நடிப்பு, தொழில் நுட்பம், இசை, இயக்குனர் என்று எத்தனையோ பிரிவுகளில் இந்த தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

இருப்பினும் இன்று,  முன்பு மாதிரி இல்லை. இப்போது இளம் வயதில் வாய்ப்புகள் பெற்று ஜொலிப்பவர்கள்  ஏராளம்.

உங்கள் திறமைகளை உரசி பார்க்க என்று சொல்லவதை விட, இன்னும் மெருகேற்றி கொள்ள சின்ன சின்ன டிப்ஸ் கொடுக்கலாம் என்ற என்ற எண்ணத்தில் இதை எழுகிறேன். 

திரைக்கதை எழுதுவது எப்படி என்பதுதான் தலைப்பு.

இந்த தலைப்பை நான் தேர்வு செய்த காரணம் உங்களுக்கே புரியும். ஒரு படத்தின் வெற்றி தோல்வி, அதில் நடிக்கும் நடிகர் நடிகையை விட, நல்ல கதையும், உயிரோட்டமுள்ள திரைக்கதையும்தான் காரணம். 

மினிமம் கேரண்டி என்று சொல்லக்கூடிய நடிகர்கள் நடித்த பல படங்கள் தோல்வியை தழுவுகிறது. யார் என்றே தெரியாத புதுமுகங்கள் நடித்த படம் சக்கை போடு போடுகிறது. 

அதுமட்டும் அல்ல,  நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் தெளிவான திரைகதை இல்லாமல் போனால், சொதப்பிட்டான் என்பார்கள். நல்ல நடிகர்கள், பெரிய தொழில் நுட்ப கலைஞர்கள் இருத்தும் இந்நிலை வந்து விடும்.

அதே சமயம் ஒரு வரியில் சொல்லிவிட்டு போகும் ஒரு செய்தியை இரண்டரை மணிநேர சினிமாவாக இருக்கையை விட்டு எழும்ப விடாமல் பார்க்க வைப்பவர்களும் உண்டு. அதற்கு தெளிந்த நீரோடைபோல் அமைந்த திரைக்கதைதான் காரணம்.

ஒரு முழு நீல திரைப்படத்தை எடுப்பதற்குத்தான் திறமை வேண்டும் என்பதல்ல. பத்து வினாடியில் வந்து போகும் சிறு விளம்பரம் படத்திற்கு கூட திறமை வேண்டும்.

சொல்லப்போகும் செய்தி, அதை சொல்லப்போகும் விதம், அதை கண்ணெதிரே காட்சியாக்கும் கதாபாத்திரம்,அந்த கதாபாத்திரம்  பேசும் வசனங்கள், அல்லது வெளிப்படுத்தும் உணர்வுகள், சுற்றுபுறம் எல்லாமே அந்த பத்து வினாடிக்குள் முடிந்து போக வேண்டும்.

அந்த பத்து வினாடிக்குள், அதை காண்போரை சுண்டி இழுக்க வேண்டும், சிந்திக்க வைக்க வேண்டும். அந்த நுகர்வு பொருளை வாங்க தூண்ட வேண்டும்.

அப்படியானால் இதற்கு எவ்வளவு திறமை வேண்டும் என்பதை  சொல்லி தெரிய  வேண்டியதில்லை.

சரி.. நாம் விஷயத்திற்கு வருவோம்.

திரைக்கதை எழுதுவது என்பது ஒரு சினிமாவின் முழு வடிவம். திரைக்கதை சொல்வது என்று ஓன்று இருக்கிறது.

அது எப்படி?

சார்... காலை நேரம்.  முற்றிலும் இருள் விலகவில்லை. கிழ் வானை காட்டுகிறோம், இளம் ஆரஞ்சு நிறத்தில் மேகங்கள் அடர்ந்த வானம் தெரிகிறது. சூரியன் உதயமாகி கொண்டிருக்கிறான்.

அந்த நேரத்தில் கீச் கீச் என்று பறவைகள் சப்தம் கேட்டுகொண்டிருக்கிறது. சாலைகளில் வாகங்கள் இரைச்சலோடு போய் கொண்டிருக்கிறது. கட் பன்றோம்.

ஒரு மிடில் கிளாஸ் பேமலி வீடு. அது ஒரு ஓட்டு வீடு.  வீட்டின் வாசலில் இரண்டு ஹிரோ ஹோண்டா பைக் நிற்குது. அதுக்கு பக்கத்திலே ஒரு சைக்கிள். கொஞ்சம் தட்டு முட்டு பொருட்கள், ஒரு பிளாஸ்டிக் வாலி எல்லாம் அந்த சைக்கிளுக்கு பக்கத்திலே இருக்கு.

மெல்ல வாசலை கடந்து உள்புறம் கேமரா போகுது. பளீர்ன்னு முழு வெளிச்சம் இல்லை. கொஞ்சம் இருள் இருக்கு.

கௌசல்யா சுப்பிரஜா   ராம பூர்வ..... சுப்பிரபாதம் பட்டு சத்தம் மெல்லிசா கேட்குது. அப்ப அந்த வீட்டின் பெட்ரூமை காட்டுறோம். ஒரு பெட்டில் ஒருத்தன் படுத்திருக்கான். அவன்தான் நம்ம கதாநாயகன்.

இப்படி கதையை விவரித்து சொல்வதுதான் திரைக்கதை சொல்வது. கிட்டத்தட்ட திரைக்கதை எழுதுவதும் இப்படித்தான். என்ன... அதை வார்த்தைகளால் சொல்கிறோம். எழுதுவது என்பது பேப்பரில் இருக்கும்.

இப்ப நான் ஒன்னரை நிமிடத்தில் முடியப்போகும் சின்ன கதைக்கு திரைக்கதை எழுதப் போறேன்.

ரெடி டேக்.

லொக்கேஷன் - சென்னை - அவுட்டோர்
பகல் வெளிச்சம்
சம்பவ இடம் மழலையர் பள்ளி.
கதாபாத்திரங்கள் - மூன்று அல்லது நான்கு  வயது இளம்  குழந்தைகள் 30 பேர்.  ஆசிரியர்  தோற்றத்தில் மூன்று நடுத்தர வயது பெண்கள்.


சீன் -1

பரபரப்பு இல்லாத பிரதான சாலை. மரங்கள் அடர்ந்த ஒரு கட்டிடத்தின் லாங்க் ஷாட்.

இப்போது கேமரா ஜுமாகி அந்த கட்டிடத்தின் பிரம்மாண்ட தோற்றத்தை காட்டுகிறது. அதில் ஆதித்தியா மழலையர் பள்ளி என்ற பெயர் பலகை தெரிகிறது.

சீன் -2

வகுப்பறைகள் இருக்கும் நீளமான அந்த பள்ளி வராண்டாவில் கேமரா நகர்கிறது.

வரிசையாக வகுப்பு அறைகள். முதல் வகுப்பு அறையை தாண்டும் போது ஆசிரியை பாடம் சொல்லி கொடுக்கும் குரல் ஒலிக்கிறது.

எ பார் ஆப்பிள், பி பார் பால், சி பார் கேட்.....!!

அடுத்த வகுப்பு அறையை கேமரா  கடக்கும் போது, வேறு ஒரு பெண் ஆசிரியை பாடம் நடத்தும் குரல் கேட்கிறது.


ஒன்

( ஒன் -  குழந்தைகள் கோரஸ் குரல் )

டூ

( டூ - குழந்தைகள் கோரஸ் குரல் )

த்திரி

( த்திரி- குழந்தைகள் கோரஸ் குரல் )

போர்

( போர்- குழந்தைகள் கோரஸ் குரல் )


அந்த நேரம், புடவை கட்டிய  இரு பெண் ஆசிரியைகள் கையில் பாலர் பள்ளி புத்தகம் வைத்து கொண்டு நடந்து வருகிறார்கள். அப்போது இருவரில் ஒரு ஆசிரியை, அருகில் வரும் ஆசிரியையை பார்த்து.....

விஸ்வருபம் பார்த்துட்டிங்களா என்கிறார்.

இம் ...பிரமாதமா இருக்கு... என்ற பதில் குரல் கொஞ்சம் தூரத்தில் கேட்கிறது.

சீன் -3

இடம் - வகுப்பறை, சுவற்றில் மழலையர் பள்ளிகளில் பயன் படுத்தும் போஸ்டர்கள் தொங்குகிறது.

இப்போது ஒரு வகுப்பறை. மாணவ மாணவிகள் தரையில் மேல் போடப்பட்ட பலகையின் மேல் அமர்ந்திருக்கிறார்கள்.

குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயலை செய்து கொண்டிருக்கிறது. ஒரு குழந்தை புத்தகத்தை புரட்டி கொண்டிருக்கிறது, ஒரு குழந்தை படம் வரைந்து கொண்டிருக்கிறது.

சில  குழந்தைகள் ஆசிரியர் திசை நோக்கி இல்லாமல் வேறு வேறு திசைகளை பார்த்தபடி அமர்ந்திருக்கிறது.


அப்போது ஆசிரியை தனக்கு முன்னாள் இருக்கும் மேஜையின் முன்னால் வந்து குழந்தைகளை நோக்கி சொல்கிறார்.

செல்லங்களா... இன்னைக்கு அன்னையர் தினம். அன்னையர் தினம்னா.. அம்மாவுக்கு மதிப்பு அளிக்கும் நாள். 

இப்போ நான் ஒவ்வொருத்தரா   கூப்பிடுவேன். இங்கே வந்து உங்க அம்மாவை பத்தி சொல்லணும் சரியா?

என்று சொன்னவர் சாந்தினி... நீங்க வாங்க முதல்ல.  என்கிறார்.


அந்த குழந்தை எழுந்து ஆசிரியருக்கு முன்னால் வருகிறது. அந்த குழந்தையை தூக்கி மேஜையின் மேல் நிற்க வைக்கிறார்.

அது தன் இரு கைகளால் தன் மினிஸ்கர்ட்டை பிடித்தபடி நிற்கிறது.  விலகி இருந்த குழந்தையின் சட்டையை சரிசெய்த படி ஆசிரியை அந்த குழந்தையிடம் கேட்கிறார்.

உங்க மம்மியை பத்தி சொல்லுங்க.

குழந்தை பதில் சொல்ல தெரியாமல் நிற்கிறது.

மீண்டும் கெஞ்சலான குரலில்... சாந்தினியை அம்மா என்ன சொல்வாங்க? 

அந்த குழந்தை சற்று தயங்கி சொல்கிறது...  தங்கபொண்ணுன்னு சொல்வாங்க.

அப்பறம் என்ன சொல்வாங்க?

செல்லம்ன்னு சொல்வாங்க. 

அப்பறம்...

இம்.. பதில் சொல்லாமல் அந்த குழந்தை நிற்க, தரையில் இறக்கி விடுகிறார். அந்த குழந்தை போய் தன் இடத்தில் போய் அமர்ந்ததும், காவியா... நீங்க வாங்க.


காவியா குழந்தை முன்னால் வந்ததும், மேஜையின் மேல் தூக்கி நிற்க வைக்கிறார். அந்த குழந்தை தன் இரு கைகளையும் கட்டி கொண்டு நிற்கிறது.

ரிலாக்ஸ்... குழந்தையின் கைகளை பிரித்து இயல்பாக விடுகிறார்.

உங்க அம்மாவை பத்தி சொல்லுங்க.

எங்க அம்மா நிறைய சாக்லேட் வாங்கி தருவாங்க.

வேற..

நரி கதை சொல்லுவாங்க. 

அடடா அப்பறம்...

ஸ்கூல் பாடம் எல்லாம் சொல்லி தருவாங்க.


வெரிகுட் 

அந்த குழந்தையை இறக்கி விடுகிறார். அந்த குழந்தை தன் இடத்தில் போய் அமர்கிறது.

சுபா.. நீங்க வாங்க.

சுபா அருகில் வந்ததும்,  சுபாவை மேஜை மேல் தூக்கி நிற்க வைக்கிறார்.

அந்த குழந்தை கன்னத்தை சொரிந்து கொள்கிறது.

அப்போது உங்க அம்மாவை பத்தி சொல்லுங்க என்கிறார் ஆசிரியை.

என் அம்மா என் வயத்துக்குள்ளே  இருக்காங்க. என்று தன் வயிற்றை  காட்டுகிறது.

அச்சச்சோ... சுபா கண்ணு வயத்துக்குள்ளேயா அம்மா இருக்காங்க.

ஆமாம்... நான்... நான்... பிறந்த உடனே எங்க அம்மாவை தூக்கி முழுங்கிட்டேனாம். பாட்டி சொன்னாங்க.

ஆசிரியை கண்கள் கலங்குகிறது.


அவ்வளவுதான் கதை. இது உங்க மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துது. இப்படி உணர்வு பூர்வமா கதைக்களம் நகர்ந்தால் படம் பார்ப்பவரின் மனதை நம் வசப்படுத்தலாம்.

சரி.. இது இத்துடன் இருக்கட்டும். வேறு ஒரு விளக்கத்தோடு பின் சந்திப்போம்.







குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...