ads

Monday, 9 April 2012

இலங்கை - சீண்டி பார்க்கும் சின்ன நாடு

வடக்குப் பகுதியில் ராணுவத்தை வெளியேற்றி இந்தியாவுக்கா அனுப்ப முடியும்? ராஜபட்ச கேள்வி

தினமணி செய்தி. 

 
உலக நாடுகளை எல்லாம் உற்று நோக்க வைத்த இந்தியா. 

வளரும் நாடுகள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா. 

வல்றசுகளை எல்லாம் வாய் பிளக்க வைத்த இந்தியா.

ஆசிய பிராந்தியத்தில் அசைக்க முடியாத சக்தியாக  இருக்கும் இந்தியா. 

அணு ஆயுத  வல்லரசான இந்தியா.

குட்டி இலங்கையிடம் குட்டு வாங்கி கொண்டிருக்கிது.   சீண்டி பார்க்கும் சின்ன நாட்டிடம் தன் கடுத்த முகத்தை கூட காட்டாமல் இருப்பதற்கு என்ன காரணம்.

நாட்டு பிரச்சனையும், வீட்டு பிரச்சனையும்  ஓன்று தான் என்று உணராத மத்திய அரசுதான் அதற்கு காரணம்.

வீட்டுக்குள் ஒரு பிரச்சனை எழுந்தால், அது உடனடியாக களைய பட வேண்டும்.  வேற்றுமைகள் விளக்க பட வேண்டும்.  புரிந்துணர்வை அதிகபடுத்தி மனம் விட்டு பேசி தீர்க்க வேண்டும். 

நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனையும் அப்படிதான்.  இந்திய மீன்வர்கள் தாக்கப்படும் விஷயத்தில்  இதுவரை மவுன சாமியாராக இருக்கிறது மத்திய அரசு.

தொழில் நுட்பத்தில்,  தகவல் தொடர்பில்,  அறிவியல் முன்னேற்றத்தில் அமெரிக்காவிடம்  போட்டி போடும் இந்தியா,  தன் நாட்டு மக்கள்  விஷயத்தில் அமெரிக்கா  காட்டும் அக்கறையையும் கவனிக்க வேண்டும்..

அமெரிக்க நாயை சுட்டால் கூட கொந்தளிக்கும் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. 

மீனவர்கள் பிரச்சனை இன்று நேற்று ஏற்பட்டதல்ல.  காலம் காலமாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  கடலுக்கு செல்லும் மீனவர்கள்  தொடர்ந்து தாக்கபடுகிறார்கள்.  

அவர்கள் உடமைகள் பறிபோகிறது. உயிர்  இழப்புகள் இருந்து கொண்டே இருக்கிறது.  

இதுவரை ஆக்கபூர்வமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? 

இன்னும்  எத்தனை  ஆயிரம்  பேர்  இறந்தால் மத்திய அரசு கண்  விழிக்கும்.  

எத்தனை கோடி பொருள் சேதம் ஏற்பட்டால் புத்தி  வரும். அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். 

ஆசிய பிராந்தியத்தில் அச்சுறுத்தும் நாடாக இந்தியா இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரியண்ணனாக இருங்கள் என்றும் சொல்லவில்லை. 

ஆனால் இந்தியா விஷயத்தில் மூக்கை நுழைத்தால் விளைவு பெரிசாக இருக்கும் என்றாவது உணர வைத்திருக்க வேண்டாமா?

குறைந்த பச்சம் இந்திய கப்பற்படையின் குட்டி கப்பல்களை கொண்டு வந்து நிறுத்தி இருந்தால்,  தாக்க படுவது தொடர்ந்தால்,  தக்க பதிலடி கொடுப்போம் என்று சொல்லி இருந்தால்,  வாலை சுருட்டி கொண்டு வழிக்கு வந்திருக்கும் இலங்கை. 

செய்தார்களா இல்லை.  எல்லை  தாண்டி போகிறார்கள் என்று நம்மையே  குற்றம் சொன்னது மத்திய அரசு.

இந்தியாவின் மெத்தன போக்கை தெரிந்து கொண்ட இலங்கை,  இந்தியா முகத்தில் கறியை  பூசுகிறது.

தற்சமயம் முன் வைக்கப்பட்ட ஜெனிவா ஒப்பந்தத்திற்கு பிறகு  இலங்கையின் முகம் முற்றிலும் மாறிவிட்டது.  இந்தியாவை எரிச்சலூட்டும் நடவடிக்கையில் இறங்கி விட்டது.

ஆட்சி கட்டிலில் இருக்கும் அதிமேதாவிகள் இதை அறிந்து கொண்டார்களா இல்லையா என்பது புரியவில்லை.

இன்று இலங்கையின் போக்கு வரத்தில் இந்தியாவின் பங்கு முக்கிய இடம் பெறுகிறது.  சாலைகளில் ஓடும் வாகனங்களில்   இந்திய தயாரிப்புகள் தான் அதிகம்.

இதற்கு முற்று புள்ளி வைக்கும் முதல் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது இலங்கை.  இந்தியாவில் இருந்து இறக்குமதி யாகும் வாகனங்களுக்கு அதிக வரியை விதித்திருக்கிறது.

அதனால் வாகனங்கள் விலை பல மடங்கு உயரும். 

அடுத்து.... பெட்ரோல் ஆய்வு கழகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வது பற்றி அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம் ஆகிவிட்டது.  விரைவில்  அந்த அறிவிப்பு வரும், எதிர் பார்க்கலாம்.

அடுத்து ....

எங்கள் நாட்டுக்கு அருகில் இந்தியா அணு உலை அமைக்கிறது.  அங்கு ஏதாவது  அசம்பாவிதம் ஏற்பட்டால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அணு ஆய்வு கழகத்திடம் புகார் அளிப்போம் என்று அடுத்த ஆயுதத்தை  கையில் எடுத்திருக்கிறது இலங்கை.

இப்போது வடக்குப் பகுதியில் ராணுவத்தை வெளியேற்றி இந்தியாவுக்கா அனுப்ப முடியும்? என்று ராஜபட்ச கிண்டல் அடிக்கிறார்.  

இன்னும் ஊமை சாமி மாதிரி இருந்தால்,  இலங்கையின் அடாவடி. அதிகமாகி விடும்.

நான் அரசாங்கத்திற்கு அறிவுரை சொல்லவில்லை.  ஆலோசனை சொல்லும் தகுதியும் இல்லை.  மெத்த படித்த மேதாவிகள் வெளிவுறவு துறையில் இருக்கிறார்கள்.

என் கருத்து இது.

ஓன்று இலங்கைக்கு உற்ற தோழன் என்பதை உணர வைத்து,  இலங்கையை ஒத்து போக வையுங்கள்.

அல்லது சாம பேத தான  தண்டம் என்பது போல்,  கடைசி ஆயுதத்தை கையில் எடுத்து மிரட்டி பணிய வையுங்கள்.

இரண்டில் ஓன்று தான் சரியான  வழி.  

Sunday, 8 April 2012

வாஸ்து - எது நல்ல வீடு

சில வீடுகளை பார்த்தால் அடடா... இதுவல்லவா வீடு என்று நின்று ரசிக்க தோன்றும்.  

சில வீடுகளை பார்த்தால் என்ன இப்படி இருக்கு?  பாழடைந்த பங்களா மாதிரி என்று வெறுக்க தோன்றும். 

சில தெரிந்தவர்,  உறவினர் வீட்டுக்கு போனால் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு போயேன் என்று  சொல்லாமல் சொல்லும்.

சில உறவினர், நண்பர்கள் வீட்டுக்கு போனால் காலில் வெந்நீர் ஊற்றிய மாதிரி எப்படா இந்த இடத்தை விட்டு போவோம் என்று மனசு பரபரக்கும். 

கூடு கட்டி  வாழும் பறவை மாதிரி,  வீடு கட்டி வாழும் மனிதனுக்கு,  உணவு, உடைக்கு அடுத்த படியாக வீடுதான் முக்கியத்துவம் பெறுகிறது.  இதை உணர்ந்தவர்கள் ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள்.

அதனால்தான் மனையடி சாஸ்த்திரம் என்ற வாஸ்த்து ரகசியத்தை நமக்கு சொன்னார்கள். 

ஒரு வீடு என்ன மாதிரி கட்டபட்டிருக்கிறது என்பது முக்கியமல்ல.   இன்னும் சொல்ல போனால் எந்த ராசிக்காரர் அந்த வீட்டில்  குடி இருக்கிறார் என்பதும் முக்கியமல்ல.

அப்பறம் என்னதான் முக்கியம்?

நாம் குடி இருக்கும் வீட்டின் கிழக்கு பக்கமும், வடக்கு பக்கமும் எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியம்.

மனித உடலில் தலை பிரதானம்.  ஒரு வீட்டிற்கு தலை வாசல் பிரதானம்.  அதை போல் அந்த வீட்டிற்கு ஈசானியம் என்பது மனிதனுக்கு தலை போன்றது. 

நீங்கள் வாஸ்த்துவை  பற்றி  அறிந்திருக்கலாம்.  அறியாமல் இருக்கலாம். அல்லது வாஸ்த்து நிபுணராக கூட இருக்கலாம்.  நீங்கள்  எந்த பிரிவை சேர்ந்தவராக இருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.

வடக்கு திசை  என்பது மேல்புறம்.  தெற்கு திசை என்பது கீழ்புறம்.  நாம் வசிக்கும் பூமி ஒரு நொடிக்கு ஏழு மைல் வேகத்தில்  கிழக்கு திசை நோக்கி சுழல்கிறது.    

இந்த பூமி சுற்றுவதால் நாமும் பூமியோடு சேர்ந்து சுற்றி கொண்டிருக்கிறோம். வேகம் ஒரே சீராக இருப்பதால் நாம் ஒரே இடத்தில் இருப்பது போன்ற ஒரு மாய தோற்றம் இருக்கிறது.  சினிமா பிலிம் கூட இந்த தத்துவத்தில் தான் இயக்க படுகிறது.  

சுழலும் பூமி மீது  இடை விடாமல் சூரிய ஒளி விழுந்து கொண்டிருக்கிறது.  இந்த சூரிய ஒளி நம் வீட்டின் மீது தடை இல்லாமல் விழுந்தால் வீடு சுபிச்சம் பெரும். 

வீட்டில் செல்வம் தங்கும்.  நிம்மதியும் சந்தோசமும் நிலைத்திருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.  அனைத்து வகையிலும் சிறந்து வாழ்வார்கள்.  

சூரிய ஒளி அந்த வீட்டின் மீது விழாமல்  இருந்தால்,  வாழ்க்கையை தொலைத்தவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையின்  மீது எந்த பிடிப்பும் இருக்காது.  

சரி .....வாஸ்து குறை இருந்தால்,  எந்திரங்களை பதிக்கலாம், பிரமீடுகளை வைக்கலாம்,  அதிஷ்ட்ட  மீன்  வாங்கி வளர்க்கலாம்.  வழியா இல்லை பூமியில்.

நல்ல யோசனைதான்.  ஆனால் ஒரு உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  நமது வீடு நொடிக்கு ஏழு மைல் வேகத்தில், அதாவது மணிக்கு 25000 மைல் வேகத்தில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறது.

அந்த வீட்டின் மீது காலை வெயில் விழ வேண்டும்.  உங்கள் மனையில் கிழக்கு பகுதியில் காலி இடம் வைத்து வீடு கட்ட வேண்டும்.  எவ்வளவு முடியமா அவ்வளவு.

மாறாக கிழக்கில் இடம் இல்லமால் வீடு கட்டி விட்டால்,  அந்த கிழக்கு பகுதியை ஒட்டி இன்னொருவர் வீடு கட்டினால், உங்கள் வீடு சுபிச்சம் இழந்து விடும்.

உடல் நல கோளாறு, கடன் தொல்லை, நிம்மதி குறைவு,  குடும்பத்தில் ஒற்றுமை குறைவு என்று அவல நிலையில் வாழ வேண்டிய நிலை வந்து விடும்.

அதனால் வீடு கட்டும் போது கிழக்கை  கவனித்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 

Saturday, 7 April 2012

தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது யார்?

ஆவணி மாதம் பொண்ணுக்கு கல்யாணம். நல்ல இடம், நல்ல சம்மந்தம்.  பையன் வேற நல்லா படிச்சு இருக்கான்.  அதுக்காகவே உங்க சக்திக்கு மீறி முப்பது பவுன் நகை போடுறதா ஒத்துகிட்டிங்க. 

கையில இருக்கிற பணம்,  பேங்குல இருக்கிற சேமிப்பு,  இதை வச்சு கடன் வாங்காம கல்யாணத்தை  நடத்திடலாம்னு உள்மனசு சொல்லுது. 

நீங்களும் தங்கநகை வாங்க போறீங்க.  நீங்க என்ன ஏனோதானோன்னு இருக்கிறவரா.  பக்காவா விலையெல்லாம் விசாரிச்சுட்டுதான் கடைக்கு போறீங்க. 

ஆனால்  அங்கேதான் அதிர்ச்சி காத்திருக்குது.  கடைகாரர்... சார் ... நீங்க சொல்றது பழைய விலை சார். 

இப்போ கிராமுக்கு 80 ரூபாய் ஏறிட்டு என்கிறார்.  உங்களுக்கு  கண்ணை கட்டுது. என்ன கொடுமை.  இப்படி விலை ஏற என்ன காரணம் அப்படின்னு மனசுல எண்ணம் வருதா.

வரும்.  பல பேருக்கு வந்தும் இதற்கு விடை காண முடிவதில்லை.  இந்த தங்கத்திருக்கு அப்படி யார்தான் விலையை நிர்ணயம் செய்றாங்க.  ஏன் இப்படி விலைவாசி விஷம்  மாதிரி ஏறிகிட்டே போகுது.  உங்களுக்கு தெரியுமா. தெரியலைன்னா  மேற்கொண்டு தொடருங்கள்.

பொதுவான பொருளாதார விதி என்ன?

உற்பத்தி குறைவாகவும்,  தேவை அதிகமாகவும் இருந்தால் விலை உயரும்.

இது உண்மைதான்,   தங்கத்தை பொறுத்தவரை.  ஆனால் இது மட்டுமே காரணம்  இல்லை விலை  உயர.  திரை மறைவில் சில தகிடு தித்தங்களும் உண்டு.   அதை பற்றிதான் இப்போது ஆராய போகிறோம்.

தமிழர்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும்,  இந்தியர்களின்  வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகவும் மாறிவிட்டது தங்கம்.  தொடர்ந்து ஏறு முகத்திலேயே இருக்கிறது.

உலக அளவில் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வது ஒரு கமிட்டி தான்.  அந்த கமிட்டி லண்டனில்  இருக்கிறது. 

அதன் பெயர் லண்டன் பிர்லியன்ட் அசோசியேசன்.  இதன் ஐந்து பேர் கொண்ட குழு தான் தினசரி காலை மாலை ஓன்று கூடி தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கிறார்கள்.

என்ன அளவு கோலை கொண்டு இந்த விலை நிர்ணயம் செய்ய படுகிறது.?

நல்ல கேள்வி.  இதுதான் பதில்.

டாலர், யூரோ, பவுண்ட் மதிப்பை பொறுத்து தான் இந்த தங்கத்தின் விலை நிர்ணயம் செய்ய படுகிறது.

டாலர், யூரோ, பவுண்டுக்கும் தங்கத்திருக்கும் என்ன சம்மந்த்தம்?

இருக்கே.  உலகம் முழுவதும் பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வது என்று புரியாமல்  தவிக்கும் கோடீஸ்வரர்கள்,  சும்மா பொழுது போக்கா தங்கத்தை வாங்கி வைத்து  கொள்வார்கள்.

அப்படி வாங்கும் போது தங்கத்தின் விலை உயரும்.   அப்படி வாங்கியவர்கள் தங்கம் வேண்டாம் டாலர் வாங்குவோம்  என்று டாலரை வாங்க நினைத்தால்,  டாலரை வாங்கினால் தங்கத்தின் விலை இறங்கும். 

மொத்தத்தில் தங்கத்தில் முதலீடு செய்யும் பணக்கார்கள் நினைத்தால் தங்கத்தின் விலை ஏறவே ஏறாது.

சரி... இந்த தங்கம் வாங்கிற விஷயம் இருக்கே,  அசந்தா ஆப்படிக்கிற கதை .  சிக்கினா சிட்டியை போடுற சமாச்சாரம்.

நீங்கள் உண்மையாக விழிப்புணர்வு உள்ளவர் என்றால்,  பாடு பட்டு உழைத்த பணத்தை, தங்கம் வாங்குறேன் பேர்வழி என்று,  யாரோ ஒருவரிடம் ஏமாந்து போகாமல் இருக்க வேண்டுமானால்,  916 முத்திரை பதித்த நகையை வாங்குங்கள். 

விலை குறைவு என்று தரமற்ற தங்கத்தை வாங்க வேண்டாம்.  10 கிராம் சுத்தமான தங்கம் 916 தங்கமாக மாற்றுவதற்கு ௦.70 கிராம்  காப்பரும்,  ௦.14 கிராம் வெள்ளியும் சேர்க்க படுகிறது.  இந்த அளவு கூடினால் தங்கத்தின்  தரம் குறைந்து விடும்.

ஏதாவது விழா காலம்  வந்தால் நகை கடை விளம்பரங்கள் வரும்.  அதில் எங்களிடம் வாங்கும் தங்க நகைகளுக்கு செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என்று யாராவது சொன்னால் அதை நீங்கள்  நம்ப வேண்டாம்.

செய் கூலி இல்லாமல்,  சேதாரம் கணக்கிடப்படாமல் யாராலும் தரமான தங்க நகைகளை தர முடியாது.  நம்ப வேண்டாம்.

கல் எடை சேதாரம் என்று புது யுத்தியை கடை பிடிக்கிறார்கள்.  அதாவது ஒரு பவுன் தோடு செய்ய சொன்னால்,  அதில் பதிக்கப்பட்ட கற்களின் எடையையும் சேர்த்து ஒரு பவுன் என்கிறார்கள்.  இது வாங்குவோருக்கு தான் இழப்பு.

அதனால் முடிந்த வரி கல் வைத்த நகைகளை வாங்க வேண்டாம். வாங்கி ஏமாற வேண்டாம். 

உலகில் தங்கம் இருப்பு வைத்திருக்கும் நாடுகள் வரிசையில் அமெரிக்க முதலிடம் பெறுகிறது.  அமெரிக்கா இருப்பு வைத்திருக்கும் தங்கத்தின் எடை  8 .133 .5 டன்.

இந்த வரிசையில் இந்தியாவிற்கு 12 ம் இடம்தான்.   இந்தியா வைத்திருக்கும்  தங்கத்தின் மொத்த எடை 557 .7 டன்தான்.

ஆனால் தனிநபர்கள் இருப்பு என்று பார்த்தால் இந்தியா தான் முதல் இடத்தில் இருக்கிறது.  நம் இந்தியா வைத்திருக்கும் மொத்த எடையை விட,  தனி நபர்களிடம் இருக்கும் தங்கம் பல மடங்கு அதிகம்.   

கடைசியாக ஒரு கொசுறு செய்தி.  கடந்த 2000 ஆண்டு முதல் இந்தியாவில் தங்கத்தின் விலை என்னவாக இருந்தது ஒரு அட்டவணை. 

ஆண்டு                             விலை ரூபாய்களில்
2000                                                 4474 
2001                                                 4579
2002                                                 5332
2003                                                 5718
2004                                                 6145
2005                                                 6900
2006                                                 9240
2007                                                 9995 
2008                                               12889
2009                                               15756
2010                                               19227
2011                                               25048   

இது இத்துடன்  முடிய போவதில்லை.   எதிர் காலத்திலும் விலை ஏற்றம் என்பது இருந்து கொண்டே தான் இருக்கும். 


Friday, 6 April 2012

ஏப்ரல் ஓன்று -முட்டாள் தினம் வந்தது எப்படி?

ஈரானில் இருந்து ஈராக்கிற்கு  ஒருவர் வழி தவறி போய்விட்டார். ஈராக்கின் எல்லை காவல் படை அவரை கைது செய்தது. பின்  கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்தினார்கள். 

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டு என்ன தெரியுமா? 

 நீ உளவாளி. 

கைது செய்யப்பட்டவர் விளக்கம் சொல்ல முற்பட்டார். 

நீ எந்த விளக்கமும் சொல்ல வேண்டியதில்லை. நீ குற்றவாளி  உன் குற்றத்தை  ஒத்து   கொள்.  உனக்கு தூக்கு தண்டனை தான்.  நீ பெரிய குற்றத்தை செய்ய துணிந்ததால்,  உன்னை துண்டு துண்டாக வெட்டி தான் தண்டனை கொடுப்பார்கள்.  

அதுவும் ஒரே நாளில் நடக்காது.  வாரம் ஒரு பாகமாக வெட்டுவார்கள். இதுதான் அவருக்கு அளிக்க பட்ட தண்டனை.

அவருக்கு தண்டனை அளிக்கும்  நாள் வந்தது. தண்டனையை நிறைவேற்றும் முன்,  அந்த அதிகாரி கேட்டார்.  இப்போது உன் ஒரு காலை மட்டும் வெட்ட போகிறோம். 

உன் கடைசி ஆசை என்ன என்பதை சொல்.

வெட்டப்படும் என் காலை என் சொந்த ஊரில் புதைக்க வேண்டும்.  அதற்கு ஆவன செய்ய வேண்டும். 

சரி .... என்றார் அந்த அதிகாரி.  

கால் வெட்டப்பட்டது.  அவர் விருப்பப்படியே அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க பட்டது.   பின் அடுத்த வாரம்.  அவரின் ஒரு கை வெட்டப்பட்டது. 

மீண்டும் அந்த அதிகாரி கேட்டார்.  உன் விருப்பம் என்ன?  

முன் சொன்ன பதிலையே சொன்னார். அவர் விருப்பம் நிறைவேற்றப்பட்டது.  இப்படியே அவரின் உடல் பாகங்கள் ஒவ்வொன்றாய் வெட்டப்பட்ட பிறகு கடைசியில் அவர் தலை வெட்ட  பட வேண்டும். 

இப்போதும் அந்த அதிகாரி கேட்டார்.  உன் கடைசி ஆசை என்ன?

என் உடல் என் நாட்டில் புதைக்க பட வேண்டும்.  இதுதான் என் கடைசி ஆசை.

இப்பதானே உன் திட்டம் தெரியுது.  நீ பார்ட் பார்ட்டா தப்பிச்சு போயிடாலாம்ன்னு  நினைக்கிறியா உன் நாட்டிற்கு.  அதுதான் நடக்காது என்றாராம் அந்த அதிகாரி. 

இது எப்படி இருக்கு.  இப்படி முட்டாள் தனமாக யோசிப்பவர்களுக்கு என்றே இருக்கும்  நாள் தான், ஏப்ரல் 1 .

இந்த நாளில் நீங்களும் யாரையாவது முட்டாளாக்க முயற்சி செய்திருப்பிர்கள்.  உங்கள் வலையில் யாரவது சிக்கி இருக்கலாம்.  ஹையா ... ஏப்பரல் பூல் என்று நீங்கள் சிரித்திருக்கலாம்.  

சரி... அந்த நாளின் வரலாறு தெரியுமா?  தெரிந்தால் சந்தோசம்.  தெரியலையா இப்போ தெரிஞ்ச்சுகோங்க. 

முட்டாள் தினம் என்றில்லை.  வருஷம் முழுவதும் இப்படி எதாவது ஒரு நாள் வந்து கொண்டு தான் இருக்கிறது.   இதில் பெரிய விழேஷம் என்னன்னா ... இந்த நாளுக்கு யாரும் உரிமை கொண்டாடுவது இல்லை.

சரி... காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை.  அந்த வகையில் இந்த முட்டாள் தினம் வந்த காரணம் என்ன?  இதோ வரலாறு. 

நான் எப்படி சித்திரை ஒன்றை புத்தாண்டாக கொண்டாடுகிறமோ (சித்திரையா  தை மாதமா ) அதை போல் ஏப்ரல் ஒன்றாம் தேதியை ரோமானியர்கள் புத்தாண்டாக கொண்டாடினார்கள். 

இந்த புத்தாண்டு கொண்டாட்டம் ஏப்ரல் 25 ம் தேதியே ஆரம்பம் ஆகிவிடும்.  அதன் நிறைவு நாள் ஏப்ரல் 1 .

காலம் காலமாக கடை பிடிக்க பட்ட இந்த நடை முறையை அப்போதைய போப்பாண்டவரான 13 வது கிரகரி 1562 ம் ஆண்டில் மாற்றி அமைத்தார். 

இந்த மாற்றத்தின் படி ஜனவரி ஒன்றாம் தேதிதான் புத்தாண்டு வருகிறது.  ithai நாடு முழுவதும் அறிவிக்கவும் செய்தார்.  

ஆனால் காலம் காலமாக கடை பிடித்த நடைமுறையை மாற்றி புது நடை முறைக்கு மாற பலருக்கு மனம் இடம் தரவில்லை.  கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும் கிழவனை  தூக்கி மனையில் வை என்ற கதையாக இது என்ன கூத்து என்று,  பலர் பழைய ஏப்ரல் ஒன்றையே புத்தாண்டாக கொண்டாடினார்கள் . 

இப்படி மாற மறுத்தவர்களை, மாறியவர்கள் முட்டாள்கள் என்றார்கள்.  இது தான் முட்டாள் தினமாக வந்ததற்கு முதல் காரணம்.  இது இப்படியே ரெக்கை முளைத்து பல நாடுகளுக்கும் பரவி விட்டது. 

ஓன்று வந்து விட்டால் அதன் பின்னால் ஆயிரம் கதைகள் பின்னாலையே வந்து விடுமே.  அந்த வகையில் முட்டாள் தினத்திற்கு என்று பல புனை கதைகள் இருக்கிறது.   அவற்றில் சில உங்கள் பார்வைக்கு. 

இந்த நடைமுறை வருவதற்கு முன்பே பிலிப்பை  என்ற மன்னனை அவரது அரண்மனை விகடகவி பந்தயம் ஒன்றை வைத்து, அந்த பந்தயத்தில் மன்னனையே  முட்டாளாகினாறாம்.  அந்த நாள் ஏப்ரல் ஓன்று.

முதலாம் நெப்போலியன் ஆஸ்திரியாவை சேர்ந்த மேரிலுயிசை  திருமணம் செய்து கொண்டார்.  அப்போது அந்த பெண்ணின் தோழிகள் உன்னை அவர் உண்மையாக திருமணம் செய்து கொள்ளவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்துள்ளார்  என்று என்றார்களாம்.

காரணம் திருமணம் நடந்த நாள் ஏப்ரல் ஓன்று.   இப்படி சரித்திரத்தின் பக்கங்களில் பல கதைகள் உலா  வருகிறது.  

Thursday, 5 April 2012

TAMIL FACEBOOK / தமிழ் பேஸ்புக்

நடக்கும் என்பார் நடக்காது,  நடக்காது என்பார் நடந்து விடும்.  இந்த பாட்டு வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

கடந்த வருடம் பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக ஒரு அறிவிப்பை செய்தது.  அதன் நிர்வாக மேலாளர் செய்தியாளர்களிடம்,   2012 மார்ச் மாதத்துடன் பேஸ் புக் வலைதளத்தை மூடப்போகிறோம் என்றார்கள்.  இந்த செய்தி அவர்களின் அதிகாரபூர்வ வலை தளத்திலும் வெளியானது. 

உலகம் முழுவதும் இதற்கு ஆதரவாகவும்,  அடக்கடவுளே  என்று அதிர்ச்சியாகவும் செய்தி வெளியிடப்பட்டது. 

இந்த செய்தியை படித்த நானும் மூடுவிழவை நோக்கி போகிறது பேஸ் புக் என்று ஒரு கட்டுரையும் வெளியிட்டேன். 

ஆனால் இப்போது இது அத்தனையும் பொய்யாகி போய் விட்டது.  இப்போது பேஸ் புக் புது அவதாரம் எடுக்கிறது. 

உலகம் முழுவதும் உள்ளவர்கள் தங்கள் நண்பர்களுடன்  தாய் மொழிலேயே,  பேசிக்கொள்ள வசதி செய்து தருகிறது. 

அந்த வகையில் இந்திய வட்டார மொழிகளில் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழிகளில் பேஸ் புக் இனி   செயல் படும். 

நான்  ஆங்கிலத்திலேயே தான் பேசுவேன் என்று அடம் பிடிப்பவர்களை விட்டுவிட்டு,  தமிழில் பேச ஆசை படுபவர்கள் மொழி மாற்றம் செய்து கொள்ள வேண்டியதுதான்.

இனி குட் மார்னிங் என்றெல்லாம் சொல்ல வேண்டியதில்லை.  ஆழகான தமிழில் காலை வணக்கம்  என்று சொல்ல முடியும்.  

சரி... பேஸ் புக் நிறுவனத்திருக்கு திடீர் ஞானோதையம் வந்ததற்கு காரணம் என்ன?

வருமானம் தான் காரணம்/

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான  மக்கள் பேஸ் புக்கில் உறுப்பினராக இருக்கிறார்கள்.  ஆனால் எந்த கட்டணமும் செலுத்துவதில்லை.  ஆயுள் காலம் முழுதும் இலவச சேவை தான். 

இவ்வளவு பெரிய வலை தளத்தை இலவசமாக தர பேஸ் புக்கிற்கு எவ்வளவு பெரிய மனசு.

இப்படித்தான் நினைக்க தோன்றும்.  

ஆனால் நேரிடையாக உறுப்பினர்களிடம் இருந்து பணம் பெறுவதில்லையே தவிர,  உங்கள் முக பக்கத்தில் வரும் விளம்பரத்திற்கு அந்த நிறுவனங்கள் விளம்பர தொகையை தருகிறது. 

கூகுள் சர்ச்சில் நீங்கள் தேடி எடுக்கும் படங்களுக்கும்,  செய்திகளுக்கும் கூகிள் பணம் தருகிறது. 

இது என்ன கூத்து.  நாம் தானே செய்தியை போய் படிக்கிறோம்.   முறையாக நாம்தானே பணம் தர வேண்டும்.  

உண்மைதான்.  ஆனால் இதற்கு பின்னால் பல அம்சங்கள் இருக்கிறது.  உதாரணமாக நீங்கள் AIRCELL இன்டர்நெட் பயன் படுத்துகிறிர்கள் என்று வைத்து கொள்வோம். இன்டர்நெட்டிற்கு மாதாந்திர கட்டணம் செலுத்தி இருப்பிர்கள்.  

நீங்கள் பணம் செலுத்திய காரணம் என்ன?. 

வலைதள வசதியை பெற.  

அந்த வலை தள வசதி  எதற்கு?

அங்கே கொட்டி கிடக்கும் கோடிக்கணக்கான தகவல்களை போய் பார்க்க,  தேவை பட்டதை படிவம் எடுக்க,  பிடித்த படங்களை காப்பி செய்ய போறீங்க.  

இந்த வசதியை யார் செய்து தருகிறார்கள்.  

கூகிள்.  

கூகுள் வலை தளத்திற்கு இத்தனை செய்திகள் எப்படி வந்தது.  

உலகத்தின் பல இடங்களில் இருந்தும் பலர் பல தகவல்களை  தங்கள் வலையில் பதிவு செய்கிறார்கள். 

ஏன்?  அவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?  இத்தனை கஷ்ட்ட பட்டு படங்களையும்,  தகவல்களையும், விடியோவையும் இலவசமாக தர.  அதனால் அவர்களுக்கு என்ன பலன்.

இதுதான் பாயின்ட். இந்த தகவல்களை தரும் வலை தளத்திருக்கு கூகுள் பணம் தருகிறது. 

இந்த சேவையை  பெற  நான் முன்னமே AIRCELL க்கு பணம் கட்டி விட்டோம்.  அந்த பணத்தில் ஒரு பகுதியை கூகுள் நிறுவனத்திற்கு AIRCELL கொடுக்கிறது.  அதை பெற்ற கூகுள் வலைத்தளம் நடத்தும் பலருக்கும் பிரித்து கொடுக்கிறது. 

இப்போ புரியுதா.  நாம் இலவசமாக ஒன்னும் இந்த வலை தள வசதியை பெற வில்லை.  மறைமுகமாக பணம் செலுத்தி விட்டோம் என்று. 

எப்படியோ .... அவர்களுக்கு வருமானம் பெருகியது.  அதனால் பேஸ் புக்கின் ஆயுள் காலமும் அதிகமாகி விட்டது.  இல்லாவிட்டால் நான் வாழ்க்கையில் செய்த மிக பெரிய முட்டாள்தனமே பேஸ் புக் ஆரம்பித்ததுதான் என்று அல்லவா அதன் நிறுவனர் சொன்னார்.  

போகட்டும்.  இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த வசதி வந்து விடும்.  மனதுக்கு பிடித்தவர்களோடு பேசலாம்.  ஜாமாய்ங்க நண்பர்களே.  




Wednesday, 4 April 2012

BLOCK MONEY / கருப்பு பணம்.

மக்கள் கூடும் இடமெல்லாம் இதை பற்றி பேசினார்கள்.  ஐயம்பேட்டை கலியபெருமாள் அமெரிக்க அதிபருக்கே சவால் விடும்,  தெருமுனை பிரச்சாரங்களில் கூட  இதை பற்றி அதிகம் பேசப்பட்டது. 

மத்திய அரசே.... மத்திய அரசே... அந்த கருப்பு ஆடுகளின் பட்டியலை உடனே வெளியிடு என்ற கட்டளையும்,  பறிமுதல் செய் என்ற உத்தரவும் போட்டார்கள். 

பிரபுதேவா  நயன்தாரா  காதல் முறிவிற்கு என்ன காரணம்?  என்று ஆராட்சி செய்த பத்திரிக்கைகள், திடுக்கிட்டு விழித்து  எட்டு கால பத்தியில் செய்தியை இடம் பெற செய்தது.

அது......

கருப்பு பணம்.  சுவிஸ்வங்கி.

இது ஒன்னும் புதுசா புறப்பட்ட பூதம் இல்லை. பல வருஷமா பேசப்படும் விஷயம்தான் இது.   இதற்கு ஆக்கபூர்வமாக இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க பட்டதில்லை. இருக்கட்டும். 

சுவிஸ்வங்கி.

வங்கி சேவையில் தனக்கென தனி இடம் படிக்க நினைத்த சுவிஸ்வங்கி,  வாடிக்கையாளரை கவர புது உத்தியை கொண்டு வந்தது.  

ஐயா வாங்க.... அம்மா வாங்க .... எங்க வங்கியில் கணக்கு வையுங்க என்று கூவி அழைக்காத குறை.

தங்களிடம் கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய விவரம் படு ரகசியம்.  உங்க அப்பன் ஆத்தா இல்லை,  அந்த ஆண்டவனே வந்து கேட்டாலும் சொல்லமாட்டோம். 

அதோடு ரகசிய   குறியிடுகள்,  சங்கோஜ மொழி என்ற அடிப்படையில் கணக்கை அணுக முடியும்.   இதுதான் கருப்பு பணம் வைத்திருப்போரை கவர்ந்து இழுக்கும் அம்சங்கள். 

இப்போது கூட கடுமையான சட்ட திட்டங்களை பயன்படுத்தி,  பணம் வைத்திருப்போரின் பட்டியலை கேட்க முடியுமே தவிர,  சுவிஸ் வங்கியிடம் பணத்தை கொடு என்று கேட்க முடியாது.

உள்ளூர் முதலைகளை பிடித்து,  கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் மட்டுமே,  பணத்தை இந்தியா கொண்டு வர முடியும்.

சரி..... இந்த பணம் எப்படி எப்படி சுவிஸ் வங்கிக்கு ரெக்கை கட்டி பறந்தது?

இதற்கு பல வழிகள், பல முறைகள்.

ஹாவாலா....பாமரத்தனமாக  சொன்னால் உண்டியல்.   இதில் வேடிக்கையான விஷயம் என்ன தெரியுமா? வெளி நாட்டில் இருந்து இந்தியாவிற்கு பணத்தை கொண்டு வர முடியும்.

ஆனால் இந்தியாவில் இருந்து பணத்தை வெளி நாட்டிற்கு கொண்டு போக முடியாது.  மீறி கொண்டு போக வேண்டுமானால் ஆயிரம் சட்ட சிக்கல் இருக்கிறது.  தகுந்த காரணங்கள் சொல்ல வேண்டும்.  மிக கடுமையான நடைமுறை பின்பற்ற படுகிறது.

இருந்தாலும் வல்லவன் வெட்டிய வாய்க்கால் வடக்கேயும் பாயும், தெற்கேயும் பாயும் என்பது போல்,  ஹாவாலா மூலம் பண பரிவர்த்தனைகள் நடக்கிறது.

உதாரணமாக... வெளி நாட்டில் வேலை செய்யும் ஒருவர் அல்லது வெளி நாட்டில் தொழில் செய்யும் ஒருவர் சம்பாதித்த பணத்தை ஊருக்கு அனுப்ப தேர்ந்தெடுக்கும் முறைதான் உண்டியல்.

இது நம்பிக்கயின் அடிப்படையில் நடத்தப்படும் ரகசிய வங்கி.  உலகத்தின் எந்த மூளையில் இருந்தும் பணம் அனுப்பலாம்.  இதற்கு நோட்டு சீட்டு எல்லாம் கிடையாது.

நம்பிக்கைதான் மூலதனம்.  நம்பினால்  உங்கள் வீட்டுக்கு பணம் வந்து சேர்ந்துவிடும்.   இந்த முறை மூலம் பல லட்சம் கோடி ரூபாய்கள் இந்தியாவிற்குள் மாதம் தோறும் வருகிறது.

சட்ட பூர்வமாக ஊருக்கு அனுப்ப வேண்டுமானால்,  வெஸ்டன் யூனியன் மூலம் அனுப்பலாம்.  என்றாலும் அங்கே கட்டுபாடுகள் அதிகம்.  ஒருவர் அதிக பட்ச்சமாக ஒரு முகவரிக்கு வருடத்திற்கு 12 முறைதான் பணம் அனுப்ப முடியும்.

அதிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அனுப்ப முடியாது. இப்படி ஏகப்பட்ட தொல்லைகள் இருக்கிறது.  அதனால் டோர் டெலிவெரி செய்யும் உண்டியல் முறைக்கு பலர் தாவி விட்டார்கள்.

சரி... இந்தியாவில் இருந்து எப்படி பணம் போகிறது?

இந்த உண்டியல் முறைதான்.  இன்னும் கூடுதலாய் சில  வழிகள் இருக்கிறது.

அது இந்தியாவில் கால் பதித்து இருக்கும் வெளி நாட்டு வங்கிகள் ஒரு காரணம்.

உதாரணமாக அமெரிக்காவில் இருந்து ஒரு நிறுவனம் இந்தியாவில் தொழில் துவங்குகிறது.   தொழில் துவங்கிய பிறகு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு  சம்பளம் கொடுக்க, நிர்வாக செலவுகளுக்கு தேவையான பணத்தை பெற,  சம்பளம் பெரும் தங்கள் நாட்டு ஊழியர்கள் சேமித்து வைக்க, எங்கள் நாட்டுக்கு அனுப்ப,  எங்கள்  நாட்டு வங்கி கிளை ஒன்றை இந்தியாவில் அமைத்து கொள்கிறோம் என்கிறார்கள்.

அட ... இது கூட நியாயம்தான் என்று மத்திய அரசு அனுமதி அளிக்கிறது.  இந்த வங்கிகள் ஆன் லைன் மூலம் செயல்படுவதால்,  இந்தியாவில் உள்ளவர் இங்கே பணத்தை போட்டு விட்டு அமெரிக்காவில் போய் பணத்தை எடுப்பது சுலபம்.

உலகம் முழுவதும் பயன் படும் கிரிடிட் கார்டுகள் கூட இதற்கு துணை போகிறது.

இது என்ன சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை எப்படி கொண்டு செல்லபடுகிறது?  அடுத்த கேள்வி எழுகிறதா?

ஒரு அரசியல்வாதியோ,  அல்லது  தொழில் அதிபரோ ரஷ்ய நிறுவனத்துடன் வர்த்தக பரிமாற்றம் வைத்து கொள்கிறார் என்று வைத்து கொள்வோம்.  அந்த வர்த்தகத்தை சுமுகமாக முடித்து கொடுத்ததற்கு அந்த நிறுவனம் சம்மந்த பட்டவருக்கு ஒரு அன்பளிப்பை கொடுக்கிறது.

அதுதான் லஞ்சம்.  அப்படி குறுக்கு  வழியில் வந்த பணத்தை உள்ளூர் வங்கியில்  முதலீடு செய்தால்,  பணம் வந்த வழியை பற்றிய பயடட்டோவை கேட்டு வருமான வரித்துறை வந்துவிடும்.

அதனால் அந்த பணத்தை சுவிஸ் வங்கியில் முதலிடு செய்கிறார்கள்.  தேவை பட்டால் அந்த ரஷ்ய நிறுவனமே ஏற்பாடு செய்து கொடுக்கும்.  உண்டியல் முறையில் உள்ள நம்பகத்தன்மை தான் இங்கும்.

சரி... உள்நாட்டில் கொள்ளை அடித்த பணத்தை சுவிஸ் வங்கிக்கு எப்படி கொண்டு போகிறார்கள்?

google இல் போய் தேடி பாருங்கள்.  சுவிஸ் வங்கியில் கணக்கு துவங்குவது எப்படி என்று.  போன் நம்பரில் இருந்து ஈமெயில் முகவரி வரை இருக்கிறது.

சரி... விஷயத்திருக்கு   வருவோம்.

சுவிஸ் வங்கியில் ஒரு லட்சம் ட்ரில்லியன் டாலருக்கு மேல் இந்தியர்களின் பணம் இருக்கிறதாம்.  இதை பற்றி கூட்டல், கழித்தல், பெருக்கல் கணக்கெல்லாம் போட்டு,  இந்த பணத்தை பறிமுதல் செய்தால் இந்திய குடி மகன் ஒவ்வொருவருக்கும் தலா.... 2 .5 லட்சம் ரூபாய் தரலாம் என்கிறார்கள்.

அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு இந்தியாவின் மொத்த பஜ்ஜெட்டையும் இந்த பணத்தை வைத்து போட்டு விடலாம் என்கிறார்கள்.

இந்த பணம் அப்படியே இந்தியாவிற்குள் கொண்டு வந்தால்,  வல்லரசாக இருக்கும் அமெரிக்கா,  வளரும் நாடுகள் வரிசையில் இருக்கும் இந்தியாவிற்கு பின்னால் போய் விடுமாம்.

டாலர்களில் முதலீடு செய்த பல கோடிஸ்வரர்கள்,  ஒரே நாளில் பிச்சைகாரர்களாக மாறி விடுவார்களாம்.

இதெல்லாம் புள்ளி விவரங்கள்.

இப்படி ஆயிரம் கதைகள் சொல்லும் பொருளாதார மேதைகள்,  கருப்பு பணத்தை தடுக்க என்ன வழி என்பதை பற்றி யோசிக்கவே இல்லை.

நம் நாட்டின் பொருளாதார மேதைகளை பற்றி நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஜெய்ராம் ரமேஷ் மற்றும் அலுவாலியா.

நகர்புறத்தில் நாள் ஒன்றுக்கு ரூபாய்  32 ம்,  கிராமபுறத்தில் நாள் ஒன்றுக்கு 26 ம் ,  வருமானம் ஈட்டினால் அவர் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர் என்று சொல்லும் அதி புத்திசாலிகளை வைத்து கொண்டு ஒன்னும் செய்ய முடியாது.

முதலில் வருமான உச்சவரம்பை அதிக படுத்த வேண்டும்.  கடுமையான வரி விதிப்பை மாற்றி அமைக்க வேண்டும்.  வரி செலுத்தும் முறை எளிமையாக்க பட வேண்டும்.

நேர்மையாக சம்பாதிக்கும் ஒருவர் கூட ,  அதிக பட்ச வரி கட்ட வேண்டும் என்ற நிலை வரும் போது,  ஏமாற்ற நினைக்கிறார்.  அரசாங்கம் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

நாடு முழுவதும்  வாங்கும் பொருளுக்கு பில் போடும் பழக்கம் வந்தே ஆக வேண்டும்.

அரசாங்க ஊழியர்கள்  மாதிரி,  தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கும் சம்பளம் வங்கிகளின் வழியாக செல்லவேண்டும்.  எல்லா நிலையிலும் இது கடை பிடிக்க படவேண்டும்.

குறிப்பாக மக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதை விட முக்கியமாக நேர்மையானவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.  வந்தால் கருப்பு பணத்தை தடுக்க முடியா விட்டாலும்,  குறைக்க முடியும்.

Tuesday, 3 April 2012

குட்டி கதைகள் / THAMIL SHORT STORY

கடவுளே கொடுப்பார்.

அக்பர் ஆட்சி காலத்தில் டெல்லி அருகில் உள்ள ஒரு காட்டில் முஸ்லிம் பக்கிரி ஒருவர் சிறு குடிசையில் வாழ்ந்து வந்தார்.  அவரை தரிசிப்பதற்காக மக்கள் அங்கே செல்வது வழக்கம்.

ஆனால் அந்த பக்கிரியிடம் பொருள் வசதி கிடையாது.  அதனால் தம்மை காண வருபவர்களை உபசரிக்கவும் வந்தவர்கள் தங்க ஒரு கூடம் அமைக்கவும் விரும்பினார். 

அதற்காக உதவியை அக்பர் சக்ரவர்த்தியிடம் பெற விரும்பி அவரை சந்திக்க சென்றார்.   அப்போது அக்பர் தொழுகையில் இடுபட்டிருந்தார்.  அந்த சாதுவும்  ஒரு பக்கமாக அமர்ந்து தொழுகை செய்தார்.

அக்பர்...  இறைவனே !  எனக்கு மேலும் செல்வம், புகழ், ராஜ்ஜியம் ஆகியவற்றை தந்தருள வேண்டும் என கூறி பிராத்தனை செய்வது பக்கிரியின் காதில் விழுந்தது.

அக்பரின் பிராத்தனை வசனங்களை கேட்ட உடனேயே பக்கிரி அங்கிருந்து கிளம்பி போக ஆரம்பித்தார்.  அதனை கவனித்த அக்பர் சைகை செய்து அவரை அழைத்து திரும்பவும் உட்காரும்படி வேண்டினார். 

தொழுகை முடிந்ததும்,   தாங்கள் என்னை பார்க்க வந்தீர்கள்.  ஆனால் என்னிடம் ஒன்றும் சொல்லாமலேயே திரும்பி போக நினைத்ததின் காரணம் என்ன என்று கேட்டார். 

பக்கிரி தயக்கத்துடனே   பதில்  சொன்னார்.    அரசே ... தங்களை காண ஒரு நோக்கத்துடனே வந்தேன்.  அதனை சொல்லி தங்களை சிரம படுத்த விரும்ப வில்லை என்று கூறினார்.  

வந்த காரியத்தை கூறுங்கள் என்று அக்பர் வலியுறுத்தி கேட்டார்.  அதற்க்கு பக்கிரி .... அரசே....பொதுமக்கள் தினமும் என்னிடம் உபதேசம் பெற வருகிறார்கள்.  அவர்களுக்கு வசதி செய்து தர என்னால் முடியவில்லை.  அதற்கு தங்களிடம் பணம் பெற்று செல்ல வந்தேன்.

இதனை கேட்ட அக்பர் அப்படியானால்,  பிறகு ஏன் தங்களுடைய கருத்தை தெரிவிக்காமல் செல்கிறிர்கள் என்று கேட்டார்.

அதற்கு பக்கிரி  அரசே... நீங்கள் செல்வம், செல்வாக்கு, ராஜ்ஜியம் ஆகியவற்றை வேண்டி பகவானிடம் பிராத்திப்பதை கேட்டேன்.  நீங்களே யாசகம் கேட்கும் போது,  ஒரு யசகனிடம் இன்னொரு யாசகன் ஏன் யாசிக்க வேண்டும்.  

யாசகம் பெறாமலே  காரியத்தை சாதிக்க முடியாது என்றால்,  பகவானிடமே யேசித்து கொள்ளலாமே என்று நினைத்து நான் புறப்பட்டேன் என்றாராம்.


எது அவசியம்

சிலர் படகில் ஏறி கங்கையை கடந்து கொண்டிருந்தனர்.  அப்போது படகில் பயணம் செய்து கொண்டிருந்த  பண்டிதர் தனது கல்வி அறிவு பற்றி தம்பட்டம் அடித்து கொண்டிருந்தார்.

பயணிகளில் ஒருவனிடம்  உனக்கு வேதாந்தம் தெரியுமா என்று கேட்டார்.  அதற்க்கு அவன் தெரியாது என்று பதில் அளித்தான்.  

புராணம், இதிகாசம் பற்றி தெரியுமா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்.  அவர் கேட்ட கேள்வி அனைத்திருக்கும் தெரியாது என்றே பதில் சொன்னான்.

இதெல்லாம் தெரியாமல் பூமியில் நீ வாழ தகுதி அற்றவன் என்று ஆணவமாக பதில் சொன்னார் பண்டிதர்.  அந்த நேரத்தில் பலத்த புயல் காற்று வீச தொடங்கியது.  படகு நிலை குலைந்து ஆடியது.  

அப்போது அந்த மனிதன் பண்டிதரிடம் ... ஐயா பண்டிதரே உமக்கு நீந்த தெரியுமா என்று கேட்டான்.  

தெரியாது என்று பதில் சொன்னார்.  உடனே அவன் ஐயா நீங்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் தெரியாது.  ஆனால் எனக்கு நீந்த தெரியும்.  அதனால் பூமியில் வாழ எனக்கு தகுதி இருக்கிறது.  ஆனால் உங்களுக்கு என்றான்......

பண்டிதர் முகத்தில் பீதி பரவியது. 

  
                                                                                         பரமஹம்சர் சொன்ன கதைகள்

அட்சய திரிதியை/ ATCHSAYA THIRITHIYAI

ஒரு நல்லவன் செய்ய முடியாத உதவியை நாள் செய்யுமாம்.  இது நம் முன்னோர்கள் சொன்ன முதுமொழி. 

அது என்ன உதவி.   நாள் என்பது ஆள் மாதிரி கூடவே இருந்து உதவி செய்யுமா?

இல்லை.  நல்ல நாளில் துவங்கும் காரியங்கள் சொல்லி வைத்த மாதிரி முடிவடையும் என்பதுதான் அதன் மையக்கரு. 

தொட்ட காரியங்கள் அனைத்திலும் தோல்வியை தழுவியவர்கள் கூட,  நல்ல நாள் பார்த்து ஆரம்பித்து விட்டால், உள்ளபடி சொல்வதானால் உயர்வுதான்.

பல்வேறு வகையில் அனுகூலங்கள் கூடி ஆதரவு கரம் நீட்டும்.  சேர்ந்தவர்களால் ஆதாயம்,  செலவீனங்கள் குறைவு, செயல்பாடுகளில் புதிய வேகம் என்று பந்தைய குதிரையில் முந்திய குதிரையாக இருக்க நல்ல நாளே பிரதானம்.

அந்த வகையில் வருவதுதான் அட்சய  திரிதியை.   அட்சய என்றால் அள்ள அள்ள குறையாதது என்று பொருள்.  வளரும்... வளரும்... வளர்ந்து கொண்டே இருக்கும் என்று பொருள்.    அல்லலை போக்கும் என்று பொருள்,  ஆற்றலை போக்கும் பொருள்.

இன்னும் சொல்லப்போனால் திதியை வைத்து விதியை வெல்லலாம் என்பதுதான் அட்சய திரிதியை.

மாதத்தில்  இரண்டு திருதியை திதிகள் வந்தாலும்,  சித்திரையில் வரும் திருதியையே சிறப்பு வாய்ந்தது.  அதுவும் வளர்பிறை திதிதான் முக்கியமானது.

சரி இது சம்மந்தமான புராண கதையை பார்ப்போமா!

சூழ்ச்சியாக சூதாடி பாண்டவர்களின் நாடு நகரங்களை பறித்து கொண்ட துரியோதனன்,  அவர்களை காட்டிற்கு செல்ல வேண்டும் என்று கட்டளை இடுகிறான்.

தர்மத்தின் நிழலாக இருந்த பாண்டவர்கள் வனவாசம் சென்றார்கள்.  இந்த செய்தி காட்டுத்தீ போல் நாட்டுக்குள் பரவுகிறது.

தவசீலர்களான முனிவர்களும், ரிஷிகளும், கவலையோடு கானகம் வருகிறார்கள்.  விருந்தோம்பலில் சிறந்த பாண்டவர்கள் வரும்  பெரியோர்களுக்கு  எதுவும் அளித்து உபசரிக்க முடியவில்லையே என கவலை கொள்கிறார்கள்.  உடன் சூரியனை நோக்கி பிராத்தனை செய்கிறார்கள்.

அவர்கள் முன் தோன்றிய சூரியன்.....பாண்டு மைந்தர்களே.... இன்று திரிதியை நாள்,  அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை உங்களுக்கு தருகிறேன்.  இதில் நான் தினம் உதயமாகும் நேரத்தில் சிறிது உணவை இட்டால் போதும்,  குறையாமல் வளர்ந்து கொண்டே வரும்.

நாள் முழுதும் உணவளிக்கும் இதில், அஸ்தமன பொழுதில் கடைசியாக பாஞ்சாலி உணவருந்தி பாத்திரத்தை கவிழ்த்து விட்டால்,  மறுநாள் உதய வேலையில் தான் உணவை எடுக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  என்று சொல்லி அட்சய பாத்திரத்தை தருகிறார்.

அதை பெற்றுக்கொண்ட பாண்டவர்கள் தாங்களும் உணவருந்தி,  வந்தவர்களுக்கும் அதில் இருந்தே உணவை அளித்து உபசரித்து வந்தார்கள்.

இந்த செய்தியை கேள்வி பட்டதும் பொறாமையின் சிகரமான துரியோதனின் வயறு கபகபவென்று  ஏறிய துவங்கியது.  எப்படியாவது ஒரு சூழ்ச்சி நாடகத்தை அரங்கேற்றி பாண்டவர்களை வீழ்த்திவிட நினைத்தான்.

அதற்கு தகுந்தாற்போல்  கோவமே உரித்தான துர்வாச முனிவர் ஒரு நாள் அஸ்த்தினாபுரம் வந்தார்.   வந்தவருக்கு உணவளித்து உபசரித்தான் துரியோதனன்.

உபசரிப்பில் மகிழ்ந்த துர்வாச முனிவர்  துரியோதனை பார்த்து... மகனே துரியோதனா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.

நயவஞ்சக துரியோதனன் நயமாக எடுத்துரைக்கிறான். தவத்தில் சிறந்த தவசிலரே.... என் இல்லம் தேடி வந்து விருந்துண்டு மகிழ்ந்தது போல்,  என் பங்காளிகள் கானகத்தில் இருந்தாலும் ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள்.

அவர்களையும் சந்தித்து உணவருந்தி வாழ்த்தி விட்டு செல்ல வேண்டும்.  அதுவும் மாலை நேரத்தில் செல்ல வேண்டும் என்பதே என் வேண்டுகோள். 

அப்படியே ஆகட்டும்.  இப்பொழுதே கானகம் செல்கிறேன் என்று சொல்லி விட்டு தன பத்தாயிரம் மாணவ சீடர்களுடன் பாண்டவர்கள் இருப்பிடம் நோக்கி வருகிறார் துர்வாச முனிவர்.

அடுத்து நடக்க போகும் விபரித்ததை அறிந்து கொள்ள துரியோதனனும், அவன் சகாக்களும் காத்திருக்கின்றனர்.  

ஏன்?

எல்லாம் காரணமாகத்தான். துர்வாச முனிவர் போகும் நேரம்,  அட்ச்சய பாத்திரத்தில் இருந்து உணவு வராது. இதையே காரணமாக வைத்து சபித்து விட்டு போய்விடுவார்.  இதைத்தான் துரியோதனன் எதிர் பார்த்தான்.  ஆனால் நடந்தததோ வேறு.

தங்கள் இருப்பிடம் தேடி வந்த துர்வாச முனிவரை முறைப்படி வரவேற்கிறார்கள் பாண்டவர்கள்.  நீண்ட தூரம் நடந்தே வந்ததால் கலைத்து போயிருக்கிறோம்.  

அம்மா பாஞ்சாலி நீ உணவை தயாரித்து வை.  நானும் என் சீடர்களும் அருகில் உள்ள நீரோடையில் ஸ்நானம் செய்துவிட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு  தன் சீடர்களுடன் நீராட செல்கிறார்.

அட்ச்சய பாத்திரத்தில் உணவிருக்காதே... என்ன செய்வது என்று திகைக்கிறாள் பாஞ்சாலி. உடனே கண்ணனை  பிரத்திக்கிறாள். 

என்ன பாஞ்சாலி.... என்னை ஏன் அழைத்தாய்?

என்னருமை அண்ணா ... கண்ணா... நிலைமை விபரிதமாக போய்விட்டது. உணவருந்தி முடித்து,  அட்ச்சய பாத்திரத்தை கழுவியும் கவுத்து விட்டோம்.

இந்த நேரம் பார்த்து துர்வாச முனிவர்  தன் பத்தாயிரம் சீடர்களுடன் வந்தார்.  வந்தவர்... நாங்கள் நீராடி விட்டு வருகிறோம்.  அதற்குள் உணவை தயாரித்து வை என்று சொல்லி விட்டு போயிருக்கிறார்.

என்ன செய்வது.  அவரோ கோபக்காரர். ஆத்திரத்தில் ஏதாவது சாபத்தை கொடுத்து விட்டால் எங்கள் கதி என்ன? நீதான் காக்க வேண்டும்.

சரி..... கவலைபடாதே. அந்த அட்சய பாத்திரத்தை எடுத்து வா.

அதை தான் கழுவி வைத்து விட்டேனே.

இருந்தாலும் எடுத்து வா.

அட்சய  பாத்திரத்தை  கொண்டு வந்து கொடுக்கிறாள் பாஞ்சாலி.  அதில் ஒரு மூளையில் ஒரு சோற்று பருக்கை ஒட்டி கொண்டிருக்கிறது.   அதை எடுத்து பரந்தாமன் வாயில் போட்டு கொண்டதும்,  அனைத்து ஜீவராசிகளுக்கும் அக்கணமே பசி இல்லாமல் போயிற்று.

பாண்டவர்கள் இல்லத்தில் பரிமாரபோகும் விருந்தை பற்றியே நினைத்து கொண்டிருந்த துர்வாச முனிவருக்கும் சரி,   அவருடைய சிடர்களுக்கும் சரி பசி என்பதே இல்லாமல் போய் விட்டது.

என்ன விந்தை..  இதுவரை புசித்திராத வகையில் ஒரு விருந்தை சாப்பிட்ட மாதிரி ஒரு மன நிறைவு வந்து விட்டதே என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

பீமனை அழைத்த கண்ணன்............ உடனே போய் துர்வாச முனிவரை அழைத்து வா.  உணவு தயாராகி விட்டது என்று சொல்.  என்று சொல்லி அனுப்புகிறார்.

அனால் துர்வாச முனிவரோ ..... நேரம் கெட்ட வேலையில் வந்து பாண்டு புத்திரர்களை சோதித்தது தவறு. அவர்கள் சினந்து எதையும் சொல்வதற்குள் இவ்விடத்தை விட்டு அகன்று விட வேண்டும் என்று தன் சிடர்களுக்கு சொல்லி அவ்விடத்தை விட்டு விலகி சென்றார்.

இது அட்சய திரிதியை நாளில் பெற்ற அட்ச்சய பாத்திரத்தின் மகிமையை சொல்லும் புராண  கதை.

அட்சய திரிதியை நாளில் செய்யும் ஒவ்வொரு செயலும் வயது மாதிரி வளர்ந்து கொண்டே போகும்.  ஒருவருக்கு  உதவி செய்வதாக இருந்தாலும் கூட,   அட்சய திரிதியை நாளில் செய்தால் பன்மடங்கு புண்ணியத்தை பெற்று தரும்.

குசேலன் குபேரனாக மாறியது கூட அட்சய திரிதியை நாளில் என்கிறது புராண கதைகள்.  ரவரத்தினங்கள் தோன்றியது அட்சய திரிதியை நாளில் தானாம்.

இந்நாளில் செய்யும் காரியங்கள் பல மடங்கு பெருகும் என்பதால் தங்கம் வாங்க உகந்த நாளாக  சொல்கிறார்கள்.  நீங்களும் வாங்கி பாருங்களேன் வளருதா என்று.

இந்நாளில் இல்லாதவருக்கு உதவி செய்வதும்,  அன்ன தானம் செய்வதும்தான் முக்கியம்.





Sunday, 1 April 2012

குரு பெயர்ச்சி / KURU TRANSITT

வருட கிரகங்களில் வலிமையானது சனி.

சுப கிரகங்களில் முதன்மையானவர் குரு.  இந்த குரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மறு ராசிக்கு இடம் பெயர்வார்.  இதை குரு பெயர்ச்சி என்பார்கள்.

குறுப்பிட்ட இடத்திற்கு வந்தால் நல்லதும் செய்வார்.  குறுப்பிட்ட இடத்திற்கு குரு வந்தால் தீமையும் செய்வார்.  அதற்காக ஒரு பாடலே இருக்கிறது. 

ஜாதகம் பார்க்க போகும் பொது .  ஜோதிடர் திடிர்ன்னு இந்த  பிட்டு பாடலை பாடலாம்.  .அதுக்கு என்ன அர்த்தம் என்று குழம்பி கொண்டிராமல் இருக்க,  இதோ பாடல் வரிகளும்,  அதற்கான அர்த்தமும்.

பாடல் 

ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறைவைத்ததும்

ராமன்...

அவதார புருஷன்.  மண்ணில் உதித்த மகாவிஷ்ணு.  இராமாயண கதாநாயகன்.  பட்டத்து இளவரசானான ராமனுக்கு பட்டாபிழேக ஏற்பாடுகள் நடக்கிறது.  ஆனால் நாடாள வேண்டிய ராமன் காடாள போகிறான்.  மகுடம் தரிக்க வேண்டியவன் மரவுரி தரிக்கிறான்.

ஏன்?

ராமனின் தந்தையான தசரதனிடம் கைகேகி பெற்ற வரம்தான் காரணம்.

ராமன் மட்டுமா   காட்டுக்கு  போகிறான்?

இல்லை... ராமன் இருக்கும் இடம்தானே சீதைக்கு அயோத்தி.  ராமனோடு அவளும் காட்டிற்கு வருகிறாள்.   இவர்களோடு லெச்சுமணன்.

இன்றும் கூட அண்ணன் தம்பி பாசத்திற்கு அடையாள பெயரே ராமன் லெச்சுமணன் தானே.

காட்டிற்கு வந்தார்கள்.  விதி சூர்ப்பனகை ரூபத்தில் வந்தது.

யாரிந்த சூர்ப்பனகை?

ஆப்பிரிக்க பெண்ணிலும் அழகு என்று சொல்லுகிற மாதிரி,   அரக்கர் இனத்தில் அவள்தான் அழகு.  ராவணனின் தங்கை.

சர்வலெட்சனம் பொருந்திய லெட்சுமணனை பார்த்தாள்.  அடடா.. இவன்னல்லவா ஆண்மகன்,  இவன் அல்லவா மன்மதன்.........சூர்ப்பனகை இப்படித்தான்  நினைத்தாளாம். 

ஆசை வெட்கமறியாது என்பார்கள். இதற்கு சூர்ப்பனகை மட்டும் விதி விலக்கா என்ன!.  உள்ளத்தில் உதித்த ஆசையை லெட்சுமனனிடம் சொன்னாள்.

வானத்து இந்திரனே இரங்கி வந்த மாதிரி இருக்கிறாய்.  உன் கட்டான உடலை பார்த்த என் கண்கள்,   உன்னை விட்டு அகல மறுக்கிறது.  விண்ணில் இல்லை சொர்க்கம்.  மண்ணிலேயே காட்டுகிறேன் வா.. ............வந்து என்னை மணந்து கொள்.......

காதல் மயக்கத்தில் கவிதை மாதிரி பேசுகிறாள் சூர்ப்பனகை. 

ஆனால்........பெண்ணின் குல பெருமையே ஆசைகளை அடக்கி ஆள்வதுதானே.  இதை மறந்தாள்   சூர்ப்பனகை.

இந்த மூஞ்சுக்கு  இதுவேறயா...... அட்டு பிகருக்கு ஆசை ரொம்ப அதிகம் என்று லெச்சுமணன் நினைத்தானோ என்னவோ...அவள் மூக்கை அறுத்து மூளியாக்கி விரட்டி விட்டான்.

செய்தியை அறிந்த ராவணனுக்கு தான் மட்டும் இல்லை,  தன் தசையும் ஆடியது.  கொதித்தான்,  குதித்தான்,  தங்கை பாசத்தில் தவித்தான்.

அண்ணா... உண்மையில் என் பெண்மையை சுட்டான் அந்த மானுடன்.  அவனுடன்,  ஒரு இளைய தம்பதிகள் இருக்கிறார்கள். அவள் அந்த வனத்தில் வன மோகினி மாதிரியே இருக்கிறாள்.

அவள் உன் அந்தபுரத்திற்கு வர வேண்டும்.  அவள் இல்லாத அவன்.... என்னை மாதிரியே தவிக்க வேண்டும்.  

கோவத்தில் இருந்த ராவணனுக்கு சூர்ப்பனகை வைத்த தீ பற்றி எரிந்தது.  உடன் அழைத்தான் மாரீசனை.

மாரிசா ...... உன் மன்னனின் கட்டளை,   மாய மானாக உருவெடு.   யாரோ... வன மோகினி மாதிரி  இருக்கிறாராலாம்.  அவள் முன் துள்ளி விளையாடு.  மற்றதை நான் பார்த்து கொள்கிறேன்.

மாரிசன் போனான்.  சீதை அந்த மானை பார்த்தாள்.  பிடித்து கொடுங்கள் என்று ராமனிடம் சொல்கிறாள்.

மனையாள் ஆசையை நிறைவேற்றுவது மணம் முடித்தவன் கடமை அல்லவா.  என்று நினைத்தவன் மானை துரத்தி போகிறான்.   இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சீதையை தூக்கிக்கொண்டு போகிறான் ராவணன்.

இது கதை...  சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போனபோது ராமன் ஜாதகத்தில் குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருந்தாராம்.

மனைவியை பிரிந்த ராமனின் மன நிலை எப்படி இருந்திருக்கும்.  அப்படி ஒரு தவிப்பை தருவாராம் குரு.   இதுதான் முதல் வரி சொல்லும் கருத்து.

பாடல் 

தீதிலாதொரு முன்றிலே துரியோதனன் படை மாண்டதும்....

துரியோதனன்

கௌரவர்களில் முத்தவன்.  பிறக்கும் போதே ராஜகுமாரனாக பிறந்தவன்.  இறக்கும் தருவாய் வரைக்கும்  மன்னனாகவே  இருந்தவன்.  இவன் பரணி நட்சதிரத்தில்  பிறந்தவன்.  இதை வைத்துதான் பரணி தரணி ஆளும் என்று சொல்வார்கள்.

துரியோதனனின் பங்காளிகள் தான் பஞ்சபாண்டவர்கள்.  ஒரு சமயம் இவர்கள் இருவருக்கும் இடையே சூதாட்டம் நடந்தது.  இதில் நாடு நகரங்களை இழந்த பாண்டவர்கள் ,  ஒப்பந்தப்படி வனவாசம் சென்றார்கள்.

வனவாசத்தின் முடிவில் திருப்பவும் நாட்டை ஒப்படைக்க வேண்டும்.  இங்குதான் திரியோதனன் தவறு செய்கிறான்.

தூதுவனாக வந்த கண்ணன் பாண்டவர்களின் நாட்டை திரும்ப கேட்கிறான். ஆனால் திரியோதனன் மறுக்கிறான்.  வேண்டுமானால் என்னுடன் சண்டையிட்டு  நாட்டை திரும்ப பெறட்டும் என்று ஆணவமாக சொல்கிறான்.

காரணம் என்ன?

அவனது ஜாதகத்தில் குரு பகவான் முன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்தார்.  அதனால் அவன் மூளை தப்பாக யோசித்தது.  யுத்தம் செய்ய முடிவு செய்கிறான்.

அதனால் அவனும்  இறந்து,   அவனை சார்ந்தவர்களும் இறந்து கௌரவ வம்சமே இல்லாமல் போனது.

பாடல் 

இம்மை எட்டினில் வாலி பட்டமிழந்து போம்படியானதும் 

வானர  அரசர்களில் வலிமை மிகுந்தவன் வாலி.  கிஷ்கிந்தையின் அரசன். வலிமையுளும, வல்லமையுளும் ராவணனை விட சிறந்தவன்.

 இவன் வாழ்ந்த காலத்தில் இவனுக்கு இணையாக யாருமே இல்லை.  சர்வ லோகங்களும் அஞ்சி நடுங்குகிற மாதிரி இருந்தான். 

நேரடியாக யுத்தம் செய்து இவனை வெல்லவே முடியாது.  வாலியின் தம்பிதான் சுக்ரீவன்.  இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறாத அன்பு கொண்டவர்கள்.

ஒரு சமயம்.. கிஷ்கிந்தையை அழிக்க வந்த மாயாவி ஒருவனோடு வாலி சண்டையிட்டான்.   சண்டை நடந்தது ஒரு குகையின் உள்ளே.

அந்த குகையின் வாசலில் வானரபடையுடன் சுக்கிரவன் காவல் இருந்தான்.  சண்டை பல நாள் நீடித்து.  ஒரு நாள் குகையின் உள்ளே இருந்து சுக்கிரிவா ஆபத்து என்று வாலியின் குரல் கேட்டது.   அடுத்து சுக்கிரிவா மாயாவிடம் இருந்து உன்னை காத்து கொள் என்று குரல் வந்தது.

வாலியின் குரல் கேட்ட சுக்கிரவன் அதிர்ச்சி அடைந்தான்.  மாயவியால் தன சகோதரன் வாலி கொள்ள பட்டு விட்டான். மாயாவி வெளியே வந்தால்,  தனக்கும், வானற்படைகளுக்கும் ஆபத்து என்று சுக்கிரீவன் நினைக்கிறான்.

உடனே குகையின் வாசலில் பெரிய பாறையை உருட்டி வைத்து,  குகை வாசலை மூடிவிட்டு கிஷ்கிந்தைக்கு திரும்பி விட்டான்.

ஆனால் இது மாயாவின் வேலை.  வாலி மாதிரியே குரல் கொடுத்தான்.  ஆனாலும் தன் பலத்தால் மாயாவியை கொன்று விட்டு,  வாசலை மூடி இருந்த பாறையை உடைத்து வெளியே வந்தான் வாலி.

நேரே கிஷ்கிந்தைக்கு வந்தான்.  அங்கே  சுக்கிரவன் முடி சுட்டிக்கொண்டு மன்னனாக இருந்தான்.  இதை பார்த்த வாலிக்கு கோவம் தலைக்கு ஏறியது. தானே மன்னனாக வேண்டும் வேண்டும் என்ற ஆசையில் குகைக்குள் வைத்து மூடி விட்டான் சுக்கிவன் என்று நினைக்கிறான் வாலி.

அவனை அடித்து விரட்டினான்.  முதலில் அனுமன் நட்பு கிடைத்தது.  அதன் பின்பு ராமனின் நட்பு கிடைத்து.  வாலியை வதம் செய்து கிஷ்கிந்தைக்கு மன்னனாக ஆக்குகிறேன்.  என்று உறுதி அளித்தான் ராமன்.

ராமன் துணை இருக்கும் தைரியத்தால்  வாலியை போருக்கு அழைத்தான் சுக்ரீவன்.  இந்திரன் தனக்கு பரிசாக அளித்த மந்திர மாலையை அணிந்து கொண்டு போருக்கு வந்தான் வாலி.

அந்த மந்திர மாலையை அணிந்து கொண்டால்,  எதிரில் இருக்கும் எதிரியின் பலத்தில் பாதி வாலிக்கு வந்துவிடும்.  

ஆனாலும் ராமன் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போதே,  ஒரு மரத்தின் பின்னால் மறைந்து  இருந்து வாலி மீது அம்பை செலுத்தி வீழ்த்துகிறான் ராமன்.

ராமன் வாலியை மறைந்தது இருந்து தான் கொன்றான்.  ராமனின் வீரத்திற்கு இது ஒரு இழுக்கு என்று கூட சொல்வார்கள்.

போரில் அடி பட்டு விழுந்து கிடந்தாலும்,  அந்த நேரத்திலும் ராமனை எள்ளி நகையாடுகிறான் வாலி.

ராமா............. நான் உன்னை இதுவரை  பார்த்தது இல்லை.   ஆனால் நீ மனிதருள் மாணிக்கம் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.  ஆனால் அதற்கு நீ தகுதி உள்ளவனா என்று யோசித்து பார்.

ராவணன் உன் மனைவியை தூக்கிக்கொண்டு போனான்.  உண்மையில் வானர உதவியை நாடுவதாக இருந்தால்,  கிஷ்கிந்தையின் அரசன் நான்.  என் உதவியை அல்லவா பெற்றிருக்க வேண்டும்.

என்னால் ஒதுக்கப்பட்ட சுக்கிரிவனை  எதற்கு துணைக்கு அழைத்தாய்.  என் பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்குவான் ராவணன்,  நான் சொல்லி அனுப்பி இருந்தாலே போதும்,  உன் மனைவியை உன்னிடம் சேர்த்து விட்டு மன்னிப்பு கோரி இருப்பான்.

வாலி உன் வல்லமை எனக்கு தெரியும்.  ராவணை உன் வாலில் கட்டி உலகம் முழுவதும் சுற்றி சுற்றி அடித்தாய்.  உயிர் பிழைத்தால் போதும் என்று ராவணன் ஓடி போனான்.

ஆனால்... நீ யார்... உன் தம்பி சுக்கிரவனின் மனைவியை அபகரித்தவன்.  ராவணனும் பிறர் மனைவியை அபகரித்தவன்.   நீங்கள் இருவருமே ஒரே மாதிரியான குற்றவாளி.

பின் எப்படி உன்னிடம் உதவியை பெற முடியும்.  நான் மனைவியை பிரிந்து எப்படி துன்பபடுகிறனோ,  அதை போலவே சுகிரிவனும் துன்பப்படுகிறான். அதனால் அவன் உதவியை பெற்றேன்.

சரி... உண்மையான வீரனாக இருந்தால்.. என்னுடன் நேருக்கு நேர் மோதாமல், மறைந்து இருந்து தாக்கியதன் காரணம் என்ன?  நீ கோழை. 

வீரத்தை பற்றி பேச உனக்கு அருகதை இல்லை.  நீ இந்திரன் தந்த மந்திர மாலையை ஏன் அணிந்தது கொள்கிறாய். எதிரியின் பலம் பாதி உனக்கு வரும் என்பதால் தானே. 

நீ உண்மையான வீரனாக இருந்தால்,  உன் பலத்தை மட்டுமே நம்பி களத்தில் நிற்க வேண்டும்.  உன் உடன் பிறந்தவன் சுக்கிரவன்.  இருந்தும் அவன் பலத்தில் பத்தியை சேர்த்து கொண்டு,  உன்பலத்தையும் சேர்த்து அல்லவா யுத்தம் செய்தாய்.

நான் மந்திர மாலையால் பெற்ற பலத்தை மட்டும் தான் அம்பு எய்து விளக்கினேன்,  நீ தோல்வியை தழுவியதற்கு சுக்கிரிவனின் பலமே காரணம்.

சரி... இத்தனை தத்துவம் பேசும் ராமன் நேருக்கு நேர் நின்று வாலியை எதிர்த்திருக்கலாமே  என்ற கேள்வி எழும். 

வாலி தர்மத்தை தவறியவன்.  அவன் மந்திர மாலையை அணிந்து இருக்கும் போது,  ராமன் எதிரில் இருந்தாலும்,  ராமனின் பலமும் வாலிக்கு சேர்ந்திருக்கும்.

ஒரு கெட்டவனுக்கு தன பலம் போய் சேரக்கூடாது என்ற காரணத்தால் தான் மறைந்து இருந்து வாலியை வதம் செய்தார். 

சரி... இவ்வளவு வல்லமை பெற்ற  வாலி மறைவுக்கு காரணமே குரு அவன் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்ததுதான் காரணம்.

தொடரும் ............







 

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...