ads

Tuesday, 2 April 2013

ராமன் நடந்த படி நடக்க வேண்டும், கண்ணன் சொன்னபடி கேட்க வேண்டும்!!




ராமன் ஒழுக்க சீலன். ஏகபத்தினி விரதன். பெரியோர்களை மதித்து போற்றுபவன்.

தந்தை சொல்லை தாரக மந்திரமாக ஏற்று கானகம் சென்றவன்.வசிட்டர், விசுவாமித்திரர், பரத்வாஜர், அகத்தியர் போன்ற முனிவர்களின் ஆலோசனையின் படி கேட்டு நடந்தவன் என்பது ராமாயாணம் படிக்கும் போது தெரியவருகிறது.

குகனை தன் தம்பியரில் ஒருவனாக என்றுக் கொண்டதில் இருந்தும், அனுமனை தந்தையின் ஸ்தானத்தில் வைத்து போற்றியதில் இருந்தும், ராமன் அனைவரையும் வேறுபாடின்றி மதித்து அன்பு செலுத்துபவன் என்று அறிய முடிகிறது.

இத்தகைய குணங்களினால்தான் இப்பூமியிலே அனைத்து குணநலன்களிலும் சிறந்தவனாக யாரும் இருக்கிறார்களா என்று வால்மீகி கேட்கும் போது நாரதர், அப்படி பட்ட ஒருவர் அயோத்தியை அரசாலும் ஸ்ரீராமர் என்று கூறினார். 

இப்படிப்பட்ட ராமனை போல் உயர் குணங்களுடன் ஒருவன் திகழ வேண்டும் என்பதை சொல்லத்தான் ராமன் நடந்தபடி நடக்க வேண்டும் என்று ஆன்றோர் சொல்லி வைத்துள்ளனர்.



அதே போல் மகாபாரதத்தில் கண்ணன் ஆலோசனை  சொல்வதில் தந்திரசாலியாக திகழ்கிறான்.

கண்ணனின் ஆலோசனைப்படியே குந்தி கர்ணனிடம் வரம் கேட்கிறாள். அது பாண்டவர்களுக்கு சாதகமாக அமைந்தது.

பாண்டவர்கள் கண்ணனின் ஆலோசனைப்படியே செயல்படுகின்றனர்.  குருசோத்திர போரிலும் தன் உறவினர்களை பார்த்து தயங்கி நின்ற அர்ச்சுனனுக்கு, அவனுடைய கடமையை பற்றி உபதேசம் செய்கிறான்.

அர்ச்சுனனின் சந்தேகங்களை போக்குகிறான். பீஷ்மரை வெல்வதற்கும், துரோணரை மாய்ப்பதற்கும், கர்ணனை  சாய்ப்பதற்கும் கண்ணின் ஆலோசனையே உதவி புரிந்தன.

மகாபாரத போரில் பாண்டவர்களின் வெற்றிக்கு அவர்கள் கண்ணனின் சொல்படி நடந்ததே காரணம். எனவே தான் கண்ணன் சொன்னபடி கேட்க வேண்டும் என்று கூறும் வழக்கம் வந்தது.

மதிவாணன்

Monday, 1 April 2013

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு விடுதலை புலிகள் அனுப்பிய கடிதம்.


விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் சுட்டு கொல்லப்பட்ட படம் வெளியான நாள் முதலே உலகம் முழுவதும் தமிழ் ஈழ அலை அடிக்க தொடங்கி விட்டது.

இதன் தாக்கம் தமிழ்நாட்டில் சற்று அதிகம். கல்லூரிமாணவர்களை போராட்டக்களத்திற்கு இழுத்து  வந்தது..

பாவம் அரசியல் கட்சிகள். இதை வைத்தே பொழப்பை நடத்தியவர்கள் ஆசையில் மண் விழுந்து விட்டது.

ஆனாலும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட மு.க ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அலை வீசுவதை உணர்ந்து கொண்டவர், அதில் இருந்து விலகி வந்து விட்டார். 

இவர் எட்டடி பாய்ந்தால் ஜெயலலிதா பதினாறு அடி பாய்கிறார். 

தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் , இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் , ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்களுக்குத் தமிழ் நாட்டில் தடை என அடுத்தடுத்து அதிர் வேட்டுக்களை போட்டு கொண்டிருக்கிறார். 

மக்களின் நாடி துடிப்பை அறிந்து அதற்கேற்ப்ப முடிவுகளை மேற்கொள்வதுதான் ஆளும் அரசாங்கத்தின் கடமை. அதை மக்கள் எதிர்ப்பார்ப்புக்கு மேல் ஒரு படி மேலே சென்று நடத்திக்கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர்.

ஒரு காலத்தில் ஈழ பிரச்சனயை பற்றி செவி சாய்க்காத ஜெயலலிதா இப்போது போகும் வேகம் புயல் வேகம்.

அடுத்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே எல்லாம் செய்கிறார் என்றாலும், இதனால் மத்திய அரசு இலங்கைக்கு முழு ஜால்ரா போட முடியாத நிலை.

பொதுவாக புலிகள் இயக்கத்தில் இருந்து யாருக்கும் கடித பரிமாற்றங்கள் அதிகம் செய்வதில்லை.

தங்களுக்கு அவசியம் ஏதும் காரியம் ஆக வேண்டி இருந்தால் மட்டும் இது நடக்கும்.

சாவின் விளிம்பில் நின்ற கடைசி காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவராக இருந்த நடேசன், அ.தி.மு.க. தலைமைச் செயலகத்துக்கு பேக்ஸில் அனுப்பி வைத்த கடிதம் ஒன்றை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தலாம் என்று ஒரு செய்தி சொல்கிறது.

அப்படி என்ன இருக்கிறது அந்த கடிதத்தில். அதை நீங்களே பார்த்து தெரிந்து  கொள்ளுங்கள்.





இறந்த பின் எரிப்பது, புதைப்பது எது சரி?


இறப்பு வீட்டுக்கு ஒருவர் புதிதாக போனால் இடுகாடா, சுடுகாடா என்று கேட்கிற பழக்கம் கிராமபுரங்களில் உண்டு. இடுகாடு என்பது புதைப்பது, சுடுகாடு என்பது எரிப்பது.

இறந்தவர்களை தகனம் செய்வதே சரியான முறை என்று கிருபானந்த   வாரியார் சொன்னதாக ஞாபகம்.

ஞானிகள், மகான்கள் போன்றவர்களைதான் அடக்கம் செய்ய வேண்டும். மற்றவர்களை தகனம் செய்ய வேண்டும் என்று அவர் கூறி இருந்தார்.

தசரதரை ராமர் தகனம் செய்து, அவரது அஸ்தியை கங்கை கரையில் கரைத்தார் என்றும், ஆதி சங்கரர் அவரது அன்னையை தகனம் செய்தார், பட்டினத்தாரும் அவரது அன்னையை தகனமே செய்தார் என்றும் படித்திருக்கிறோம்.

தேகம் என்ற சொல்லுக்கு தகிக்கப்படுதல் என்று பொருள்.

எறிதனில் இடும் வாழ்வே என்கிறார் அருணகிரி நாதர்.

அக்னியில் வாழ்ந்த (உள்ளிருக்கும் அக்னி சூட்டில்) உடம்பை அக்னியிடமே   தந்து விடுவதே அந்தியேஷ்டிக் கிரியை எனப்படுகிறது.

ஆழமாக இதை பார்த்தோமானால், இந்த உடம்பு ஐம்பூதங்களால் ஆனது. பிறப்பெடுக்கும் ஆன்மா, இந்த உடலை ஐம்பூதங்களிடம் இரவல் வாங்கி வருகிறது.

இந்த பிறவி முடிந்ததும், ஐம்பூதங்களிடமே திருப்பி ஒப்படைத்து விட்டு  தன் பயணத்தை தொடர்கிறது ஆன்மா.

உயிர் உடலை விட்டு பிரிந்தவுடன் காற்றுடன் கலந்து விடுகிறது.

கபாலம் வெடித்தவுடன் மனம் ஈதர் என்னும் வெட்ட வெளியில் கலந்து விடுகிறது.

உடலை இயக்கி, உணவுகளை ஜீரணம் செய்யும் ஜடாக்கினி அக்னியோடு ஒன்றி விடுகிறது.

அஸ்தியை கங்க்கையில் கரைக்கிறோம். மண் மற்றும் நீர் தத்துவங்களை கொண்ட உடல் எரிந்தவுடன், எஞ்சியிருக்கும் சாம்பல் நீரில் கரைந்து நிலத்தில் உறைகிறது.

உடலை எரிப்பத்தின் தத்துவமே இதுதான்.



ஆனால் யோக நெறியில் நின்றவர்களையும், பிறப்பு இறப்பு நிலையை கடந்த ஞானிகளையும் அடக்கம் செய்து அச்சமாதியை வழிபடும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது.

சூச்சும உடலில் இருந்து கொண்டு ஞானிகள் அருளுவார்கள் என்பது நம் நம்பிக்கை.

சிங்கப்பூரில் இறந்தவர்களை எரிக்க வேண்டும் என்பதே அந்நாட்டு சட்டம். காரணம் அங்கே சமாதிக்கு இடம் பற்றாக்குறை.

நம் நாட்டை பொருத்தவரை விபத்தில் அகால மரணம் அடைந்தவர்களையும், அற்பாயுளில் மடிந்தவர்களையும், நோய் வந்து இறந்தவர்களையும், வாழும் வயதில் இறந்தவர்களையும், ஒரு சில கெட்ட திதிகளில் இறந்தவர்களையும் எரித்து விடுகிறோம்.

காரணம் இந்த உலக வாழ்க்கையில் கொண்ட பற்றினால் இறந்த பின்னும் அவர்கள் ஆவிஉடலில் அலைவார்கள்.

அவர்கள் ஆவி உடல் புதைக்கப் பட்டிருக்கும் சமாதியை சுற்றி அலையும். எரித்து விட்டால் அவர்கள் ஆன்மா மேலுலகம் சென்று விடும் என்பது ஒரு நம்பிக்கை.

நன்றாக வாழ்ந்து மறைந்த பெரியோர்களுக்கு இன்னும் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காது. அவர்கள் ஆன்ம பக்குவ பட்டிருக்கும். அவர்களால் நமக்கு தொல்லைகளும் இருக்காது. அவர்களை சமாதி வைப்பதில் தவறில்லை.

இது நாம் கடை பிடிக்கும் இம்முறையே இருந்துவிட்டு போகட்டுமே. இதில் என்ன பிரச்சனை.

மதிவாணன்

Sunday, 31 March 2013

அம்மா... என் அம்மா...!



அம்மா... என் அம்மா...! 
கனவு கானக் கற்றுக் கொடுத்தவர் நீங்கள்!

கனவு மட்டுமே கண்டு கொண்டிராமல் 
அதை நனவாக்கும் மனவலிமை நல்கியதும் நீங்களே!

இளவயதில் முதல்தர மதிப்பெண் நோக்கி வெறியூட்டினீர்கள்!
நிறைவேற்றினேன்!

சங்கீதப் பயிற்சிக்கு உடன் வந்து நின்றீர்கள்!
சேர்ந்திசை பாடினோம்!

எத்தனை நாள் பசியோடு நான் பள்ளியில் இருந்து திரும்பியிருப்பேன்!
சந்தியா வந்தனம் இன்றி சாப்பாடு இல்லை என்றீர்கள்!
வெறுப்போடு துவங்கி வேறு வழியின்றிப் பழக்கினேன்!

ஒழுங்கு முறையாய்ப் புகுந்து உள்கலந்தது!
அம்மா... என் வாழ்க்கை என் விருப்பத்தால் அமைந்ததில்லை!
ஒவ்வொன்றும் உங்கள் விருப்பம்! உங்கள் கனவு!
நனவாக்கிக் காட்ட முயன்றதே என் லட்சியம்!

எத்தனை நாட்கள் அம்மா... 
என் கவிதைக் கிறுக்கல்களை
தலைமாட்டில் வைத்துத் தூங்கியிருக்கின்றேன்!
எழுந்து பார்க்கும்போது அதைச் சொல்லி சிலாகிப்பீர்கள்!

என் தாத்தா தமிழ்ப் புலவர்! புத்தனேரி புத்தி உனக்கும் வந்ததடா என்பீர்கள்!
உற்சாகம் தந்த உங்கள் பதிலால்... 
பதின்ம வயதினிலே தேடித்தேடித் தமிழ் படித்தேன்!

அப்போதெல்லாம்... 
தமிழ் சோறு போடுமாலே! ஒழுங்கா படிக்கிற வழியைப் பார்! 
திட்டித் தீர்த்த அப்பா... எனக்கு வில்லனாய்த்தான் தோன்றினார்! 
நெருப்புக் கோளமாய் வெறுப்புக் கோபம் சுமந்தேன்!

வேறு வழியின்றி... 
கல்லூரிக் காலத்தே கணக்கு புகுந்தது!
பிணக்கின்றி தமிழும் ஆண்டது!

வேதம் கற்கச் சொன்னீர்கள்... கற்றேன்!
தர்மம் மீறாதிருக்க வேண்டும் என்பீர்கள்!
தருமச் சிந்தை நீங்கள் சொன்ன கதைகளால் என்னுள் புகுந்தன!

பிரபந்தம் பாடச் சொன்னீர்கள்... செய்தேன்!
சமையல் கற்றுத் தந்தீர்கள்! நுணுக்கம் கற்றேன்!
தையல் இயந்திரத்தின் சத்தத்தில் கவிச் சந்தம் தருவேன்!
ரசித்துக் கேட்பீர்கள்! உன் விளக்கமே அலாதி என்பீர்கள்!

யாரோ இதழ்களில் எழுதிய துணுக்குத் தோரணங்களையும் கட்டுரைகளையும்
பிழை மலிந்தும் பிழைத்திருக்கின்றனவே என்றீர்கள்! 
நீ மட்டும் இதை எழுதினால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்...?
உங்கள் ஆசையை நிறைவேற்ற... எழுதத் தொடங்கினேன்!

படிப்பு வேறாயினும் பணி வேறாயினும் 
அம்மா... இந்த எழுத்தின் சுவையால்...
பத்திரிகை எனை ஆட்கொண்டது! இதழியல் என்னுள் ஊற்றுக் கொண்டது!

எனை அறியாமல் என்னை ஆக்கிரமித்த இந்தத் துறைக்காக 
மகிழ்வு கண்டவர் என்னவோ நீங்கள்தானே அம்மா!

வானொலிப் பேச்சா..? தொலைக்காட்சி நேரலையா...?
நீ பேசி நான் கேட்க வேண்டும் என்றீர்கள்! 
எல்லாமும் நன்றாய்த்தான் நிகழ்ந்தன!

இதழியலின் எல்லா எல்லைகளிலும் கால்பதிக்க...
என் னம்மா... எல்லாம் நீங்கள் தந்த ஊக்கம்தானே!

ஆனால் இப்போது..! 
என்னம்மா ஆயிற்று உங்களுக்கு..?
வேறு வேலையில் நீ இருந்திருக்கக் கூடாதா என்கிறீர்கள்?!
உங்கள் மனத்தை மாற்றியது எது? 
ஆசைக் கூட்டைக் கலைத்தவர் யார்?
உங்களின் எல்லா ஆசைகளையும் இத்தனை நாள்
நிறைவேற்றிக் கொண்டே வந்தேன்!
எல்லாம் 
அந்த இறைவன்.. அரங்கன் பின்னே நின்று இயக்கியதால்!

எல்லாச் சூழலிலும் சக்தி வாய்ந்ததாக அவன் அருள் இருந்திருக்கிறது...
ஆனால் அம்மா.... 
அண்மைக் காலமாக நீங்கள் புதிதாக ஓர் ஆசையை வெளியிட்டீர்கள்! 
வருடங்கள் பல உருண்டோடிய பின்னே... 
பேரன் பேத்தி பார்க்க எனக்கும் ஆசையிருக்காதா என்றீர்கள்!

உண்மைதான் அம்மா! 
ஆனால் காலம் மாறிவிட்டதே! கருத்தும் கடந்துவிட்டதே!
கடவுளைக் காட்டிலும் வலிமையானவர்கள் ஆதிக்கம் செலுத்துவதால்...

அம்மா....
இது மட்டும் நிறைவேற்ற இயலாமல் போகிறது! 
கடவுளைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவராக
பெண்ணைப் பெற்றவர் முன் நிற்கிறார்!

இந்துஇசத்தைக் காட்டிலும் வலிமை வாய்ந்ததாக
கன்ஸ்யூமர்இசம் முன் நிற்கிறது!

அளவற்ற பேராசைகளுடன் கல்யாணச் சந்தை! 
எல்லையற்ற எதிர்பார்ப்புகளுடன் கல்யாணப் பெண்!

உங்கள் பையனுக்கு பத்திரிகை வேலையா? 
அப்படி என்றால் மேற்கொண்டு பேச வேண்டாம்...
இப்படிப்பட்ட பேச்சுகளைக் கேட்டு நீங்கள் வருந்தினால்....
அம்மா... விட்டு விடுங்கள்!

புரிதல் இல்லாத வாழ்க்கை நரகம்!
அம்மா...

இவர்களுக்காக..... நீங்கள் கற்றுத் தந்த 
எளிமையை, ஒழுக்கத்தை, பண்பை, தர்ம நெறியை
அம்மா.... 
என்னால் கைவிட முடியாது! 
மன்னித்து விடுங்கள் உங்கள் மகனை!

செங்கோட்டை ஸ்ரீராம் 

இலங்கை பெண்ணோடு சீமானுக்கு கல்யாணமா?




பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே,  வீரநடை,  தம்பி,  வாழ்த்துகள் என்ற திரைப்படங்களை இயக்கியவர்.பொறி,  எவனோ ஒருவன்,  பள்ளிக்கூடம்,  மாயாண்டி குடும்பத்தார், மகிழ்ச்சி போன்ற திரைப்படங்களில் நடித்தவரும்மான சீமான்.

ஈழத்தமிழர்கள்   மேல் உள்ள அதீத அன்பால் சினிமாத்துறையை விட்டே கிட்டத்தட்ட  விலகியர் சீமான்.   

வருமான இழப்பை சந்தித்தாலும்  கூட, வாழ்க்கை லச்சியம் தனி ஈழம் என்பது போல்,  அவர்கள் துயங்களை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதில்  சீமானின் பங்கும் உண்டு என்பது மறுக்க முடியாது. 

ஈழ போராட்டத்துக்காக பல தடவை கைது ஆகியுள்ளார். தமிழ் மொழியில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் ஒரு பகுத்தறிவாளர்.

இதுதான் சீமானை பற்றி நாம் அறிந்தது.

இன்று சீமானை பற்றி ஒரு கிசு கிசு ஓன்று வெளியாகி இருக்கிறது இலங்கை இணையதளம் ஒன்றில். அது கல்யாண கிசு கிசு.

புலிகள் இயக்கத்தின் அரசியல்துறை பொறுப்பாளாராக இருந்தவர்  தமிழ் செல்வன் என்பது தெரிந்த விஷயம்.. அவரிடம்  நேரடி  உதவியாளராக செயற்பட்டுவந்தவர் அலெக்ஸ்.



சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்றில்லாமல் தமிழ் செல்வன் எங்கு சென்றாலும் அவருடன் நிழல் போல் தொடர்ந்து சென்றவர்  இந்த அலெக்ஸ்.

இப்போது இவர் இல்லை. இடைத்தங்கல்  முகாமில் தங்கி இருக்கும்  இவரின் மனைவியை தான் சீமான் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் கசிகின்றன.

ஒரு அபலை பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க சீமான் முயல்கிறார் என்று நினைக்க விடாமல், அந்த செய்திகளுக்கு பின்னால் வேறு செய்திகளையும் கொளுத்தி போடுகிறது  அதே இணையதளம்.

நாடு கடந்து வாழும் இலங்கை தமிழர்கள் அளித்த நன்கொடைகள், அதை பெற்று, புலிகளுக்கு தேவையான ஆயுதங்கள்,உபகரணங்கள் பெறுவதற்காக பல்வேறு நாடுகளில் புலிகள் சார்பில் முதலீடுகள் செய்யப்பட்டன. 

இது அனைத்துமே புலிகள் பெயரில் இல்லாமல் நம்பகமான தனி நபர்கள் பெயரில் அந்தந்த நாடுகளில் செய்யப்பட்டன.



இந்த  முதலீடுகள் பலவற்றை தமிழ் செல்வனே மேற்கொண்டதுடன் அவை தொடர்பான பல தகவல்கள் புலிகளின் தலைமைக்கு தமிழ் செல்வனால் தெரியப்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும், இம்முதலீடுகள் தொடர்பாக  A to Z  அலெக்ஸ் அறிந்து வைத்திருந்தார் எனவும் நம்பப்படுகின்றது.

இங்கே குறிப்பிட்ட நம்பகமான தனி நபர்கள் என்பது தமிழ் செல்வன் மற்றும் அலெக்ஸ் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் என்கிறது அதே இணையதளம்.

இந்நிலையில் இம்முதலீடுகள் தொடர்பாக அலக்ஸின் மனைவி அறிந்திருக்கமுடியும் என முழுமையாக நம்புகிறார்  சீமான்.

அலக்ஸின் மனைவியை கரம்பிடிப்பதன் முலம் தமிழ்செல்வன், அலெக்ஸ் குழுவினரின், வெளியுலகிற்கு வராத அல்லது தெரியாத  முதலீடுகளை தான் கையாள முடியும் என்ற புது வியூகம் ஒன்றினை வகுத்துள்ளதாக அதிர்ச்சியை தருகிறது.

விதவை திருமணம் வரவேற்க தக்க ஒன்றுதான். ஆனால் அதற்கு பின்னால் சொல்லப்படும் செய்திகளில்  எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று  தெரியவில்லை.

சில சமயம் பொய்கள் கூட உண்மை உருவத்திலேயே நடமாடும்.

ஆவதும் பெண்ணாலே...அழிவதும் பெண்ணாலே..!!


வனவாசம் முடிந்து திரும்பிய ராமருக்கு பட்டாபிழேக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. 

ஒவ்வொரு வீட்டிலும் குதூகலம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஒரே ஒரு வீட்டில் மட்டும் கவலை வந்து சப்பணமிட்டு அமர்ந்திருந்தது.

அது சொர்ணவல்லியின் இல்லம். வயது வந்த மகள், எட்டு வயது சிறுவனான மகன், சொர்ணவல்லியின் இல்லத்தில் இன்று அடுப்பில் உலை ஏறவும் இல்லை.அவ்வளவு வறுமை. 

அவளது கணவர் ஒரு மகரிஷி. தவம் செய்ய வனம் சென்றிருந்தவர் ஏழாண்டுகளுக்கு பிறகு இன்றுதான் திரும்பி வந்து களைப்போடு உறங்கி கொண்டிருக்கிறார்.

காய் கனிகளையாவது  பறித்து வா, உன் தந்தை பசியோடு இருக்கிறார் என்று மகனை அனுப்பி வைத்திருக்கிறாள். 

தண்ணீர் எடுக்க சென்ற மகள் மண்குடத்தை சுமந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறாள். சொர்ண விக்கிரம் போல் ஜொலிக்கும் குழந்தைகள் பாவம் பசியால் வெயிலில் வாடிய பயிர்கள் போல் கலைத்திருக்கிறார்கள். 

மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும். ஒரு போட்டு தங்கம் இல்லை. சொர்ணவள்ளி மனம் வருத்தத்தில் அழுகிறது.

சூரியகுல தோன்றலும், தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகனுமான ஸ்ரீ ராமசந்திரருக்கு பட்டாபிழேகம் நடைபெறுவதை ஒட்டி, எள் தானம் செய்ய இருக்கிறார். உடன் தங்க கட்டியும் அளிக்கபடுகிறது. பெற விருப்பம் உள்ளவர்கள் தெரியப்படுத்தலாம் இது அரசு ஆணை ...அரசு ஆணை ...அரசு ஆணை.. முரசொலிப்பவன் முழங்கி கொண்டே போன சமயத்தில் சுய உணர்வுக்கு வந்தால் சொர்ண வள்ளி.

அவள் மனம் இப்போது முரசை போல் முழங்கி கொண்டிருந்தது. முனிவர் மெல்ல கண் விழித்தார். அவருக்கு பழங்களை பசிக்காக உன்ன வைத்து விட்டு மெதுவாக பேச்சு கொடுக்கிறாள் சொர்ணவள்ளி.

முரசொளிபவன் முரசு கொட்டி சொல்கிறான். ஸ்ரீ ராமர் எள் தானமும், உடன் தங்க கட்டியும் தருகிறாராம் என்று ஏக்கத்தோடு பார்க்கிறாள்.

அதற்கென்ன என்றபடி மனைவியை நோக்குகிறார் முனிவர்.

இல்லை .. நம் மகள் திருமணத்திற்கு தயாராக நிற்கிறாள். ஒரு குண்டு மணி தங்கம் கூட இல்லை.  அரசர் கொடுக்கும் தங்க கட்டியை வாங்கினால்....

அடிப்பாவி.... அதற்காக எள் தானத்தையா வாங்க சொல்கிறாய். எவ்வளவு பாவம் தெரியுமா அது. போரினால் ஏற்பட்ட உயிர் பலி பாவங்களை தீர்க்கவே ஸ்ரீராமர் எள் தானம் செய்கிறார்.

அதை யாரும் வாங்க மாட்டார்கள் என்பதால் தங்க கட்டியும் தருவதாக சொல்கிறார்கள்.

என் தவ வலிமையை இழந்து அந்த பாவங்களை என்னை சுமக்க சொல்கிறாயா? மகரிஷி என்ற புனிதம் இழந்து மாபாதகன் ஆக சொல்கிறாயா சீறுகிறார் முனிவர்.


இல்லை சுவாமி ..இல்லை... பதறுகிறாள் சொர்ண வள்ளி.

பின் எப்படி? எள்ளை மறுத்து தங்கத்தை  மட்டும் வாங்க முடியும்.

இல்லை சுவாமி நீங்கள் சம்மதித்தால் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.
என்ன கூறுகிறாய்?

சுவாமி எள் தானத்தின் பாவத்தை தொலைப்போம். தங்கத்தின் பலனை அனுபவிப்போம்.

புரியும் படி சொல்.


சுவாமி ராமர் பரமார்த்த சொருபம் என்று சொல்கிறார்கள். சூரிய குல தோன்றலை தரிசித்தால் எப்பேர்பட்ட பாவமும் சூரியனை கண்ட பனி போல் விலகி விடாதோ?

சரி.

சுவாமி எள் தானம் வாங்கிய பின் வழங்கும் அவரது திரு முகத்தை பார்த்து விட்டால் பாவமெல்லாம் விளகிவிடாதோ? அதன் பின் தங்கம் நமக்கு கிட்டிடுமே. நம் மகளை திருமணம் செய்து கொடுத்துவிடலாமே.

சிங்கார முனிவருக்கு இதற்கு மனம் ஒப்பவில்லை. ஆனால் தளிர் கொடி போல். வளர்ந்து நிற்கும் மகளை பார்க்கும் போதெல்லாம் மனம் கடமையை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது. மனதை தேற்றிக் கொண்டார்.

எள் தானம் வாங்க இசைவதாக அரண்மனை அதிகாரியிடம் தெரிவித்தார்.

வசிட்டரின் மனம் சிந்தனையில் மூழ்கியது. தவ முனிவர் எள் தானம் வாங்க சம்மதித்து விட்டாரா? சரி யார் வாங்கினால் என்ன? கண்டிப்பாய் எள் தானம் கொடுத்தே ஆக வேண்டும்.

யார் எள் தானம் வாங்குவது. சிங்கார முனிவரா? கேட்கிறார் ஸ்ரீராமர்.


ஆம் ஸ்ரீராமா... எள் தானம் வாங்கும் அளவிற்கு தரம் தாழ்ந்தவர் அல்ல அவர். ஆனாலும் வறுமை அவரை இதற்கு சம்மதிக்க வைத்து விட்டது என்று நினைக்கிறேன்.

சரி தங்கத்தை மட்டும் தந்து அவரது வறுமையை போக்கி விடுவோம். எள் தானத்திற்கு வேறு யாராவது வருவார்கள். அவர்களுக்கு எள்ளும் தங்கமும் அளித்து விடலாம்.

ஸ்ரீராமா...அவரை தவிர இது வரை யாரும் சம்மதிக்க வில்லை. ஆனாலும் தன் தவத்தின் பலனை இழந்து சிங்கார முனிவர் எள் தானம் வாங்க சம்மதிக்கிறார்  என்றால் இதில் யோசிப்பதற்கு ஏதோ இருக்கிறது. பார்ப்போம்.

தானம் வழங்கும் பொது பார்ப்போம் என்றார் வசிட்டர்.


தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கார முனிவர் தானம் பெற வருகிறார். குனிந்து ஸ்ரீராமரின் கையில் எள் தானம் பெற்று ஸ்ரீராமரின் முக தரிசனத்திற்காக நிமிர்கிறார்.

ஸ்ரீராமரின் திருமுகத்தை தரிசனம் செய்யும் முன் இருவருக்கும் இடையில் ஒரு திரை வந்து விழுகிறது. முனிவர் அதிர்ச்சி அடைகிறார்.

உடல் தள்ளாடுகிறது. பாவங்கள் சூழ்ந்து தவப்பயனை, தேஜசை இழந்து தடுமாறுகிறார்.

கணவர் தங்கத்துடன் வருவார் என்று ஆவலுடன் வீட்டு வாசலில் காத்திருக்கிறாள் சொர்ணவல்லி.  அரண்மனை வண்டி ஓன்று வந்து நிற்கிறது.

ஓட்டி வந்த சேவகன் கைதாங்களோடு முனிவரை இறக்குகிறான். தான போருகளையும் கொண்டுவந்து வீட்டில் வைக்கிறான்.

பொலிவிழந்த  கணவரின் உருவத்தை பார்த்து சொர்ணவல்லி திடுக்கிடுகிறாள்.கதறி அழுகிறாள்.  கணவரை கட்டிலில் படுக்க வைக்கிறாள்.

திகைத்தவாறே தந்தைக்கு சொம்பில் பால் கொண்டு வந்து தருகிறாள் மகள். பையன் தந்தையின் கால்களை பிடித்து விடுகிறான்.

என் ஆசையால் உங்கள் தவப்பயனையும் இழக்க செய்து பாவம் உங்களை சூழ்ந்து உங்கள் பொலிவிழந்து நிற்க செய்து விட்டேனே என்று கண்ணீர் வடிக்கிறாள் சொர்ண வள்ளி.

அழாதே சொர்ணவள்ளி. இது விதி. உழைக்காமல் பெரும் செல்வத்திற்கு ஆசை பட்டதால் வந்த வினை. நம் வறுமை இப்படி செயல்பட வைத்து விட்டது. இதில் யாரை நொந்து கொள்வது.

அப்போது தூரத்தில் முரசொலி கேட்டது. பட்டபிழேகம் செய்து கொண்ட ஸ்ரீராமர் ஊர்வலம் வருதாக அறிவித்தது முரசொலி.

சொர்ண வள்ளி யோசித்தால். அவள் முகம் திடீரென்று மலர்ந்தது. முதல் முரசொலியால் இழந்த மகிழ்ச்சி, இரண்டாவது முரசொலியால் கிடைத்து விடும் என்று நம்பினாள்.

சுவாமி எழுந்திருங்கள்.நமக்கு விடுவு காலம் வந்து கொண்டிருக்கிறது. என்று கணவனை தூக்கினாள்.  பிள்ளைகள் இருபுறமும் தாங்கி கொள்ள  முனிவர் வாசலில் இறங்கி வீதியில் நின்றார்.

பட்டாபிழேகம் முடிந்து மங்கள் முழக்கங்களுடன் பவனி வந்தார் அயோத்தி அரசர் ஸ்ரீராமர்.

கூட்டத்தை மெதுவாக விலக்கி மெதுவாக கணவனை முன்னே சொர்ண வள்ளி அழைத்து செல்ல, கண்குளிர ஸ்ரீராமனை தரிசித்தார் முனிவர். ராமா ராமா என்று மனம் நெகிழ்ந்தார்.

அன்பு பொங்கும் முகத்துடன் முனிவரை பார்த்தார் ஸ்ரீராமர். முனிவரின் உடல் புத்துயிர் பெற்றது. இழந்த பலம் மீண்டும் கிடைத்தது.

புத்திசாலி பெண் என்று வசிட்டரின் வாய் முணுமுணுத்தது.


--மதிவாணன் 





வைரமுத்து காதல் கவிதை

இறக்கமுடியாத சிலுவைகள்

சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!...
வானம் நட்ஷத்திரங்களையும்!...
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!

தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!


இந்த லிங்கில் இருப்பது நான் எழுதிய கவிதை 

Saturday, 30 March 2013

இலங்கையில் இன்று!!



வானம் பொழிகிறது, பூமி விளைகிறது மக்களுக்கு என்ன குறை என்கிற மாதிரி ராஜபக்ஷ்சே வசனம் பேசுகிறார். 

ஜெனிவா தீர்மானம் ஒரு தலைபச்சமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது, யுத்த  நிறுத்தத்திற்கு பின் நடந்த புனரமைப்பு பற்றி அவர்கள் கருத்தில் கொள்ள வில்லை என்கிறார். 

முள்ளு கம்பிகளுக்கு பின்னால் முடங்கி போன தமிழர்கள் ஒரு புறம் இருக்க, தினம் தோறும் நடக்கும் ஆள் கடத்தல் தான் அதிகம் இலங்கையில்.  இதோ தொடர்கிறது கட்டுரை.

அரசே எங்கள் மகள் காணாமல் போனது எவ்வாறு... பதில் கூறு அரசே.... பதில் கூறு.., வெள்ளை வேனும் அரசுதான்.. கடத்தியதும் அரசுதான்... காணாமல் போவதும் அரசாலே.. கடத்திச் செல்வதும் அரசாலே.., குற்றம் செய்திருந்தால் கோட்டுக்கு கொண்டு வா.., எங்கள் பிள்ளைகளை மீண்டும் எங்களிடம் தா... தடுத்து வைத்திருப்போரின் பட்டியலை வெளியிடு. 

எனது அப்பா எங்கே? அவரை பார்ப்பதற்கு அனுமதி தா.., அனுமதி தா..., எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தந்துவிடு... இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு...,எங்கள் வாழ்க்கை இன்னும் தெருவில் தானா!!! இனியாவது எங்களை நிம்மதியாக வாழவிடு. .. 

இந்தப் புலம்பல்கள் எல்லாம் எதற்காகவென்று நினைக்கின்றீர்களா.... வோறொன்றும் இல்லை. காணாமல் போன உறவுகளின் உள்ளக் குமுறல்களே இவை.

ஆம், இன்னும் முற்றுப்புள்ளி பெறாத தொடர்கதையாக நீண்டுகொண்டிருக்கின்றன இந்தக் கடத்தல், காணாமல் போதல், கைது செய்தல் போன்ற மர்ம நிகழ்வுகள்.

இவற்றின் பின்னணியில் யார்?, 

யார் இவற்றை செய்கின்றார்கள்?, 

எதற்காக செய்கின்றார்கள்?, 

தமிழர்களை மாத்திரம் குறிவைப்பது ஏன்?, 

காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா?, 

கைது செய்யப்பட்டு காணாமல் போனது எவ்வாறு?, கைது செய்யப்பட்டு உயிருடன் இருந்தால் ஏன் அவர்களை விடுதலை செய்யமுடியாது? 

ஏன் அவர்களின் விபரங்களை வெளியிட முடியாது? என்ற கேள்விகள் இன்னமும் எம்முன்  கேள்விக்குறிகளாகத்தான் இருக்கின்றன. 



எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள் இருந்தும் இந்த கேள்விகளுக்கு இன்னமும் பதில் கிடைக்காமல் இருப்பது செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

இறந்தபின் தான் சுடுகாடு தெரியும் என்பார்கள், அந்த வகையில் தமது உறவை இழந்தவர்களுக்குத்தான் அதன் வலியும், வேதனையும் புரியும். இதை எப்படி எடுத்துச் சொன்னாலும் மனிதாபிமானம் இல்லாதவர்கள் புரிந்துகொள்ளவே மாட்டார்கள் என்பதே நிதர்சனம். 

கால காலமாக தலைநிமிர்ந்து நடந்த தமிழர்கள் இன்று காணாமல் போன தமது உறவுகளுக்காக நடுவீதிக்கு இறங்கி யார் யாரோ கால்களில் மண்டியிட்டு புலம்பி அழும்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஜனநாயகம், மனித உரிமை, சுதந்திரம் என அடித்தொண்டை கிழிய கத்தும் அரசியல்வாதிகள் இதனைக் கண்டும் காணாது இருப்பது ஏன்? அல்லது ஏதோ ஒரு பதிலைக் கூறிவிட்டு தம் வேலையை பார்த்துக்கொண்டு இருப்பது ஏன்? 



ஆனால் எமது உறவு எப்போது கிடைக்கும் என்ற ஏக்கம் ஒன்றே காணாமல் போன உறவுகளுக்கு மீதமாகவுள்ளது.

இந்நிலையில் 2012இல் சர்வதேச செஞ்சிவைச் சங்கத்தின் அறிக்கையின்படி 12000 ற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

2012 இல் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்கள் 5803 இதில் விதவைகள் 3713 என கணக்கிடப்பட்டுள்ளது.

'எந்தவொரு நாட்டிலும் அதன் எல்லைக்குள் சுதந்திரமாக பிரயாணம் செய்வதற்கும் வதிவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு." என அனைத்துலக மனித உரிமை பிரகடனத்தின் உறுப்புரை 13 இல் கூறப்பட்டுள்ளது. 



ஆனால் நாட்டில் நடந்தேறும் கடத்தல், காணாமல் போதல், கைது என்பது மேற்கூறப்பட்ட உரிமைக்கு ஏட்டுச் சுரைக்காய் போன்றே உள்ளது.

முழத்துக்கு முழம் சோதனைச் சாவடிகள், பொலிஸார் மற்றும் படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள் சிவிலுடை தரித்த பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்பு இவ்வாறான அதிஉயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள போதும் எவ்வாறு கடத்தப்படுகின்றனர் அல்லது காணாமல் போகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.

மனிதாபிமானம் பற்றி, மனித உரிமைகள் பற்றி எத்தனை அமைப்புக்கள் செயற்பட்டாலும் இப்பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியாதுள்ளது. இதற்குக் காரணம் அன்றைக்கு மட்டும் கதறி அழுது விட்டு அதன் பின்னர் ஓரிரு நாட்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் நாம் பின்னர் அவை பற்றி சிந்திப்பதும் உரிய தரப்பினர் அதற்கு நடவடிக்கை எடுப்பதும் இல்லை. 

கடந்த முப்பது வருடகாலமாக இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்திருக்கின்ற போதிலும் ஏன் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் உள்ளது.

குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என்று பலர் பல காரணங்களுக்காக கடத்தப்படுகின்றனர், காணாமல் போகின்றனர். 

யுத்த காரணங்களுக்காகவும், அரசியல் நோக்கம் மற்றும் பாலியல் நோக்கத்திற்காகவும் பழிவாங்கல் நோக்கத்திற்காகவும் கப்பம் பெறும் நோக்கத்திற்காவும் கடத்தப்பட்டனர். தொடர்ந்து கடத்தப்பட்டுக்கொண்டும் இருக்கின்றனர். 

மேலும் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களும் காணமல் போயும் உள்ளனர். இவ்வாறு கடத்தப்பட்டவர்களில் சிலரின் தகவல்கள் பற்றிய தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை. 

மேலும் சிலர் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சடலமாக பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டனர். மேலும் சிலர் விடுவிக்கப்பட்டனர். 

இந்நிலையில் காணாமல் போன அல்லது கடத்தப்பட்ட, கைது செய்யப்பட்ட உறவுகளை மீளவும் தமக்கு ஒப்படைக்க அதன் உறவுகள் ஜனநாயக வழியில் போராட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டு காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி கொழும்பில் கடந்த 6ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வடபகுதியிலிருந்து புறப்பட்ட பெருமளவிலான பொதுமக்களும், காணாமல் போனோரின் உறவினர்களும் வவுனியாவில் திட்டமிட்டு பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டனர். 

வவுனியாவிலிருந்து பயணிக்கும் முதியோர்கள், பெற்றோர் மீது வழியில் தாக்குதல் நடத்தப்படலாம் என தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும், இதனாலேயே கொழும்புக்கு செல்வதை அனுமதிக்கவில்லை என தெரிவித்த பொலிஸார் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் தான் இரவில் பயணம் செய்ய அவர்களை அனுமதிக்க முடியாது என கூறி கொட்டும் மழையில் வீதியிலேயே மறித்து வைத்தனர்.

கொழும்பு - விகாரமாதேவி பூங்காவில் காணாமல் போனோரை மீட்டுத்தருமாறு கோரும் பாரிய ஆர்ப்பாட்ட நிகழ்வு நடத்தப்பட்டு, பொது நூலகத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்துவதற்கும், கூட்டத்தின் முடிவில் ஐ.நா. சபைக்கு மகஜர் ஒன்றினை கையளிப்பதற்குமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுவதற்காக வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி 12 பஸ் வண்டிகளில் புறப்பட இருந்த பொதுமக்களை தொடர்ந்து பயணிக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்து பொலிஸார் டிரக் வண்டிகளை வீதியின் குறுக்கே நிறுத்தி தடுத்து வைத்தனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற முடியாத நிலை தோன்றியதால் மக்கள் வவுனியாவில் நடுவீதியில் மெழுகுவர்த்திகளை ஏந்திப் போராட்டம் நடத்தினர்.

சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் அத்தியாயம் 9 இல் 'எவர் ஒருவரையும்; நியாயமற்ற விதத்தில் கைது செய்யவோ தடுத்து வைக்கவோ நாடு கடத்தவோ முடியாது"

பொது மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அத்தியாயம் 9 (1) : 'அனைவரும் தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு உரிமையை உடையவராகின்றார். எவரும் தன்னிச்சையான கைது மற்றும் தடுத்துவைத்தலுக்கு உட்பட முடியாது. சட்டத்தில் கூறப்பட்டவாறாக அல்லாது எவருடைய தனிநபர் சுதந்திரமும் பறிக்கப்படலாகாது"

பொது மற்றும் அரசியல் உரிமை தொடர்பான ஐ.நா. சாசனம், அத்தியாயம் 19 : (1) 'ஒவ்வொருவரும் எந்த விதமான குறுக்கீடுகளும் அற்ற முறையில் தனது கொள்கையைப் பேணும் உரிமையை கொண்டிருக்கின்றார்"

அத்தியாயம் (2) "அனைவரும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கொண்டிருக்கின்றனர். 

குறுக்கீடற்ற முறையில் நாட்டின் எல்லைகளைக் கடந்தும் தமக்குத் தேவையான தகவல்களை தேடுதல் பெறுதல் மற்றும் தாம் விரும்பும் ஊடகத்தினைப் பயன்படுத்தி வாய்மொழி மூலமாகவோ எழுத்து மூலமாவோ கலை வடிவங்களினூடாகவோ தகவல்களைப் பெற்றுக்கொள்ளல் வெளியிடல் என்பவற்றிற்கான உரிமையூம் இதிலடங்குகின்றன.

இவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் காணப்படும் உரிமைகளில் இலங்கையும் கைசாத்து இட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் மாத்திரம் ஏன் இதனை செயற்படுத்த முடியவில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கமாகும்.

அதாவது கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் குறித்த வடக்கிலிருந்து வந்த காணாமல்போனோரின் உறவுகளை கலந்து கொள்ள விடாது தடுப்பதன் மூலம், ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைத்து சர்வதேச கவனம் பெறுவதை தடுத்துவிடுவதற்காகவே மேற்கொள்ளப்பட்ட சதியோ என எண்ணத்தோன்றுகின்றது.

ஜனநாயக நாட்டில் ஒரு பிரஜை தனது கருத்து சுதந்திரத்தை கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை வேதனையான விடயம். 

ஆர்ப்பாட்டத்தின் மூலமோ கருத்து வடிவின் மூலமோ தனது கருத்தை வெளியிட பிரஜைக்கு உரிமை உண்டு. ஆனால் ஜனநாயக ரீதியில் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த வந்த உறவுகளை நியாயமற்ற விதத்தில் தடுத்து வைத்தமை சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அத்தியாயம் 9இல் கூறப்பட்ட உரிமையை முற்றாக மீறியுள்ளது.

எமது நாட்டில் யாரும் இரண்டாம் பிரஜை அல்ல. யாவரும் சமமானவர் எனக் கூறும் இந்த அரசில் மேற்கூறப்பட்ட சம்பவம் இதற்கெல்லாம் அப்பால் பிரஜைகள் ஒரு அடிமைக்கு ஒப்பாக நடாத்தப்பட்டுள்ளனர். 

இந்த செயற்பாட்டுக்கு அமெரிக்கா தமது அதிருப்தியையும் வெளியிட்டிருந்தது. அதாவது காணாமல் போன தமது உறவுகளை தேடித்தருமாறு கோரும் போராட்டத்துக்காகவே அவர்கள் வவுனியாவில் இருந்து கொழுப்புக்கு சென்றனர். 

எனினும் அவர்களை தடுத்து நிறுத்தியமை நியாயமான செயலல்ல. அத்துடன் குறித்த பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு மதிப்பளித்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் காணாமல் போனார் தொடர்பாக பெயர் வெளியிடப்படாத பட்டியலினை வெளியிட போவதாக சர்வதேசத்திற்கு அரசாங்கம் பல முறை கூறியுள்ளது. 

ஆனால் இன்றுவரை அரசாங்கம் அவ்வாறு எந்தவொரு பட்டியலையும் வெளியிடவில்லை. இது தொடர்பில் அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் அசமந்தமாக இருப்பது உறவுகளை இழந்த உறவுகளை மேலும் துன்பத்துக்கு உள்ளாக்குவதோடு விரக்தி நிலைக்கு இட்டுச்செல்கின்றது.

யார் தான் எதனையும் சொன்னாலும் இந்நாட்டின் அரசு ஒரு கனம் சிந்தித்தால் இந்நிலையே மாறிவிடும். கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவார். 

சரணடைந்தவர்கள் விடுவிக்கப்படுவர், காணாமல் போகச் செய்தல் இடம்பெறாது. ஆனால் இதெல்லாம் நிறைவேறுமா என்பது சந்தேகமே...

அதுவரை 'எங்களிடமிருந்து பறித்த எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள்", 'ஏதுமறியா எங்கள் பாலகர்கள் எங்கே? ", "தவறு இருந்தால் நிரூபியுங்கள் இல்லையேல் விடுதலை செய்யுங்கள்" என கண்ணீரோடு வானத்தை நோக்கிய கதறல்கள் மாத்திரமே தொடர்ந்து கொண்டிருக்கும்.

-எம்.டி. லூசியஸ்
இலங்கை நெற்

Friday, 29 March 2013

சிங்களர்களையும் அழைத்துக்கொண்டுதான் இந்தியா செல்லவேண்டும்- மனோ கணேசன் பொளேர்!!

தமிழக முதல்வர் கச்சதீவை மீளக்கோரினால் இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என்று இனவாதிகள் கூறுவதை, நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.  இது முழங்காலுக்கும், மொட்டந்தலைக்கும் முடிச்சு போடுவதாகும்.


இந்தியாவுடன் கட்டிபிடித்து உறவு கொள்ளும் போது இந்நாட்டு சிங்கள மக்களும் வங்காளத்தில் இருந்து வந்த வட இந்தியர்கள் என சொல்லுவதும்,பிறகு இந்தியாவுடன் சச்சரவு வந்தால் இந்தியா மீதுள்ள கோபத்தை இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களிடம் காட்டி அதற்கு அவர்களை பலிக்கடா ஆக்குவதும், தொடர்ந்து நடந்து வரும் ஒரு இனவாத நாடகம். 

இதற்கு இனிமேல் இடம் கொடுக்க முடியாது. இந்த இனவாத நடிகர்களுக்கு பின்னால் இருக்கும் அரசாங்கம் இவர்களை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த  இனவாத கூச்சல்கள் தொடருமானால், இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் பிரச்சினையையும், ஐநா சபையின் கவனத்துக்கு நாம் கொண்டு செல்ல வேண்டி வரும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்டசபை தீர்மானங்கள் பற்றி இலங்கையில் சிங்கள தீவிர அமைப்புகள் தெரிவித்து வரும் கருத்துகள் தொடர்பாக  கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,     

இலங்கையில் வாழும் தமிழர்களிடம் கேட்டுக்கொண்டு கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி கொடுக்கவில்லை. 

அதேபோல் இன்று மீண்டும் கச்சதீவை  திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜெயலலிதா ஜெயராம் இங்கு வாழும் தமிழர்களை, குறிப்பாக இந்தியவம்சாவளி தமிழர்களை கேட்டுக்கொண்டு முன்வைக்கவில்லை.

இந்நாட்டில் வாழும் தமிழ் தலைவர்களையும், தமிழக தலைவர்களையும் கேட்டுக்கொண்டு இலங்கை, இந்திய அரசாங்கங்கள் ஒப்பந்தங்கள் செய்வது இல்லை. 

எனவே இந்திய தமிழர்கள் என்ற பெயரில் இலங்கையில் வாழும் இலங்கை பிரஜைகளை இந்த கச்சதீவு விவகாரத்தில் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்த வேண்டாம் என கூறிவைக்க விரும்புகிறேன்.

இந்தியாவின் ஒரிசா, வங்காளம் ஆகிய பிராந்தியங்களில் இருந்தே சிங்கள இனத்தவர்கள் இலங்கைக்கு வந்து குடியேறினார்கள் என  டெல்லியில் உள்ள இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் கூறியுள்ளார். 

இது இன்று இந்தியாவில் சர்ச்சைக்கு உரிய கருத்தாக மாறியுள்ளது. இந்த கருத்தின் மூலம் இலங்கையில் இன்று வாழும் அனைத்து மக்களும் ஏதோ ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்கள் என்று உண்மை  உறுதியாகியுள்ளது.

எனவே இனியொருமுறை இலங்கை வாழ் இந்திய தமிழர்கள் என்ற இலங்கை பிரஜைகளை  நாடு கடத்த வேண்டும் என்றால், இங்கு வாழும் சிங்கள மக்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டுதான் நாம் இந்தியா செல்ல வேண்டும். 

இந்நாட்டின் பூர்வீக குடிகளான வேடுவர்களுக்கு நாட்டை ஒப்படைத்துவிட்டு எல்லோரும் இந்தியா நோக்கி பயணமாக வேண்டும்.  

இந்த நடைமுறை நியாயமானது அல்ல. அதுபோல் கச்சதீவு என்ற விடயத்துடன் முடிச்சுபோட்டு இந்திய தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என சொல்வதும் நியாயமானது அல்ல, என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அப்படி போடு அருவாளை.

Thursday, 28 March 2013

கட்சத் தீவை திரும்ப தருகிறோம் ஆனால்...!!


இலங்கையில்  என்ன நடக்கிறது என்று உண்மையில்  இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு தெரியுமா தெரியாதா என்பதே தெரியவில்லை. 

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பது இலங்கை விஷயத்தில்  எதிரொலிக்கிறது. 

ஒரு அரசாங்கம் செய்த தவறுக்கு அப்பாவி பொது மக்களை குறை சொல்கிறோம். தண்டிக்க முயல்கிறோம்.  அப்படி செய்பவர்கள் ஹிரோக்களாக மாறி விடுகிறார்கள்.

புத்த மதத்தை கடை பிடித்தாலும், பெரும்பான்மை சிங்களவர்கள் ஹிந்து வழிபாட்டை தவறாமல் செய்பவர்கள். அவர்கள் இந்தியாவிற்கு, வழிபாடு செய்ய வந்தால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம். 

சிங்கள காடையர்கள் ஓட ஓட விரட்டியடிப்பு என்று இந்த வெக்கங்கெட்ட  தனத்தை கொட்டை எழுத்தில் போட்டு விளம்பர படுத்தியது ஊடகங்கள். இந்த தாக்குதலில் புத்த பிக்குகளும் தப்பவில்லை.



இப்போது,  நீண்ட காலமாக இருக்கும் கட்ச தீவு பிரச்சனை  விஸ்வருபம் எடுத்துள்ளது. 

மீனவர் பிரச்சனைக்கு  தீர்வு காண வேண்டுமானால், இலங்கை வசம் உள்ள கட்ச தீவை திரும்ப பெற வேண்டும் என்ற கோஷம்   அதிகரித்து விட்டது. 

அதற்கு தகுந்த மாதிரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி விட்டார். 

இதன்  எதிரொலி  இலங்கையில் எப்படி இருக்கிறது ?

இலங்கையில் வாழும் இந்தியர்களின் தலையில் இடி விழுந்து விடும் போலிருக்கிறது.

கட்ச தீவை திரும்ப  தருவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. தற்சமயம்  இலங்கையில் மொத்தம் 8,42,323 இந்திய தமிழர்கள் உள்ளனர். (இரண்டாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கு )

இவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள் என்றால், இவர்களுக்கு இந்திய பிரஜாவுரிமை கொடுக்க முடியாது என்று இந்திய அரசு சொல்கிறது.

உங்கள் நாட்டவர்களான இவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள்.

அதற்கு  பரிசாக  அவர்களுடன் சேர்த்து கச்சதீவையும் கொடுத்து விடுகிறோம் என்கிறார் இலங்கையின் புத்த மத அமைப்பான லக்பல சேனாவின் தலைவர் டாக்டர் சுதத் மல்லிக்காராச்சி.

இந்த தமிழர்கள், வெள்ளைக்காரர்கள்  காலத்தில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தேயிலை தோட்டங்களில் பணிபுரிய கொண்டு செல்லப்பட்டவர்கள்.

அந்த காலகட்டத்தில் தான் மலேசியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளுக்கும் தமிழர்கள், விருப்பத்தின் பேரிலும், கட்டாயமாகவும் கொண்டு செல்லப்பட்டார்கள்.

(எப்படி நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் இளைய தலைமுறையினர் பாலாவின் பரதேசி  படத்தை பார்க்கவும் )

இது இப்படியே வளர்ந்து கொண்டு போனால், தேயிலை தோட்ட தொழிலாளர்களாகவும், பெரும் தொழில் நடத்தும் வணிகர்களாகவும் வளர்ந்து விட்ட இந்திய தமிழர்களுக்கு  இலங்கையில் தீம்ப்பாகத்தான் விடியும்.



குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...