என் பிரியமான ராஜகுமாரா...
பிரியமுடன் நான்...
நலம்... நலமா...
முன்பெல்லாம்
எனக்காக பூத்திருக்கும்
பூக்களோடு இருப்பேன்
மெல்லிசை பாக்கள் கேட்பேன்
ஆதித்தியா சேனலை
அடிக்கடி திறப்பேன்
அது ஒரு காலம்..
இப்போது
தனிமை பிடிக்கிறது
தவிப்பாய் இருக்கிறது
உன்
பெயரை சொல்லும் அந்த
பேரானந்த நொடிகளில்
மின்னல் கீற்று
என் ஜன்னல் திறக்கிறது
ஏன்?
என் பிரியமானவனே
காதல் என்ற வார்த்தையை
கற்று தந்ததே நீ....
சொல்
என் இதய சுவர்களில்
உன் பெயரை எழுதியது எப்படி?
பாராங்கல்லில் எப்படி
பயிர் செய்ய முடிந்தது உன்னால்!
நீ தூரத்தில் இருந்தாலும்
துரத்தி வருகிறது உன் நினைவு
இல்லை ..இல்லை
அருகில் இருப்பதாய்
அடிக்கடி சொல்கிறது மனசு
உண்மையை சொல்லவா...
சில சமயம்
சுவாச பரிமாற்றம் மட்டும்தான்
நான் உயிரோடு இருக்கிறேன் என்பதற்கு
உத்திரவாதம்.
உன்னிடம் இருந்து
அழைப்பு வரும்போதுதான்
பிழைத்து கொள்கிறது உயிர்
என் உள்ளம் கவர் கள்வனே ...
உன்னிடம் சொல்வதற்கு
என்னிடம் ஆயிரம் ஆயிரம்
விஷயங்கள் இருக்கிறது...
ஆனால்
பேச நினைக்கும் போதெல்லாம்
நான் ஊமையாகி விடுகிறேனே எப்படி?
அன்பானவனே....
உயிர் வலிக்கும் உன் நினைவுகளை
ஒருவருக்கும் தெரியாமல் பாதுகாத்தேன்.
இருந்தும்
காற்றுக்கும் தெரிந்து விட்டது
நம் காதல்
நிலா கூட நேற்று விசாரித்து
நட்சத்திரங்கள்
என்னை பார்த்து
நக்கல் செய்கிறது
என் செய்ய...
பிறப்பின் ரகசியம்
பிரம்மாவிற்குத்தான் தெரியுமாம்
யார் சொன்னது?
நான் பிறந்ததே உனக்காக தானடா...
வா..
கட்டிக்கொள்
மூச்சு திணற இறுக்கு
சத்தமில்லாமல் முத்தமிடு
தோளில் துயில இடம் கொடு
கடைசியாய் ஓன்று
இந்திரனாய்
நீ இருந்தால்
இந்திராணி நான்தான்.
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDelete